Wednesday, 11 January 2012

இதயத்தை காப்பாற்றும் வழி!


ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.
 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.

 5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலை

இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை
 மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று  சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ  துடிக்கக் கூடும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்

இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை  களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள்  ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்

ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி  இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக்  காரணங்களாக அமைகின்றன.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.

படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.

இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்

பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம்  சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய  மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு  அதிகரிக்கிறது.

மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத்  தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை

இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள்  பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க  முடியும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.

உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

Subhanallah



GIVE THIS SOME TIME TO PROCESS AS THERE ARE A LOT OF PICTURES. WE NEVER SEE PAKISTAN LIKE THIS IN THE NEWS.

This is Pakistan
"Astola Island" [near Pasni Baluchistan 40 km from shore].
Astola is Pakistan's largest offshore island and the only significant offshore island in the northern Arabian Sea.


"Arror Rock"
[near Rohri in Sindh]
The shape of rock was caused by unknown natural forces.
There is also a Shrine on the top.



This is an amazing view of a tunnel and bridge over a river on the railway track from "Rohri to Quetta".
This track passes through 20 tunnels and over 368 bridges.
It's the longest Railway gradient of world, and most scenic Railway ride of Asia.



Headmarala , Sialkot
Mountains of Jammu & Kashmir in the background.



Attabad Lake also known as Hunza Lake is a lake in the Hunza Valley of northern Pakistan.
The beautiful lake was formed due to a massive landslide at Attabad village in Gilgit-Baltistan, 9 miles (14 km) upstream (east)
of Karimabad that occurred on January 4, 2010.



Is this the Great Wall of China?
No.  It's Wall of Sindh in Ranikot [3 hrs drive from Karachi].
It's the part of one of the Largest Forts in the World, Fort of Ranikot.



Kalam Valley.
It is a valley along the upper reaches of the Swat River in Swat, Pakistan.
Kalam Valley is known for its waterfalls, lakes and lush green hills, and is a 270 km drive from Islamabad, the capital of Pakistan.



Kachura Lake.
The Kachura Lakes are two lakes in the Skardu District of Gilgit-Baltistan, Northern Pakistan. The lakes, at 2,500 metres (8,200 ft)
in elevation, are Upper Kachura Lake and Lower Kachura Lake.



This is a 'Mud Volcano'.

In Pakistan there are more than 80 active mud volcanoes, all of them in Baluchistan province; there are about 10 locations
having clusters of mud volcanoes.  In this region, the heights of mud volcanoes range between 800 to 1,550 feet
(243.8 to 472.4 m). The most famous is Chandaragup.



The Great Trango Tower, 6,286 m (20,608 ft).
The east face of the Great Trango Tower features the world's greatest nearly vertical drop. [aka Tallest vertical mountain of world]
Located in Gilgit-Baltistan Region of Pakistan. This is one of the most difficult mountains to climb.



Laila Peak, Hushe, Karakoram Range, Pakistan.
It has a distinctive spear-like shape.  One of the most beautiful & scenic snow covered mountains of the world.
The Laila peak has been climbed only twice.



This is not Fox and Franz Josef Glacier, New Zealand.
This is Biafo Glacier - which is a 63 km long glacier in the Karakoram Mountains, Pakistan which meets the 49 km long Hispar Glacier
at an altitude of 5,128 m (16,824 feet) at Hispar La (Pass) to create the world's longest glacial system outside the polar regions.



Makran, Pakistan.
The present day Makran derived its name from Maka, a satrap of Achaemenid Empire.  Maka was an important early eastern satrapy of Cyrus the Great, founder of the Achaemenid Empire.



K2
It is the second-highest mountain on Earth, only after Mount Everest. It has a peak elevation of 8,611 m [28,251 feet]!!!



Concordia Base Camp, Pakistan.
This is the view from Concordia towards the valley of the Baltoro Glacier at dawn. On the left [Paiju peaks], middle ,[Trango towers] & on the right [Grand Cathedra].



The epic Lake Saiful Muluk.
It is located at the northern end of the Kaghan Valley near Naran, Pakistan.
The clarity of the water comes from the multiple glaciers all around the high basin which feed the lake.



Village Halmet, Neelum Valley, Pakistan.
Neelum Valley is definitely another hidden pearl of Pakistan.  No other valley in Kashmir can compare to this valley and even
most of the Pakistanis know little about it and only a few have visited there.



Lansdowne Bridge of Rohri, Pakistan.
A marvel of nineteenth century engineering, the 'longest "rigid" girder bridge in the world' at that time, was begun in 1887.
Designed by Sir Alexander Meadows Rendel, the girder work weighing a massive 3,300 tons was erected by F.E. Robertson, and Hecquet.



Is this the Grand Canyon or Texas?
No.  It's Hingol National Park of Baluchistan, Pakistan.  It has Mysterious Mud mountains, beautiful blue water Hingol river, the
desert and deep blue Arabian sea. [3.5 hrs drive from Karachi on Makran coastal highway]



Cold Desert of Skardu in Pakistan.
This is one of the most beautiful tourists attraction of Northern areas of Pakistan. There are huge sand plains in Skardu.



Passu Peaks, Hunza, Pakistan.
Mysterious mountains stand like a wall between Hunza river and valley.



Uli Biaho Tower, Pakistan.
It is a peak near Trango Towers and Baltoro Glacier in the Northern Areas of Pakistan. It consists of two main peaks,
Uli Biaho Tower (listed by Roskelley as 19,957 feet, and by Kopold as 6109 m (20,058 feet)); and
Uli Biaho Peak (Kopold: 6417 m), which as of 2006 was unclimbed.



Rakaposhi, Pakistan.
Rakaposhi is also known as Dumani [Mother of Mist]. It is situated in the Nagar valley.





Nanga Parbat.
It is the ninth highest mountain on Earth and among the eight-thousanders with a summit elevation of 8,126 meters (26,660 ft).
It is also an immense, dramatic peak that rises far above its surrounding terrain.



Karamber Lake.
Karambar Pass marks the boundary between the Chitral and Ishkoman Districts of Pakistan.  The Karmabar Lake is almost 3 km long
and it is 4300 meters above sea level.  The flowers of autumns are worth seeing on this lake.





Deosaid plains C Skardu





Bara Pani C Deosai



Dudiptsar Lake or Dudipat Lake is a lake encircled by snow clad peaks in Lulusar-Dudipatsar National Park.
The lake lies in the extreme north of the Kaghan Valley

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்


முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும்

துல்ஹஜ் மாதத்தின் இறுதியில்... புது வருடத்தை எதிர் நோக்கியவர்களாக இருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.
இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.
முஹர்ரம் பிறை ஒன்று முதல் பத்து வரை பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ சொல்லித் தந்தார்களா? அவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இந்த கொண்டாட்டங்களினால் உண்மையில் நன்மைதான் கிடைக்குமா? என்பதையெல்லாம் நாம் தெரிந்துக் கொள்ளும் முன்னர், இவையெல்லாம் இவர்கள் எதை வைத்து உண்டாக்கிக் கொண்டார்கள் என்ற அடிப்படையை தெரிந்துக் கொள்வோம்.

ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரில் நடைபெற்ற ஒரு போரையும் அதன் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டே இவை நடத்தப்படுகின்றன. இந்தப் போரில் நபி(ஸல்)அவர்களின் பேரரான ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் (முஹர்ரம் பத்தாம் நாளில்) நடந்ததால் இதன் நினைவாக 'ஷியாக்கள்' என்று சொல்லப்படுவோர் அந்த நாளை துக்க நாளாகக் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான இந்த கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவியுள்ளது.
துக்க நாளாக கொண்டாடப்படும் இந்த முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப்பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளிலும் குறிப்பாக மும்பை, குஜராத், லாகூர், பாட்னா, லக்னோ, பைசாபாத், குவாலியர் போன்ற இடங்களிலும், தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகள் அனைத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இதுபோன்ற இன்னும் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒருபோதும் ஆகிவிடாது. அதுபோல் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்(வழிகேடு)களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவுமில்லை. ஏன் இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை? அப்படி என்னதான் செய்கிறார்கள் இந்த பண்டிகை(?)யில் என்று, அதைக் கொண்டாடி பழக்கமில்லாத மக்களும் தெரிந்துக் கொள்வதற்காக அதைப்பற்றி முதலில் கூறவேண்டியுள்ளது.

இந்த பண்டிகையில் அவர்கள் செய்யும் முக்கிய சடங்கு 'பஞ்சா எடுத்தல்' என்பதாகும். உருது மற்றும் ஹிந்தி மொழியில் 'பாஞ்ச்' என்றால் 'ஐந்து' என்பதை அனைவரும் அறிவோம். 'பஞ்சா' என்று சொல்ல‌ப்படும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதில் சிம்பாலிக்காக முஹம்மத்(ஸல்), அலீ(ரலி), பாத்திமா(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் ஐந்து விரல்கள் கொண்ட கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டே இதற்கு 'பஞ்சா' என்ற பெயர் வந்தது.

ரதம் போன்ற ஒன்றை ஜரிகைகளாலும் கலர் பேப்பர்களாலும் அலங்கரித்து சப்பரத்தில் வைத்து, பஞ்சா என்று சொல்லப்படும் அந்த கைச்சின்னத்தை வெள்ளியினால் செய்து, மரத்தினாலான‌ ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாள்களைக் கொண்டு சுற்றப்பட்டு அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதுதான் 'பஞ்சா' என்ற சப்பரத்தின் அமைப்பாகும்.

முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, 'பஞ்சா' வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம் பரபரப்பாக‌ ஆரம்பித்துவிடும். முஹர்ரம் பிறை ஒன்றில் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக(?) பஞ்சா வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தின் பிரம்மாண்ட பந்தலில் எப்போதும் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருக்கும். எல்லா திருவிழாக்களையும் போல் பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள், சந்தனம் /பத்தி மற்றும் பூ வியாபாரங்கள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும்.
இந்த‌ முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாதாம். இதனால் பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மிகவும் மலிவு விலையில் மீன்கள் விற்கப்படும். அதுபோல் பத்து நாட்களும் கணவன், மனைவி இல்லற‌த்தில் ஈடுபடக் கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது இல்லற‌த்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்தவேண்டும்!?
நான்காம் நாளில் பெண்கள் தங்கள் வீடுகளில் ஹஸன், ஹுஸைன்(ரலி) இருவர் சார்பாகவும் இரண்டு கட்டில்களில் இறந்த உடல்களைப் படுக்க வைத்ததைப் போன்று செய்து, அதனருகே அமர்ந்து உருகி, உருகி அழுவார்கள். 
தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.
பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவ‌து நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.

தங்களின் தேவைகள் நிறைவேறவும் பற்பல பாக்கியங்கள் கிடைப்பதற்காகவும் நேர்ச்சை செய்துக் கொண்ட குமரிப் பெண்கள் எல்லாம் குடத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து குதிரைகளின் கால்களில் வழிநெடுகிலும் கொட்டுவார்கள். அந்த குதிரைகளில் அமர்த்தப்பட்ட‌வர்கள் கூட, தங்கள் பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்தான்! அதாவது தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தங்கள் குழந்தைக்கு வந்த‌ நோய் குணமாகிவிட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்து வைத்திருப்பார்களாம்!(?) அதிலும் யார் பணத்தை அதிகமாக‌ கொடுத்து முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு இன்ன‌ ஆண்டில் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று பக்கீர்கள் நாள் குறித்துக் கொடுப்பார்கள். இவ்வாறு குதிரையில் ஏற வாய்ப்பு கிடைத்தவர்கள், முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்க‌ளும் பிரத்யேகமாக நோன்பு நோற்கவேண்டுமாம்.

நேர்ச்சை செய்திருந்த பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும்போது அவர்க‌ள் நேர்ச்சை செய்த ஆடு, கோழிகளை இந்தக் பக்கீர்களிடம் காணிக்கையாக கொடுப்பார்கள். இப்படியாக‌ இந்த குதிரை ஊர்வலம் கடைசியாக‌ ஆற்று வரைச் சென்று, அதில் அமர வைக்கப்பட்டவர்களைக் குளிக்கச் செய்தவுடன் அவர்களுக்கு 'ஷஹாதத்' என்ற‌ அந்தஸ்து கிடைத்துவிடுமாம்!(?)
பிறகு அவர்களுக்கு முக்கிய கட்டமான அந்த பத்தாம் நாள்! அன்று மாலை அதன் மையத்திலிருந்து பக்கீர்களின் தோள் புஜங்களிலும் வண்டியிலும் பஞ்சாவை ஏற்றி அதன் ஊர்வலம் ஆரம்பிக்கப்படும். இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களா என்று நினைக்குமளவுக்கு அவர்களின் மூடத்தனம் எல்லை மீறிப் போகும்.

நேர்ச்சை செய்திருந்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு ஒருவிதமாக‌ சுற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு ஊர்வலத்தோடு நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்!(?) இந்த பஞ்சாவில் ஹுஸைன்(ரலி) அவர்களின் போர்க்களத்தின் நினைவாக வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். பஞ்சாவுக்கு முன்னால் ஆடும் சிலம்பாட்டக் காரர்கள் பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து, நகைகளையும் போட்டுக் கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள்.

தங்களுக்கு நல்ல கணவன் அமையவதற்காக‌ நேர்ச்சை செய்த பருவ வயதுப் பெண்கள், அதுபோல் நல்ல கணவன் அமைந்துவிட்டால் அந்தப் பெண்ணும் அவளது தாயாரும் பத்தாம் நாள் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டு, தீக்குளித்த‌தாக நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்!(?) திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீரவும் நாட்டங்கள் நிறைவேறவும் தீமிதி நடத்துவார்கள். பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடிவிடுவார்கள். இதில் அவர்களின் மலைப் போன்ற பாவங்கள் பனிபோல‌ கரைந்துவிடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள்.

பஞ்சா ஊர்வலம் வரும்போது சாம்பிராணி புகைப்போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் உப்பும், மிளகும் பார்சலாகக் கொடுப்பார்கள். மேலும் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் கொழுக்கட்டை செய்து(?) பஞ்சா ஊர்வலத்தில் வருபவர்களுக்கு விநியோகம் செய்வார்கள். பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை போலும்!

இவ்வாறு ஒருபுறம் கொட்டு, மேள/தாளத்துடன் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு கூட்டம் 'யா அலீ! யா ஹுஸைன்!' என்று தங்களின் மார்பில் அடித்துக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஹுஸைன்(ரலி) அவர்களை நினைவு கூர்கிறோம் என்று பக்தியோடு (?) தங்கள் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டும் வருவார்கள். இஸ்லாமிய மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இது ஒரு எல்லை மீறிய‌ அறியாமை என்பது புரியும். இதை செய்பவர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, இஸ்லாமிய வரலாறுகளின் ஆய்வற்ற மிகக் கீழ்நிலையில் உள்ளவர்கள்தான்! அவர்களின் இந்த இரத்தக் காணிக்கை அவர்களின் மடமையின் உச்சக்கட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். (அந்த கோலத்தை   படங்களில் பாருங்கள்)

மூஸா(அலை)அவர்களுக்குக் கிடைத்த வெற்றி நாளான‌ வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த முஹர்ரம் பத்தாம் நாளின் உண்மையான சிறப்பு மறக்கடிக்கப்பட்டு, தன்னைத்தானே காயப்படுத்தி இரத்தக் காணிக்கை செலுத்துவதும், மாரடிப்பதுமான‌ இந்தக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி, இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து உருமாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த கொண்டாட்டங்களினால் அரசாங்கமும் இந்த நாளை 'முஹர்ரம் பண்டிகை' என்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளதால், இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒரு கொண்டாட்டமோ இது என்றுதான் மற்ற‌வர்களை நினைக்கத் தூண்டும். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வருவதால் இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.

ஒருவாறாக இறுதியில் அந்த பஞ்சாவை ஆற்றில் கொண்டுபோய் கரைத்துவிட்டு, கலைந்த அந்தப் பஞ்சாவை ஒரு வெள்ளைத் துணியால் மூடி, ஒப்பாரி வைத்தவாறே அதை தூக்கிக் கொண்டு திரும்புவார்கள். இதன் பிறகுதான் தங்களுக்கு தடை செய்துக்கொண்ட (மீன் சாப்பிடுவது போன்றவற்றை) விடுவித்துக் கொள்வார்கள்.
வீரர் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவாக இவ்வாறு செய்வதாக கூறும் இவர்கள், நபி(ஸல்)அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் சேர்த்து ஐந்து பேர்களை கடவுள்களாக உருவகப்படுத்துகிறார்கள். ஏக இறைவனை மட்டுமே அவனுக்கு இணையேதும் கற்பிக்காமல் வணங்கக் கூறும் இஸ்லாத்தில் இவர்களின் இந்த ஐதெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும்?
முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணைவைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய‌ ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான‌ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.  அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.

நபி(ஸல்)அவர்களின் அன்புப் பேரர்களில் ஒருவரான‌ ஹுஸைன்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சிதான்! இந்த நிகழ்ச்சியைப்பற்றி கேள்விப்படும் மனிதாபிமானம் உள்ள யாரும் மனம் கலங்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்காக நபி(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய 'ஆஷுரா' நாளை சோக நாளாக நாம் ஆக்கிக் கொள்வதற்கும், அண்ணலவர்கள் காட்டித் தராத வணக்கங்களை மார்க்கமாக்கிக் கொள்வதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மார்க்க அறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே தகர்க்கும், வழிகேட்டில் இட்டுச் செல்லும் அனாச்சாரங்களை கண்டித்து மக்களை நேர்வழியில் கொண்டு செல்லவேண்டியவர்களாக இருக்கவேண்டும் ! ஆனால் அவர்கள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் மக்களிடம் பாராட்டுகளைப் பெறுவதற்காக ஹுஸைன்(ரலி)யின் சோக வரலாற்றைப் பேசி, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பித்அத்களுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை வழிகேட்டில் அழைத்துச் செல்வதுதான் கொடுமையிலும் கொடுமை!
இந்த 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா'வுக்கென்று முஹர்ரம் பத்தாம் நாள் வீடு வாசலையெல்லாம் கழுவி விட்டு, கொழுக்கட்டை செய்து, இதனை ஆதரிக்கும் ஆலிம்களை அழைத்து ஃபாத்திஹா ஓதி, தெரிந்த அனைவருக்கும் விநியோகிப்பார்கள். அதிலும், போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகள் என்று உருவகப்படுத்த கொழுக்கட்டைகளை உருண்டையாகவும் நீளமாகவும் செய்வார்கள். சுப்ஹானல்லாஹ், ஹுஸைன்(ரலி)அவர்கள் மீது கொண்ட பாசம் என்று நினைத்து செய்யக்கூடிய இவையெல்லாம் அவர்களுக்கு கண்ணியம் கொடுக்குமா? கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? கேட்டால் 'நாங்கள் ஒன்றும் பஞ்சா தூக்கவில்லை, அவர்கள் பெயரில் ஃபாத்திஹாதான் ஓதுகிறோம்' என்று பெருமையோடு கூறிக் கொள்கிறார்கள் இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்! இதற்கு பக்க பலமும் துண்டுகோலும் அவர்களிலுள்ள ஆலிம்கள்தான் என்கிறபோது, அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பாமர மக்களை அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்! 
மேலும் தஞ்சை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஹர்ரம் மாத முத‌ல் பத்து நாட்களும் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள். அந்தப் பத்து நாட்களில் குழந்தை உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகுமாம்!(?) மடத்தனமான இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மார்க்கமாக்கும் கொடுமையும் சில இடங்களில் நடந்து வருகிறது. அல்லாஹ் அனுமதித்த ஒரு திருமண உறவை தடுத்து நிறுத்தி வைப்பது (தற்காலிகமாக என்றாலும் சரிதான்) எவருக்கும் அதற்கு உரிமை இல்லை. அதுபோல் ஆஷுரா நாளில் கண்டிப்பாக குளிப்பவர்கள் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப் படமாட்டார்கள் என்ற நம்பிக்கை வேறு சிலரிடத்தில்!
அதேசமயம், அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வரும் (சுமார் 25 வருஷ) இந்தக் காலக்கட்டதில் இவையெல்லாம் குறைந்து, உயிரோட்டமின்றி ஏதோ கடனுக்காகதான் நடத்தப்படுகின்றன. எனினும், முழுமையாக ஒழியவில்லை என்பதை வேதனைக் கண்களோடு இன்னும் பார்க்கத்தான் செய்கிறோம்.
எப்போது 'பித்அத்' என்ற ஒரு வழிகேடு மார்க்கத்தில் நுழைகிறதோ, அங்கு 'சுன்னத்' என்ற நபிவழி நம்மிலிருந்து வெளியேறிவிடும். ஆனால் இங்கே குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற நிலையையும் தாண்டி, 'ஷிர்க்' என்ற இணை வைத்தலின் ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு தள்ளிவிடும் என்பதை நாம் உணரவும், அறியாத நம் சகோதர மக்களுக்கு எந்தவித தயவு தாட்சணையுமின்றி உணர்த்தவும் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இதுப்போன்ற மூட நம்பிக்கைகளை நம்மிலிருந்து தகர்த்தெறிந்து இஸ்லாத்தின் உண்மையான அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

:::பாதிரியுடன் கிறிஸ்தவ மதம் குறித்து கேட்டசில சிக்கலான கேள்விகள்


:: இயேசு அழைக்கிறார் ::
.
ர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள்தன்னுடன் ரயிலில்  பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன்கிறிஸ்தவ மதம் குறித்து கேட்டசில சிக்கலான கேள்விகள்
நெல்லை எக்ஸ்ப்ரெஸ்எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக்கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில்என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்ததுஅழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும்அமைதியும்தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை
ஷர்ட்டும் பேண்டும்அணிந்திருந்தார். ”யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ” என்று எண்ணிக்கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியைமுடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.
உறங்கும் பயணிகளை தன்கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப்புகை வண்டி.
பலபல என்றுவிடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும்அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவுதிகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்தஎன் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .
அருகில்அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவதுபேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே !
 பேசத் தொடங்கினேன் !சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம்கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக்கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்விபயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன்விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம்கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் ”இன்னும் ஏதாவது கேள் ” என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி !நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு!
 ” சார் !உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டுநீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் ” என்று ஆரம்பித்தேன் !

 ”ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்“ எனப் புன் முறுவல் பூத்தார் !

 ”சார் !எங்களுடைய வேதத்திற்கு ”குரான்“ என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் ”பைபிள்“ என்று எங்காவது வருகிறதா ?

 ”இல்லை !” - அவரது பதில் .

 அப்படியானால்உங்கள் வேதத்திற்கு ”பைபிள்“ என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? “

 நல்ல கேள்விஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்லமுடியவில்லை ”

 ”சார் !வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள்  நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி  பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டுமா ?”
 ” சார் !இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது.உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?”
 
 ”ஹிப்ரூ  மொழியில்

 ” சரி !நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்தமொழி உங்களுக்கு தெரியுமா ?”

 ”தெரியாது !

 ”அப்படியானால்நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?”
 ”ஆங்கிலத்திலும்தமிழிலும் , பிற மொழிகளிலும் ”
 ”எங்கள் குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில்ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறுவயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்தமொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள்ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள்மட்டுமே !
 ”எந்த மொழியாகஇருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒருமொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ  எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில்பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திடமுடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? “
 ”ஆம்….உண்மைதான்!
 அப்படியானால்உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்துவிட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் ”ஒரிஜினல்“ அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்கமுடியும் ?”

 ”………………………” (பதில் இல்லை )

 ”இரவா வரம்பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள்வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்கமுடியும் ?

 ”……………………………”(பதில் இல்லை)

 சிறிது  நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில்பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன்கவனித்துக் கொண்டிருந்தனர் !
 மீண்டும் தொடர்ந்தேன்!
 ”சார் ! இன்னும்ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான்என்று வைத்துக் கொள்வோம்  .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்தியதுப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தhttp://www.jesusinvites.com/images/190920110907.jpgத்துப்பாக்கியால் அல்லவா என்

தந்தை கொல்லப்பட்டார் என்றஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?”
 ”துப்பாக்கியைப்பார்க்கும்போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீதுவெறுப்புதான் ஏற்படுமே தவிர ”ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! ” என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ?ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் !கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?”

 ”ஆம் !சொல்லுங்கள் ”

 ” ஆனால்உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்றுநீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக்காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே !எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலைசெய்த கொலைக் கருவியான
சிலுவையின் மீதுபிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இதுமனித இயல்புக்கே முரண் அல்லவா ?”
இயேசுகிருஸ்துவைசிலுவையில்  அறைந்துகொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிரகிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? “

 ”………………………………..” (பதில் இல்லை)

 ” சார்நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம்சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல்தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான்இனி கேட்கவில்லை ! சரியா சார் ?”
 இல்லைவருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவமதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாகஅறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள்கேட்ட  கேள்விகள் எனதுசிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றிசொல்லவேண்டும் ! ”
 பாதிரியாரான அந்தரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும்சரியாக இருந்ததுகைலாகுகொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.
(சிலேடைக் கவிஞர் சிராஜ்அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து )

10 Facts About Muslims


10 Facts About Muslims


Most of us Westerners know very little about the Middle East and the people that live there. This lack of knowledge hurts our ability to understand, and engage in intelligent discussion about events that happen both there and elsewhere in the Muslim world.
For example, the difference between 
 Sunni and Shia Muslims, and most think the words "Arab" and "Muslim" are the same thing. They aren't. So here's a very brief primer aimed at raising the level of knowledge about the region to an absolute minimum.
1: Arabs are part of an ethnic group, not a religion. Arabs were around long before Islam, and there have been (and still are) Arab Christians and Arab Jews. In general, you're an Arab if you  are of Arab descent (blood) or speak the main Arab language (Arabic).
2: Not all Arabs are Muslim. There are significant populations of Arab Christians throughout the world, including in Lebanon, Syria, Jordan, Northern Africa and Palestine/Israel.
3: Islam is a religion. A Muslim (roughly pronounced MOOSE-lim) is someone who follows the religion. So you wouldn't say someone follows Muslim or is an Islam, just as you wouldn't say someone follows Christian or is a Christianity.
4: Shia Muslims are similar to Roman Catholics in Christianity. They have a strong clerical presence via Imams and promote the idea of going through them to practice the religion correctly. Sunni Muslims are more like Protestant Christians. They don't really focus on Imams and believe in maintaining a more direct line to God than the Shia.
5: People from Iran are also known as Persians, and they are not Arabs.
6: Arabs are Semites. We've all heard the term anti-Semitism being used — often to describe Arabs. While anti-semitism does specifically indicate hatred for Jews, the word "Semite" comes from the Bible and referred originally to anyone who spoke one of the Semitic Languages.
7: According to the Bible, Jews and Arabs are related [Genesis 25]. Jews descended from Abraham's son Isaac, and Arabs descended from Abraham's son Ishmael. So not only are both groups Semitic, but they're also family.
8: Sunni Muslims make up most of the Muslim world (roughly 90%).
9: The country with the world's largest Muslim population is Indonesia.
10: The rift between the Shia and Sunni started right after Muhammad's death and originally reduced to a power struggle regarding who was going to become the authoritative group for continuing the faith.

The Shia believed Muhammad's second cousin Ali should have taken over (the family/cleric model). The Sunni believed that the best person for the job should be chosen by the followers (the merit model) and that's how the first Caliph, Abu Bakr, was appointed.

Although the conflict began as a political struggle it is now mostly considered a religious and class conflict, with political conflict emanating from those rifts.
Sunni and Shia | Arab and Non-Arab

Here's how the various Middle Eastern countries break down in terms of Sunni vs. Shia and whether or not they are predominantly Arab. Keep in mind that these are generalizations; significant diversity exists in many of the countries listed.
Iraq - Mostly Shia (roughly 60%), but under Saddam the Shia were oppressed and the Sunni were in power despite being only 20% of the population. Arab.
Iran - Shia and NOT Arab.
Palestine - Sunni and Arab.
Egypt - Sunni and Arab.
Saudi Arabia - Sunni and Arab.
Syria - Sunni and Arab.
Jordan - Sunni and Arab.
Gulf States - Sunni and Arab.
I hope this list will help to promote a better understanding of what an Arab and Muslim are and provide a greater perspective when viewing news about the Middle East and the wider Muslim world