அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...
கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைக்காத வரை..! கதாஃபி... (லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!
இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!
இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!
கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?
"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்"என்று சொல்லும் வரை..!
முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!
அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!
விளைவு..?
அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்..."இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)
'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.
மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..! Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!
Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms
இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?
லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!
எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.
அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!
ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.
திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!
அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!
பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
அடுத்து...
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!
கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..!
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
==============================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Thursday, 24 November 2011
லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment