Friday, 2 March 2012

புதிய தொடர் ஆரம்பம்!!!


புதிய தொடர் ஆரம்பம்!!!
அன்பு நண்பர்களே!

பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால்(என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக இருக்கலாம் என நம்புகிறேன். அந்த வகையில் முதலில்கொசு விரட்டி(Liquid) தயாரிப்பதெப்படி என்பது பற்றி இங்கு தருகிறேன்.
இதற்காக இதை தயாரித்து விற்பனை செய்யும் Mr..ராம நாதன் என்பவர் கோவை,குனியமுத்தூரில் இருப்பதை அறிந்து அவரை நேரில் சென்று விளக்கம் கேட்கலாம் என்ற நோக்கத்தில் சில நாட்களுக்கு முன் அங்கு சென்று அவரை சந்தித்தேன். 
கோவையில், சுய தொழிலாக,குடும்பத்தோடு, நேர்மையான முறையில்,உழைப்பை செலுத்தி, ஒரு மூலிகை கொசு விரட்டியை தயாரித்து, தமிழகம் முழுதும் சந்தைபடுத்தி வருகிறார்,Mr..ராமநாதன்.
ராஜா நைட்ஸ் எனும் அடையாளப் பெயரில்,இவரது மூலிகை கொசு விரட்டி கோவையில் பிரபலமான மருத்துவர்கள்,பேராசிரியர்கள் என்று பலரையும் கவர்ந்துள்ளது. கோவை வேளாண்மை பல்கலை கழகம், போன்றவைகள் அளித்த பல சான்றுகள் இவரது உழைப்பிற்கு சான்று பகிர்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக தீவீர முயற்சியில்,இவர் மூலிகை ஆராய்ச்சி மூலம் சுயமாக கண்டுபிடித்தவை இவரது தயாரிப்புகள். இயற்கை நறுமண ரூம் பிரஸ்னர், நறுமணம் கலந்த கொசு விரட்டி, வெறும் கொசு விரட்டி என 3 வகைகள் பிரதான உற்பத்தியாக  தயார் செய்து சந்தை படுத்தி வருகிறார்.
சென்னை,பாண்டி,தஞ்சாவூர்,கோவை போன்ற இடங்களில் இவரது முயற்சிக்கு மிகுந்த வரவேற்புள்ளது.

செய்முறை விளக்கங்களை நேரில் தெரிந்து வரலாம் என்று அங்கு சென்றேன். ஆனால் அவரோ தற்போது தொழிலினை பாலக்காட்டுக்கு அருகிலுள்ள அவரது கிராமத்தில் செய்வதாகவும், தற்போது(நான் சென்ற வேளை), உற்பத்தியை நிறுத்தி , தேவைப் படும் போது மட்டும் செய்து வருவதாகவும்  கூறினார். அங்கு மூலிகை திரவத்தை தயார் செய்து கோவையில் அவரது வீட்டில்  வைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறார். பொருளாதார சிக்கல்களினால் குறைந்த அளவில் செய்து வருகிறாராம். சரி, நீங்கள் ஏன் இதில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது? என வினவியதற்கு அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தொழில் ரகசியம் என நினைக்கிறேன். இது போக கடந்த 25 வருடங்களாக, கொசு வத்திச் சுருள், ஊது வத்தியில் கொசுவத்தி, நரை முடித் தைலம் போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். பட்டம் பெற்றவர். மனிதரிடம் இதே போன்று பல அரிய கண்டுபிடிப்புகள் மண்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, Ultra sound மூலம் Washing m/c தயாரிக்கும் Idea வும் உள்ளது.எந்தவித சலவைத் தூள்களுமின்றி,வெறும் தண்ணீரைக் கொண்டு ultra sound எனும் மின்னியல் மூலம் துணிகளை துவைக்க முடியும் என்கிறார். சில தொழில் நுட்ப காரணங்களாலும், பொருளாதார சிக்கல்களாலும் இன்னும் செயல் வடிவில் கொண்டு வர முடியாமல் இருக்கிறார். கொசு விரட்டி தொழில் செய்யலாம் என நினைப்பவர்கள் மேலதிக விவரங்களுக்கு அவரை அணுகவும். அவரது செல் நம்பர்:            0091-9382307952      .
Mr.Ramanathan.

7/1 P&T Layout
Palakat main Road,
Kuniamuthur,Coimbatore-8
திரும்பி வரும் போது நானும் 12 கொசு விரட்டி Liquid பாட்டில்கள் (மொத்த விலைக்கு வாங்கினால்பாட்டில் ரூ.25 என தர முடியுமாம்.. கடையில் இதன் விலை ரூ.40-45) வாங்கிக் கொண்டு சென்னைக்கு நடையை(sorry ரயிலில்) கட்டினேன்.
கீழே அவர் மனைவிபத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியை இணைத்திருக்கிறேன். இனி உங்கள் பாடு அவர் பாடு. ஆரம்பித்து வைத்து விட்டேன். அவ்வளவே!
தொடர்ந்து இன்னும் மற்ற சிறு தொழில்கள் பற்றி படிப்படியாகத் தருகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் முடிந்தளவு Forward செய்யுங்கள்.
நன்றி


கொசு விரட்டி தயாரிப்பு 





தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.

இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.  இவ்வாறு ஜெயந்தி கூறினார்.


விற்பனை வாய்ப்பு

மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.

தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை. 

வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

தயாரிப்பது எப்படி?

வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம். 
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.
நன்றி:தமிழ்முரசு
 கொசுறு செய்தி:
இது வியாபாரத்திற்காக அல்ல...கொசுவோடு போராடும் நமக்காக...


கற்பூரம் இயற்கையான கொசு விரட்டி.

Post
படத்தில் காட்டியுள்ளபடி ரேபெல்லேண்டில் கற்பூரத்தை வைத்து பிளக் பாயிண்ட்டில் மாட்ட வேண்டும். பின்பு switch on செய்தால்
கொசுக்கள் ஓடி விடும்.
கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் அங்கு தங்காது.
முயற்சி செய்து பாருங்கள்.
நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை!!
அப்படியும் கொசு ஓடாவிட்டால் நாம் அதனிடம் தோற்று விட்டோம் என்று தோல்வியை ஒப்புக் கொள்வோம்.

ATTACHMENTS
champhor repellent.jpg
champhor repellent.jpg (10.78 KiB) Viewed 51 times

champor and repellent.jpg































மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்?


மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்?
 




காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்... சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் - சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா?
அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி உயிர் வாழும் தன்மை கொண்டவை இந்தப் புழுக்கள். அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதும், அழிப்பதும் சிரமம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தாவரவியல் நிபுணர் ஒருவரிடம் பேசினோம். உண்மைதான்.. காலிஃப்ளவர் பூக்கும் பருவத்தின் போதே புழுக்களின் முட்டைகள் உள்ளே நுழைந்து பல்கிப் பெரிதாகிவிடும். அளவில் மிகச் சிறியதாக இபுருப்பதால் கைகளால் எடுத்துப் போட முடியாது மாறாக, வீட்டுக் குழாயில் தண்ணீரில் அலசினாலும் போகாது. அதனால் தண்ணீரைக் கொதிக்க வைத்து புழுக்களை அழிப்பதுதான் வாடிக்கை. ஆனால் இந்த முறையிலும் அனைத்துப் புழுக்களும் மடியாது! என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லும் அந்த நிபுணர், உப்புக் கரைசல் அதற்கு நல்ல மாற்று என்கிற கருத்தையும் முன் வைக்கிறார்.
வீடுகளில் காலிஃப்ளவர் சமைப்பதற்கு முன்பு முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரில் கழுவுவார்கள். சரி ஆனால் ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது,
ஆமாம் அங்கே சமையலுக்கு காலிஃப்ளவர்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும். சுடுநீர், உப்புக்கரைசல் கொண்டு சுத்தப்படுத்தும் வாய்ப்பும் குறைவு. இதனால் அந்த பூக்களில் ஒட்டியிருக்கும் நுண்ணிய புழுக்கள் எளிதில் வெளியேறாது. அதனால் உணவு உட்கொள்ளும்போது நம்மை அறியாமல் உள்ளே சென்று உடலில் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆபத்து உண்டு! என்கிறார்.
சரி! சரியான முறையில் சுத்தம் செய்யாமல், காலிஃப்ளவர் எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் வருமா? என்ன சொல்கிறார் பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் தெய்வீகன்.
"காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்கள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று சொல்லமுடியாது குறிப்பிட்ட புழுக்கள் மனித உறுப்புகளுக்குள் சென்றவுடன் செயலிழந்து போகும். அதையும் தாண்டி உள்ளே தங்கிவிட்டால் மட்டுமே ஆபத்து!' என்கிறார்.

எபிலெப்ஸி
இளம் வயதில் குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு (எபிலெப்ஸி) வரும். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் .ள்ளிட்ட காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மும்பையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.

சுத்தம் செய்வது எப்படி?
காலிஃப்ளவர் பூக்களின் மீது புழுக்களும் பசை போன்று ஒருவித திரவமும் ஒட்டியிருக்கும். அதனை உப்புக் கரைசலில் மூழ்க வைத்து (ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் கால் பங்கு உப்பு) சுத்தம் செய்யலாம். கூடவே அரை டம்ளர் வினிகரில் (அசிட்டிக் அமிலம்) அரைமணி நேரம் ஊற வைக்கலாம். இதன் மூலம் புழுக்களை ஒழிக்கலாம்.

பாதிப்புகள்
* தசைகளில் இறுக்கம்
* மூளை நரம்புகளில் அழற்சி.
* வயிற்று வலி.

மன உளைச்சல் தரும் தலை வழுக்கை: எளிய சிகிச்சைமுறை


மன உளைச்சல் தரும் தலை 

வழுக்கை: எளிய சிகிச்சைமுறை

Baldness
அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு. மேலும் இரும்புச் சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்த சோகை, தைராய்டு பிரச்சினை, பூஞ்சைத் தாக்குதல், மனஅழுத்தம், மருந்துப் பொருட்கள் போன்றவை தலையில் வழுக்கை விழ காரணங்களாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தேங்காய் எண்ணெய், வெந்தயம்

உடல் உஷ்ணத்தினால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்க தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உபயோகிக்கலாம். இதனால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.

புழுவெட்டு சரியாகும்

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்க்கும் மருந்துகள்

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும். இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

மன அழுத்தம் தவிர்க்கவும்

மன அழுத்தமானது முடி உதிர காரணமாக கருதப்படுகிறது. எனவே அமைதியான சூழலில் முடி அமர்ந்து தியானம் மேற்கொள்வது மன அழுத்தம் போக்கும். இதனால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும். முடி கொட்டத் தொடங்கினாலே ரசாயன பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இயற்கை மூலிகைப் பொருட்களையும், உடலுக்கு குளுமை தரும் பொருட்களையும் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர்-5 உலக அழிவும், மாயா இன மக்களும்






2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-5 தொடர்கிறது.....



2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் தொடர்-5

ராஜ்சிவா 

நான் இந்தத் தொடரைமாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம் அழியுமா?இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன்ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல்ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில்,உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்இந்தப் பயம்அறிவியலாளர்களிடையே கூடஇரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப்பெரிதாகியதன் காரணம் என்னஅந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களாஎன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போதுஉலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.
அத்துடன்நான்  குறிப்பிடும் சம்பவங்களும்படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத,மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால்உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றனஅவற்றிற்குக் காரணமாகதிடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லைஆனாலும்அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லைஉலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம்அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம். நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்ததுஅது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்துஇன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறதுபல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும்  வருகின்றோம்ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில்,  உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயேஇவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள்அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும்அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும்எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாதுஅந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும்அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களாஅது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறதுஎன நீங்கள் அலறுவது புரிகிறதுகத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காதுஅத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காதுஅத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. 
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான்இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும்எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால்குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள்உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானாஇல்லையான்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர்அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாதுஇவையெல்லாம் வேறு ஏதோசித்திரங்கள்என்று சொல்லி நானும்நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம்.ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லைஇவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையேஎன்ற  முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில்எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான்அந்தப் பொருள் என்ன தெரியுமாபாட்டரிகள். "என்ன பாட்டரிகளாகி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள்நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு,இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றனஇவை பற்றிபல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்இவை எம்மை யோசிக்க வைக்கின்றன.உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.சரிஇவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால்இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்றுஅடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன்அதைப் பார்த்தால் என்னசொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள். 
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன்அதே உடைகள்காலணிகள்,தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின்உச்சமல்லவாஇந்தச் சிலை எப்படி அந்தச் சர்ச்சில் வந்திருக்கலாம் என்ற கேள்வியை யோசித்தபடியே அடுத்த வாரம்வரை காத்திருங்கள்.இதற்கான விடையையும்மாயன்களைப் பற்றியும் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

Sunday, 26 February 2012

புற்றுநோய்க்கு புதிய காரணங்கள்



புற்றுநோய்க்கு புதிய காரணங்கள்

Post
புற்றுநோய்க்கு தோன்றுவதற்கு உரிய காரணங்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிதாக அதிகரித்துக்கொண்டே இருக்கினறன. புற்றுநோயின் பல வகைகள் உள்ளன. இந்த வகைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

நாடுகளின் அமைவிடம், தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களைப் பொறுத்தும் புற்றுநோயின் வகைகள் வேறுபடுகின்றன. மிக அதிகமாக சூரிய ஒளிபடும் நாடுகளில் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சூரிய ஒளி, வெப்பம் குறைவாகத் தான் இருக்கின்றன. ஆனால் அங்கு தோல் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகின்றது.

இதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் தீவிரமான ஆராய்ந்தனர். அங்கு குறைவாக விழும் சூரிய ஒளியிலும் அதிக அளவில் அல்ட்ரா வயலட் கதிர்களின் செறிவுதான் புற்றுநோய்க்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டது. குளிர் நாடான சுவிட்சர்லாந்தில் குளிர் மிகுந்துள்ள சூழ்நிலையால் நிணநீர் அமைப்பின் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் அங்கு நிணநீர் புற்றுநோய் அபாயம் உள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் இங்கு மார்பகப் புற்றுநோயும், வாய்ப்புற்று நோயும் அதிகமாக உள்ளன. வட மாநிலங்களில் புகையிலை அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. இதனால் வாய்ப்புற்றுநோயும் அங்கு பெருமளவில் காணப்படுகின்றன. சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டிருந்தாலும் குழந்தைத் திருமணம் மேலும் இளவயது திருமணங்கள் வட மாநிலங்களில் பரவலாக உள்ளன. போதிய சுகாதாரமின்மையும் காணப்படுகின்றது. இதனால் மார்பகப் புற்றுநோய் அங்கு அதிக அளவில் உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சரிவிகித உணவு முறை, அடிப்படை வசதிக்குறைவு இவற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்றுநோய் காணப்படுகின்றது. ஜப்பானில் நுரையீரல் புற்று நோய் அதிகமாக உள்ளது. புற்றுநோய்க்கான குணப்படுத்தும் முறைகளை அலோபதி மருத்துவ முறையிலும், மாற்று மருத்துவ முறைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். இவ்வேளையில் புற்றுநோய் உருவாவதற்கான காரணங்களும் அதிகரித்து வருகின்றன.



புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை


Dr. Interview : Treatment for
 Cancer - Food Habits and
 Nutrition Guide in Tamil














! புற்றுநோய் என்றால் மரணம்தான் என்கின்ற நிலைமை மாறிவிட்டதா டாக்டர்?
பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். கேன்ஸர் என்றால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் என்றிருந்த நிலைமை எவ்வளவோ இப்போது மாறி விட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்த நிலையும், மக்களிடையே ஏற்பட்டிருக்கிற விழிப்புணர்ச்சியும் புற்று நோயாளிகள் மரணத்திலிருந்து மீளலாம் என்கின்ற நிலையை அடைந்துள் ளது. இதில் ஒரே ஒரு விசயம் என்னவெனில் கேன்ஸரின் ஆரம்ப நிலையிலேயே வந்தால் முற்றிலும் பூரணமாக குணப்படுத்திவிடலாம் என்பதுதான்.

புற்றுநோயை எப்படி கண்டறிகிறீர்கள்?
கேன்ஸரை-ஸ்கிகீனிங் டெஸ்ட் என்கின்றஒரு நான்கைந்து சோதனைகளை கொண்டு தான் உறுதி செய்கிறோம். இந்த சோதனைகள் ஆணா, பெண்ணா, வயது மற்றும் வந்திருக்கும் நோயின் நிலைமை பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். பெண்ணாக இருந்தால் அடிவயிற்றில் அல்ட்ரா சவுண்டு சோதனை, பிறப்புறுப்பில் பாப்ஸ்மியர் டெஸ்ட், மார்பகத் திற்கு மேமோகிராம் டெஸ்ட், மார்பக எக்ஸ்-ரே, இரத்த சோதனையும் செய்யப் படும். ஆண்களாக இருந்தால்-மார்பக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட், புராஸ்டேட் சுரப்பி சோதனை செய் வோம். இது தவிர-ஆண், பெண் யாராக இருந்தாலும் இரத்தத்தில் உள்ள டியூமர் மார்க்கர் சோதனையும், ஊடிடடிþடிளஉடிளில எனும் சாதனத்தில் சோதனையும் செய்து கேன்ஸரை உறுதி செய்வோம். இந்த சோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை முப்பது வயதிற்கு மேற் பட்டவர்கள் செய்து கொள்வது கேன்ஸரை பற்றிய விழிப்புணர்ச்சியுடன் இருக்க உதவும்

தமிழ்நாட்டில் எந்த மாதிரியான புற்றுநோய் அதிகமாக உள்ளது? ஏன்?

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பகுதியில் வருகிற கேன்ஸர், காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸர், மார்பக புற்று நோய் பரவலாக உள்ளது. இதுவே ஆண்களுக்கு வயதான காலத்தில் புராஸ் டேட் சுரப்பியில் வருகிறகேன்ஸரும் ஆண், பெண் இருவருக்கும் வருகிற நுரையீரல் கேன்ஸர், வயிறு குடல் பகுதியில் வருகிற கேன்ஸரும் அதிக அளவில் உள்ளது. இன்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இது போன்ற கேன்ஸர் அதிகரித்திருக்க காரணம்- வாழ்க்கை முறை மாற்றம் தான். அதிவேக வாழக்கை கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இது போன்ற நோய்கள் வருகின்றன. Aள ளை லடிரச டுகைந ளுவலடந ளுடி ளை லடிரச ஊயþஉநச அதாவது நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரிதான் நமக்கு வருகிற கேன்ஸரும் இருக்கும் என்பார்கள். அது முற்றிலும் நிஜம். இது தவிர பெண் களுக்கு மார்பக மற்றும் கருப்பை கேன்ஸர் வர காரணம்- அவர்கள் அதிக அளவில் கருத்தடை மாத்திரைகளை விழுங்குவது, கால தாமதமான திருமணம், கால தாமத கர்ப்பம் போன்றவை காரணமாகும்.

ஒவ்வொரு உறுப்புகளில் வரும் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
மார்பக கேன்ஸரை மார்பகத்தில் வலியில்லாத கட்டி, மார்பக அமைப்பில் மாற்றம், மார்பக காம்பில் நீர் கசிவு, மார்பக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளால் அறியலாம்.

கருப்பை வாய் கேன்ஸரை - பிறப்புறுப்பில் இரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல், உடல் உறவிற்கு பின்னர் இரத்தக் கசிவு, மெனோபாஸ்க்கு பிறகும் இரத்தப் போக்கு போன்ற அறிகுறி மூலம் அறியலாம்.

காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸரை - வாய் தொண்டைப் பகுதியில் நீண்ட நாள் வலியில்லாத, ஆறாத புண், வாய்ப்பகுதியில் வெள்ளை (அ) சிவப்பு தோலுரிதல், குரல் மாற்றம், உணவு விழுங்க முடியாமை போன்றவற்றால் கண்டறி யலாம்.

நுரையீரல் கேன்ஸர் - நிற்காத தொடர் இருமல், சளியுடன் இரத்தம் வருதல், குரல் மாற்றம், நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் போன்ற அறி குறி மூலம் வெளிப்படும்.

வயிறு-குடல் கேன்ஸர்... மலத்துடன் இரத்தக் கசிவு, மலச்சிக்கலுடன் அடிக்கடி முறையற்று மலங் கழிக்கிற நிலைமை, அஜீரணம், தீராத வயிற்று வலி போன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.

! மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தையே நீக்க வேண்டுமா?

நீங்கள் சொல்வது மாதிரி மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக கேன்ஸரின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை. கேன்ஸர் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதி யில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்ஸரை குணப்படுத்தி விடலாம். பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர் வீச்சு சிகிச்சை (பிராக்கி தெரபி) அளிக்கப்படும்.

அது என்ன பிராக்கி தெரபி? இச்சிகிச்சை எதற்காக தரப்படுகிறது?
கேன்ஸர் வந்தால் எந்த உறுப்பில் கேன்ஸர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்ஸரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதி நவீன புற்று நோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்ஸரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி (Brachy Therapy) என்று பெயர்.

கதிர் வீச்சினை (ரேடியேஷன்) சிறுசிறு குழாய்கள் மூலம் கேன்ஸர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர் வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர். இச்சிகிச்சை மார்பக கேன்ஸர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற பிராஸ்டேட் கேன்ஸருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும்.

Organ Conser vative Oncology என்றழைக்கப்படுகிற இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்- கேன்ஸர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.

! புற்றுநோய்க்கு பொதுவாக என்னன்ன சிகிச்சைகள் உள்ளன?
1.அறுவை சிகிச்சை 2.கதிர்வீச்சு (ரேடியேஷன்) 3. கீமோ தெரபி (மருந்து மூலம் குண மளித்தல்) இந்த சிகிச்சைகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது, வந்திருக்கும் கேன்ஸரின் தன்மை போன்றவற்றை பொருத்து இவற்றில் ஒன்று மட்டுமோ அல்லது மூன்று விதமான சிகிச்சையுமோ தேவைப் படும்.

பிராக்கி தெரபி போல... புற்றுநோயை குணமளிக்க என்ன நவீன சிகிச்சைகள் வந்துள்ளன டாக்டர்?
முன்பு மருந்து மூலம் (கீமொதெரபி) கேன்ஸரை குணப்படுத்தும்போது முடியிழப்பு, பயங்கர வலி போன்ற அவஸ்தைகள் இருக்கும். ஆனால் இப்போது வந்துள்ள நவீன Target Specific Drug என்கின்ற முறையில் மோனோ குளோனல் ஆண்டிபாடிஸ் என்கின்ற மருந்தினை கொடுத்து பழைய முறையில் உள்ள அவஸ்தை மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் கேன்ஸரை குணப்படுத்தலாம்.

முன்பு வயிறு குடல் பகுதியில் கேன்ஸர் கட்டி வந்தால் குடல் பகுதியை துண்டித்து விட்டு வெளிப்புறத்தில் ஒரு பையை (கலொஸ்டமி பேக்) கட்டி விட்டு அதில் மலம் போக வழி செய்வார்கள். இப்போது அதிநவீன முறையில் குடல் பகுதியை துண்டித்து அப்பகுதியில் உள்ள கேன்ஸர் கட்டியை அகற்றி விட்டு, மீண்டும் துண்டித்த குடலை ஸ்டேப்ளர் முலம் இணைத்து விடுகிற நவீன சிகிச்சை வந்து விட்டது. இதற்கு ஸ்டேப்ளர் டெக்னிக் என்று பெயர்.

இதுநாள் வரை வயதானவர்களுக்கு பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸரை குணப்படுத்த மருத்துவ உலகம் திண்டாடிக் கொண்டிருந்தது. ஆபரேஷனை நிதானமாக செய்ய வேண்டும். குறைபாடு வராமல் ஆபரேஷன் செய்வது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் இப்போது வந்துள்ள பிராக்கி தெரபி மூலம் (பிராஸ்டெட் இம்பிளாண்ட்) ஆபரேஷன் இல்லாமலே பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸர் கட்டிகளை அகற்றி குணப்படுத்தி விடலாம். இவை எல்லாம் கேன்ஸர் வைத்தியத்தில் வந்துள்ள அதிநவீன சிகிச்சைகளாகும்.

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
மார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழு இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
தற்போது அந்த பணி முடிந்து விட்டது.   அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கணைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த சோதனைக்கூட அளவில் உள்ளது. இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்றுநோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013-ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இணையங்களிலிருந்து திரட்டியவை....