Sunday, 26 February 2012

புற்றுநோய்க்கு புதிய காரணங்கள்



புற்றுநோய்க்கு புதிய காரணங்கள்

Post
புற்றுநோய்க்கு தோன்றுவதற்கு உரிய காரணங்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிதாக அதிகரித்துக்கொண்டே இருக்கினறன. புற்றுநோயின் பல வகைகள் உள்ளன. இந்த வகைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

நாடுகளின் அமைவிடம், தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களைப் பொறுத்தும் புற்றுநோயின் வகைகள் வேறுபடுகின்றன. மிக அதிகமாக சூரிய ஒளிபடும் நாடுகளில் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சூரிய ஒளி, வெப்பம் குறைவாகத் தான் இருக்கின்றன. ஆனால் அங்கு தோல் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகின்றது.

இதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் தீவிரமான ஆராய்ந்தனர். அங்கு குறைவாக விழும் சூரிய ஒளியிலும் அதிக அளவில் அல்ட்ரா வயலட் கதிர்களின் செறிவுதான் புற்றுநோய்க்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டது. குளிர் நாடான சுவிட்சர்லாந்தில் குளிர் மிகுந்துள்ள சூழ்நிலையால் நிணநீர் அமைப்பின் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் அங்கு நிணநீர் புற்றுநோய் அபாயம் உள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் இங்கு மார்பகப் புற்றுநோயும், வாய்ப்புற்று நோயும் அதிகமாக உள்ளன. வட மாநிலங்களில் புகையிலை அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. இதனால் வாய்ப்புற்றுநோயும் அங்கு பெருமளவில் காணப்படுகின்றன. சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டிருந்தாலும் குழந்தைத் திருமணம் மேலும் இளவயது திருமணங்கள் வட மாநிலங்களில் பரவலாக உள்ளன. போதிய சுகாதாரமின்மையும் காணப்படுகின்றது. இதனால் மார்பகப் புற்றுநோய் அங்கு அதிக அளவில் உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சரிவிகித உணவு முறை, அடிப்படை வசதிக்குறைவு இவற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்றுநோய் காணப்படுகின்றது. ஜப்பானில் நுரையீரல் புற்று நோய் அதிகமாக உள்ளது. புற்றுநோய்க்கான குணப்படுத்தும் முறைகளை அலோபதி மருத்துவ முறையிலும், மாற்று மருத்துவ முறைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். இவ்வேளையில் புற்றுநோய் உருவாவதற்கான காரணங்களும் அதிகரித்து வருகின்றன.



புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை


Dr. Interview : Treatment for
 Cancer - Food Habits and
 Nutrition Guide in Tamil














! புற்றுநோய் என்றால் மரணம்தான் என்கின்ற நிலைமை மாறிவிட்டதா டாக்டர்?
பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். கேன்ஸர் என்றால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் என்றிருந்த நிலைமை எவ்வளவோ இப்போது மாறி விட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்த நிலையும், மக்களிடையே ஏற்பட்டிருக்கிற விழிப்புணர்ச்சியும் புற்று நோயாளிகள் மரணத்திலிருந்து மீளலாம் என்கின்ற நிலையை அடைந்துள் ளது. இதில் ஒரே ஒரு விசயம் என்னவெனில் கேன்ஸரின் ஆரம்ப நிலையிலேயே வந்தால் முற்றிலும் பூரணமாக குணப்படுத்திவிடலாம் என்பதுதான்.

புற்றுநோயை எப்படி கண்டறிகிறீர்கள்?
கேன்ஸரை-ஸ்கிகீனிங் டெஸ்ட் என்கின்றஒரு நான்கைந்து சோதனைகளை கொண்டு தான் உறுதி செய்கிறோம். இந்த சோதனைகள் ஆணா, பெண்ணா, வயது மற்றும் வந்திருக்கும் நோயின் நிலைமை பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். பெண்ணாக இருந்தால் அடிவயிற்றில் அல்ட்ரா சவுண்டு சோதனை, பிறப்புறுப்பில் பாப்ஸ்மியர் டெஸ்ட், மார்பகத் திற்கு மேமோகிராம் டெஸ்ட், மார்பக எக்ஸ்-ரே, இரத்த சோதனையும் செய்யப் படும். ஆண்களாக இருந்தால்-மார்பக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட், புராஸ்டேட் சுரப்பி சோதனை செய் வோம். இது தவிர-ஆண், பெண் யாராக இருந்தாலும் இரத்தத்தில் உள்ள டியூமர் மார்க்கர் சோதனையும், ஊடிடடிþடிளஉடிளில எனும் சாதனத்தில் சோதனையும் செய்து கேன்ஸரை உறுதி செய்வோம். இந்த சோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை முப்பது வயதிற்கு மேற் பட்டவர்கள் செய்து கொள்வது கேன்ஸரை பற்றிய விழிப்புணர்ச்சியுடன் இருக்க உதவும்

தமிழ்நாட்டில் எந்த மாதிரியான புற்றுநோய் அதிகமாக உள்ளது? ஏன்?

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பகுதியில் வருகிற கேன்ஸர், காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸர், மார்பக புற்று நோய் பரவலாக உள்ளது. இதுவே ஆண்களுக்கு வயதான காலத்தில் புராஸ் டேட் சுரப்பியில் வருகிறகேன்ஸரும் ஆண், பெண் இருவருக்கும் வருகிற நுரையீரல் கேன்ஸர், வயிறு குடல் பகுதியில் வருகிற கேன்ஸரும் அதிக அளவில் உள்ளது. இன்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இது போன்ற கேன்ஸர் அதிகரித்திருக்க காரணம்- வாழ்க்கை முறை மாற்றம் தான். அதிவேக வாழக்கை கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இது போன்ற நோய்கள் வருகின்றன. Aள ளை லடிரச டுகைந ளுவலடந ளுடி ளை லடிரச ஊயþஉநச அதாவது நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரிதான் நமக்கு வருகிற கேன்ஸரும் இருக்கும் என்பார்கள். அது முற்றிலும் நிஜம். இது தவிர பெண் களுக்கு மார்பக மற்றும் கருப்பை கேன்ஸர் வர காரணம்- அவர்கள் அதிக அளவில் கருத்தடை மாத்திரைகளை விழுங்குவது, கால தாமதமான திருமணம், கால தாமத கர்ப்பம் போன்றவை காரணமாகும்.

ஒவ்வொரு உறுப்புகளில் வரும் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
மார்பக கேன்ஸரை மார்பகத்தில் வலியில்லாத கட்டி, மார்பக அமைப்பில் மாற்றம், மார்பக காம்பில் நீர் கசிவு, மார்பக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளால் அறியலாம்.

கருப்பை வாய் கேன்ஸரை - பிறப்புறுப்பில் இரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல், உடல் உறவிற்கு பின்னர் இரத்தக் கசிவு, மெனோபாஸ்க்கு பிறகும் இரத்தப் போக்கு போன்ற அறிகுறி மூலம் அறியலாம்.

காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸரை - வாய் தொண்டைப் பகுதியில் நீண்ட நாள் வலியில்லாத, ஆறாத புண், வாய்ப்பகுதியில் வெள்ளை (அ) சிவப்பு தோலுரிதல், குரல் மாற்றம், உணவு விழுங்க முடியாமை போன்றவற்றால் கண்டறி யலாம்.

நுரையீரல் கேன்ஸர் - நிற்காத தொடர் இருமல், சளியுடன் இரத்தம் வருதல், குரல் மாற்றம், நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் போன்ற அறி குறி மூலம் வெளிப்படும்.

வயிறு-குடல் கேன்ஸர்... மலத்துடன் இரத்தக் கசிவு, மலச்சிக்கலுடன் அடிக்கடி முறையற்று மலங் கழிக்கிற நிலைமை, அஜீரணம், தீராத வயிற்று வலி போன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.

! மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தையே நீக்க வேண்டுமா?

நீங்கள் சொல்வது மாதிரி மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக கேன்ஸரின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை. கேன்ஸர் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதி யில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்ஸரை குணப்படுத்தி விடலாம். பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர் வீச்சு சிகிச்சை (பிராக்கி தெரபி) அளிக்கப்படும்.

அது என்ன பிராக்கி தெரபி? இச்சிகிச்சை எதற்காக தரப்படுகிறது?
கேன்ஸர் வந்தால் எந்த உறுப்பில் கேன்ஸர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்ஸரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதி நவீன புற்று நோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்ஸரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி (Brachy Therapy) என்று பெயர்.

கதிர் வீச்சினை (ரேடியேஷன்) சிறுசிறு குழாய்கள் மூலம் கேன்ஸர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர் வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர். இச்சிகிச்சை மார்பக கேன்ஸர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற பிராஸ்டேட் கேன்ஸருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும்.

Organ Conser vative Oncology என்றழைக்கப்படுகிற இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்- கேன்ஸர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.

! புற்றுநோய்க்கு பொதுவாக என்னன்ன சிகிச்சைகள் உள்ளன?
1.அறுவை சிகிச்சை 2.கதிர்வீச்சு (ரேடியேஷன்) 3. கீமோ தெரபி (மருந்து மூலம் குண மளித்தல்) இந்த சிகிச்சைகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது, வந்திருக்கும் கேன்ஸரின் தன்மை போன்றவற்றை பொருத்து இவற்றில் ஒன்று மட்டுமோ அல்லது மூன்று விதமான சிகிச்சையுமோ தேவைப் படும்.

பிராக்கி தெரபி போல... புற்றுநோயை குணமளிக்க என்ன நவீன சிகிச்சைகள் வந்துள்ளன டாக்டர்?
முன்பு மருந்து மூலம் (கீமொதெரபி) கேன்ஸரை குணப்படுத்தும்போது முடியிழப்பு, பயங்கர வலி போன்ற அவஸ்தைகள் இருக்கும். ஆனால் இப்போது வந்துள்ள நவீன Target Specific Drug என்கின்ற முறையில் மோனோ குளோனல் ஆண்டிபாடிஸ் என்கின்ற மருந்தினை கொடுத்து பழைய முறையில் உள்ள அவஸ்தை மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் கேன்ஸரை குணப்படுத்தலாம்.

முன்பு வயிறு குடல் பகுதியில் கேன்ஸர் கட்டி வந்தால் குடல் பகுதியை துண்டித்து விட்டு வெளிப்புறத்தில் ஒரு பையை (கலொஸ்டமி பேக்) கட்டி விட்டு அதில் மலம் போக வழி செய்வார்கள். இப்போது அதிநவீன முறையில் குடல் பகுதியை துண்டித்து அப்பகுதியில் உள்ள கேன்ஸர் கட்டியை அகற்றி விட்டு, மீண்டும் துண்டித்த குடலை ஸ்டேப்ளர் முலம் இணைத்து விடுகிற நவீன சிகிச்சை வந்து விட்டது. இதற்கு ஸ்டேப்ளர் டெக்னிக் என்று பெயர்.

இதுநாள் வரை வயதானவர்களுக்கு பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸரை குணப்படுத்த மருத்துவ உலகம் திண்டாடிக் கொண்டிருந்தது. ஆபரேஷனை நிதானமாக செய்ய வேண்டும். குறைபாடு வராமல் ஆபரேஷன் செய்வது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் இப்போது வந்துள்ள பிராக்கி தெரபி மூலம் (பிராஸ்டெட் இம்பிளாண்ட்) ஆபரேஷன் இல்லாமலே பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸர் கட்டிகளை அகற்றி குணப்படுத்தி விடலாம். இவை எல்லாம் கேன்ஸர் வைத்தியத்தில் வந்துள்ள அதிநவீன சிகிச்சைகளாகும்.

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
மார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழு இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
தற்போது அந்த பணி முடிந்து விட்டது.   அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கணைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த சோதனைக்கூட அளவில் உள்ளது. இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்றுநோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013-ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இணையங்களிலிருந்து திரட்டியவை....

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்








2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-4 தொடர்கிறது.....

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் தொடர்-4 
ராஜ்சிவா 

மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறார்இந்தப் படத்தைப் பார்க்கும் போதுஏதோ வித்தியாசமாகவும்,ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும்அது என்னவாக இருக்கும் என்னும்பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளாபூச்சிகளா?மீன்களா?  இல்லை விமானங்களாஎன்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன்அந்த  உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும்அந்த  அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான்இல்லையாஇதுவரை, 'ரைட் சகோதரர்கள்விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில்அவற்றைப் புறம் தள்ளும் பலஇரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில்மத்திய அமெரிக்காவில்,எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம்,இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது,அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுகொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமைவாய்ந்ததுஆனால்இந்த உருவங்கள் நவீன விமானங்கள்போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்விஞ்ஞான அறிவையும்விண்வெளிஅறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படிஆயிரம் ஆண்டுகளுக்கு முன்காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள்எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்கமுடியும்?  இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாகநாம் உடன் புரிந்துகொள்ளக்கூடியது,  விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கியாராவது வந்திருக்க வேண்டும் என்பதும்அவர்கள் மூலமாக மாயாஇனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான்.அப்படி இல்லையெனில்ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு பில்டப்பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம். ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவாஅப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன்உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன.  அவற்றை நீங்களே பாருங்கள்.......!
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவாஇவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால்அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...?  இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதாஅப்படி வேறுஇனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போதுஅங்கும்எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள்இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான். எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.அப்படி என்னதான் இருந்தது?கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
என்ன உங்களால்  நம்பமுடியவில்லையல்லவாசினிமாப் படங்களில் வருவதுபோன்றுஅதே வடிவிலான உருவம்ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரிஇதுக்கே அசந்தால் எப்படிஇன்னும் இருக்கிறது பாருங்கள்.
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன்கூடிய மனிதர்களைக் கவனியுங்கள்அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒருஎகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம்மனித இனத்தின்தலையானது அன்று முதல் ன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக்கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறதுஅது தாண்டிய எதையும் மனிதனாகஎம்மால் பார்க் முடிவதில்லைஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள்.மகாராணிஇவள வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர்நெபர்டிடி (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில்இருக்கிறதுஅது இதுதான்.
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறதுஇவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?
சரிநெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம்.இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம்.ஆனால் நெபர்டிடியும் வளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்துவிடுகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம்எதுவுமே இல்லாததை நாங்கள்என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்ரி, கொஞ்சம்பெரிதாக்கிப் பார்க்கலாம். 
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும்மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதாசரிஅப்போஇதையும் பாருங்கள்........! 
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம்இதுதலையே சுற்றுகிறதா..
இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம்எனவே அடுத்தொடரில் சந்திப்போம்.

Thursday, 9 February 2012

மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்


மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.


தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில். இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். நாம் இதை பற்றி சில சமயங்களில் கேள்வி பட்டிருப்போம், இதை இயற்கையின் சமநிலை என்ற போதிலும் இயற்கை எப்படி இப்படியான சமநிலையை கடைபிடிக்கும், எப்படி இந்த சமநிலையை தீர்மானிக்கிறது அரைகுறை இல்லாத ஏற்பாடுகள் எப்படி ஏற்பட்டன போன்ற கேள்விகள் தான் இறைவன் என்ற ஒரு ஒற்றை நிலையை எடுத்து வைக்கின்றது இந்த சமநிலையை தீர்மானிப்பதில் குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டுமல்லாமல் அதற்கு காரணமாக உயிரற்ற பொருள்கள் கூட அதாவது சூழ்நிலைகள் கூட முக்கியமான காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு அமைப்பை கொண்டுள்ளதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ்க்கை நடத்துகின்றன. 

இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.


இதேபோன்று கடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை உட்கொண்டு சிறுஉயிரிகள் வாழ்கின்றன, அந்த சிறுஉயிரிகளை உட்கொண்டு பெரிய மீன்கள் வாழ அவைகளை உட்கொண்டு திமின்கலம் போன்ற மிக பெரிய உயிரினங்கள் வாழ்கையை நடத்துகின்றன,இந்த உணவு சங்கிலிகள் மூலம் இயற்கை அதன் தன்மையை தக்க வைத்து கொள்வதுடன் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்த முடியும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு சங்கிலி மட்டுமல்லாமல் வேறு சில நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளை வைத்து கொண்டு இந்த பூமியை அழிவிலிருந்தும் காத்து சமநிலையையும் உண்டாக்குகின்றன.

இந்த சமநிலையை வேட்டை ஆடுதல், நோய், தட்ப வெப்ப நிலை போன்ற சில முக்கிய காரணிகளை கொண்டு பிரித்து அறியலாம், இந்த காரணிகளே உயிரினங்களின் உணவு சுழற்சிக்கு முக்கிய காரணம். உணவின் தேவையே ஒரு விலங்கை வேட்டையாட வைக்கிறது இதனால் ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டும் இந்த பூமியில் வாழாமல் அனைத்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் வாழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் தட்ப வெப்ப நிலை மற்றும் நோய் போன்ற காரணங்களாலும் குறிப்பிட்ட உயிரினங்களின் இறப்பு ஏற்படுகிறது அதை அடிப்படையாக வைத்து மற்ற வகை உயிரினங்கள் தங்களது வாழ்கையை தொடர்கின்றன. 

இதேபோன்று பாதுகாப்பு யுக்திகளையும் எதிர்க்கும் சக்திகளையும் உயிரினங்கள் பெறாமல் இல்லை, வெவ்வேறு உருவங்களும் வடிவங்களும் கொண்ட உயிரினங்கள் தன்னை பாதுகாத்து கொள்ள ஒரே மாதிரியான எதிர்க்கும் சக்தியையும் கொண்டிருக்கவில்லை, வெவ்வேறு திறமைகளை கொண்டுள்ளன இது போன்ற மாற்று சக்தியை கொண்ட உயிரினங்களும் தன் இனத்திர்கேற்ப பாதுகாப்பு யுக்தியை பெற்ற உயிரினங்களும் இயற்கையை நிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாற்று சக்தி அமைப்பு வைத்து கொண்டு மற்ற விலங்குகளிமிருந்து தன்னையும் தன் இனத்தையும் பாதுகாத்து கொள்கின்றன, இல்லையேல் மற்ற சக்தி மிகுந்த உயிரினம் அதன் இனத்தையே வேட்டை ஆடி விட கூடும். அது அவ்வினம் முழுமையாக அழிந்துவிடும் நிலைமைக்கு கூடதள்ளப்படும். 

ஒரே ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினங்கள் கூட ஒரு வகை தற்காப்பு ஆற்றலை பெற்றுள்ளது, அதன் தற்காப்பு ஆற்றல் அதற்கே தெரியாத அனிச்சை செயலாக இருக்கும் பொழுது அதற்கு அதன் செயல்பாடுகளே (தத்தமது பரிணாம வளர்ச்சியே) காரணம் என்று கூறுவது சரியானது அல்ல. இந்த நடுநிலை தன்மையை அனைத்து உயிரிங்களினாலும் பின்பற்றப்பட்டாலும் அது அவைகளுக்கு தெரிவதில்லை, உயிரினங்கள் பாதுகாப்பு யுக்தியை பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு (~) முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 (~) கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.

கொசுக்களை போன்று உள்ள லட்சகணக்கான பூச்சிகளை கொன்று தின்பவர் தான் இந்த சிலந்தி வகையை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒரு பெண் சிலந்தி தன்னுடைய வாழ் நாளில் 250 கொசுக்களையும் 33 பழ பூச்சிகளையும் கொன்று தின்கின்றதாம், இங்கு சரியான சமநிலையை பின்பற்ற உதவுவது தான் இந்த சிலந்திகளும் அதை சார்ந்த குழுக்களும்.  மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன, இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன, இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பறவை போன்ற மேல்மட்ட விலங்குகளே பூச்சி போன்ற இனத்தை சாப்பிடுகின்றன, ஆனால் பரிணாமத்தின் படி பூச்சி வகைகள் வந்த பிறகு தான் பறவை இனம் வந்தது, பூச்சிகளை சாப்பிட பறவைகள் இல்லாத நேரத்தில், பூச்சிகள் உலகில் உள்ள அனைத்து வகையான தாவரங்களை உண்டு மொத்த இனத்தையும் அழித்திருக்கும், அப்படியெனில் பரிணாமத்தின் படி தாவரத்தை உண்டு வாழும் மேல்மட்ட உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்புக்களே இருந்திருக்காது. ஆக அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு உலக அமைப்பு இருப்பதற்கு சாத்தியம்.

கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி (~) முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் (~) முட்டைகள் வரை இடும், etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.


உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல் பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.

இதே போன்று ஒவ்வொரு உயிரினமும் இயற்கையை சமநிலை படுத்த ஒவ்வொரு விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, அவை அனைத்தையும் கூறினால் அது ஆச்சர்யமானதாகவே இருக்கும்.ஒரு இனம் மட்டும் வாழும் அளவிற்கு இந்த பூமி இருக்கவில்லை குறிப்பிட்ட இனத்திலிருந்து அனைத்தும் வந்திருந்தால் மற்ற உயிரினத்தை உணவிற்காக கூட அழித்திருக்கும் தற்போது இருப்பது போல அனைத்தும் வாழவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்காது இது போன்ற வித்தியாசமான நிர்ணயிக்கப்பட்ட முறைகளை காணும் எவரும் இவைகள் ஒவ்வொன்றாக தானாக வந்திருக்கும் என கூற வாய்ப்பில்லை, ஏனெனில் தன்னகத்தே சிக்கலான அமைப்பை பெற்றுள்ளதோடு ஒன்றில்லையே ஒன்றில்லை என பிற உயிரினங்களிலும் பிரிக்க முடியாத குழுவாக வாழ்கையை நடத்துகின்றன. 

மேலும் சொல்வோமானால் சிறு விலங்குகள் அதிக இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் பெரிய விலங்குகளோ சிறிய அளவிலான (சூழ்நிலையை பொருத்து) இனப்பெருக்கத்தை செய்கிறது. இயற்கையின் தன்மையை நிலை நாட்டுவதற்காக இனப்பெருக்கத்தையும் மாபெரும் சக்தி கட்டுபடுத்துகிறது.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)


மேலும் மனித உற்பத்தியை எடுத்து கொள்ளுங்கள், ஆண் பெண் இரண்டு வர்க்கத்தினரும் பிறக்கின்றனர், சராசரியாக சீர்படுத்த கூடிய அளவில் தான் பிறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால் ஆண் குழந்தை பிறப்பது வெகுவாக குறைந்தால் பெண்கள் திருமணமாகாமல் தவிப்பார், அதே பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் ஆண்கள் திருமணத்திற்கு பெண் இல்லாமல் திரிவர், ஆனால் நடைமுறையில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் (2011 census) என இந்தியாவில் பெண்களின் விகிதம் இருக்கிறது, சிசுக்கொலை அதிகமாக உள்ள நமது நாட்டில் இந்த நிலை மற்ற நாடுகளை கணக்கில் கொண்டால் தோராயமாக சமமாகவே அல்லது பெண்களின் விகிதம் சற்று அதிகரித்தோ இருக்கும். இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்? சிந்திக்க தெரிந்தவர்களுக்கு கடவுளை அறிய பச்சை மரத்தாணிபோல இது ஒன்றே போதும்.


இயற்கையான முறை என அனைத்திலும் உள்ளது அதை பயன்படுத்தும் காலமெல்லாம் நம்மால் இயற்கைக்கு ஆதரவான நடுநிலைபாட்டை ஏற்படுத்த முடியும், இதை அலட்சியபடுத்தும் போது அது இயற்கையாக அமையபெற்ற நடுநிலை தன்மையை சீர்குலைப்பதாக இருக்கும், அந்த நேரங்களில் அபாயகரமான விளைவுகளை நமது இனம் சந்திக்க நேரிடும். உதாரணமாக குளோபல் வார்மிங்கை ஏற்படுத்தும் க்லோரோ ப்லோரோ கார்பன், ஒரே இடத்தில் அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களின் இயற்கைக்கு மாறன நிலைப்பாடு நிலநடுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது. அனைத்தும் முறையாக வடிவமைக்கப்பட்ட பூமி நமது தவறுகளினால் சீர்குலைக்க படுகிறது, சீர்குலையாத பூமி என்ற நிலைக்கு அனைத்து வகை உயிரினங்களும் சூழ்நிலைகளும் அச்சாணி என்றிருக்க அவை ஒவ்வொன்றாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. 

இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம். 

“மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 45:4)