புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்
கீரீம், எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.
-அன்புடன் கோவை எம் தங்கவேல்
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது,
பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர
உண்டாகியது.
நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்
உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும்
உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை
ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.
மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம்.
அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு
மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா
சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.
தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன.
உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக
வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி
விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே
எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED
WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R)
இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது.
இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம்
என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது
அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற
அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற
அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான
எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா
என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம்
எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற
உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.
ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த
ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு
நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை
விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற
திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !