Thursday, 24 November 2011

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?


தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?

images01.jpg

தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும்.  குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது

தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும்.    இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.  அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும்  பலமும் பெற ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  நரம்புதசைஎலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது  களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மதுபுகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள்.  மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.
மனப்பாதிப்புதீராத சிந்தனைபயம்கோபம்தாழ்வு மனப்பான்மைஇயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.


உடல் உழைப்பு

உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்.  உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது.  இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன்.  அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள்.  ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.

எவ்வளவு நேரம் தூங்கலாம்

ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து  தூக்கம் வித்தியாசப்படும்.  இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை.  ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு  10-12 மணி நேரம் தூக்கம் அவசியம்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம்.  முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.

உடலில் உள்ள கடிகாரம்

நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது.  இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.  குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது.  இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது.  நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும்.  இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும்.  பின் இது தூக்கத்தைத் தூண்டும்.  அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர்.  இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.
இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள்.  பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.
பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாதபித்தகபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது.  இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது.  இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்

தூக்கமின்மையால் மன உளைச்சல்ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.

தூக்கத்தின் பயன்கள்

ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.
நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது.  ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது.  புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking)  நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.  நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.  இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம். (மருத்துவம்.காம்)

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும்ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும்உங்கள் இருதயங்களைப் பலப்படுத்திஉங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும்அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.  (அல்குர்ஆன் 8:11)

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும்நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும்அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

அப்துல்லாஹ்! எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும்இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிச் சொல்லப்படுகிறதே என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். நான் 'ஆம்' (உண்மைதான்) என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்யாதே'' (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு. (கொஞ்ச நேரம்) தொழு (கொஞ்ச நேரம்) தூங்கு. ஏனெனில் உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது. உன் கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு. உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.(நூல்: புகாரி 1153, முஸ்லிம் 2143, திர்மிதி மற்றும் நஸயீ)

'தூக்கத்தை ஒரு மனிதன் தன் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைஎன நபி(ஸல்) அவர்கள் கூறிதூங்காமல் தொழுது கொண்டே இருப்பதைத் தடுத்துள்ளார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால்அவர் தம்மை விட்டுத் தூக்கம் அகலும் வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில்உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர்(உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப் போகஅவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து) விடக்கூடும். (புகாரி 212-முஸ்லிம் 1440)

Wednesday, 23 November 2011

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்




டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.

குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.

உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்.

“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல; அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!” (16:98)

என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.

அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம்.

ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.

Tuesday, 1 November 2011

உலக கைகழுவும் தினமும்; உன்னத மார்க்கமும்!

hand_washing.jpgக்டோபர் பதினைந்தாம் தேதி 'உலக கை கழுவும் தினம்' அனுஷ்டிக்கப்பட்டதை நாமெல்லாம் அறிவோம். இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது. 

கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய பகுதிகளை தொடுவதாலும், கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதாலும் உடல்ரீதியாக பல்வேறு நோய்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. 

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவனது முழு உடல் தூய்மை மிகஅவசியம். அதிலும் குறிப்பாக கைகளின் தூய்மை மிக மிக அவசியம். எனவே இஸ்லாம் இந்த தூய்மையை என்றோ அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக சொல்லாமல், அன்றாடம் மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தூய்மையை கடமையாகவே ஆக்கியிருப்பதை காணலாம்.

தொழுகையில்....
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்-பெண் அனைவர் மீதும் தொழுகை கடமை என்பதை அனைவரும் அறிவோம். அந்த தொழுகை நிறைவேற வேண்டுமானால் 'உளூ' எனும் சுத்தம் மிகமிக அவசியம். அல்லாஹ் கூறுகின்றான்;


يا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள் ;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.[5:6 ]

இந்த வசனத்தில் 'உளூ' எனும் அங்கசுத்தி செய்தல், உடலுறவு செய்வதன் மூலம் குளிப்புகடமையானால் குளித்தல் அல்லது தயம்மும் செய்தல் ஆகிய கடமைகளை வலியுறுத்திய இறைவன், இதன் மூலம் அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் தூய்மையை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால்....
'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்..[புஹாரி]

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது அதன் மூலம் ஏற்படும் அசுத்தங்களை களையும் பொருட்டு நபி[ஸல்] அவர்கள் உளூ செய்து தூங்கியிருக்கிறார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இங்கும் தூய்மை வலியுறுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் உடலுறவு கொள்ளாமல் சாதரணாமாக தூங்க நாடினாலும் அப்போதும் உளூ செய்யுமாறு நபி[ஸல்] அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்;

'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.[புஹாரி]

குளிப்பு கடமையான நிலையில் உண்ண நாடினால்....
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.[அபூதாவூத்]

மீண்டும் உறவுகொள்ள நாடினால்...
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)[அபூதாவூத்]

சிறு நீர் கழித்தால்.....
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத் தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம், மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.[புஹாரி]

இவ்வாறாக அன்றாடம் தூய்மையை வலியுறுத்தும் ஏராளமான விஷயங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அவன் தூய்மையானவனாகவும், ஆரோக்கியமானவனாகவும் திகழ்வான் [இறைவன் நாடியவை நீங்கலாக] என்பதில் ஆச்சரியமில்லை. 

HOW TOILET PAPER IS MADE IN CHINA


HOW TOILET PAPER IS MADE IN CHINA




















Best regards,