Monday, 2 April 2012

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்


சுய தொழில்கள் வரிசையில் அடுத்து் பார்க்கப் போவது காளான் வளர்ப்புப் பற்றியது. இதை சிறிய முதலீட்டில் குடிசை தொழிலாகவும் செய்யலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.



காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்


குறைந்த இடவசதியே போதும்.
ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ.
மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம்.

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.



நண்பர் மோகன்தாஸோடு, தோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும், துபாய்ல டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாய அனுபவத்தையும், அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல. துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்' படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதைப் படிக்க, படிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி. திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டு, விவசாயத்துலயே மறுபடியும் இறங்கிட்டேன்.



இணைந்த கைகள்!


என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துல, அரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்து கத்திரிக்காய் போட்டேன். காரல் இல்லாத, பசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால, மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசு. கொண்டு போனதுமே மொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுது. அதைத் தொடர்ந்து, விவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன்.

ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ், அடிக்கடி என் தோட்டத்துக்கு வருவார். அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவரும் 'பசுமை விகடன்' இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார். அதுல இருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம். அதையெல்லாம் வெச்சு, மேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம். ஒரு தடவை காளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துது. அதிக முதலீடு இல்லாம, குறைஞ்ச இடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. அந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம்.



காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டு வந்தோம். எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவு செஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம். முதல்ல என்னோட தோட்டத்துல சின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம். அக்கம்பக்கத்துல இருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னு ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்'’ என்று ராமசாமி குஷியோடு சொல்லி நிறுத்தினார்.

கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமா, நம்மளால காளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு, நானும் ராமசாமியோட கைகோத்தேன். எங்க வீடு இருக்கறது திண்டுக்கல், உழவர் சந்தைக்கு பின்னாலதான். வீட்டுக்கு முன்ன கொஞ்சம் காலி இடம் உண்டு. அதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார்.

அடுத்து, நண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்த, அதற்கு செவிமடுத்தோம்...

குளுகுளுனு இருக்கணும் குடிசை!

'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும். காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

200 கிராம் விதை...3 கிலோ வைக்கோல்!

அறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும். ஒரு படுகை தயாரிக்க,

200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில். அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.

25 நாளில் அறுவடை!

படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.



முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான். இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.

நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலை அதிகமாயிருக்குறதால, காளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு. முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்கு. நகரம், கிராமம்னு கணக்கில்லாம எங்கயும் காளான் பண்ணை ஆரம்பிக்கலாம். அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். அதோட, ஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டு இருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம். அடுத்ததா பால் மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சி, நேரடியா மக்கள்கிட்ட விற்பனை பண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள்,

''எங்களோட இந்த எல்லா முயற்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படையா இருந்த பசுமை விகடனுக்கு ரொம்ப, ரொம்ப நன்றி'' என்று கைகூப்பினார்கள்! 
Thnxs
தொடர்புக்கு : ராமசாமி:             96882-16058      ,
மோகன்தாஸ்:             97889-44907      
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் “காளான் வளர்ப்பு” பற்றிய ஒரு நாள் பயிற்சி டிசம்பர் மாதம் 15ம்நாள் (புதன் கிழமை) 15.12.2010 அன்று நடைபெறவுள்ளது.இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர்மாணவர்கள்ொழில் முனைவோர்வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடுகையேடுமதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள்பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu Agricultural University,
New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, Chennai-40.
Phone:             044 -2626 3484       /             044 – 42170506      .


காளான் வளர்ப்பு ..


சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.

காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

சந்தை வாய்ப்பு!


காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என  பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.

 

உற்பத்தி முறை


தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.

இதற்கென பிரத்யேகமாக  550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட  வேண்டும்.  கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம். 

நிலம் மற்றும் கட்டடம்

10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இயந்திரம்   

ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.

தண்ணீர்

தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்

இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய் (தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.

    

ரிஸ்க்

காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.

பிளஸ்

அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.

நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!

நன்றி : ITCOT Consultancy..   

காளான் வளர்ப்பு முறை

காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.  போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன.
இவ்வாறு பல நற்குணங்களை கொண்ட சிப்பி காளானை வளர்க்கும் முறைகளை இங்கே காணலாம்
வைக்கோல் தயாரிப்பு:
  • காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும்.
  • புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும்.
  • பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும்.
  • பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்:
  • 2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது.
  • பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
  • பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.
  • இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும்.
  • பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.
காளான் வித்து பரவும் முறை:
  • மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும்.
  • படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.
காளான் அறை தயாரித்தல்:
  • காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
  • காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும்.
  • அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.
காளான் அறுவடை:
  • காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும்.
  • இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம்.
  • ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900  கிராம் மகசூல் கிடைக்கும்.
மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.
தொடர்புக்கு: பாண்டியன், அகல்யா பார்ம்ஸ்,             09283252096       மற்றும் கே.சத்தியபிரபா,             09659108780      .

முத்து (பற்கள்) நம் சொத்து!



முத்து (பற்கள்) நம் சொத்து!


சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.
தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.
என்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா! எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
நிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.
சில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.
நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
நாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.
குழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.
தொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.
நான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.
பல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.
பற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்' என்று பெயர்.
ஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
பல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.
சில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.
பற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.

நன்றி: உங்களுக்காக





கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு

சுய தொழில்கள் வரிசையில் இனி பார்க்கப் போவது கப்பா பைகஸ் or பெப்சி பாசி வளர்ப்புபற்றியது. இது ஒரு கடல் சார்ந்த தொழில். கடலோர ஊர்களில் வசிக்கும் நண்பர்கள் அவர்களுக்கு நன்கு பழகிய மீனவ சமூக ஆட்களின் துணை கொண்டு இத் தொழிலைச் செய்யலாம். யாரோ ஒரு வெளிநாட்டுக் கம்பெனியான பெப்சி நம் மீனவ மக்களிடம் விதைப் பாசியை கொடுத்து மொத்தத்தையும் அறுவடை செய்து அயல் நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை,கொள்ளையாக சம்பாதிக்கிறார்கள். இதை ஏன் நாம் செய்யக் கூடாது? திறமையாக, திட்டமிட்டு செய்தால் இதுவும் ஒரு லாபம் தரும் தொழில் தான்.

கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு



பாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால், லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலை நம்மால் மேற்கொள்ளமுடியும். ஆம், பாசிகள் நமக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் பாசி கலந்துள்ளது. நம் உணவுக்குச் சுவை கூட்டும் பணியையும் மேற்கொள்கிறது.
ராமேஸ்வரம் தீவில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில்,  மீனவப் பெண்கள் பாசி சேகரிப்பைத் தங்கள் பிழைப்பாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்.  சமீப காலமாக, பாசி சேகரித்தலோடு, பாசி வளர்க்கவும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு மற்றும்  தண்ணீரூற்று கிராமங்களில் மும்முரமாக பாசி வளர்ப்புத் தொழில் நடந்துவருகிறது.  இது தவிர, மண்டபம் வடக்குக் கடல் பகுதியிலும் பாசி வளர்ப்புத் தொழில் மிகவும் பிரபலம். நிலத்தில் செய்யும் விவசாயத்தைப் போன்றதுதான் இது. எப்படி விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, களையகற்றி, அறுவடை செய்கிறார்களோ அதைப் போல பாசி வளர்ப்பும் பல நிலைகளைக் கொண்ட கடல் விவசாயமாகும்.
பொதுவாக, பாசிகள் (Algae) ஒளிச் சேர்க்கை செய்ய வல்ல தாவர உயிரினங்கள். இவை நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடல்களில் அவை வாழ்கின்றன. பாசிகள் பலவகைப்படும். அவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்கமுடியும். உயிரியல் தொழில்நுட்பம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.  அவற்றில் ஒன்று கப்பா பைகஸ் பாசி. இது வளர்ப்பதற்குத் தோதானது என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் கப்பா பாசி விவசாயம் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாசியை உள்ளூர்வாசிகள் கப்பா பாசி என்றும் பெப்சி பாசி என்றும் கூறுகின்றனர். பெப்சி நிறுவனமே, விதைப்பாசியைக் கொடுத்து, அதை வளர்க்கும் முறையையும் சொல்லிக்கொடுத்து, வளர்த்த பாசியைக் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு (மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா) ஏற்றுமதி செய்வதால் பெப்சி பாசி என்னும் பெயர் கிடைத்துள்ளது.
கப்பா பாசியானது கடந்த ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். கடல் நீரில் உள்ள தாது உப்புகளையும் சூரிய வெளிச்சத்தையும் கொண்டு அதிக செலவில்லாமல் வளரும் தாவரம் இது. அதனால் இந்தத் தாவரத்தை இயற்கை மனிதனுக்குக் கொடுத்த கொடையாகக் கருதலாம். இந்த கப்பா பைகஸ் கடல் பாசியிலிருந்து 250க்கும் அதிகமான பொருள்கள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
குறிப்பாக, உணவு, குளிர்பானம், அழகுச் சாதனம், மூலிகைப் பொருட்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், பல்பொடி, ஜெல்லி மிட்டாய் போன்றவற்றில் இந்த வகை பாசி பயன்படுத்தப்படுகிறது. இப்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்துகொண்டே போகிறது. தேவைக்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லாததால் பாசியின் விலையும் கூடுகிறது. அறிமுகமான கட்டத்தில் ஒரு கிலோ காய்ந்த பாசி 12 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 20 ரூபாய். கப்பா பாசி வளர்ப்புக்கு ஆதரவு அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
ராமேஸ்வரததில், ஆண்கள், பெண்கள் இருவரும் பாசி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் கடலுக்குப் போகும் நேரங்களில் பெண்கள் பாசியை வளர்க்கிறார்கள்.  துணை வருமானத்துக்கான சிறு தொழிலாக இது இருப்பதால், ராமேஸ்வரம் கிராமங்களில் கணிசமான குடும்பங்கள் பாசி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
மூங்கில் மிதவையைப் பயன்படுத்தி இந்தப் பாசியை வளர்க்கவேண்டும். கடலில் வைத்துதான் வளர்க்கவேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த சூழல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பின் பயன்கள்
  1. எளிதாக யாரும் செய்யக்கூடிய லாபகரமான தொழில்.
  2. கடலில் போட்ட 45 முதல் 60 நாட்களில் வளர்ந்து பயன் தருவதால் போட்ட முதலீட்டை விரைவில் பெற முடியும். தினந்தோறும் அறுவடை செய்வதால் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
  3. கடல் நீரில் உள்ள தாதுப் பொருட்களை உறிஞ்சி சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் வளர்வதால் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். எளிதாகக் கிடைக்கும் மூங்கில், நைலான் கயிற்றை கொண்டு குறைந்த முதலீட்டில் பாசி வளர்ப்புக்கான மிதவை செய்து தொழில் தொடங்கலாம்.
  4. இது தவிர வங்கிக் கடன் உதவியும் அரசு மானியக் கடனும் கிடைக்கிறது.
  5. தன் உழைப்பால் சுய தொழில் செய்து முன்னேற விரும்பும் மக்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு.
  6. கடலில் இயற்கை சீற்றத்தினால் வரும் எதிர்பாராத இழப்பைச் சரிக்கட்ட காப்பீடு வசதியும் உண்டு.
  7. உதாரணமாக ஒரு நபர் ரூ.10,000 முதலீட்டில் தொழில் செய்தால் ஓர் ஆண்டு இறுதியில் ரூ.60,000 முதல் 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான உகந்த கடல் சூழல்
  1. ஆற்று நீர் கலக்காத கடல் பகுதி
  2. இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வராத கடல் பகுதி
  3. நல்ல நீரோட்டமான ஆழம் குறைந்த கடல் பகுதி
  4. தேவையான வெப்பமும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும் பகுதி

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான மூங்கில் மிதவையின் விவரம்
  1. மிதவையின் அளவு – 3மீ x 3மீ
  2. ஒரு மிதவையில் இருபது குறுக்குக் கயிறுகள் கட்ட வேண்டும்.
  3. ஒரு கயிற்றில் இருபது கண்ணிகள் இருக்க வேண்டும்.
  4. ஒரு கண்ணியில் 150 கிராம் அளவுள்ள விதைப்பாசி சொருக வேண்டும். அப்படியானால் இருபது கண்ணியில் (அதாவது 1 கயிறு) 20 x 150 = 3 கிலோ விதைப்பாசி சொருக வேண்டும். ஆக ஒரு மிதவைக்கு 20 x 3 கிலோ = 60 கிலோ விதைப் பாசி தேவைப்படும்.
  5. கடலில் போட்ட 45 முதல் 60 நாள்களில், நான்கில் இருந்து ஆறு மடங்கு வரை பாசி வளர்ச்சி அடையும். அதாவது 60 கிலோ விதைப்பாசியிலிருந்து,  மிதவை ஒன்றுக்கு 240 முதல் 360 கிலோ வரை பாசியை அறுவடை செய்யலாம்.
  6. ஒரு மிதவையில்  குறைந்தபட்சம் 240 கிலோ அறுவடை செய்தாலே, விதைப் பாசி 60 கிலோ போக, 180 கிலோ உற்பத்தி கிடைக்கும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்தால், 18 கிலோவாகக் குறையும். காய்ந்த பாசி ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. அப்படி பார்க்கும் போது 18 கிலோ காய்ந்த பாசி ரூ.360க்கு விற்பனையாகிறது. ஒரு நாள் ஒரு அறுவடையில் ஒரு மிதவைக்கே ரூ360 வருமானம் கிடைக்கிறது.
  7. ஒரு நபருக்கு 40 மிதவை கொடுத்து, நாள் ஒன்றுக்கு ஒரு மிதவை அறுவடை செய்தால் ஒரு மாதத்திற்கு – 30 x ரூ. 360 =ரூ.10,800 மாத வருமானம் கிடைக்கிறது.
  8. மழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் தவிர்த்து 9 மாதங்களில் 9 x ரூ 10,800 = ரூ.97,200 வருட வருமானம் கிடைக்கிறது.

மூங்கில் மிதவை தயார் செய்யத் தேவையான உபகரணங்கள்
  1. 3 முதல் 4 அங்குலம் கொண்ட 5 மூங்கில்கள். (மிதவை செய்ய).
  2. மிதவையைக் கடல் அலை அடித்து செல்லாமல் இருக்க ஐந்து பல் கொண்ட நங்கூரம் இரண்டு.
  3. முங்கில்களைக் கட்ட நைலான் கயறு.
  4. 400 விதை பாசி கோர்க்கும் கண்ணிகள்.
  5. 6 மி.மீ தடிமன் கொண்ட 36மீ நீளமுள்ள நைலான் கயறு (மிதவை கட்ட).
  6. மிதவையைச் சுற்றி கட்ட நைலான் மீன் வலை ஒரு கிலோ. (மீன்கள் கடிக்காமல் இருக்க)
  7. 10 மி.மீ தடிமன் கொண்ட 28மீ நங்கூரம் கட்டும் கயிறு.
  8. மிதவையை இணைத்துக் கட்ட 6 மி.மீ தடிமன் கொண்ட 5 மீ நீளமுள்ள நைலான் கயிறு.
  9. கண்ணி ஒன்றுக்கு 150 கிராம் வீதம் 400 கண்ணிகளுக்கு 60 கிலோ விதைப் பாசி.

ஒரு மிதவைக்கு மேற்கண்ட பொருட்களை வாங்க ரூ.700 முதல் 800 வரை செலவாகும். ஒரு மிதவை அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை உழைக்கும். மேலும், அதிகக் காற்று, ஆக்ரோஷமான அலைகள் அடிக்கும் சமயத்தில் மூங்கில் மிதவைகள் அதிகமாக சேதமடைந்து பயனற்றதாக ஆகிவிடும். கடற்கரையில் பாசிகளைக் காயவைக்கும்போது மழை பெய்தால் அவற்றை நனையாமல் பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடற்கரையிலே குடிசைகளை ஏற்படுத்தி பாசிகளை பாதுகாத்து வருகின்றனர்.
இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். கப்பா பாசி வளர்ப்பைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. இந்தப் பாசி பெப்சி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பவர்களால் இப்பாசி வளர்ப்பும் சந்தேகிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதால், கடலில் இயற்கையாகக் கிடைக்கும் பாசிகளைச் சேகரிப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டுள்ளன. பாசி சேகரிப்பைத் தொழிலாகச் செய்து வந்த மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி, பாசிகளைச் சேகரிக்க கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக பாசி வளர்ப்பதே. கப்பா பாசி அந்த வாய்ப்பைத் தந்து, மீனவக் குடும்பங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!


பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

இதைப் பற்றி "The Bible, The Quran and Science" என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The quran and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டர் மாரிஸ் புகைல் கூறினார்.

இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டர் மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். "நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை".

"நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்