Monday, 16 July 2012

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் அதிகமாக அமர்வது!

ஆபீசில் வேலை பார்ப்பதுடிவிகம்ப்யூட்டர் முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை சீனியர் ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார். 
அதில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி ரிப்போர்ட் விவரம் இதுதான்: தினமும் உடற்பயிற்சிவாக்கிங்ஒழுங்கான டயட்.. எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அலுவலகத்தில்டிவிகம்ப்யூட்டர் முன்பு என தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்  
இன்னும் சில ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக நேரம் உட்கார்ந்துவிட்டுமற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல்ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பு. அதற்காக,அதிக நேரம் உட்கார்வது ஆட்கொல்லி என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. 
அதிக நேரம் உட்கார்வதற்கும் வாழ்நாள் குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம். நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள்சர்க்கரைஅதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும்உட்காரும் நேரத்தை’ குறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில்கம்ப்யூட்டர்டிவி முன்புபஸ்டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். 
முடிந்தவரை நில்லுங்கள்அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சிமற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இதய நோய்கள் ஆய்வு நெட்வொர்க் மற்றும் தேசிய இதய பவுண்டேஷன் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதய பவுண்டேஷன் தலைமை அதிகாரி டோனி தர்ல்வெல் கூறுகையில், ‘‘சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவிகம்ப்யூட்டர்வீடியோகேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும்’’ என்கிறார்.

நன்றி : பயனுள்ள தகவல்கள்...

Sunday, 15 July 2012

நாமும் சூரியஒளிக்கு மாறலாம்


இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி மின்நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் மேட்டூர் அணை மின் நிலையம், நரிமணம் இயற்கை எரிவாயு நிலையம் போன்றவற்றின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. தனியார் காற்றாலை மூலமும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் கிடைக்கிறது. இங்கிருந்தெல்லாம் கிடைக்கும் மின்சாரம் போக, இன்னும் நமக்கு 3,600 மெகாவாட் அளவுக்கு மின்சாரத் தேவை இருக்கிறது. இந்த அளவு மின்சாரத் தேவை எப்படி வந்தது என ஆய்வு செய்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது. சுமார் 4 கோடி மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் மின்சாதனங்கள் உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மாவு அரைக்கும் இயந்திரம், மிக்ஸி போன்றவற்றுடன் துணி துவைப்பது முதல் சமையல் வரை அனைத்து வீட்டுத்தேவைகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோதாதென்று வீடுகள்தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மிக்ஸி, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றன. ஏன் இன்றைக்கு சொந்த வீடுகளில் வசிப்போரில் 20 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் குளிர்சாதன வசதிகளுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு பிரச்னை தலைதூக்குவதால், சமையலுக்கு பலர் மின்சார அடுப்புகளை நாடுகின்ற நிலையும் இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் மக்கள் சாதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்போது கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டாலும், முதல் ஓராண்டுக்கு 500 மெகாவாட் மட்டுமே கிடைக்கும், 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து 1000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த மின்சாரத்தை மட்டுமே வைத்து தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? மேலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, மேலும் மின்தேவை அதிகரிக்கத்தான் செய்யும். இப்படி இனி வரும்காலங்களின் மின் தேவை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகத்தான் செய்யும். எனவே, மின்தேவையை பூர்த்தி செய்ய இந்தத் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், காற்றாலை, சூரியஒளி மின்சக்திகள் மூலமே நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்கின்றனர் ஆய்வர்கள். பெரிய அளவிலான திட்டங்கள் தவிர்த்து காற்றாலை திட்டத்தை அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல இயலாது. அதேசமயம் சூரியஒளி மின்சார உற்பத்தி ஒன்றே தமிழக மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள். தமிழகத்தைப் போன்ற கந்தகபூமியில் அபரிமிதமான மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சூரியஒளியைத் தவிர மாற்றுவழி கிடையாது என்பது விஞ்ஞானிகளின் வாதம். இன்றைக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் சூரியஒளி மின்சார உற்பத்திக்கு மாறி வருகின்றன. இந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சக்தியைப் பெறுவதற்கு அந்த நாடுகளின் அரசுகளும் அதிக கவனம் செலுத்துகின்றன. கறுப்பர் இனமக்கள் வாழும் கென்யாவில் சூரியஒளி மின்சாரத்தை மக்கள் 2009-ம் ஆண்டு முதல் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் சூரியஒளி விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில் தெற்குப் பகுதியில் கடலோரங்களில் மீனவர்கள் எரிவாயு விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த விளக்குகளுக்குப் பதிலாக சூரியஒளி விளக்குகளை அமைத்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் ஆண்டுக்கு 45 ஆயிரம் டன் எரிவாயு சேமிக்கப்பட்டு மற்ற உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் எரிவாயுவைவிட குறைந்த செலவில் சூரிய சக்தி கிடைக்கிறதாம். இந்த வகையில், ஒவ்வொரு மீனவக்குடும்பமும் ஆண்டுக்கு 2 ஆயிரம் டாலர் வரை சேமிப்பதாகவும் கூறப்படுகிறது. அர்ஜென்டினாவில் சூரியஒளியை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதை அரசும் ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள 10 வீடுகளில் 5-ல் சூரியஒளி பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இப்படி பல நாடுகளிலும் இயற்கையாகக் கிடைக்கும் சூரியஒளி மின்சக்தியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரமும் தாராளமாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய நிலை மட்டுமன்றி, எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு தேர்தலின்போது முதல்வர் அறிவித்த சூரியஒளி மின்சார உற்பத்தியில் அரசு தீவிரம் காட்டினால், தமிழகத்துக்கு நல்ல விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் சூரியஒளி மின் உற்பத்தியில் சில தனியார் நிறுவனங்கள் கூடங்களை அமைத்து வருகின்றன. கடைகளில் சூரியஒளி விளக்குகள், சமையல் அடுப்புகள் போன்றவை விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்த மிகக் குறைந்த செலவே ஆகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த வகை மின்சாரம் தயாரிக்க மானியத்துடன் கூடிய சூரியஒளி தயாரிப்பு மின்சாதனங்களை அரசு வழங்க முன்வரலாம். இந்தத் திட்டத்துக்கான சாதனங்களை வழங்க ஜெர்மன் போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசும், மின்உற்பத்திக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், வீடுகளில் சூரியஒளி மின் உற்பத்திக்கான திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும். தொழில்வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு!



    

 
நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்... கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.

மூலப் பொருள்!

நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.

தயாரிப்பு முறை!

நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.

ரூலிங் மெஷின்!

இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.

கட்டிங் மெஷின்!

எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

பின்னிங் மெஷின்!

வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.

பைண்டிங் மெஷின்!

இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.

பிரின்டிங் மெஷின்!

இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மைனஸ் :

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...


Home Remedies Ear Ache
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதாலும், மூக்கை சிந்துவதாலுமே வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காது வலி வந்தால் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த்தொ‌ற்று தான் ஏ‌ற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?

1. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

2. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

3. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

4. மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

5. கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்க, காது வலி பறந்தே போகும்.

இந்தியாவில் புற்றுநோய்


1. நீங்கள் முயற்சிக்காமலேயே எடை குறைகிறதா? எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மருத்துவரிடம் கூறி உடலின் எல்லா பாகங்களையும் சி.டி ஸ்கான் செய்து கொள்ளுங்கள்.

2. உடல் பெருமன் கூடுவது ஓவேரியன் கான்ஸருக்கு அடையாள்ம். அடி வயிற்றில் வலி, அதிகம் சாப்பிடாமலேயே வயிறு நிரம்புதல், அடிக்கடி சிறு நீர் கழித்தல் ஆகியவையும் ஓவேரியன் கான்ஸருக்கு அடையாளங்கள்.

3. மார்பகத்தின் தோல் தடித்து சிவப்பாக மாறுகிறதா? அது மார்பக புற்று நோயின் அறிகுறி.

4. மாதவிடாய்களுக்கான காலங்களை தவிர்த்து இடைப்பட்ட காலங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் அதை புறக்கணிக்காதீர்கள், அது கர்ப்பபை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5. தோலின் நிறம் மாறுவது தோல் சம்பந்தப்பட்ட புற்று நோயின் அறிகுறி.

6. உணவை முழுங்குவதில் சிரமம் இருக்கிறதா? அது தொண்டை இருக்கும் பகுதியான இசோபாகஸ் என்ற இடத்தில் இருக்கும் புற்று நோயின் அறிகுறி.

7. உங்களுடைய சிறு நீரிலோ அல்லது மலத்திலோ ரத்தம் இருந்தால் அது உணவுக்குழாய் (கலோன்) புற்று நோயின் அறிகுறி.  இருமலுடன் ரத்தம் வெளிப்பட்டால் உடனே செக்அப் செய்து கொள்ளுங்கள்.

8. அடி வயிற்றில் வலியும் மன்ச்சோர்வும் ஏற்படுகிறதா? அது பான்க்ரியாஸ் என்ற சுரப்பியில் வரும் புற்று நோயின் அறிகுறி.

9. கர்ப்பமாக இருக்கும் போது அஜீரணம் ஏற்படுவது இயற்கை. மற்ற நேரங்களில் காரணமின்றி அஜீரணம் ஏற்பட்டால் அது தொண்டை, வயிறு இவற்றில் ஏற்படும் புற்று நோயின் அறிகுறி.

10. புகை பிடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் வாயிலோ அல்லது நாக்கிலோ வெள்ளை புள்ளிகள் தோன்றினால் அது Oral புற்று நோயின் அறிகுறி.

11. திடீரென்று காரணமின்றி வலி ஏற்பட்டால் உடன் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

12. உங்களுடைய கக்கத்திலோ அல்லது கழுத்தின் கீழ் பகுதியிலோ கட்டி ஒன்று உருவானால் அது ஒரு புற்று நோயின் அறிகுறி,

13. இன்ப்ளுன்சா அல்லது வைரஸ் இவற்றால் ஏற்படும் காய்ச்சலை தவிர வேறு வைகையான காய்ச்சல் ஏற்பட்டால் அது புற்று நோயின் அறிகுறி.

14. அடிக்கடி மயக்கம் வருதலும் புற்று நோயின் அறிகுறி.

15. மூன்று நான்கு வாரங்களுக்கு மேலாக இடைவிடாத இருமல் புற்று நோயின் அறிகுறி.

மேற்கண்ட அறிகுறிகளை படித்து விட்டு பயப்பட வேண்டாம். புற்று நோயை முதலிலேயே கண்டு பிடித்து விட்டால் அவற்றை குணப்படுத்துதல் எளிது. ஆகவே இந்த அறிகுறிகளை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.

Sunday, 8 July 2012

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற


இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.


DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது.  உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.



இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம்  DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.

இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம்.  இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.

உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய: 
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு  www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.


இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும்.  உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:

DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.


ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும். 

மேக்(Mac) கணினிகளுக்கு: 

மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.

Source - www.fbi.gov

உலகிலேயே மிகப் பெரியது, ஆழமானது, உயரமானது, நீண்டது,ஆழமானது எது? (பகுதி_II)




வணக்கம் நண்பர்களே.. கடந்த பதிவு Highest-Biggest-Longest-Deepest-Smallest (பகுதி -I) ன் தொடர்ச்சியாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளேன்.. TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இத்தகைய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகிலுள்ள மிகப்பெரியது(Biggest), மிக உயரமானது(Highest), மிக நீளமானது(Longest), மிக ஆழமானது(Deepest), மிகச் சிறியது(Smallest) என்பன போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கக்கூடும். இத்தகைய கேள்விகள் பொதுஅறிவு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் இடம்பெற வாய்ப்புள்ளது. படித்து மனதில் நிறுத்துங்கள். நிச்சயம் இத்தகவல்கள் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும், பிறருக்கும் பயன்படும்.


Delta – டெல்டா
Largest Delta (World)
சுந்தர்பன்ஸ்(கங்கை நதி பள்ளத்தாக்கு, இந்தியா)
DESERT- பாலைவனம்
Largest Desert (India)
தார்பாலைவனம்
Largest Desert (World)
சகாரா பாலைவனம் (ஆப்ரிக்கா)
Largest Desert (Asia)
கோபி பாலைவனம் (மங்கோலியா)
DOME – மண்டபம்
Largest & Biggest Dome (India)
அசாம்
Largest Forest (World)
ஊசியிலைக் காடுகள் (வட ரஷ்யா)
GATEWAY – நுழைவாயில்
Highest Gateway
புலந்தர்வாசா (53.6மீ)
HARBOUR
துறைமுகம்
Largest Natural Harbour (India)
விசாகபட்டிணம்
HOTEL – ஓட்டல்
Biggest Hotel (India)
ஒபராய்ஷெராடன், மும்பை
ISLAND - தீவு
Largest island
கிரீன்லாந்து
Largest Lake(India)
ஊலார் ஏரி (காஷ்மீர்)
Largest Lake (World)
காஸ்பியன் கடல் (ரஷ்யா)
Largest Fresh Water lake (World)
லேக் கபீரியர் (அமெரிக்கா)
Deepest Lake
பைகால் ஏரி (சைபீரியா) 701 மீ.
Highest lake (World)
டிடிகா (பொலிவியா) 3854 மீ. உயரம்
Library – நூலகம்
Largest Library (World)
யுனைடெட் ஸ்ட்டேட்ஸஃ லைப்ர்ரி ஆப் காங்கிரஸ் – (வாசிங்கடன்)
லெனின் ஸ்டேட் லைப்ரரி
மாஸ்கோ (ரஷ்யா)

உலகிலேயே மிகப் பெரியது, ஆழமானது, உயரமானது, நீண்டது எது? (பகுதி-I)


வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் - IV க்கான பொது அறிவுப் பகுதிக்குப் பயன்படும் முக்கிய தகவல்களை பட்டியலிட்டுள்ளேன். உலகத்திலேயே மிக உயரமானவை, மிகப்பெரியவை, மிக ஆழமானவை, மிகச் சிறியவை என்னென்ன என்பதை இப்பட்டியலைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



Archipelago - தீவுக்கூட்டம்
Area
பரப்பளவு
Smallest State in Area
கோவா (India)
Smallest Union Territory
லட்சத்தீவுகள்
Largest State in Area
ராஜஸ்தான் (India)
Largest City in Area(World)
ஹூலுன்பீர், சீனா
ANIMAL - மிருகம்
Tallest Living Animal
ஒட்டகச் சிவிங்கி
Fastest animal at short run
சிறுத்தைப் புலி
Largest existing land animal
ஆப்பிரிக்க காட்டு யானை
Most intelligent animal
மனிதக் குரங்கு
Bay - விரிகுடா
Largest Bay
ஹட்சன்யே
Bell
மணி
Largest Bell (World)
கிரேட் பெல் மாஸ்கோ
Bird
பறவை
Largest Bird
நெருப்புக் கோழி
Largest Sea Bird
அல்பட்ராஸ்
Fastest Bird
ரீங்காரம் செய்யும் சிறு பட்சி
BRIDGE - பாலம்
Longest Railway Bridge Span
சோன்பால் (பீகார்)
Largest Cantilever Bridge and Busiest Bridge
ஹௌரா பாலம் (கொல்கத்தா)
BUILDING - கட்டிடம்
Highest Building (World)
பூர்ஜ் கலிபா துபாய் 828 மீ. உயரம்.
Grand Beauty Building
தாஜ் மஹால் (இந்தியா)
CANAL - கால்வாய்
Longest Canal (India)
சாரதா கால்வாய்
Longest Big Ship Canal (World)
சூயஸ் கால்வாய் எகிப்து 161 கி.மீ.
Longest Small Ship Canal
பெலாய் (Beloye) ஒயிட் சீ, பால்டிக் கால்வாய் (CIS) 226 கி.மீ.
CAVE TEMPLE - குகைக்கோயில்
Largest & Biggest Cave
எல்லோரா (மகாராஷ்டிரா) Temple (India)

தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இத்தகைய தகவல்களும் உங்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்.. இப்போது மட்டுமல்ல.. எப்போதும் இத்தகைய பொது அறிவுத் தகவல்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயனிளக்கும் என்பதில் சந்தேகமில்லை.. நன்றி நண்பர்களே..!!

COINS OF INDIA

COINS OF INDIA

http://www.wcoins.com/d_ximages/c4209.jpg
http://www.wcoins.com/d_ximages/c2072.jpg
http://www.wcoins.com/d_ximages/c4276.jpg
http://www.wcoins.com/d_ximages/c4282.jpg
http://www.wcoins.com/d_ximages/c4283.jpg
http://www.wcoins.com/d_ximages/c3218.jpg
http://www.wcoins.com/d_ximages/c1489.jpg
http://www.wcoins.com/d_ximages/c2962.jpg
http://www.wcoins.com/d_ximages/c401.jpg
http://www.wcoins.com/d_ximages/c789.jpg
http://www.wcoins.com/d_ximages/c4509.jpg
http://www.wcoins.com/d_ximages/c4629.jpg
http://www.wcoins.com/d_ximages/c788.jpg
http://www.wcoins.com/d_ximages/c2715.jpg
http://www.wcoins.com/d_ximages/c580.jpg
http://www.wcoins.com/d_ximages/c1490.jpg
http://www.wcoins.com/d_ximages/c1159.jpg
http://www.wcoins.com/d_ximages/c2716.jpg
http://www.wcoins.com/d_ximages/c2736.jpg
http://www.wcoins.com/d_ximages/c4508.jpg
http://www.wcoins.com/d_ximages/c2689.jpg
http://www.wcoins.com/d_ximages/c1778.jpg
http://www.wcoins.com/d_ximages/c883.jpg
http://www.wcoins.com/d_ximages/c2194.jpg
http://www.wcoins.com/d_ximages/c2632.jpg
http://www.wcoins.com/d_ximages/c1160.jpg
http://www.wcoins.com/d_ximages/c1161.jpg
http://www.wcoins.com/d_ximages/c2404.jpg
http://www.wcoins.com/d_ximages/c1491.jpg
http://www.wcoins.com/d_ximages/c2634.jpg
http://www.wcoins.com/d_ximages/c2688.jpg
http://www.indiastudychannel.com/attachments/Resources/134954-20658-H67RI5.jpg
http://www.marketcalls.in/wp-content/uploads/2011/02/150-rupee-coin.png
 
 
 

ஹாய் நலமா?-5 நீரிழிவு நோயாளிகளே.....

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்


அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.


இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

  • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. 
  • அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை. 
  • பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை. 
  • மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 
  • இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.


  • இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். 
  • இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
  • இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும். 
நீரிழிவு உள்ளவராயின் உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதித்து அதன் நிலையைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.
அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.
  •  சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.
  • காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொட்களை செயற்கையாகச் சுத்தம் (dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney Transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கனவுமாகும்.
  • ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதைக் சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும் எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.


சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இருதய நோயுள்ளவர்கள்
  • தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.

எத்தகைய பரிசோதனைகள்

1.    இரத்தப் பரிசோதனை. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (Glomerular filtration rate- GFR) பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2.    சிறுநீரகப் பரிசோதனை. சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report- UFR) இதனைக் கண்டறிய முடியும்.


ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine for Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்கள் வைத்திருக்க வேண்டும்.

  • இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பரிசோதனை HbA1C எனில் 7ற்குள் கட்டுப்படுத்த வேணடும்.
  • இரத்த அழுத்தத்தை 130/80 ற்குள் வைத்திருக்க வேண்டும்.
  • உணவில் உப்பின அளவைக் குறைக்க வேண்டும்.
  • தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.
  • சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

மேற் கூறிய பெண்ணின் நீரிழிவு கட்டுப்பாடின்றி மோசமாக இருந்தது. சிறுநீரில் நுண்ணிய அளவில் புரதம் (Microalbumin) வெளியேற ஆரம்பித்திருந்தது.

ஆயினும் அவளது சிறுநீரகம்  இன்னமும் மோசமான நிலையான செயலிழப்பு நிலையை அடையவில்லை. நம்பிக்கையூட்டி சிகிச்சையில் தேவையான பல மாற்றங்களை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

உங்களுக்கான பரிசோதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்