Wednesday, 21 December 2011

சில ஆச்சரியங்கள், சில கேள்விகள் - II



சில ஆச்சரியங்கள், சில கேள்விகள் - II



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள்(Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   




ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 


சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய"Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 


இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  


மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு"இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.
பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 

Thursday, 1 December 2011


போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை 

திங்கள்கிழமைநவம்பர் 212011, 15:33 [IST]
Ishrat Jahan fake encounter
அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான்
ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளைஅம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை
இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும்முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும்
, இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர்பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்

அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்
இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்லமாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புது வழக்கு தொடர உத்தரவு

இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது
யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.

எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கடும் குற்றச்சாட்டு:

இந் நிலையில் முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் கூறுகையில்
இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் மரணமடையவில்லை. அவர் முன்பே கொல்லப்பட்டு விட்டார். என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருந்தது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது
குஜராத் உளவுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார். பின்னர் அவர் டிஜிபியானார்.

அவர் கூறுகையில்
குஜராத் அரசின் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது. இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று கொல்லப்படவில்லை என்ற வாதம் உண்மையாகியுள்ளது. 2002ல் நடந்த கலவரங்கள்போலீஸ் அடக்குமுறைகள்கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

முன்பு ஒருமுறை அகமதாபாத்தில் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியின்போது
, குஜராத் அரசு என்கவுண்டர் மூலம் கொலைகள் செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது.

2002ம் ஆண்டு கலவரத்தின்போது நான் அப்போதைய தலைமைச் செயலாளர் சுப்பா ராவிடம் பேசியபோது
என்னிடம் அவர் கூறுகையில்நாம் சிலரையாவது கொலை செய்தால்தான்குஜராத் அரசின்கொள்கை என்ன என்பது அனைவருக்கும் வலிமையாக புரியும் என்றார். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அப்படிச் செய்தால்அது இந்திய அரசியல் சட்டம்120 பி பிரிவின்படி அது சதிச் செயல் என்று அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஆனால் குஜராத் அரசு என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை கொள்கையாகவை கடைப்பிடித்து வந்தது என்றார் அவர்