Thursday, 24 November 2011

மின்சார மீன்கள்


மின்சார மீன்கள்

 
நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.
 
தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன்,தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.

N
நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V  மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு  எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான்இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.
 
மேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.
 
இவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.
 
இவற்றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.
 
இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

இவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.
 
 
எலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.

எலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (
Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம் 
(main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ்(R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தார்கள்.

இறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.
இவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.

ஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம்  (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.
 
 
எலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம். 

எலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.
 

மின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.

மிக அதிசய பயணம்எலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(
saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.

இவை பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சரியாக தங்கள் பூர்வீக இடத்தை தங்கள் பெற்றோர் வாழும் இடத்தை அடைவதென்பதான இத்தகைய ஆற்றல் பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம் இல்லை என்ற நிலை இருக்கும் போது இந்த அற்புத அதிய உயிரினத்தின் செயலின் வெளிப்பாடு இறைவனின் வல்லமையின் சான்றைப் பறைச்சாற்றும் நிகழ்சிதான் என்பதில் அறிவுடைய மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் இயற்கையின் தேர்வான (
Natural Selection) டார்வினின் கோட்பாட்டை தகர்த்தெறியக் கூடிய ஆதாரங்களாகும். இத்தகைய இறைவனின் சான்றுகளைக் கொண்டு நேர்வழிப் பெற்று, இறைவனின் அழைப்பையும் அவரது தூதரின் அழைப்பையும் ஏற்று பதிலளிக்கூடியவர்களுக்கு அழகிய தங்குமிடம் இறைவனால் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர்த்து மற்ற எந்த வழியில் சென்றாலும் வெற்றிக் கனியை அடைய முடியாது என்பதை விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அதில் 'ஸலாம்' என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.(அல்குர்ஆன் 14:23)

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்


இலங்கை உண்மை உதயம் மாதஇதழிலிருந்து...


அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்டன. அமெரிக்க நிலைப் பாட்டுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. இது மற்றுமொரு அடியாகும்.

அமெரிக்காவின் துதிபாடிகளில் ஒருவரான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய நாட்டு உரையில் அமெரிக்காவை வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார். பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆப்கான், ஈராக், லிபியா விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது மற்றுமொரு அடியாகும்.

இதே நேரத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் துவங்கிய போது அதற்குத் தோள் கொடுத்து துணையாக நின்றது பாகிஸ்தான் ஆகும்.

அமெரிக்காவுக்கு உதவவில்லையானால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷர்ரப் தனது கோழைத் தனத்தை வெளியிட்டார்.

அமெரிக்கா பாகிஸ்தானில் தன்னிச்சையாக எடுத்த பல நடவடிக்கையால் பாகிஸ்தான் அமெரிக்காவை நோக்கிக் கைவீசிப் பேசும் நிலை ஏற்பட்டு இன்று அது முற்றி முறுகல் நிலைக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஹக்கானி நெட்வேர்க் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க இராணுவத் தளபதி மேக் முல்லன் கருத்துத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்பிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகின்றது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி இதற்கு அளித்த பதில் நெற்றியடியாக அமைந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்த போது ஹக்கானி நெட்வேர்க்கை வளர்ந்துவிட்டது. பாகிஸ்தானா? அமெரிக்காவா? எனக் கேட்டு ஹக்கானி அமைப்பை வளர்த்தது அமெரிக்காவே என குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் பொறுமையை அமெரிக்கா அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கின்றது. மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வோம் என அமெரிக்காவையே மிரட்டியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டால் பாகிஸ்தானுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்காவே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்தப் பதிலை அமெரிக்கா அணுவளவும் எதிர்பார்த்திருக்காது.

இவர் புதிய ஒரு அமைச்சர். ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பது போல் என்னவோ ஆர்வக் கோளாரில் உளறுகின்றார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இவரின் இந்த முகத்திலடித்தால் போல் அமைந்த பதில் குறித்து அமெரிக்கா எந்தப் பதிலும் கூறவில்லை. பெறும்பாலும் பாகிஸ்தானின் உயர்மட்ட அரசில் தலைவர்களே இதற்குப் பதில் கூறி பணிந்து வருவார்கள் என அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் பாகிஸ்தானிலிருந்து பளார் என மற்றொரு அறை அமெரிக்காவின் கண்ணத்தில் விழுந்தது.

இந்த சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்குப் பெருத்த தலையிடியாக மாறியுள்ளது. அமெரிக்கா தான் உலக வல்லரசு என்ற நிலை நீடிப்பதால் தான் உலக நாடுகள் அதன் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ரஷ்யா இருந்த இடத்தை சீனா எட்டிவிட்டால் சீனாவின் பக்கம் சில நாடுகள் நகர்ந்து சென்று விடும். என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இது பலத்த அடியாக அமையும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் பணிப்போர் நடைபெறுவது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

அமெரிக்காவுக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் பேசுகிறார். இதே வேளை சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொங் கியாங் ஜு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். அவரை வரவேற்பதற்கான நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உரையாற்றும் போது ‘சீன நட்பு மலைகளை விட உயரமானது, கடலை விட ஆழமானது, இரும்பை விட வலுவானது, தேனை விட இனிமையானது’ என காதல் கீதம் பாடியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலின் நண்பனாகத் திகழ்ந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ‘சீனாவின் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள். சீனாவின் எதிரிகள் எமக்கும் எதிரிகள்’ என போட்ட போடு அமெரிக்காவிற்று மற்றுமொறு அவமான அடியாகும்.

சீனாவும் இந்தியாவும் கீரியும்-பாம்புமாகவுமே செயற்பட்டு வருகின்றன. இதே உறவு தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீடிக்கின்றது. எனவே, பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியில் விழும் பலத்த அடியாகும்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவை எதிர்க்கிறார். பாகிஸ்தானும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு வந்துள்ளது. சீனா-இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் இந்த நாடுகள் தமக்கிடையிலுள்ள பகையை மறந்து ஒன்று பட்டால் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க ஆதிக்கக் கழுகைத் துரத்திவிடலாம்.

இந்த நாடுகளில் வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அமெரிக்காவுக்குப் பலத்த பின்னடைவாக இருந்தாலும் இந்த நாடுகளுக்கு உள்ளேயே நிலையான நீடிக்கும் பகையுணர்வுதான் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பலமாகும். இந்த பலத்தை சிதறடித்தால் தெற்காசிப் பிராந்தியம் சீர்பெறும்ளூ வளம் பெறும்ளூ நிம்மதி பெறும்.

அயல்நாடுகளை அசத்திய இந்தியரின் முருங்கை


யல்நாடுகளை அசத்திய இந்தியரின்  முருங்கை

அழகர்சாமியின் முருங்கை கண்டுபிடிப்பைப் பாராட்டி மத்திய அரசு,  ‘நேஷனல் வின்னர்’ விருதும்’, ‘சிறந்த இயற்கை விஞ்ஞானி’ விருதும் அளித்து லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவித்துள்ளது. அகமதாபாத்திலுள்ள சிருஷ்டி தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம், ‘தேசிய சிருஷ்டி சல்மான்’ விருது வழங்கியுள்ளது. மேலும் தங்கச் சாதனையாளர்’, ‘முருங்கை விஞ்ஞானி’, ‘இயற்கை விவசாய ஞானி’ போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தோட்டக்கலைத்துறையிடமும்  பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார் அழகர்சாமி



அயல்நாடுகளை அசத்திய அழகர்சாமியின் முருங்கை
பூ. சர்பனா
சர்வதேச அளவில் காய்கறிச் சந்தைகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது பள்ளப்பட்டி அழகர்சாமி வெள்ளியங்கிரி முருகன்’ (PAVM–) என்ற முருங்கைக்காய். திண்டுக்கல் மாவட்டம்பள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி அழகர்சாமி கண்டுபிடித்த 5வகை ஒட்டு முருங்கை ரகமான இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?  அபார ருசி கொண்ட இவ்வகை முருங்கைநடவு செய்த 6மாதங்களிலிருந்து காய்ப்புக்கு வந்துவருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலும் 3000காய்கள்வரை  காய்க்கும் (மொத்த எடை சுமார் 300கிலோ இருக்குமாம்!).
அழகர்சாமியைச் சந்திக்க அவரது தோட்டத்திற்குச் சென்றோம்.  ‘பச்சை முருங்கைத் தோட்டத்தை’ சுற்றிக்காட்டியபடி உற்சாகமாகப் பேசுகிறார்...
"பரம்பரை பரம்பரையா விவசாயக் குடும்பம் எங்களுடையது. கிராமமாக இருந்தாலும்என்னை எம்.பில்.பிஎச்.டி. வரை படிக்க வெச்சாங்க எங்க அப்பாஅம்மா. கல்லூரி நூலகத்தில்ஒருநாள் பழங்காலச் சித்தர் அகத்தியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நூலில் முருங்கை மரம் சாதாரண மரம் இல்லை. இலைகாய்பட்டைவேர்,பிசின் போன்ற அனைத்தும் மருத்துவக் குணம் வாந்தவை. மூலிகைக் குணம் நிறைந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப் படித்தவுடன் முருங்கையின் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது. அன்றிலிருந்து முருங்கை பற்றிய பல தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். பி.கே.எம் 1,பி.கே.எம். 2என்ற இரு குறுகிய கால ரகங்களை மட்டுமே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். அந்த ரகத்தை இரண்டு வருடங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். காற்று அடித்தால் சாய்ந்துவிடும். இதையெல்லாம் அறிந்த நான்நல்ல முருங்கை ரகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த ரகம் அதிகம் காய்க்கக் கூடியதாகவும்நல்ல லாபம் கொடுப்பவையாகவும், 60வருடங்கள் வரை நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.அதனால் முழுமையாக முருங்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன்" என்று முருங்கை ஆராய்ச்சியின் முன்கதைச் சுருக்கத்தை விவரித்தார்.
தொடர்ந்து, "நாட்டு முருங்கையில் ஐந்து ரகங்களை மட்டுமே ஆய்வு செய்யத் தேர்வு செய்தேன். மகரந்தச் சேர்க்கையின் மூலம் ஒன்றன்பின் ஒன்றாக அந்த ரகங்களுக்குள் கருவுறுதல் ஏற்படுத்தி ஆய்வு செய்தேன். ஐந்து ரக முருங்கை மரங்களின் மகரந்தத் தூள்களையும்ஒரு மரத்தின் சூல் முடியில் தூவி விடுவதன் மூலம் புதிய ரகம் உருவானது. பின்னர் அந்த விதைகளைப் பயிர் செய்து கன்றுகளாக வளரச் செய்தேன். முதலில் 70செடிகள் மட்டும் உருவாக்கி 1ஏக்கர் அளவுள்ளஎன் சொந்த நிலத்தில் நடவு செய்தேன். பரிசோதனை செய்து பார்த்தபோதேஒரு வருடத்திற்குஒரு ஏக்கருக்கு2லட்சம் ரூபாக்கு மேல் லாபம் கிடைத்தது. முன்பெல்லாம் தோட்டத்தில் கரும்புதிராட்சைகத்தரி போன்றவற்றைத்தான் பயிர் செய்தேன். இவை அனைத்திலும் குறைந்த வருமானமே கிடைத்தது. ஆனால் முருங்கையில் மட்டும்தான் அதிக லாபம் கிடைத்தது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக  12வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நினைத்தபடியே சாதித்துவிட்டேன்" என்றார் அழகர்சாமி பெருமிதத்துடன். தன்னுடைய ஆராச்சியிலேயே 12வருடங்களைக் கழித்ததால்,தற்போதுதான் அழகர்சாமி திருமணம் செய்துள்ளார்.
அழகர்சாமியின் 5வகை ஒட்டு முருங்கைச் செடி ஒன்றின் விலை 40ரூபாய். இந்த முருங்கைகள் செழிப்பாக வளர்வதற்கான இயற்கை உரத்தையும்இவரே தயாரித்துத் தருகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் அமெரிக்காமலேஷியாஸ்ரீலங்காநைஜீரியாசிங்கப்பூர்இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கும்அழகர்சாமியின் முருங்கைகள் ஏற்றுமதியாகின்றன.
"நம் நாடு 64சதவீதம் விவசாயத்தையே நம்பி இருக்கு. ஆனால்இன்றுள்ள சூழலில் விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயத் தொழில் செழிக்கணும்ன்னா விவசாயிகளை ஊக்கப்படுத்திமாணவர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு வேளாண்மை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் விவசாயம் பற்றி என்னிடம் பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள். விவசாயம் தழைக்க என்னாலான முயற்சிகளை தொடர்ந்து செய்வேன்" என்கிறார் இந்த விவசாய விஞ்ஞானி’.

விருதுகள் விளைச்சல்
அழகர்சாமியின் முருங்கை கண்டுபிடிப்பைப் பாராட்டி மத்திய அரசு,  ‘நேஷனல் வின்னர்’ விருதும்’, ‘சிறந்த இயற்கை விஞ்ஞானி’ விருதும் அளித்து லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவித்துள்ளது. அகமதாபாத்திலுள்ள சிருஷ்டி தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம், ‘தேசிய சிருஷ்டி சல்மான்’ விருது வழங்கியுள்ளது. மேலும் தங்கச் சாதனையாளர்’, ‘முருங்கை விஞ்ஞானி’, ‘இயற்கை விவசாய ஞானி’ போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தோட்டக்கலைத்துறையிடமும்  பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார் அழகர்சாமி

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்


ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார்.

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்


புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  


-அன்புடன் கோவை எம் தங்கவேல்


நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது,
பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர
உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்
உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும்
உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை
ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.
மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம்.
அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு
மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா
சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன.
உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக
வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி
விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே
எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED
WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R)
இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது.
இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம்
என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.

இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது
அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற
அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற
அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான
எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா
என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம்
எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற
உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.
ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த
ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு
நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை
விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற
திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!


நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் :
 அறிந்து கொள்ளுங்கள்!!
மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.   அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது.   அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.   அனல் மின்சாரம் ,  அணுமின்சாரம் ,  காற்றில் இருந்து ,  அலையில் இருந்து ,  நீரில் இருந்து ,  சூரிய ஒளியில் இருந்து ,   கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க ,  தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் ,  மின்சாரம் கிடைக்கும் “  என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles  கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர்.   அட ...! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் ,   மக்கள் இந்த Tiles  மேல்  ஏறிப்போவதினால்  உண்டாகும்  இயக்க  ஆற்றல்  மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.
-
-
நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!
சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 .  1   வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100  சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5  வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது.   இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.
  தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல்  லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும்   Westfield Stratford City   ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும்  என தெரிகிறது.

முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்.. : ஆய்வாளர்கள் தகவல்!


முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்.. : ஆய்வாளர்கள் தகவல்!



முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்.. : ஆய்வாளர்கள் தகவல்!
மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில், குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம். வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம். தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி:புதிய உலகம்.காம்

பாகிஸ்தானில் கோயிலுக்கு கிடைத்த நீதி, பாரதத்தில் பாபர் பள்ளிக்கு கிடைக்குமா


21734156.jpg
மது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்' என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்து கொண்டு அந்த நாட்டை இஸ்லாமிய தீவிரவாத நாடாக காட்டுவதில் இந்துத்துவாக்கள் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தினார்கள். 
அவர்கள் மட்டுமன்றி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, அந்த நாட்டில் நடக்கும் கொலையை  'இந்து வியாபாரி வெட்டிக்கொலை' 'இந்து மருத்துவர் கொலை' என்றும், இந்து வியாபாரியிடம் வழிப்பறி என்றும் எழுதி அங்கே கொலையோ கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தோற்றத்தை விதைத்தது. ஆனால் உண்மை என்னவோ நேர் மாற்றமானது. அங்கு நடக்கும் கொலையும்- கொள்ளைகளும் இனம்பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலம் சான்றாக உள்ளது. அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு தன் மதம், தன் இனம், அடுத்த மதம் அடுத்த இனம் இப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான சிந்தனை கொண்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயம் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாகிஸ்தானிலும் உண்டு என்பதற்கு சமீபத்திய ஒரு செய்தியை மேற்கோள் காட்டலாம்.
''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது''.
மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.
ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8 ]

துபாயில் சூப்பர் பஸ்....

துபாயில் சூப்பர் பஸ்....
சூப்பர் பஸ்...என்னதது சூப்பர் பஸ்...டீலக்ஸ் பஸ்,அல்ட்ரா டீலக்ஸ் பஸ்,ஏர் பஸ்,இப்டி பல பஸ் பாத்திருக்கோம்,அதென்ன சூப்பர் பஸ்??? சரி பஸ்ஸுன்னு சொல்லீட்டு என்ன கார் படத்த போட்டுருக்கானேன்னு நினைக்கிறீங்களா?...


ம்ம்..தெளீவா சொல்லனும்ன்னா?...பஸ்தான்...ஆனா கார்...கார் வடிவத்திலான பஸ்...இல்ல பஸ் மாதிரி கார்...இந்தமாதிர் சிம்ப்பிளா??? புரியவைக்கலாம்...

ஆமாங்க...இது உண்மையிலேயே சூப்பர் பஸ்தான்...மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது சூப்பர்தானே..

எங்க ஓடப்போவுது..அட நம்ம துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையிலதாங்க... சராசரியாக காரில் 1 மணி நேரத்தை தாண்டும் துபாய் அபுதாபி பயணம் இப்போது வெறும் அரைமணி நேரத்தில் சாத்தியப்படப்போகிறது இந்த சூப்பர் பஸ்ஸினால்.

மஸ்தார் சிட்டியில் ஒத்திகை ஓட்டம் பார்க்கப்பட்டு விரைவில் துபாய் டூ அபுதாபிக்கு இயங்க தயாராக இருக்கிறது இந்த சூப்பர் பஸ்.மொத்தமாக ஓட்டுனரின் இருக்கையையும் சேர்த்து 23 இருக்கைகளே உள்ளன.வாகன வடிவமைப்பும்,அதன் உள்கட்டமைப்பும்,ஃபார்முலா ஒன்,மற்றும் ஏரோடைனாமிக் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிவேகத்தில் சிறப்பான ஓட்டமும்,தரமான கட்டுப்பாடும் சாத்தியமாகிறது.


இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க மாசுபடுத்தாத ஸீரோ எமிஷன் வகைக் கார், இல்ல இல்ல பஸ் என்பது இதன் தனித்துவம்.கிட்டத்தட்ட 1000 முதல் 1200 கிலோ எடை கொண்ட மின்கலம் இதற்காக பிரத்தியேக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.அது முழுவதும் சார்ஜ் ஆக முழுமையாக ஓர் இரவை எடுத்துக்கொள்கிறது.


15 மீட்டர் நீளமும்,2.5 மீட்டர் அகலமும்,1.7 மீட்டர் உயரமும், 6 சக்கரங்களையும், 12 கதவுகளையும்,கொண்ட இதை கார் வடிவில் இருந்தாலும் பஸ்ஸுன்னு தான் சொல்லமுடியுமில்லையா???

துபாயில் நடந்த எக்ஸ்பிஷனில் காட்சிக்கு வைக்கபட்ட பஸ்..

இது நான் இல்லை...


இத்தா பெரிய டிக்கி இருக்கே இதுல எவ்ளோ ஜாமான் வைக்கலாம்..அப்டீன்னு யோசிக்காதீங்க...அதுதான் இஞ்சின் கம்பாட்மெண்ட்...


இதில் கடைசியாக இருக்கும் கதவு,விஐபி,அல்லது ஃபேமிலிக்காக உள்ளது இருக்கைக்கள் எதிர் எதிராக வைக்கப்பட்டுள்ளன...


சரி...இவ்ளோ நேரமும்,ஓடாத படத்துல ஓடாம நின்ன பஸ்ஸ பாத்துருப்பீங்க.. இப்போ ஓடுர படத்துல இந்த பஸ் எப்டி ஓடுதுன்னு பாருங்க....
நன்றி: ரஜின்(சன்மார்க்கம்)