|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Sunday, 26 February 2012
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்
Thursday, 9 February 2012
மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்
மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்
உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..
முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.
தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில். இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். நாம் இதை பற்றி சில சமயங்களில் கேள்வி பட்டிருப்போம், இதை இயற்கையின் சமநிலை என்ற போதிலும் இயற்கை எப்படி இப்படியான சமநிலையை கடைபிடிக்கும், எப்படி இந்த சமநிலையை தீர்மானிக்கிறது அரைகுறை இல்லாத ஏற்பாடுகள் எப்படி ஏற்பட்டன போன்ற கேள்விகள் தான் இறைவன் என்ற ஒரு ஒற்றை நிலையை எடுத்து வைக்கின்றது இந்த சமநிலையை தீர்மானிப்பதில் குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டுமல்லாமல் அதற்கு காரணமாக உயிரற்ற பொருள்கள் கூட அதாவது சூழ்நிலைகள் கூட முக்கியமான காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு அமைப்பை கொண்டுள்ளதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ்க்கை நடத்துகின்றன.
இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.
இதேபோன்று கடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை உட்கொண்டு சிறுஉயிரிகள் வாழ்கின்றன, அந்த சிறுஉயிரிகளை உட்கொண்டு பெரிய மீன்கள் வாழ அவைகளை உட்கொண்டு திமின்கலம் போன்ற மிக பெரிய உயிரினங்கள் வாழ்கையை நடத்துகின்றன,இந்த உணவு சங்கிலிகள் மூலம் இயற்கை அதன் தன்மையை தக்க வைத்து கொள்வதுடன் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்த முடியும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு சங்கிலி மட்டுமல்லாமல் வேறு சில நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளை வைத்து கொண்டு இந்த பூமியை அழிவிலிருந்தும் காத்து சமநிலையையும் உண்டாக்குகின்றன.
இந்த சமநிலையை வேட்டை ஆடுதல், நோய், தட்ப வெப்ப நிலை போன்ற சில முக்கிய காரணிகளை கொண்டு பிரித்து அறியலாம், இந்த காரணிகளே உயிரினங்களின் உணவு சுழற்சிக்கு முக்கிய காரணம். உணவின் தேவையே ஒரு விலங்கை வேட்டையாட வைக்கிறது இதனால் ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டும் இந்த பூமியில் வாழாமல் அனைத்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் வாழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் தட்ப வெப்ப நிலை மற்றும் நோய் போன்ற காரணங்களாலும் குறிப்பிட்ட உயிரினங்களின் இறப்பு ஏற்படுகிறது அதை அடிப்படையாக வைத்து மற்ற வகை உயிரினங்கள் தங்களது வாழ்கையை தொடர்கின்றன.
இதேபோன்று பாதுகாப்பு யுக்திகளையும் எதிர்க்கும் சக்திகளையும் உயிரினங்கள் பெறாமல் இல்லை, வெவ்வேறு உருவங்களும் வடிவங்களும் கொண்ட உயிரினங்கள் தன்னை பாதுகாத்து கொள்ள ஒரே மாதிரியான எதிர்க்கும் சக்தியையும் கொண்டிருக்கவில்லை, வெவ்வேறு திறமைகளை கொண்டுள்ளன இது போன்ற மாற்று சக்தியை கொண்ட உயிரினங்களும் தன் இனத்திர்கேற்ப பாதுகாப்பு யுக்தியை பெற்ற உயிரினங்களும் இயற்கையை நிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாற்று சக்தி அமைப்பு வைத்து கொண்டு மற்ற விலங்குகளிமிருந்து தன்னையும் தன் இனத்தையும் பாதுகாத்து கொள்கின்றன, இல்லையேல் மற்ற சக்தி மிகுந்த உயிரினம் அதன் இனத்தையே வேட்டை ஆடி விட கூடும். அது அவ்வினம் முழுமையாக அழிந்துவிடும் நிலைமைக்கு கூடதள்ளப்படும்.
ஒரே ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினங்கள் கூட ஒரு வகை தற்காப்பு ஆற்றலை பெற்றுள்ளது, அதன் தற்காப்பு ஆற்றல் அதற்கே தெரியாத அனிச்சை செயலாக இருக்கும் பொழுது அதற்கு அதன் செயல்பாடுகளே (தத்தமது பரிணாம வளர்ச்சியே) காரணம் என்று கூறுவது சரியானது அல்ல. இந்த நடுநிலை தன்மையை அனைத்து உயிரிங்களினாலும் பின்பற்றப்பட்டாலும் அது அவைகளுக்கு தெரிவதில்லை, உயிரினங்கள் பாதுகாப்பு யுக்தியை பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு (~) முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 (~) கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.
கொசுக்களை போன்று உள்ள லட்சகணக்கான பூச்சிகளை கொன்று தின்பவர் தான் இந்த சிலந்தி வகையை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒரு பெண் சிலந்தி தன்னுடைய வாழ் நாளில் 250 கொசுக்களையும் 33 பழ பூச்சிகளையும் கொன்று தின்கின்றதாம், இங்கு சரியான சமநிலையை பின்பற்ற உதவுவது தான் இந்த சிலந்திகளும் அதை சார்ந்த குழுக்களும். மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன, இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன, இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
பறவை போன்ற மேல்மட்ட விலங்குகளே பூச்சி போன்ற இனத்தை சாப்பிடுகின்றன, ஆனால் பரிணாமத்தின் படி பூச்சி வகைகள் வந்த பிறகு தான் பறவை இனம் வந்தது, பூச்சிகளை சாப்பிட பறவைகள் இல்லாத நேரத்தில், பூச்சிகள் உலகில் உள்ள அனைத்து வகையான தாவரங்களை உண்டு மொத்த இனத்தையும் அழித்திருக்கும், அப்படியெனில் பரிணாமத்தின் படி தாவரத்தை உண்டு வாழும் மேல்மட்ட உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்புக்களே இருந்திருக்காது. ஆக அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு உலக அமைப்பு இருப்பதற்கு சாத்தியம்.
கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி (~) முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் (~) முட்டைகள் வரை இடும், etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.
உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல் பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.
இதே போன்று ஒவ்வொரு உயிரினமும் இயற்கையை சமநிலை படுத்த ஒவ்வொரு விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, அவை அனைத்தையும் கூறினால் அது ஆச்சர்யமானதாகவே இருக்கும்.ஒரு இனம் மட்டும் வாழும் அளவிற்கு இந்த பூமி இருக்கவில்லை குறிப்பிட்ட இனத்திலிருந்து அனைத்தும் வந்திருந்தால் மற்ற உயிரினத்தை உணவிற்காக கூட அழித்திருக்கும் தற்போது இருப்பது போல அனைத்தும் வாழவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்காது இது போன்ற வித்தியாசமான நிர்ணயிக்கப்பட்ட முறைகளை காணும் எவரும் இவைகள் ஒவ்வொன்றாக தானாக வந்திருக்கும் என கூற வாய்ப்பில்லை, ஏனெனில் தன்னகத்தே சிக்கலான அமைப்பை பெற்றுள்ளதோடு ஒன்றில்லையே ஒன்றில்லை என பிற உயிரினங்களிலும் பிரிக்க முடியாத குழுவாக வாழ்கையை நடத்துகின்றன.
மேலும் சொல்வோமானால் சிறு விலங்குகள் அதிக இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் பெரிய விலங்குகளோ சிறிய அளவிலான (சூழ்நிலையை பொருத்து) இனப்பெருக்கத்தை செய்கிறது. இயற்கையின் தன்மையை நிலை நாட்டுவதற்காக இனப்பெருக்கத்தையும் மாபெரும் சக்தி கட்டுபடுத்துகிறது.
தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)
மேலும் மனித உற்பத்தியை எடுத்து கொள்ளுங்கள், ஆண் பெண் இரண்டு வர்க்கத்தினரும் பிறக்கின்றனர், சராசரியாக சீர்படுத்த கூடிய அளவில் தான் பிறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால் ஆண் குழந்தை பிறப்பது வெகுவாக குறைந்தால் பெண்கள் திருமணமாகாமல் தவிப்பார், அதே பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் ஆண்கள் திருமணத்திற்கு பெண் இல்லாமல் திரிவர், ஆனால் நடைமுறையில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் (2011 census) என இந்தியாவில் பெண்களின் விகிதம் இருக்கிறது, சிசுக்கொலை அதிகமாக உள்ள நமது நாட்டில் இந்த நிலை மற்ற நாடுகளை கணக்கில் கொண்டால் தோராயமாக சமமாகவே அல்லது பெண்களின் விகிதம் சற்று அதிகரித்தோ இருக்கும். இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்? சிந்திக்க தெரிந்தவர்களுக்கு கடவுளை அறிய பச்சை மரத்தாணிபோல இது ஒன்றே போதும்.
இயற்கையான முறை என அனைத்திலும் உள்ளது அதை பயன்படுத்தும் காலமெல்லாம் நம்மால் இயற்கைக்கு ஆதரவான நடுநிலைபாட்டை ஏற்படுத்த முடியும், இதை அலட்சியபடுத்தும் போது அது இயற்கையாக அமையபெற்ற நடுநிலை தன்மையை சீர்குலைப்பதாக இருக்கும், அந்த நேரங்களில் அபாயகரமான விளைவுகளை நமது இனம் சந்திக்க நேரிடும். உதாரணமாக குளோபல் வார்மிங்கை ஏற்படுத்தும் க்லோரோ ப்லோரோ கார்பன், ஒரே இடத்தில் அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களின் இயற்கைக்கு மாறன நிலைப்பாடு நிலநடுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது. அனைத்தும் முறையாக வடிவமைக்கப்பட்ட பூமி நமது தவறுகளினால் சீர்குலைக்க படுகிறது, சீர்குலையாத பூமி என்ற நிலைக்கு அனைத்து வகை உயிரினங்களும் சூழ்நிலைகளும் அச்சாணி என்றிருக்க அவை ஒவ்வொன்றாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.
இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
“மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 45:4)
Wednesday, 1 February 2012
மனித மூளை
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
மனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.
மனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க.
1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.
2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது.
3. மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.
4. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது, ஒரு சிறிய அளவிலான மின் விளக்கை எரிய வைக்க போதுமானது. (அதனாலும் தான் மனித மூளையில் பல்ப் எரிவது போல காட்டுகின்றார்களோ :) )
5. உடலின் மற்ற பகுதிகளின் வலியை மூளை உணர்ந்தாலும் தன்னுடைய வலியை அதனால் உணர முடியாது. இதற்கு காரணம், வலி உணரும் உணர்விகள் மூளைக்கு கிடையாது. இந்த காரணத்தினால், மனிதன் முழு நினைவோடு இருக்கும்போதே மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த காரணத்தினாலேயே தலைவலி பிரச்சனைகளை மூளையோடு தொடர்புபடுத்த முடியாது. மூளையை சுற்றி இருக்கும் நரம்புகளின் அழுத்தத்தாலும், இரத்த நாளங்களின் அழுத்தத்தாலுமே வலி ஏற்படுகின்றது.
6. மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
7. மூளையிலிருந்து வெளிவரும்/உள்வரும் நரம்பு சமிக்கைகள், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 170 மைல்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இதனாலேயே நம்மால் எந்தவொரு உணர்வையும் உடனடியாக உணர முடிகின்றது.
8. மூலையில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் மட்டும் சுமார் ஒரு லட்சம் மைல்கள்.
9. சுமார் நூறு பில்லியன் நியுரான்கள் மூளையில் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொள்வதில்லை (physically).
10. நியுரான்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொள்வதை மந்தமாக்குகின்றது மதுப்பழக்கம். (இருப்பினும் டாஸ்மாக் நடத்துவதை அரசாங்கம் கைவிடபோவதில்லை. மதுவை எதிர்க்காத பலருக்கு, தமிழன் முன்னேறவில்லை(?) என்ற ஆதங்கம் மட்டும் இருக்கும்).
11. கருவுறலின் போது, நிமிடத்திற்கு 2,50,000 நியுரான்கள் என்ற கணக்கில் மூளை வளர்ச்சியடைகின்றது. குழந்தை பிறந்த ஒரு வருடத்தில், அதன் மூளை அளவு மூன்று மடங்கு பெரிதாகி விடுகின்றது. (குழந்தைகளின் தலை பெரிதாக இருக்கின்றது என்பது இயல்பான விசயமே!!)
12. ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் (switches) எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம்.
இறைவன் அமைத்துக்கொடுத்துள்ள இந்த மிக அற்புதமான அமைப்பை நல்ல முறையில் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
References:
வஸ்ஸலாம்,
Monday, 30 January 2012
தோல் தொற்று நோய்களைத் தடுக்க...
தோல் தொற்று நோய்களைத் தடுக்க...
மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.
தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது.
தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம் பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன.
பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
ரெசிபி
பிரெட் சப்பாத்தி: பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.
புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.
டயட்
சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடி
வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்.
நன்றி தமிழ் முரசு

புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்
புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிசய சிவப்பு தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. 1) உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது. 2) கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது. 3) நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. 4) மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 5) கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது. 6) தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது 7) முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது. 8) சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 9) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது. 10) காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எப்படி தயாரிப்பது : இந்த பானத்தை தயாரிப்பது எளிது காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1 மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம். தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம். |
Subscribe to:
Posts (Atom)