Monday, 23 January 2012

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!


ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.  இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்குகத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
 

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள்உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்குலெமனேட் தெரபி என்று பெயர்.  தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்துவேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காததொந்தரவில்லாதசுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப்பழங்களில் கால்ஷியம் சத்துஅதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே,கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.  பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,  "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்துவெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலிசிறுநீரில் ரத்தம்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப்பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போதுமுழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.  ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால்அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம்,அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
சிகிச்சைகள்

கற்கள் பெரிதாகிவேறு வழியில்லாத நிலை தோன்றும்போது,அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy),பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள்பழச்சாறுகள் பருக வேண்டும்.


"
திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள்மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம்50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்என்கிறார் ரோஜர் சர்.  அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்துமக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

 
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (26:80)
 
மருத்துவம் செய்யுங்கள். மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் (ரலி) - நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, ஹாக்கிம்.
 

அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.


அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 

அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது.
புரியவில்லையா? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை




மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில்பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசிகாதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்துஹிந்துவாக்கி மனம்புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும்
மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள்  இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும்ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களேசகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும்கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்: 
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள்என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது
5. மார்க்கத்தை போதிக்காமல்காதல் படம்பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரம்.. வீட்டில் தனி அறைதனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.. பெண்களை தனியாக ஜவுளி கடைநகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)
1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்
2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளிகல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவதுதிரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள்மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்
4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது
5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் த வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது
6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர்கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்
7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில்அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோமெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே
9. கல்லூரிபள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறிபார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன்பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோஉணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும்  தெரியப்படுத்துங்கள்
12. முதன்மையாக ஆண்,ெண் இருவருடைய உள்ளத்திலும்செயலிலும் இறையச்சம்ஈமான் இருக்க வேண்டும்
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள்பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும்செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள்இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளிகல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும்தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும்பெற்றோரையும்சகோதரர்களையும்,வுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்
இறுதியில் இளமையும்செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல்எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம்மறுமையிலும் நரகம்
கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???
அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.
வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமனம் செய்கின்றார்.. சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..
தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும்வினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.
தனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெறிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.
தொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும்அனைத்து விபரங்களையும் தெறிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும்அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உவு கொள்கின்றான்.
கணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெறிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.
காலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான்வெளியில் தெறிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன்பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.
அவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பம்நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.
கதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திறிகிறாள்.
இது ஒரு உண்மைச்சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆக பெண்களேமாவிகளேஉங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கிஉங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்!!.
பெற்றோர்களேகணவன்மார்களேநீங்களும் சற்று சிந்திப்பீர்வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல்இப்போதே அணைபோட திட்டமிடுவீர்உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,
சிந்திப்பீர் செயல்படுவீர்!!
      சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!! சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள்அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-4




அறியாத சில விசயங்களை 

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-4


இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.

*************

மின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது? இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி? மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப் படுகிற இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சா¢யாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.

*************

குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்? குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீ¡¢ன் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்க்பட்டு சிறு நீ¡¢ல் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீ¡¢ல் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

*************

ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி? அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டா¢ன் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.

*************

தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.

*************

ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தொ¢யுமா? காட்டு ஆடு.

*************

பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.

யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.

*************

இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.

*************

உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீ¡¢ல் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வ்நதால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.

*************

அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.

*************

நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் இது பொ¢தும் உதவும் என்பதால் இஙகிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய இரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்

*************

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

*************

நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.

*************

உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.

*************

உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.

*************

ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயா¡¢க்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

*************

டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது? டெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.

*************

பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா? பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.

*************

பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது? பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.

*************

இரததம் உறைதல் என்றால் என்ன? உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.

*************

பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நோ¢டுவது எதனால்? பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி வி¡¢கிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.

*************

வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா? வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது.
வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

*************

இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள  நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

*************

மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீ¡¢லிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீ¡¢ன் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

*************

ஒர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா? தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.....





 
oru kodi.jpg



கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... 


முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,

இதன் ஆடியோ வெர்ஷனையும் கேளுங்கள்......... 

இதயத்தைத் துளைக்காதே!


இதயத்தைத் துளைக்காதே!
ஜிஜி

ள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விட்டபாடில்லை.

"காய்ச்சலோட எதுவும் சாப்பிட முடியல. எது சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்துல வாந்தி வந்துடும். வெறும் பாலும் தண்ணியும்தான். உடம்பு பலகீனமாயிடுச்சி" என்று சொல்லும் வெள்ளைக்கண்ணுவின் உடல்நிலை, கடந்த நவம்பர் 4ம் தேதி மூச்சு கூட விட முடியாத அளவுக்கு மிகவும் மோசமானது. அவசரமாக சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘மிகவும் அபூர்வமான ஒரு பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்று இரவே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கஷ்டம். நீங்கள் சென்னைக்குப் போய்விடுவது நல்லது’என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வெள்ளைக்கண்ணுவிற்குத் திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளைக்கண்ணு நலமா இருக்கிறார். அறுவைச் சிகிச்சை செய்த எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இதய நுரையீரல் பிரிவுத் தலைவர் டாக்டர் கே. ஹர்ஷவர்தனைச் சந்தித்துப் பேசினோம்.

"நவம்பர் 4ம் தேதி மாலை, புதுச்சேரி டாக்டர்களே எனக்கு போன் செய்து பேசினார்கள். ‘இவருக்கு புரூசெல்லோசிஸ் (brucellosis) மாதிரி தெரியுது. இங்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ‘சரி, உடனடியாக அனுப்புங்கள்’ என்றேன். தொடர்ந்து 9 மாதங்களாக ஜுரம் இருந்ததற்குக் காரணம், புரூசெல்லோ என்ற பாக்டீரியா. கால்நடைகள் மூலம் பரவும் இந்த நுண்ணுயிரி, உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இந்தக் கிருமி வெள்ளைக்கண்ணுவின் இதயத்தில் போய் தங்கிவிட்டது. அவரின் இதயத் தசைகளைப் பாதித்து இதயத்தின் பிரதான இதய வால்வுகளான அயோட்டா, மைட்ரல் போன்ற 3 வால்வுகளில் துளைகளை ஏற்படுத்தி இருந்தது. மற்ற வால்வுகளில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்திவிட்டது. இரவு 10 மணிக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து ஏழு மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட அயோட்டா வால்வை நீக்கி, அதற்குப் பதிலாக செயற்கை வால்வைப் பொருத்தினோம். அறுவைச் சிகிச்சையின்போது, மற்ற உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்படாமல் இதயத் துடிப்பை மட்டும் நிறுத்தி, இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையைச் செய்தோம். பாதிக்கப்பட்ட மற்ற வால்வுகளில் உள்ள குறைகளையும் பிறகு சரி செய்தோம்.

சிகிச்சைக்குப் பிறகு, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் வெள்ளைக்கண்ணுவின் ரத்தத்தைப் பரிசோதனைசெய்து, எந்த நோய்த் தொற்றும் தற்போது அவர் உடலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். இனி அவருக்கு அந்த நுண்ணுயிரியின் மூலம் எந்தப் பாதிப்பும் இருக்காது. சராசரி வாழ்க்கையை இனி அவர் வாழலாம். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ள எனக்கு, இதைவிட சிக்கலான அறுவைச் சிகிச்சை எல்லாம் செய்துள்ளதால் இந்தச் சிகிச்சை எளிதாக இருந்தது. நம் நாட்டில் இந்தக் கிருமியின் தொற்று மிக அபூர்வம் என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் செய்த இந்த அறுவைச் சிகிச்சை பற்றி சர்வதேச மருத்துவ இதழில் எழுத உள்ளேன்" என்றார் டாக்டர் ஹர்ஷவர்தன்.

வெல்டன் சார்..!

காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து...
டாக்டர் ஹர்ஷவர்தன் சொன்னார்: "வெள்ளைக்கண்ணுவிற்கு ரியாத்தில் ஒரு வயலில் வேலை. அங்கு விளையும் காகறிகளை விற்பனைக்கு அனுப்புவதும் பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதும் அவரின் தினப்படி வேலை. பாலைக் காச்சாமல் அப்படியே குடிப்பது அவரின் பழக்கம். காய்ச்சாத, பதப்படுத்தப்படாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் இருக்கும். இந்தக் கிருமி தாக்கிய மாடுகள் கருவுற்றால் 2 மாதங்களில் அப்படியே கரு சிதைந்து, தானாகவே வெளியில் விழுந்துவிடும். இதனை நாய், பன்றி போன்ற உயிரினங்கள் சாப்பிடும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் வந்துவிடும். நம் நாட்டில் இப்படிப்பட்ட கால்நடைகளைக் கவனித்து, ஏன் கரு தங்கவில்லை என்று உடனடியாக கால்நடை டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து விடுவார்கள். பச்சை இறைச்சி சாப்பிட்டாலும் இந்த நுண்ணுயிரி தாக்கும் அபாயம் உண்டு. வறட்டி தட்டுபவர்களுக்கும் வரலாம். இதயம் மட்டுமல்ல மூளை, நரம்பு மண்டலம் என்று உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இது தாக்கலாம். எந்த இடத்தில் போய் தங்கிவிடுமோ அந்த உறுப்பை, தசைகளை, எலும்பை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிடும்" என்கிறார். 
நன்றி: புதிய தலைமுறை.