அறிவியலுக்கு முதுகு தண்டாக இருந்தவர்கள் முஸ்லிம்கள்
நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன? இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...
இதனை கேட்கும் போதெல்லாம் நமக்குள் தோன்றக்கூடிய கேள்விகள்...
ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.
அப்படிப்பட்ட அறிவியலை முஸ்லிம்கள் கண்டுபிடிக்கவில்லை நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் கள் என் தவறாக பிரசாரம் செய்ய பட்டு வருகிறது மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள்.
இஸ்லாம் வளர்ச்சி கண்ட போது முஸ்லிம் உலகும், ஐரோப்பிய உலகும் எப்படி இருந்தன என்பது பற்றி விக்டர் ராபின்ஸன் (victor Rabinson) தனது ‘மருத்துவத்தின் கதை’ (The Story of Medicine) என்ற நூலில் குறிப்பிடும் போது, ‘ஐரோப்பிய நாடுகள் சூரியன் மறைந்தவுடன் இருளில் மூழ்கி விடும். முஸ்லிம் ஸ்பெயினைச் சேர்ந்த குர்துபாவிலோ தெரு விளக்குகள் ஒளி விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விடும். ஐரோப்பா அழுக்கடைந்திருந்தது. குர்துபா (கொரடோவா)விலோ 1000 குளியலறைகள் கட்டியிருந்தார்கள்.
ஐரோப்பா துர்நாற்றத்தால் மூடுண்டு கிடந்தது. குர்துபாவில் வாழ்ந்தவர்களோ தமது உள்ளாடைகளை தினமும் மாற்றி வந்தார்கள். ஐரோப்பா சேற்றில் மூழ்கிக் கிடந்த போது, குர்துபாவில் தளம் போடப்பட்ட பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் அரண்மனைக் கூரைகளிலேயே கரும்புகை படிந்திருந்த போது, குர்துபாவிலிருந்த மாளிகைகள் அரபுக் கலை நுட்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் பிரபுக்களுக்கு கையெழுத்து போடத் தெரியாமலிருந்த காலத்திலேயே குர்துபாவின் சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
ஐரோப்பாவின் மத குருமார்கள் ஞானஸ்நானச் சடங்குகளுக்குரிய சுலோகங்களை வாசிக்கத் தெரியாதிருந்த சமயத்தில் குர்துபாவின் ஆசிரியர்கள் பெரும் நூல் நிலையங்களை நிறுவிக் கொண்டிருந்தார்கள்!” என்று குறிப்பிடுகின்றனர்.இந்தக் கூற்று ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகின் அறிவு மட்டத்தையும் நாகரிகப் பண்பாட்டு வீழ்ச்சியையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.அதே வேளை, முஸ்லிம் உலகின் அறிவியல் எழுச்சியை எடுத்துக் காட்டும் கூற்றாகவும் திகழ்கின்றது
இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம். வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்... (மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது) பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.) அல்குவாரிஸ்மி 780லி850 கணிதம்லிவானவியல் (அல்காரிஸ்ம்) அல் ராஜி 844லி946 மருத்துவம் (ரேஜஸ்) அல் ஹைதம் 965லி1039 கணிதம்லிஒளியியல் (அல்ஹேஜன்) அல்பிரூணி 973லி1048 கணிதம்லிதத்துவம்லி வரலாறு இப்னு சீனா 980லி1037 மருத்துவம் (அவிசென்னா) அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்) இப்னு ருஸ்து 1126லி1198 மருத்துவம்லிதத்துவம் (அவிர்ரோஸ்) ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்) அல் தபரி 838 மருத்துவம் அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்) அல் மசூதி 957 புவியியல் அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்) இப்னு ஹல்தூண் 1332 வரலாறு இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)
இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான். இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல. மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர். இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை. ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. மற்ற நண்பர்களின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும். நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.
-
இனி இஸ்லாம் அறிவியலுக்கு ஆற்றியபங்குகளை பாப்போம் :-
இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன. நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது.
அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம்.
முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகுஅறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகுஅறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர்.பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.
கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. (3) என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும்அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.
முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.
இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,
‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும்.
அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது.
இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
No comments:
Post a Comment