கோடையை குளிர்ச்சியாக்கும்
ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!
கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!
மேங்கோ லஸ்ஸி தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் - தலா அரை கப், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும். மாங்காய் பன்னா தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) - ஒன்று, சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் - ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் - சிறிதளவு. அலங்கரிக்க: புதினா இலை - சிறிதளவு. செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும். (இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் - மாங்காய்) தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, கொத்துமல்லி - அலங்கரிக்க. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும். தக்காளி ஜூஸ்தேவையான பொருட்கள்: தக்காளி - 3, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - 3 டீஸ்பூன். அலங்கரிக்க: புதினா இலை - 5. செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். மின்ட் ஐஸ் டீ தேவையான பொருட்கள்: புதினா இலை - கால் கப், கொதிக்கும் நீர் - ஒரு கப், க்ரீன் டீ - - 1 பாக்கெட், தேன் - ஒரு டீஸ்பூன். அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை. செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம். சாக்லேட் ஸ்மூத்தி! தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) - - ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - - அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு. செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். லஸ்ஸிதேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் -- சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் -- ஒரு டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும். கஸ்டர்ட் தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் - துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், பால் - -150 மி.லி, சர்க்கரை- - 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் - -2 டீஸ்பூன் செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்! |
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Tuesday, 17 April 2012
கோடையை குளிர்ச்சியாக்கும்.....
சுய தொழில்கள்-26 மரம் வளர்ப்போம்{Grow a Tree}
மரம் வளர்ப்போம்{Grow a Tree}
Plant a Tree and grow the Tree, It will support to human life to live through produce the fresh air day by day.
'ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’
|
தேக்கு மரம் 1 ஏக்கரில் ரூ.25 லட்சம்...
இரா.ராஜசேகரன்வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
பூச்சி, நோய் தாக்காது. பாசனம் மட்டும் போதும். மூன்று தவணைகளில்
பூச்சி, நோய் தாக்காது. பாசனம் மட்டும் போதும். மூன்று தவணைகளில்
அறுவடை செய்யலாம்.
தேக்கு மரம் பலமுள்ள பலகையை மட்டுமல்ல, பலமான வருமானத்தையும் கொடுக்கும் மரமாகும். நல்ல மண்வளமும், முறையானப் பராமரிப்பும் இருந்தால், ஒரு ஏக்கரில் இருந்து 25 ஆண்டுகளில் 25 லட்ச ரூபாயை வருமானமாகக் கொடுக்கும் அற்புதமான மரம் தேக்கு! பராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது... பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது... முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும்! 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும். பல இடங்களில் நடவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சவலைப் பிள்ளை மாதிரி வளர்ச்சி இல்லாமல் இருக்கும். குறைவான மண்கண்டம் மற்றும் வடிகால் வசதி இல்லாத நிலமாக இருப்பதுதான் அதற்குக் காரணம். இந்த மரம் வலிமையான, கரையான் தாக்காதத் தன்மை உடையது. இதன் கடினத் தன்மைக்காக 'மரங்களின் அரசன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு. கப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும். சரி, தேக்கு மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது என்பதைப் பற்றி பார்ப்போமா?அடிக்கடி கவாத்து செய்யக்கூடாது!தேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 1,000 கன்றுகள் வரைத் தேவைப்படும். மூன்று மாதம் வரை... வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். நடவு செய்த ஒரு மாதத்துக்குப் பிறகு செடியைச் சுற்றி களை எடுத்து, மண் அணைத்துவிட வேண்டும். வேகமாக வளர வேண்டும் என்பதற்காக, அடிக்கடி கவாத்து செய்யக்கூடாது. இப்படிச் செய்தால் ஒளிச்சேர்க்கை நடப்பது தடைப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.7, 12, 25-ம் ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்! தேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும். பக்கக் கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். உதாரணமாக, மரம் 9 அடி உயரத்தில் இருந்தால், தரையில் இருந்து 3 அடி உயரம் வரை கழித்து விட வேண்டும். அடர்த்தியாக வளரும்போது மரம் பெருக்காது. அதனால் நடவு செய்த 7-ம் ஆண்டு குறுக்கு வரிசையில் ஒரு வரிசையை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 500 மரங்கள் கிடைக்கும். மீதியிருக்கும் 500 மரங்களை, 12-ம் ஆண்டில் நேர் வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை மரங்களை அறுவடை செய்ய வேண்டும். இப்பொழுது 250 மரங்கள் மீதமிருக்கும். இந்த மரங்களை சுமார் 20 முதல் 25-ம் ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். இதைச் சரிவர கடைபிடித்து அறுவடை செய்தால்... நல்ல மகசூல் கிடைக்கும்.25 ஆண்டுகளில் 25 லட்சம்! 7-ம் ஆண்டு அறுவடையின்போது, தலா 500 ரூபாய் வீதம் 500 மரங்களுக்கு 2,50,000 ரூபாயும், 12-ம் ஆண்டு தலா 3,000 வீதம் 250 மரங்களுக்கு 7,50,000 ரூபாயும், இறுதியாக 25-ம் ஆண்டு தலா 6,000 வீதம் 15,00,000 ரூபாயும் வருமானமாகக் கிடைக்கும். ஆக, ஒரு ஏக்கரில் இருந்து 25 ஆண்டுகளில் 25 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், நான் சொல்லும் கணக்கு மிகவும் குறைந்தபட்ச கணக்கு. அதே நேரத்தில் நல்ல மண் வளமும், முறையானப் பராமரிப்பும் உள்ள நிலங்களில் வளரும் தேக்கில் மட்டுமே இந்த வருமானம் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் மேலே பார்த்தது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறை. சில விவசாயிகள் தேக்கை வரப்பு ஓரங்களில் நடவு செய்கிறார்கள். இந்த மரம், 'ஒளி விரும்பி’ என்பதால் வரப்புகளில் நடவு செய்யும்போது நல்ல மகசூல் கிடைக்கும். தனித் தோப்பாக சாகுபடி செய்யும் சிலர் 15 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 200 கன்றுகளை நட்டும் பராமரிக்கிறார்கள். இந்த முறையிலும் மேலே சொன்ன வருமானத்துக்குக் குறைவிருக்காது. எனவே, உங்களுடைய வசதிக்கு ஏற்ற முறையில் சாகுபடியைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இரண்டு ஏக்கரில் தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கும் மதுரை மாவட்டம், கவசக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் என்ன சொல்கிறார் என்று கேட்போமா..!பாசனம் மட்டும்தான் பராமரிப்பு! ''எங்களுக்கு ஏழு ஏக்கர் நிலமிருக்கு. 2 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 1 ஏக்கர்ல யூகலிப்டஸ் வெச்சிருக்கோம். மீதமுள்ள 2 ஏக்கர்ல நெல், காய்கறினு விவசாயம் செய்றோம். 15 அடிக்கு 15 அடி இடைவெளியில ஏக்கருக்கு 200 தேக்கு கன்றுகளை நட்டேன். நட்டு நாலு வருஷமாச்சு. தண்ணி கட்டுறதைத் தவிர வேற பராமரிப்பு எதுவும் செய்றதில்லை. 4 வருஷத்துல மரம் 15 அடி உயரத்துல நிக்குது. முதல் ரெண்டு வருஷமும் ஊடுபயிரா மிளகாய், துவரை, மக்காச் சோளம் மாதிரியான வெள்ளாமை செஞ்சோம். மரம் நிழல் கட்டிக்கிட்டாதால, ரெண்டு வருஷமா ஊடுபயிர் செய்றதில்ல. மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறோம், தனியா இதுக்குனு எந்த உரமும் கொடுக்குறதில்ல. இந்த மரங்களப் பாத்துட்டு, 'இதே வளர்ச்சி இருந்தா... 20 வருஷத்துக்கு மேல மரத்தை வெட்டலாம்'னு வனத்துறை அதிகாரிக சொல்லியிருக்காங்க. ஒரு மரம் சராசரியா 10 ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும் குறைஞ்சது 20 லட்ச ரூபா வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.'' நான் சொல்வதும், ராமநாதன் சொல்வதும் இன்றைய நிலவரத்தின் அடிப்படையிலான குறைந்தபட்ச கணக்கு. ஆனால், தேக்கு மரத்துக்குள்ள தேவையைப் பார்த்தால் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!120 ஆண்டுகள் வாழும்! தேக்கு மரம் இந்தியா மற்றும் ஜாவாவின் வடகிழக்கு பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் அறிவியல் பெயர் 'டெக்டோனா கிராண்டிஸ்’ (Tectona grandis) வனங்களில் 100 முதல் 120 ஆண்டுகளும், சாகுபடி நிலங்களில் 70 முதல் 80 ஆண்டுகளும் இதன் வாழ்நாள் இருக்கும்.
வாழ்க மரம்... வளர்க பணம் ! - மலைவேம்புமண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !இரா.ராஜசேகரன்
நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!ஒரு வருடத்தில் தோப்பாகும்! மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது.ஏக்கருக்கு 200 மரங்கள்! சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்! வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்! 60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!ஆண்டுக்கு ஒரு லட்சம்! ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும். வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.75 லட்ச எதிர்பார்ப்பு! மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர், ''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார். தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805 இந்தியாவே தாயகம்! மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.
குமிழ்... குறுகிய காலத்திலேயே குதூகல வருமானம்! இரா.ராஜசேகரன்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
ஏக்கருக்கு 200 மரங்கள். பாசனம், கவாத்து மட்டும் போதும். 7-ம் ஆண்டு அறுவடை. 1 ஏக்கரில் 20 லட்சம் குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மரவகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால்... கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! வறண்ட நிலத்திலும் குமிழ் வளரும் என பலர் தவறான எண்ணத்தில் உள்ளனர். ஆனால், போதுமான தண்ணீர் வசதி உள்ள நிலங்களில் மட்டுமே குமிழ் சாகுபடி வெற்றியைக் கொடுக்கும். சரி, குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது? மறுதாம்பிலும் வருமானம்! குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்யவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழுவுரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்... பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது. நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்து விடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக் கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு மறுதாம்பு விடக்கூடாது மேலே பார்த்தது... வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறை. சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது. அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால்... மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இதுவரை நாம் பேசிக் கொண்டிருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...! மூணு வருஷம்தான் பராமரிப்பு! ''என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன். இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா... குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா... உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.'' என்ன... அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்! தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891 .
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
வேங்கை தரும் வெகுமதி...!பத்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம்... இரா.ராஜசேகரன்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
வறட்சியைத் தாங்கி வளரும். ஏக்கருக்கு 200 மரங்கள். ஒரு மரம் 50 ஆயிரம். வணிக
ரீதியான மரங்களில், சிலவற்றுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது... வேங்கை! இது மருத்துவகுணம் வாய்ந்த மரமும்கூட. இம்மரத்தில் செய்த குவளையில் நீர் அருந்தினால் நீரிழிவு நோய் குணமாகும், இம்மரத்தின் பிசின் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்து. இதை வெட்டும்போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக் கொண்டே இருக்கும். இனி, வணிக ரீதியாக வேங்கையைப் பயிரிடும் முறை பற்றி பார்ப்போமா?கடற்கரைப் பகுதிக்கு ஏற்றதல்ல! பொதுவாக தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும். குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளுக்கு ஏற்ற மரம். சமவெளிப் பகுதிகளில் நல்ல வளமான, ஆழமான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். கடற்கரை மணல் பகுதிக்கு இது ஏற்றதல்ல. ஏக்கருக்கு 250 கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 10 லட்சம்! 12 அடிக்கு 12 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கியத் தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 250 கன்றுகள் தேவைப்படும். வேங்கையைப் பொறுத்தவரை முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். வளர்ச்சி குறைந்த மரங்கள் மற்றும் குறைபாடுள்ள மரங்கள் ஆகியவற்றை 5 அல்லது 6-ம் ஆண்டுகளில் கண்டறிந்து, சுமார் 50 மரங்களை கழித்து விடவேண்டும். ஒரு வேளை, இந்த மரங்கள் நன்றாக இருந்தாலும், கழித்துவிட்டால்தான், மற்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கழிக்கப்பட்ட மரங்கள் சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படும். இதன் பிறகு சுமார் 200 மரங்கள் தோட்டத்தில் இருக்கும். அவ்வப்போது நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி விடவேண்டும். இது வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும். கடுமையான வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்து, மரமே பட்டுப் போனது போல் தோன்றும். ஆனால், மழை பெய்ததும் துளிர்த்து வளர்ந்துவிடும். இது ஓங்கி உயர்ந்து வளரும்போது அதிக சூரிய ஓளித் தேவைப்படும். அதனால் பிற மரங்களின் நிழல் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்குச் சுமார் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.வேங்கைக்கு ஊடுபயிர் சவுக்கு! இரண்டு ஏக்கரில் வேங்கையை நடவு செய்திருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாலிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி சொல்வதைக் கேளுங்கள். ''எனக்கு 14 ஏக்கர் நிலமிருக்குது. இதுல 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 2 ஏக்கர்ல வேங்கை நடவு செஞ்சிருக்கேன். வேங்கையை நட்டு மூணு வருஷமாச்சு. 12 அடிக்கு 12 அடி இடைவெளியில ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 500 கன்னுகள நட்டுருக்கேன். வாய்க்கால் பாசனம் செய்றேன். ஆரம்பத்துல வாரம் ஒரு தண்ணி கொடுத்தேன், இப்ப மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறேன். மத்தப்படி பராமரிப்புனு எதையும் செய்யல. வேங்கைக்கு இடையே ஆரம்பத்துல பாசிப்பயறு, உளுந்து மாதிரியான பயிர்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, வேங்கைக்கு இடையில 6 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 1,000 சவுக்கு மரத்தை நட்டு விட்டுட்டேன். இப்ப அதுவும் நல்லா வளர்ந்திருக்கு. வேங்கையில வருமானம் எடுக்க 10 வருஷம் காத்திருக்கணும். அதனால, சவுக்கை ஊடுபயிரா நட்டுட்டா... நாலு வருஷத்துக்கொரு தடவை ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் எடுத்துடலாம். 10-ம் வருஷம் வேங்கை மூலமாக ஏக்கருக்கு குறைஞ்சது 10 லட்சம் வருமானம் பாத்துடலாம்'' தயாநிதி, இன்னும் வேங்கையில் வருமானம் எடுக்கவில்லை. இவர் சொல்லும் கணக்கும் இன்றையச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான உத்தேச கணக்குதான். நிச்சயம் இந்த விலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்... புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நகரம் என்ற ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் சொல்வதையும் கேட்டுவிடுங்களேன். ''இப்ப எனக்கு வயசு 91. என்னோட 31-ம் வயசுல ஒருத்தர் கொடுத்த கன்னுகளை விளையாட்டா நட்டு வெச்சேன். அப்பப்ப தண்ணி ஊத்துனதை தவிர பெருசா எந்த பராமரிப்பும் செய்யலை. மொத்தம் 34 மரம் இருக்கு. அறுபது வயசான அந்த மரம் ஒவ்வொண்ணும் பிரமாண்டமா நிக்குது. பல வியாபாரிக வந்து 20 லட்சம் தர்றேன், 25 லட்சம் தர்றேன்னு கேக்குறாங்க. ஒரு மரத்துக்கே 60 ஆயிரம் ரூபாய்ககு மேல வருது அவங்க சொல்ற கணக்கு. ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கல. ஒரு காலத்துல விளையாட்டா வெச்ச மரம்... இன்னிக்கு என் குடும்பத்துக்கு பெரும் சொத்தா இருக்குறதை நினைச்சா பெருமையா இருக்கு.'' 'தாவரங்கள், தலைமுறைகளை வாழ வைக்கும் வரங்கள்' என்ற கூற்று எத்தனை உண்மை!வேங்கையின் தாயகம்! 'டெரோகார்பஸ் மார்ஸுபியம்' (Pterocarpus marsupium)என்கிற தாவரவியல் பெயருடைய வேங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்டது. வீட்டு நிலை செய்ய அதிகம் பயன்படுகிறது. ஜன்னல், மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் மற்றும் சிறிய மரச்சாமன்கள் தயாரிக்கவும் வேங்கை அதிகம் பயன்படுகிறது. இதன் இலை, பூக்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றன
ரீதியான மரங்களில், சிலவற்றுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது... வேங்கை! இது மருத்துவகுணம் வாய்ந்த மரமும்கூட. இம்மரத்தில் செய்த குவளையில் நீர் அருந்தினால் நீரிழிவு நோய் குணமாகும், இம்மரத்தின் பிசின் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்து. இதை வெட்டும்போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக் கொண்டே இருக்கும். இனி, வணிக ரீதியாக வேங்கையைப் பயிரிடும் முறை பற்றி பார்ப்போமா?கடற்கரைப் பகுதிக்கு ஏற்றதல்ல! பொதுவாக தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும். குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளுக்கு ஏற்ற மரம். சமவெளிப் பகுதிகளில் நல்ல வளமான, ஆழமான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். கடற்கரை மணல் பகுதிக்கு இது ஏற்றதல்ல. ஏக்கருக்கு 250 கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 10 லட்சம்! 12 அடிக்கு 12 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கியத் தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 250 கன்றுகள் தேவைப்படும். வேங்கையைப் பொறுத்தவரை முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். வளர்ச்சி குறைந்த மரங்கள் மற்றும் குறைபாடுள்ள மரங்கள் ஆகியவற்றை 5 அல்லது 6-ம் ஆண்டுகளில் கண்டறிந்து, சுமார் 50 மரங்களை கழித்து விடவேண்டும். ஒரு வேளை, இந்த மரங்கள் நன்றாக இருந்தாலும், கழித்துவிட்டால்தான், மற்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கழிக்கப்பட்ட மரங்கள் சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படும். இதன் பிறகு சுமார் 200 மரங்கள் தோட்டத்தில் இருக்கும். அவ்வப்போது நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி விடவேண்டும். இது வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும். கடுமையான வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்து, மரமே பட்டுப் போனது போல் தோன்றும். ஆனால், மழை பெய்ததும் துளிர்த்து வளர்ந்துவிடும். இது ஓங்கி உயர்ந்து வளரும்போது அதிக சூரிய ஓளித் தேவைப்படும். அதனால் பிற மரங்களின் நிழல் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்குச் சுமார் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.வேங்கைக்கு ஊடுபயிர் சவுக்கு! இரண்டு ஏக்கரில் வேங்கையை நடவு செய்திருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாலிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி சொல்வதைக் கேளுங்கள். ''எனக்கு 14 ஏக்கர் நிலமிருக்குது. இதுல 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 2 ஏக்கர்ல வேங்கை நடவு செஞ்சிருக்கேன். வேங்கையை நட்டு மூணு வருஷமாச்சு. 12 அடிக்கு 12 அடி இடைவெளியில ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 500 கன்னுகள நட்டுருக்கேன். வாய்க்கால் பாசனம் செய்றேன். ஆரம்பத்துல வாரம் ஒரு தண்ணி கொடுத்தேன், இப்ப மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறேன். மத்தப்படி பராமரிப்புனு எதையும் செய்யல. வேங்கைக்கு இடையே ஆரம்பத்துல பாசிப்பயறு, உளுந்து மாதிரியான பயிர்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, வேங்கைக்கு இடையில 6 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 1,000 சவுக்கு மரத்தை நட்டு விட்டுட்டேன். இப்ப அதுவும் நல்லா வளர்ந்திருக்கு. வேங்கையில வருமானம் எடுக்க 10 வருஷம் காத்திருக்கணும். அதனால, சவுக்கை ஊடுபயிரா நட்டுட்டா... நாலு வருஷத்துக்கொரு தடவை ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் எடுத்துடலாம். 10-ம் வருஷம் வேங்கை மூலமாக ஏக்கருக்கு குறைஞ்சது 10 லட்சம் வருமானம் பாத்துடலாம்'' தயாநிதி, இன்னும் வேங்கையில் வருமானம் எடுக்கவில்லை. இவர் சொல்லும் கணக்கும் இன்றையச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான உத்தேச கணக்குதான். நிச்சயம் இந்த விலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்... புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நகரம் என்ற ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் சொல்வதையும் கேட்டுவிடுங்களேன். ''இப்ப எனக்கு வயசு 91. என்னோட 31-ம் வயசுல ஒருத்தர் கொடுத்த கன்னுகளை விளையாட்டா நட்டு வெச்சேன். அப்பப்ப தண்ணி ஊத்துனதை தவிர பெருசா எந்த பராமரிப்பும் செய்யலை. மொத்தம் 34 மரம் இருக்கு. அறுபது வயசான அந்த மரம் ஒவ்வொண்ணும் பிரமாண்டமா நிக்குது. பல வியாபாரிக வந்து 20 லட்சம் தர்றேன், 25 லட்சம் தர்றேன்னு கேக்குறாங்க. ஒரு மரத்துக்கே 60 ஆயிரம் ரூபாய்ககு மேல வருது அவங்க சொல்ற கணக்கு. ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கல. ஒரு காலத்துல விளையாட்டா வெச்ச மரம்... இன்னிக்கு என் குடும்பத்துக்கு பெரும் சொத்தா இருக்குறதை நினைச்சா பெருமையா இருக்கு.'' 'தாவரங்கள், தலைமுறைகளை வாழ வைக்கும் வரங்கள்' என்ற கூற்று எத்தனை உண்மை!வேங்கையின் தாயகம்! 'டெரோகார்பஸ் மார்ஸுபியம்' (Pterocarpus marsupium)என்கிற தாவரவியல் பெயருடைய வேங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்டது. வீட்டு நிலை செய்ய அதிகம் பயன்படுகிறது. ஜன்னல், மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் மற்றும் சிறிய மரச்சாமன்கள் தயாரிக்கவும் வேங்கை அதிகம் பயன்படுகிறது. இதன் இலை, பூக்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றனசுய தொழில்கள்-25 செடிகள் வளர்ப்பு
செடி வளர்ப்பில் செல்வம் கொழிக்குது
செங்குத்து தோட்டம்(Vertical Garden)
நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு இந்த செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது 20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.
![]() |
| செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது |
| இளம் நாற்றுக்கள் |
![]() |
| நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள் |
![]() |
| மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும். |
![]() |
| செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும். |
![]() |
| அறுவடை செய்யப்பட்ட கீரை |
நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ஆவலை போன்சாய் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். செடிகளை வளர்ப்பதற்கு போதிய இடவசதி இவர்களுக்கு இல்லை. குறுகிய இடங்களிலேயே ஓரளவு முயற்சி செய்தாலே போன்சாய் செடிகளை வளர்க்கலாம். வீட்டு மாடிகளிலும் இவற்றை வைத்துப் பராமரிக்கலாம். வரவேற்பு அறைகளில் வைப்பதற்கு உகந்த அழகிய பூக்கும் மரங்களையும், பூஜை அறையில் வைப்பதற்கு ஏற்ற ஆழ் மற்றும் வேல் போன்ற மரங்களையும், சாப்பாட்டு அறையில் விரும்பி வைக்கப்படும் அழகிய பூக்கும் சிறு மற்றும் பெரு மரங்களையும் இந்தக் குட்டைச் செடிகள் வளர்ப்புக் கலையின் மூலம் எளிதாகப் பராமரிக்கலாம். மேலை நாடுகளில் இருப்பது போன்று நமது நாட்டிலும் முக்கிய நகரங்களில் போன்சாய் வளர்ப்போர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அழகுக் கலையாகத் தோன்றி போன்சாய் கலையானது இன்று வணிக ரீதியாக வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் மாறி வருகின்றது. சில நூறு ரூபாய்கள் முதல் பல அயிரம் ரூபாய்கள் வரை இந்த போன்சாய் குட்டைச் செடிகள் விலை பெறுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
பாறை வெடிப்புகளிலும் பாழடைந்த கட்டிடங்களின் சுவர்களிலும் இயற்கையாக வளரும் செடிகள் இயல்பாகவே குட்டையாகக் காணப்படும். இது போன்ற செடிகளின் குட்டைத் தன்மையை எளிதாகப் பயன்படுத்தி போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம். மேலும் நாற்றுப் பண்ணைகளில் தொட்டிகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் வைக்கப்பட்டிருக்கும் செடிகளும் குட்டையாக வளர்ந்து, முதிர்ந்து காணப்படும். இது போன்று குட்டையாக வளரும் செடிகளை சேகரித்து போன்சாய் கலைக்குப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக சிறிய, குறுகலான இலையுதிராத தன்மை கொண்ட மரம் மற்றும் செடி வகைகளே போன்சாய்க்கு மிகவும் உகந்தவை. கனிகள் மற்றும் மலர்கள் கொடுக்கும் மரங்கள் மற்றும் செடிகளை போன்சாய் செய்யும் போது அழகும், மதிப்பும் கூடுதலாக இருக்கின்றன. பழமரங்களில் மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, அத்தி, புளி ஆகியனவும், பாலைவன ரோசா, போகன்வில்லா, குல்மாகர் ஆகிய தாவரங்களும் , வேம்பு, இலுப்பை, வாகை, ஆல், அரச மரம், புங்கம் ஆகிய மரங்களும் பைன், ஜப்பான் டேபிள், பீச், ஆப்ரிகாட், ரோடா டெண்டிரான், சைப்ரஸ் ஆகிய பிரதேச மரவகைகளும் போன்சாய் கலைக்கு மிகவும் ஏற்றவை.
செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிரக் கம்பி, கம்பி வெட்டும் கத்தி, குறடு, மண் அள்ளும் கரண்டி போன்ற கருவிகள் போன்சாய் வளர்ப்பில் பெரிதும் பயன்படுவனவாகும். பல்வேறான ஆழமில்லாத பூந்தொட்டிகள் போன்சரய் வளர்ப்புக்குத் தேவைப்படுகின்றன.
போன்சாய் வளர்ப்புக்குத் தேவையான பொருத்தமான தொட்டிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். செடிகளின் வடிவங்களுக்கேற்ப முக்கோணம், செவ்வகம், வட்டம், நீண்ட வட்டம் போன்ற வடிவுள்ள ஆழமற்ற தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தொட்டிகளின் உயரம் 15 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும். போன்சாய் செடிகளின் வண்ணத்தோடு ஒத்துப்போகும் வகையில் நீலம், கெட்டிப் பச்சை,கரும் பழுப்பு போன்ற நிறமுடன் கூடிய தொட்டிகளையே பயன்படுத்த வேண்டும் அல்லது தேவையான வடிவமுள்ள மண்தொட்டிக்கு பொருத்தமான வர்ணம் பூசியும் இதற்குப் பயன்படுத்தலாம்.
போன்சாய் வளர்ப்புக்குத் தொட்டிகளின் அடிமட்டத்தில் உள்ள துளையில் கம்பி வலை அல்லது உடைந்த மண்தொட்டி துண்டு கொண்டு அமைத்து அதிகப்படியான நீர் மட்டும் வெளியேறுமாறு வைக்க வேண்டும். தொட்டிகளில் முதலில் ஒரு வரிசை சிறிய உடைந்த செங்கல் துண்டுகளை வைத்து அதன் மேல் மண் இருபாகம் , மக்கிய சாணம் ஒரு பாகம் மற்றும் இலை மட்கு ஒரு பாகம் என்ற அளவில் கலந்து நிரப்ப வேண்டும். தொட்டி கலவை நிரப்பிய பின்னர் இத்தகைய தொட்டிகளின் செடியை மாற்றி நட வேண்டும். செங்கல், கருங்கல் துண்டுகள் போன்றவற்றையும் எடுத்து நடுவில் போதிய அளவு தோண்டிய பின்னர் மண் கலவை நிரப்பியும் போன்சாய் செடிகளை வளர்க்கலாம்.
போன்சாய் செடிகளைப் பல்வேறு வடிவங்களில் வளர்க்கலாம். குடை வடிவம், சாய்ந்த வடிவம், நீர் வீழ்ச்சி வடிவம், ‘எஸ்’ போன்ற ஆங்கில எழுத்து போன்ற வடிவம் ஆகியவை இவற்றுள் அடங்கும். போன்சாய் மரச் செடிகளைத் தனி மரமாகவும், இயற்கைக் காடுகள் போன்று திட்டமாகவும் வளர்க்கலாம். குடை போன்ற வடிவத்தில் செடிகளைப் பயிற்சி செய்வதற்குக் கிளைகளின் நுனிப் பகுதியில் சிறிய கற்களைக் கட்டித் தொங்க விட வேண்டும். தேவையான வடிவங்களை உருவாக்க தாமிரம் அல்லது அலுமினியக் கம்பிகளைக் கொண்டு கிளைகள் மீது சுற்றி ஏற்ற வடிவங்களில் கிளைகளை மாற்றலாம். சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும்.
செடிகளை மிகவும் குட்டையாக வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். வளரும் நுனிகளை வாரத்திற்கொருமுறை கிள்ளி விடுவதன் மூலம் உயரம் இரண்டு அடிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக் குறைப்பான்களான சைக்கோசெல் அல்லது பி.ஏ போன்ற இரசாயனங்களை லிட்டருக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் செடிகளைக் குட்டையாக்க முடியும். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கொருமுறை செடிகளை புதிய தொட்டிகளில் மாற்ற வேண்டும். தொட்டிகளை மாற்றுவதை சூன் – சூலை மாதங்களிலேயே செய்ய வேண்டும். இது சமயம் கூடுதலாக வளர்ந்துள்ள மற்றும் காய்ந்து போன வேர்கள், கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றி விடுதல் வேண்டும்.
போன்சாய் செடிகளுக்கு போன்சாய் வளர்ப்புக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உரக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும். போன்சாய் செடிகள் மிகவும் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுவதால் மாதம் ஒரு முறை கடலை பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்த கரைசலை ஊற்ற வேண்டும். புதிய தொட்டிகளில் மாற்றிய ஒரு மாதம் வரை எந்த விதமான இரசாயன உரமும் இடக்கூடாது. கோடையில் தினம் இருமுறையும் இதர பருவங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளியிலும் தேவைக்கேற்ப நீர் விட வேண்டும்.
தகவல்:தமிழ்முரசு, தமிழ்நாடு வேளாண்மை
Subscribe to:
Comments (Atom)




