Wednesday, 28 March 2012

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு


பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு
பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு  சொல்கிறார்கள்.
இத் தொழில் தொடங்க ஆவல் உள்ளவர்கள், திட்ட அறிக்கை, வங்கி கடன் போன்ற தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி, துறையினரிடம் கேட்டு தொடங்கவும். நான் இங்கு கோடு தான் போட்டிருக்கிறேன். நீங்கள் ரோடு போட்டு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்

பணம் தரும் பாக்குமட்டை!



து பாஸ்ட் புட் காலம்நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டுசாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும்யுகம்சாப்பிட தட்டும் வேண்டும்அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும்இந்தமூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.
வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்துசுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்கவிசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப்பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதுவிளைவுவீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம்சிவகாசியில் பாபிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.
இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன்எனது கணவர் ஜிபாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார்நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்ததுஎன்னதொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டுஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோதுஅதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்துவிளம்பரம் வந்திருந்ததுஅதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்ததுஇந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியதுவிளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினேன்திருச்சியில் சென்று பயிற்சி பெற்றுசிவகாசியில்  காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத்தொடங்கினேன்.
எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும்சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன்மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன்அதன்மூலம்சிறுதொழில்எனச் சான்று பெற்றுமின் கட்டணச் சலுகை பெற்றேன்இந்த இயந்திரம் வாங்குவதற்கும்மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம்கிடைத்ததுஇந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன்இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டதுமூன்று பெண்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுஅவர்களுடன் நானும் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தேன்.
பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?
இதில் பல ரகங்கள் உள்ளனநான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.
இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?
சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன்அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?
சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்ததுஇந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்துதயாரிக்கப்பட்டதட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர்இவர்கள் மூலமாகபல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.
மேலும்தற்போது கோயில்கள்கல்லூரிகள்தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம்நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது.சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும்ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.
இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?
வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில்நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன்பெண்களுக்கு ஏற்ற தொழில்இந்தத் தொழிலில் ஈடுபட்டால்சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும்என்னிடம் பயிற்சி பெற்று பலர்திண்டுக்கல்நாகர்கோவில்தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.
உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன்இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும்தற்போது,நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன்எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.

பாக்குமட்டை தட்டு தயாரிப்பு

பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகுஅதை நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறதுஇயந்திரம் மின்சார உதவியுடன்வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறதுவட்டம்சதுரம்செவ்வகம்ஐங்கோணம்அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறதுமிகவும்குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரை தயாரிக்கலாம்ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லைஎனவே,உற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்ட வடிவத்திலும்அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம்சீஸன் சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்திசெய்யலாம்.

பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி

மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர்இதனால்தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் மட்டுமின்றிவட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால்பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுசேலம்நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டுதயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றிபாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள்டம்ளர்கள்பல்வேறு வடிவ கிண்ணங்கள்சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதியமுயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியாஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்குவளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால்விவசாயிகளும்வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.


பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை





பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின் 
மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான 
முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து 
மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு 
உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும் 
மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில் 
வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில் 
உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ 
அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும் 
இயற்கையான ஒன்றே ஆகும்




பணம் கொழிக்கும் பாக்குமட்டை தட்டு

 குறைந்த முதலீட்டில் சம்பாதிக்க வாய்ப்பு

 
சேலம்சேலம் எஸ்.பி.எஸ்., இன்ஜினியரிங் நிறுவனத்தினரின் உதவியுடன்பணம் கொழிக்கும் பாக்கு மட்டை தட்டு தொழில் செய்துகுறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்புஉருவாகியுள்ளதுஇயற்கையை அழித்து வரும் பலவித பொருட்களைநாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்பிளாஸ்டிக்பாலித்தின் போன்ற பொருட்களால் இயற்கை மட்டுமின்றி,மனிதர்களின் உடல்நலமும் சீர்கேடாகிறதுஅதற்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகளின் பயன்பாடும்அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறதுபாக்கு மட்டை தட்டுகளைத் தயாரிக்கும்இயந்திரங்களை உற்பத்தி செய்துஅவற்றை சந்தைப்படுத்தி வரும் சேலத்தின் மிகப் பிரபலமான எஸ்.பி.எஸ்இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:எமது நிறுவனம் 1997 லிருந்துஇந்த பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறதுநாங்கள் முதன் முதலில் பெடல் டைப் மெசினை செய்து பார்த்தோம்பிறகு ஹேண்டில் டைப்மெசினை அறிமுகம் செய்தோம்.

பலர் கேட்டதால் ஆட்டோ மெசினை சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்தற்போது தானாக இயங்கக்கூடிய ஆட்டோமெடிக் இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம்இந்தஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முறையாக நாங்கள் வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளோம்இந்த இயந்திரத்தில் பாக்கு மட்டையை வைத்து பட்டனை அழுத்தினால்,தானாகவே இயங்கி தட்டு வடிவம் ஆனவுடன் தானாகவே இயங்கி தட்டுகள் வெளிவந்து விடும்மற்ற இயந்திரத்தை விட தட்டுகளை அழகாகவும்நேர்த்தியாகவும்விரைவாகவும் உற்பத்திசெய்யலாம்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த தட்டுகளாகவும்விருப்பத்திற்கேற்றவாறு லோகோபோன்டிசைன் போன்றவற்றை எம்போசில் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதுஇதில் உள்ளஹீட்டர்களுக்கு டிஜிட்டல் டெம்ப்ரேச்சர் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் எவ்வளவு வெப்பம் வைக்கலாம் என்று உறுதி செய்யலாம்குறைந்த மின் செலவே போதுமானதுபுதிதாக தொழில்தொடங்குவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதம்எஸ்.பி.எஸ்இன்ஜினியரிங் ஒர்க்ஸ்சேலம்-8, மொபைல்            97906 98985                  97912 03708       என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!
ஜி.மீனாட்சி




இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச்சேர்ந்த கே.மல்லிகா.
உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்இருந்து விதவிதமான தட்டுகள்கப்புகள்சூப் கோப்பைகள் என்று இயற்கை வழிபொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.
மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராததுஅதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:
“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.
திருமணமாகி புகுந்தவீடு வந்தபின்ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,
எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்பாக்கு மரப் பட்டைகளிலிருந்துதட்டுகள்கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள்அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம்பின்னர் தயாரிப்பு முயற்சியில்இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.
எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லைதொடர் முயற்சியும்ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறதுஅது மல்லிகாவிஷயத்திலும் நடந்தது.
எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோகப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.
தட்டுத் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.
துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகினசொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்றுவெளியிலிருந்தும் விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தார்தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.
தரமான தயாரிப்புகள்சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்நீல்கிரீஸ்கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்றநிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தனதிருமணங்கள்கோயில் விசேஷங்கள்பள்ளிகல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக்கிடைத்தது.
ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.
“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லைஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள்.பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடுதயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டேபோய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகாதயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:
“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கிவெயிலில் காயவைத்துக் கொள்கிறோம்காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும்தூசிமண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம்மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்துஇயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்திவேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம்தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.
தட்டுகள்கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளைஅடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.
பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்துஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறதுதட்டின் அளவுக்கேற்பரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.
திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில்பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள்தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவைஅத்துடன் இதில் பரிமாறப்படும்உணவு வகைகள் சூடு குறையாமல்சுவை மாறாமல் இருக்கும்தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லைமுக்கியமாகபாக்குமரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால்சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்றுநன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம்இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.
“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறதுதயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால்,நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாதுவிற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளதுஇப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…”என்கிறார்.
வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகுபெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகாஇந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடிதொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர்மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.
“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனைதிருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறதுகுடும்பம்குழந்தைகள் என்றுஅவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறதுபெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல்குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வுநேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும்பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின்வார்த்தைகள்பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

எங்களைத்தொடர்பு கொள்ள thendraltholaikkatchi@gmail.com என்கிற முகவரிக்கு உடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது             9965119111       என்ற எண்ணுடன் பேசுங்கள்உங்களுக்கான அனைத்து விபரங்களும் கிடைக்கும்

தொழில் முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்   9/15/2011 8:23:47
அன்னவாசல்தொழில்முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
புதுக்கோட்டை மாவ ட்டம் அன்னவாசலில் மகளிர் தொழில் முனை வோர் சங்க தலைவி ஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில்புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட தொழில்களுக்குசங்கத்தின் மூலம் புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும் பாக்கு மட்டை தட்டு தயாரித்தல் பயிற்சி மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும்பயிற்சி முடித்தவுடன் வங்கி கடன் பெறவும்தொழிலினைதொடர்ந்து நடத்த ஆலோசனைகள் வழங்கப்படும்மேலும் இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய தொலை பேசி எண்             04322227222      கைபேசி எண் 8870041656,             9659558222      ,            9659558333      .ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தகவல்கள் இணையங்களிலிருந்து திரட்டியவை

Monday, 26 March 2012

கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?

கின்னஸ் சாதனையா? சமூக சோதனையா?






நான் சிறுவனாக இருந்தபோது, கின்னஸ் உலக சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாக போற்றப்படும். அப்போது, உடல் பலத்திலோ அல்லது மதி நுட்பம் மூலமாகவோ செயற்கரிய சாதனைகளை செய்த வீரர்கள் தங்கள் வீரதீரச்செயல்கள் மூலம் உலக சாதனை நிகழ்த்தி அப்புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
ஆனால், காலப்போக்கில் சுவாரசியம் மற்றும் புத்தக சர்குலேஷன் கூடவேண்டும் என்பதற்காக... நோஞ்சான்கள், சோம்பேறிகள், சாப்பாட்டு ராமன்கள், கயவர்கள், அயோக்கியர்கள், வேலைவெட்டி இல்லாத போழுது போக்கிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் செய்யும் உப்புசப்பில்லாத விஷயங்கள் எல்லாம் உலக சாதனைகள் என்ற பெயரில் அந்த கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறத் துவங்கின.
இவை கின்னஸ் சாதனையாக மக்களிடம் போகும் போது, "ச்சே... என்னடா இது...!? இப்படியாக தன் நேரத்தை, பணத்தை, திறமையை வெட்டியாக வீணாக்கி உள்ளார்களே..." என்று அவர்கள் மீது வெறுப்பையும், பரிதாபத்தையுமே வரச்செய்தன. இதனால் கின்னஸ் சாதனை புத்தகம் தனக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நிஜ வீரர்களிடம் இழந்தது.
ஆனால்... மூடர்களிடம் 'அதில் நாமும் சுலபமாக இடம்பெற்றிடலாமே' என்ற ஆர்வம் அவர்களை எதையும் செய்ய வைத்தது..! அப்படி ஒரு மூடத்தனம்தான் சென்ற வாரம் உலக சாதனையாக போற்றப்பட்டது..! அது என்ன தெரியுமா சகோ..?
"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார்.
அதில், அண்ணல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும். புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேற்படி உயர்ந்த விஷயங்களினாலா கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது..? அதுதான் இல்லை..! வேறென்ன காரணமாம் சகோ..?
420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின்
நீளம் 5 மீட்டர்.
அகலம் 4 மீட்டர்.
ஆக மொத்த எடை... 1500 கிலோ..!
100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு
இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும்
இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு
ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க
11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!
அதாவது... இதுதான் இன்று உலகிலேயே மிகப்பெரிய... கனமான... விலை அதிகமான புத்தகம்..! இதற்காகத்தான் இது சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது..!
இவ்வளவு பெரிய புத்தகத்தை யாராலும் புரட்டி படிக்க முடியுமா..? முடியாது..? அப்புறம் அதற்கு வேறு என்ன பயன்..? "உலகசாதனை புத்தகம்" என்ற புகழுடன் குவைத்திலிருந்து உலகின் சில நாடுகளுக்கு தொடங்குகின்ற சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இப்புத்தகம் இறுதியாக அபுதாபியில் உள்ள ஷைக் சாயித் கிராண்ட் பள்ளிவாசலில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படும்..! தட்ஸ் ஆல் சகோ...!
தற்போது இது கின்னஸ் சாதனை புரிந்திருப்பதால், 'முஹம்மது என்றால் யார்' என்று இந்த புத்தகம் பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் என்று இவ்வளவு பணம் கொட்டி இந்த புத்தகத்தை தயாரித்தவர்கள் தங்கள் நோக்கமாக கூறுவார்களேயானால் அவர்கள் குறித்து வருத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை..!
இஸ்லாம் குறித்து கொஞ்சநஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட இம்மாதிரியான வெட்டி ஆடம்பர மூடத்தனமான நடவடிக்கைகள் தூர விலக்கி வைக்கவே செய்யும்..!
இறைவன் கொடுத்த கல்வியையும், நேரத்தையும், செல்வத்தையும் இப்படி வெட்டித்தனமாகவும் ஊதாரித்தனமாகவும் யார்க்கும் எவ்வித பயனும் இன்றி செலவிடுபவர்கள், செல்வம் தந்த இறைவனுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் மறுமை தண்டனை காத்திருக்கிறது என்பதை மறந்து ஆட்டம் போடுகிறார்கள்..!
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க மக்களின் பசியை ஒரு மாத காலத்திற்காவது போக்கி இருந்தார்கள் என்றால் அதுதான் நிஜமான உலக சாதனை.
செலவழித்த 11 மில்லியன் திர்ஹமை வைத்து கல்வியோ, வீடோ அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலப்பணித்திட்டங்களோ அமைத்து மக்களுக்கு அழகான வாழ்வை வாழ வழிவகுத்திருந்தார்கள் என்றால் அது தான் நிரந்தர உலக சாதனை.
'இல்லை.... நான் இந்த புத்தகத்தைத்தான் வெளியிடுவேன்' என்று அடம்பிடிக்கிறீர்களா...? அப்போ...சரி, அதை... 11 திர்ஹாமில் தரமான புத்தகம் ஒன்றாக மொத்தம் ஒரு மில்லியன் புத்தகம் அச்சடித்து, அவற்றை எல்லாம், இஸ்லாம் இன்னும் அறியப்படவேண்டிய நாடுகளில் விநியோகித்து இருந்திருந்தால்... அதைப்படித்து மில்லியனில் ஒரு பதினோரு பேராவது நேர்வழி பெற்று இருந்திருந்தால்... இவைதான் நிலையான சாதனைகள் அல்லவா உங்களுக்கு..?
இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழியில் பயன்படுத்தும் இம்மாதிரியான முஸ்லிம்களை கண்டால் வெறுப்பு தான் வருகின்றது. எந்த அளவுக்கு என்றால்... நரமாமிச மோடி... மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததை அறிந்ததை விட பன்மடங்கு... வெறுப்பு வருகிறது சகோ..!
ஏனெனில், மதநல்லிணக்கத்துக்கு சாவுமணி அடிக்கும் ஒருவர் அதன் மறுமலர்ச்சிக்காக பாடுபடுவது மிகப்பெரிய முரண்நகை அன்றோ..!
இதேபோலத்தான்......
எளிமை, சிக்கனம், பயன்தரும் செய்கை இவற்றை அனுதினமும் போதித்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஆடம்பரம், பகட்டு, வீண்விரையம், பிறருக்கு பயனற்ற செயல்கள் மூலமாக சொல்கிறார்களாம்..! அட... காலக்கொடுமையே..! இவற்றை எல்லாம் ஒழிக்க அல்லவா வந்தார்கள் நபிகள் நாயகம்..! என்னே ஒரு முரண்நகை..?!
இவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை இதுதானோ சகோ..?
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)
இவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே சொன்ன எச்சரிக்கை, இதோ... !
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824)
கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்ற அந்த புத்தகமா நாளை மறுமையில் இவர்களுக்காக வாதாட போகிறது..? செல்வம் எனும் சோதனையில் தோற்காமல் வெல்ல வேண்டுமல்லவா இவர்கள்..! என்று திருந்துவார்கள் இவர்கள்..? சகோ, நாம் இந்த பணக்கார மூடர்கள் நல்லறிவு பெற இறைவனிடம் பிரார்த்திப்போமாக..!

ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-விக்கி லீக்ஸ்


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-விக்கி லீக்ஸ்



 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா வசித்ததாக கூறப்பட்ட வீட்டில் புகுந்து அமெரிக்காவின் கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவைச் சேர்ந்த (Red Squadron of navy seals ) கமான்டோக்கள் அவரை 2-6-2011 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டதும் அதிவேகமாக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டு விட்டதாகவும் அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் கூறின. 

முறைப்படி அடக்கம் செய்யாமல் எப்படி கடலில் வீசலாம் என்ற எதிர்ப்பு சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிளம்பியதும் முறைப்படி இஸ்லாமிய சடங்குகள் செய்த பின்னரே கனமான பாலித்தீன் பையிலிட்டு பெட்டியில் வைத்து கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று அடுத்த பல்டி அடித்தனர்.


இப்பொழுது அவரது உடலை கடலில் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான 'சி.ஐ.ஏ.'வின் விமானம் மூலம் அமெரிக்காவின் பெத்ஸ்டாவில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின்  இணையதளமான 'ஸ்ட்ராட்போர்'ரில் (Stratfor) ஸ்ட்ராட்ஃபார் துணை தலைவர் ஃப்ரைட் பர்டன் அனுப்பிய இ-மெயில் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் 'விக்கிலீக்இணையதளத்துக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் அதை வெளியிட்டுள்ளதாகவும்  பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக கூறப்பட்ட செய்தியை அமெரிக்கப் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டதும் அதை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் ஆதரவு ஊடகங்களும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதை மிகப்பெரிய வீரதீர செய்களைப்போல் சித்தரித்துக்காட்டி செய்திகள் வெளியிட்டன போதாக் குறைக்கு சீல் படையினரின் ஹெல்மட்டில் இணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதி நவீன கேமரா மூலம் மேல்படி திகிலூட்டும்(?) சம்பவத்தை துல்லியமாக படமெடுக்க ஏற்பாடு செய்து அதை வெள்ளை மாளிகையின் எமர்ஜென்ஸி ரூமில் லைவில் பார்க்க ஏற்பாடு செய்து ஒபாமாவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அமைச்சர்களும் கண்டு களித்தனர் அதை தொலைகாட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு டெலிகாஷ் செய்தன.

அப்பொழுதே உலக மக்களில் அதிகமானோர் மேல்படி சம்பவம் ஒரு மகா செட்டப் என்பதை புரிந்து கொண்டனர் இப்பொழுது அவைகள் அனைத்தும் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவில்லை எனும் சமீபத்திய விக்கி லீக்ஸின் தகவல் உண்மைப்படுத்தி விட்டது. 

ஒசாமாவை கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மை என்றால் கொல்லப்பட்டது ஒசாமா தான் என்பது உண்மை என்றால் அந்த உடலைத் தேடி வெளியில் கொண்டு வந்து அதை ஒசாமா இல்லை என்பதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன் ஆழ்கடலில் சென்று தேடி எடுக்க லட்சம் டாலர் செலவாகும் இந்த செலவை மட்டும் அரசு ஏற்க தயாரா என்று 1972 ம் ஆண்டு முதல் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை  தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஆழ்கடல் நீச்சல் வீரரான பில்வாரன் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்தப் பேட்டியை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு கூறுகிறோம். 

இதற்கு அறவே வாய் திறக்காத ஒபாமாவின் மௌனத்தைக் கண்டு அன்றே இது ஒபாமா தயாரித்த மினி திரைபடம் என்பதை அமெரிக்கர்கள் முடிவு செய்து விட்டனர்.

சுடப்பட்டது ஒசாமாவும் கிடையாது அந்த உடல் கடலில் வீசப்படவும் கிடையாது என்பதற்கு அன்றே ஆதாரம் கிடைத்து விட்டது. 

விடாது விரட்டியது ஏன் ?
இரட்டை கோபுரத்தை ஒசாமா இடிக்கவில்லை என்பது அன்றைய புஷ்ஷீக்கும் தெரியும்இன்றைய ஒபாவுக்கும் தெரியும் பின் ஏன் அவரை விடாமல் இவர்கள் விரட்டினர் ?

ஆப்கானிஸ்தான் மாணவர்களைத் திரட்டி இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிலை நிருத்தினார், அங்கு நிருவப்பட்டிருந்திருந்த (வணங்குவதற்கு ஒரு ஆள் கூட இல்லாத) பழமை வாய்ந்த புத்தர் சிலையை உலக எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இடித்துத் தள்ளினார், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை எரித்துத் தள்ளினார்இனிவரும் காலங்களில் யாரும் கஞ்சா செடிகளைப் பயிரிடக் கூடாது என்று சட்டமியற்றினார் ஒசாமா.

உலக போலீஸ்(?) அமெரிக்காவுக்கு கட்டுப்படாத இவரது போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அமெரிக்காவை இவரது இஸ்லாமிய சிந்தனை நமக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதிய இஸ்ரேல் தூண்டி விட்டது.

இவரை இப்படியே விட்டால் இன்று ஆப்கானிஸ்தான் நாளை பாகிஸ்தான் என்று குறுகிய காலத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் அவர்களின் உறக்கத்தை கலைத்தது அதனால் இடிக்கபட வேண்டிய நிலையில் இருந்த இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கு ஒசாமா பெயரை சூட்டி மக்களை ஒசாமாவுக்கு எதிராக திசை திருப்பியது தான் அன்றைய இரைட்டை கோபுர தாக்குதல் நாடகம்.
 
இழப்புகள்.
கடந்த செப்டம்பர் 11,2011ல் இரட்டைகோபுரம் அவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதிலிருந்து 2-6-2011அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்டது வரை 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டத் தொகை மட்டும்  1.3 டிரில்லியன் டாலர் (ரூ. 60 லட்சம் கோடி).


அமெரிக்க ராணுவ வீரர்கள் என்று சொல்லப்படுகின்ற கோழைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் ஆறாயிரம் பேர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோர் மூவாயிரம் பேர் இதையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பதாயிரம் பேர்உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிரந்தர முடமாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 55  ஆயிரம் பேர்.

ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்ட தினத்தன்று மட்டும் 31 சீல் படையினர் தாலிபான் விடுதலைப் போராளிகளால் ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்டனர். 

மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் டீம்6 அணியினர் தான் மேல்படி ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்ட சீல் பிரிவினர் இதை அறிந்து ஒபாமா அதிந்து விட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. ஒபாமா மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்தது.


ஒபாமா தயாரித்த மினி திரைப்படம் ஓர் ஃபளாஷ்பேக்
அமெரிக்க கடற்படையின் சீல்படையினர் இரண்டு ஹெலிகாப்டர்களில் அபோதாபாத்தில் பின்லேடன் வீட்டை நோக்கிப் பறந்தனர் அதில் ஒரு ஹெலிகாப்டர் தாலிபான் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது அதில் இருந்த 31 சீல் படையினரும் எரிந்து சாம்பலாகி விட்டனர் ஒன்று மட்டும் ஒசாமாவின் வீட்டு மாடியில் போய் இறங்கியது.

வீட்டின் மாடியில் இறங்கியதும் அசுர வெகத்தில் இறங்கிய சீல் படையினர் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளியில் நின்றவாறு நான்கு ரவுன்டுகள் சுட்டனர் இதன் பின்னரே வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்ததும் இவர்களைக் கண்ட ஒசாமா அவரது மனைவிக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டார் கணவரை காப்பாற்ற சீல் படையினருடன் அரவரது மனைவி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார் இறுதியில் சீல் படையினர் அவரையும் சுட்டார் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட ஒசாமாவையும் சுட்டுத் தள்ளினர். இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் அதாவது சரியாக 90 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனனும்,  அமெரிக்காவின் ‘நேவி சீல் கமான்டர்  சக் பாரெர் என்பவரும் கூறுகின்றனர். இதில் ஜான் பிரணன் இரண்டு ஹெலிகாப்டர்கள் என்றும்,  சக் பாரெர் நான்கு ஹெலிகாப்டர்கள் என்றும் கூறுகின்றனர்.

சிந்திக்க சில துளிகள்.

இவர்கள் மேல்படி ஆப்பரேஷன் நடத்துவதற்கு முன் பாகிஸ்தானின் டாக்டர் ஷகீல் அப்ரிதி என்பவரை கைக்குள் போட்டு ஒசாமா இன்ன இடத்தில் தான் இருக்கிறார் அவரது டிஎன்ஏ வேண்டும் என்றுக் கேட்டுள்ளனர் அதற்காக அவரும் அபோதாபாத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை அரசு அனுமதிப் பெறாமல் நடத்தி வீடுவிடாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாகவும் ஒசாமா வீட்டுக்குள் சென்ற பொழுது அவரைப் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் ஷகீல் அப்ரிதி சொன்னதாகவும்  இதை அறிந்த பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் இங்கிலாந்தில் வெளிவரும் திகார்டியன் பத்திரிகை கூறியது.


  • அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுக்க டாக்டர் உதவினார் என்பதை அறிந்தே பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது ஒசாமாவுக்குத் தெரியாமல் போகுமா நம்மைத் தேடுகின்றனர் என்று அப்பொழுதே தலைமறைவாகி இருக்க மாட்டாரா ?   
  • தாலிபான் விடுதலை போராளிகள் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதும் மற்றொரு ஹெலிகாப்டர் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை அவர்கள் கவனிக்காமல் விட்டிருப்பார்களா ?
  • ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அளவுக்கு அழுத்தமாக கட்டப்பட்ட அந்த வீட்டில் வெறிப்பிடித்த நேட்டோபப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் ஒசாமா பதுங்கு குழிகளை அல்லது தப்பி ஓடும் வேறு வழிகளை அமைக்காமல் இருந்திருப்பாரா ?
  • மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய சப்தம் வீட்டிற்குள் கேட்காமல் இருந்திருக்குமா ?அதைக்கேட்டு குறைந்த பட்சம் வீட்டிற்குள் வேறு எங்காவது ஓடி மறையாமல் மனைவியின் பின் புறம் தான் ஓடி ஒளிவாரா ?
  • இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் தனது வீட்டின் ஹாலில் சாதாரண பனியன் லுங்கியுடன் ஆயுதமில்லாமல் ஹாயாக மனைவியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாரா ?  
  • இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் ஆயுதம் தரித்த போராளிகளை தனது பாதுகாப்பிற்கு நிருத்தாமல் தனித்திருப்பாரா ?
  • ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மற்றொரு ஹெலிகாப்டர் ஒசாமா வீட்டை நோக்கிப் பறந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் ஒசாமாவுக்கு ( அங்கிருந்தது ஒசாமாவாக இருந்தால் ) தாலிபான்கள் தகவல் கொடுக்காமல் இருந்திருப்பார்களா அல்லது அவர்களே விரைந்து அங்கே வந்து சீல் படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருக்க மாட்டார்களா ?

என்ற எண்ணற்ற கேள்விக் கனைகளை ஒபாமாவை நோக்கிப் பாய்ந்தன அவைகள் எவற்றையும் செவி மடுக்காத ஒபாமா அமெரிக்காவின் பிரபல கடல் புதையல் வேட்டைக் காரர் பில்வாரன் விடுத்த அறிக்கைக்கும் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டதால் ஒபாமாவுக்கு ஒசாமாவின் இறந்த உடல் குறித்த மேட்டர் மிகப்பெரும் சலாவாலாக இருப்பதால் விக்கி லீக்ஸ் பார்வையில் படும் விதமாக தகவலை 'ஸ்ட்ராட்போர்'ரில் இ-மெயில் மூலம் கசிய விட்டு விட்டார்.

மக்கள் கேட்டால் அவரது அடக்கஸ்தலத்தை அவரது ஆதரவாளர்கள் வணக்கஸ்தலமாக ஆக்கி விடுவதுடன் அவரது ஆசியுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு விடலாம் எனும் காரணத்தை முன் கூட்டியே சொல்லி இருப்பதால் அதையேத் திருப்பி கோயபல்ஸ் ஸ்டைலில் கூறி மக்களை நம்ப வைத்து சுடப்பட்டது ஒசாமா தான் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தேர்தல் வியூகம் அமைத்து செயல் பட முடிவு செய்து விட்டார்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! திருக்குர்ஆன் 2:42.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சமீப காலமாக செய்தித் தாள்களைப் புரட்டினால் துவக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயிலும் சிறுமிகளின் மீதும் பருவ வயது மாணவிகளின் மீதும் சில ஆசிரியர்கள்பேராசிரியர்கள்முதல்வர்கள் வரம்பு மீறும் பாலியல் வல்லுறவுகள் மனதை பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதைப் படிக்கும் நமக்கே மனதை வெகுவாக பாதிக்கிறதென்றால் அந்தப் பிள்ளைகளைப் பெற்று நெற்றி முகர்ந்து வளர்த்து எதிர்காலத்தில் கல்விமான்களாகி சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப் பட்டு பணத்தையும் மூட்டைமூட்டையாக கட்டி கல்விப் பயிலப் பள்ளிக்கு அனுப்பிய தாய்தந்தையரின் மனநிலை எப்படி பாதித்திருக்கும் ?

காதல் வலை விரிக்கும் ஆசை வார்த்தைகளும், பணிய வைக்கும் மிரட்டல்களும்.
  • வயது முதிர்ந்த வாத்தியாராக இருந்தால் என்னுடைய விருப்பத்திற்கு இணங்க வில்லை என்றால் ஃபைலாக்கி விடுவேன்- இது பணிய வைக்கும் மிரட்டல்.
  • இளைய வயது வாத்தியாராக இருந்தால் நானும் சிறு வயதுக் காரண் தான் இன்னும் எனக்கு திருமனம் ஆகவில்லை நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் உன்னையே எனது துனைவியாக்கிக்கொள்ள விரும்புகிறேன்- இது ஆசை வார்த்தை.
மேற்காணும் விதம் பேசி பாலியல் தொடர்பான எதையுமே அறியாத சிறுமிகளைபருவ வயது பெண்களை ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முதல் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள்,கணினி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக்கொண்டு பிஞ்சு மலர்களை கிள்ளி  கசக்கி எறிந்து விடுகின்றனர். 
 
எதோ ஒரு மாணவியை மட்டும் இந்த ஈனச்செயலில் ஈடுபடுத்தி விட்டு நிருத்திக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை ! இந்த வரம்பு மீறும் நிகழ்வுகள் இவர்களால் பல மாணவிகளுடன் தொடர்ந்து கொண்டே தான் செல்கின்றன. 

தன்னிடம் கல்வியையும்ஒழுக்கத்தையும் பயில வந்த சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வை சிதைத்து சின்னாப்பின்னப்படுத்துகின்ற ஆசிரியப் பெருந்தகை(?)களுக்கு இந்திய குற்றவியல் தண்டனையில் உடலில் வருத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கோஉள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கோ தண்டனைகள் இல்லை என்பதால் சிறுமிகளையும்பருவ வயதுப் பெண்களையும் வாழைக் குருத்துகளை அடியோடு வெட்டி சாய்ப்பதைப் போல சாய்த்து விடுகின்றனர். 

35 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன்...
கடந்த 2009ல் கன்யாகுமரி மாவட்டம் விளவங்கொடு தாலுக்காஇடைக்கோடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்னகுமார் என்ற 28 வயதையுடைய கணினி ஆசிரியர் தன்னுடைய லேப்டாப்பை பழுது நீக்க ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் கொடுததிருந்தார். பழுது நீக்கப்பட்டதும் லேப்டாப் கேலரியை கம்ப்யூட்டர் டெக்னீஷியன் யதார்த்தமாக ஓப்பன் செய்ய திகைத்துப் போய் விட்டார். 

அதில் 35 க்கும் மேற்பட்ட கணினி பயிலும் மாணவிகளுடன் கிருஷ்ணகுமார் உல்லாசமாக இருக்கும் வீடியோ க்ளிப்களைக் கண்டு கொதித்துப்போனவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீஸாரின் ஆலோசனைப் பிரகாரம் கிருஷ்னகுமாருக்கு போன் செய்து லேப்டாப்பைக் கொடுத்ததும் மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இக்கயவர்கள் இது போன்ற சில்மிஷன்களில் சிக்குவது மிகக்குறைவு சிக்கிக் கொண்டாலும் சிறிது காலம் சுகாதாரமான சிறை வாழ்க்கைஅதன் பிறகு ஜாமீனில் வெளியில் மீண்டும் உல்லாச வாழ்க்கை பழைய படியேத் தொடரும்தொடர்ந்தும் இருக்கிறது. 

சினிமா நடிகைகளைப் போல ஆடு...
மத்தியப் பிரதேச மாநிலம் பேதல் மாவட்டத்தில் மகேஷ் மாலவ்யா எனும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நீண்ட காலமாக தன்னிடம் பாடம் பயிலும் சிறுமிகளை ஏமாற்றி வல்லுறவில் ஈடுபடுத்துவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

30-11-2012 அன்று வகுப்பு நடக்கும் பொழுது ஒரு மாணவனை அழைத்து பணம் கொடுத்து சாராயம் வாங்கி வரச்சொல்லி அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மாணவிகளை பெஞ்ச் மேல் ஏறி ஆடச்சொல்லி இருக்கிறார் பயந்து கொண்டு ஆடிய மாணவிகளை பிரம்பால் அடித்து சினிமா நடிகைகளைப் போல் வளைந்து நெளிந்து ஆடச்சொல்லி இருக்கிறார் பிரம்படித் தாங்க இயலாமல் சில மாணவிகள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து ஓடிச்சென்று தனது பெற்றோரிடம் கூற பெற்றோர்களும்பொதுமக்களும் பேதல் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் பொர்கரிடம் புகாரளிக்க பள்ளி நிர்வாகத்திலிருந்து அவரை சஸ்பென்ட் மட்டும் செய்யச்சொல்லி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே 2008ல் இதே பள்ளியில் சிறுமிகளிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பலாத்கார வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவரை பள்ளியில் தொடர்ந்து நீடிக்கச் செய்த பள்ளி நிர்வாகிகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

வரம்பு மீறலுக்கு வயது வரம்பு உண்டோ ?
பிப் 28,2012 அன்று ஊட்டி கீழ்கோத்தகிரி சந்தைப் பகுதியின் முக்கிய சாலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ சுமார் 8 மணி நேரம் போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கான ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இவ்வளவு நேரம் நீடித்த இந்த ஆர்பாட்டம் மின்வெட்டைக் கண்டித்தோவிலைவாசி உயர்வைக் கண்டித்தோ அல்ல கஷ்டப்பட்டுப் பெற்று பாசத்தை ஊட்டி வளர்த்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஞானசூன்யமாக்கி வரும் சார்லஸ் என்ற 45 வயதையுடைய வணிகவியல் பாடம் நடத்தும் காம வாத்தியாரை கைது செய்யக்கோரி நடத்திய ஆர்ப்பாட்டமாகும்.

விரும்பிய மாணவிகளை விரும்பிய நேரத்தில் வல்லுறவில் ஈடுபடுத்துவது இவரது வாடிக்கையாம்(?) பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சக மாணவியிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூற இதைக் கேட்ட மாணவி அதிர்ச்சி மேலீட்டால் அந்தப் பாவி என்னையும் தான் என்றுக் கூற இச்செய்தி கசிந்து கொண்டே செல்ல இச்செய்தி காதுக்கு எட்டிய மாணவிகளில் பலர் என்னையும் தான்என்னையும் தான் என்றுக் கூற இறுதியாக இதற்கு முடிவு கட்ட நாண்கு மாணவிகள் களமிறங்கினர் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் சம்பவத்தைக் கூற அதனடிப்படையில் நடத்தப்பட்டது தான் மேல்படி உயிரோட்டமுள்ளப் போராட்டம். 

தகவலறிந்த ஆர்.டி.ஓ காந்திமதி அவர்கள் ஒருப் பெண் என்பதால் சம்பவத்தைக் கேட்டுக் கொதித்துப் போனவர் தாசில்தார் ஜோகி, நீலகிரி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் துரை, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேல்படி நான்கு மானவிகளையும் தனித் தனியாக விசாரனை நடத்தி சம்பவத்தை உறுதி படுத்திக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அதி விரைவுப் படை வரவழைத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத அளவு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வாத்தியாருக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.

பட்டப் பகலிலும் கூட...
கைதுகள் தொடர்ந்தாலும் தண்டனைகள் கடுமையானதாக இல்லாதக் காரணத்தால் அவர்களின் வரம்பு மீறல்கள் நின்ற பாடில்லை கடந்த காலங்களில் இலைமறை காய்மறையாக சில காமுக ஆசிரியப் பெருந்தகை(?)களால் நடத்தப்பட்ட வல்லுறவுகள் இன்று பட்டப் பகலிலேயே அதுவும் பெண்களின் தலைவி அம்மா(?) அவர்களின் ஆட்சியில் பகிரங்கமாக நடக்கத்தொடங்கி விட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உதயநேரி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேவசாமித்தியம் என்ற காமுக ஆசரியர் வகுப்பு நடக்கும் பகல் வேலையில் தனக்கு விருப்பப்பட்ட மாணவியை அழைத்து சத்தணவு கூடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு வெளியில் சொன்னால் ஃபைலாக்கி விடுவேன் என்று மிரட்டி அனுப்புவாராம். இதில் பாதிக்கபட்டு மனசாட்சி உறுத்திய ஜெயமாலா என்ற மாணவி தனது பெற்றொரிடம் சொல்லி அழுததும் செங்கநுல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்து தேவசாமித்தியம் கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

மூன்றாந்தர நாலாந்தர ரவுடிகளை விட மோசமாக...
மேல்படி வரம்பு மீறலில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பருவ வயது பெண்கள் இந்த அசிங்கத்தை பேற்றோரிடமும்உற்றாரிடமும் சொல்ல முடியாமல் விசையில் சிக்கிய எலிகளைப்போல் காமவெறிப் பிடித்த சில வாத்தியார்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நீண்ட காலமாகத் தொலைத்து அல்லல் படும் மாணவிகள் ஏராளம்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் அருண் என்ற 38வயதையுடைய பேராசிரியரின் கோரப் பிடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்த ஒரு மாணவியின் துயர சம்பவத்தைப் படிக்கும் எவருடைய கண்களும் கசியாமல் இருக்காது. ஆனால் அந்த கல் நெஞ்சனுக்கு கசிய வில்லை.

அருணிடம் அந்த மாணவி அவருடைய வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்தார் சிறிது நாட்கள் கழிந்ததும் அந்த மாணவியின் மீது காதல் வலையை மெல்ல விரித்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் அதை நம்பிய அந்த மாணவி அவருடன் நெருக்கமானார் ஒரு நாள் மயக்க மருந்தை குளிர் பாணத்தில் கலந்து கொடுத்து சீரழித்தார் அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துக்கொண்டு வீடியோ க்ளிப்பை அப்பெண்ணிடம் காட்டி காதல் வலையை கட் பண்ணி காமவலையில் கவிழ்த்து ஆயுள் அக்ரீமென்ட் செய்து விட்டார்.

இது இடைவிடாமல் தொடர்ந்ததால் என்னை விட்டு விடுங்கள் சார் என்று அப்பெண் அழுது கெஞ்சிக் கேட்டும் விடுவதாகத் தெரியவில்லை இந்நிலையில் அருணுக்கு வேறுப் பெண்ணுடன் திருமனமும் நடந்தது இத்துடன் தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்த மாணவி.

ஆனால் அந்த நிம்மதிப் பெருமூச்சு நீடிக்கவில்லை 1-1-2012 அன்று அந்த மாணவிக்கு அருண் போன் செய்து தனது மனைவி வீட்டில் இல்லை உடனடியாக நீ வர வேண்டும் என்று வரவழைத்து அருணும்அவனது நன்பன் ராம்குமாரும் அப்பெண்ணை சீரழித்து அதையும் வீடியோவில் பதிந்து இன்னும் எப்பொழுது அழைத்தாலும் தாமதமின்றி வரவேண்டும் மீறினால் விடியோ க்ளிப்பை இணையத்தில் விட்டு விடுவேன் என்றுக் கூறி மிரட்டி அனுப்பி உள்ளார். 

இனியும் இதை சகிக்க முடியாது என்று முடிவுக்கு வந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிக் கதறி அழுதுள்ளார். அவரது பெற்றோர் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்து அருணையும்ராம்குமாரையும் கைது செய்து அவரது லேப்டாப்பை சோதித்த போது அந்த மாணவியை பலரிடம் ஈடுபடுத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ க்ளிப்கள் இருந்துள்ளன. இச்சம்வம் மார்ச் 1-1-2012 அன்று செய்தித் தாள்களில் வந்து தமிழ்நாட்டில் பரபப்பை எற்படுத்திய சம்பவமாகும்.

இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் பலர் பயந்துகொண்டு வெளியில் சொல்வதில்லைபருவ வயதுப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை நாசமாகி விடும் எவனும் வாழ வைப்பதற்கு முன் வர மாட்டான் என்றுக்கருதி மறைத்து விடுகின்றனர்.

ஒழுக்க விழுமங்களின் உயர்விடமாக கல்லூரிகள் கருதப்படுவதால் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை பற்றி அவ்வளவாக பெற்றோர்கள் விசாரிப்பதில்லை. இது தான் இவர்களை வரம்பு மீறச் செய்தது. 

துணிந்து ஒண்றிரன்டு மாணவிகள் புகார் செய்தாலும் சில்மிஷன் வாத்தியார்களுக்கு கிடைப்பது வெறும் சிறிது கால சிறை வாழ்க்கை மட்டும் தான்.

துணிந்து புகார் செய்த இவர்களுக்கோ சொந்த ஊரில் மாப்பிள்ளை கிடைக்காது பக்கத்து ஊரிலும் மாப்பிள்ளை எடுக்க முடியாத அளவுக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி விடுகின்றன பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று எழுதினாலும் அவர்கள் இன்னார் தான் என்பது அந்த மாவட்டம் முழுமைக்கும் தெரிந்து விடும்.

  • தொடர்ந்து நடந்து வந்த குழந்தை கடத்தலை கோவை மோகன் ராஜூக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் கடந்த அரசு குழந்தை கடத்தலை ஓரளவு முடிவுக்கு கொண்டு வந்தது.

  • தொடர்ந்து நடந்து வந்த வங்கி கொள்ளையை அதில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் வங்கிக் கொள்ளையை இந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

  • தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்கிளிலும் பரவலாக ஆசிரியர்களால் நடத்தப்படும் மாணவிகள் மீதான கற்பழிப்புகளை எந்த கவுன்டர் மூலம் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது ?

எந்த கவுன்டர் கொடுத்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற சிறுமிகளின் உயிரையும்மானத்தையும் கழுவிலேற்றும் கொடிய குற்றவாளிகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை குற்றங்கள் குறையவே குறையாது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் மனிதாபிமானமற்றது என்று விமர்சித்தோர் தொடர்ந்து விமர்சித்து வருவோர் அதை சற்று மாற்றி இன்று நடைமுறைப்படுத்தி வருவதைப் பார்த்து வருகிறோம்.

பெற்றோர்களே உஷார் !!
இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்காணிக்க வேண்டும் முடிந்தால் பாடம் பியற்றுவிக்கும் ஆசிரியர்களின் குணநலன்களை வெளிப்படையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும். 

இதை விடவும் முக்கியமாக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் கல்லூரியின் முதல்வர்கள்,பேராசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாக விசாரித்துக் கொண்டு அட்மிஷன் போட வேண்டும். 

இவர்களை கடுமையாக தண்டித்து அதன் பிறகு மீண்டும் இக்குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதுமான தண்டனைச் சட்டங்கள் இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லை என்பதால் தான் வங்கி கொள்ளையர்கள் மற்றும் கோவை மோகன் ராஜ் எதிர்த்தார்கள் அதனால் சுட்டோம் என்று போலீசார் பொய் புளுகும் நிலை ஏற்பட்டது. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....