Tuesday, 17 April 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-14


அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-14
 *மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது. 

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும். 

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை. 

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது. 

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும். 

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள். 

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது. 

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன. 

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. 

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது. 
*தொடரும்...

Wednesday, 11 April 2012

இதயத்தை காப்பாற்றும் வழி!


ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.
 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.

 5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலை

இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை
 மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று  சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ  துடிக்கக் கூடும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்

இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை  களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள்  ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்

ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி  இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக்  காரணங்களாக அமைகின்றன.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.

படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.

இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்

பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம்  சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய  மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு  அதிகரிக்கிறது.

மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத்  தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை

இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள்  பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க  முடியும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.

உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

சுய தொழில்கள்-24 சணல் பொருட்கள் தயாரிப்பு


சணல் பொருளில் சூப்பர் லாபம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

‘சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை போத்தனூரில் சணல் பைகள் தயாரித்து வரும் பரிதா. அவர் கூறியதாவது:
எனது அக்கா அனார்கலி 10 ஆண்டுக்கு முன்பு மத்திய சணல் வாரியம் அளித்த பயிற்சியில் சணல் பொருட்கள் தயாரிக்க கற்று கொண்டு சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.இதையே பெரிய அளவில் செய்ய முடிவு செய்து, வெற்றி மகளிர் சுய உதவி குழுவை துவக்கி, கடன் உதவி பெற்றோம். 3 தையல் மெஷின்கள் மூலம் பல்வேறு சணல் பொருட்களை தயாரித்தோம். மகளிர் குழு தலைவியாக நான் உறுப்பினர்களுடன் சேர்ந்து தைக்கும் பணியில் ஈடுபடுகிறேன். மாதம் ரூ.1.6 லட் சம் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். பொருட்களை விற்க டவுன்ஹால் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறோம். உற்பத்தியில் பாதி அங்குதான் விற்பனையாகிறது. மீதியை வெளியிடங்களுக்கு சப்ளை செய்கிறோம்.  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். உற் பத்தி, கண்காட்சி, கடை ஆகியவற்றில் சுழற்சி முறையில் பணிபுரிகிறோம். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறுகிறோம்.  தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம். அனைத்து வகை சணல் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக் வருகிறேன். என்னிடம் கற்று பலர் தொழில் துவங்கியுள்ளனர். உற்பத்தி செலவு  சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம்.  ஒரு நபர் ஒரு நாளில் 12க்கு 12 இஞ்ச் அளவுள்ள 10 ஹேண்ட் பேக், 10க்கு 10 அளவுள்ள 50 தாம்பூல பை, 13க்கு 12 அளவுள்ள 10 காலேஜ் பேக், 13 இஞ்ச் அளவுள்ள 25 வாட்டர்பேக், 3 ஷெல்ப் உள்ள 25 லெட்டர் பேட், 12க்கு 10 அளவுள்ள 30 லஞ்ச் பேக், 3 மடிப்புள்ள 15 பர்ஸ், 13க்கு 9 அளவுள்ள 25 பைல், 13க்கு 9 அளவுள்ள 10 லேப்டாப் பேக், 18க்கு 12 அளவுள்ள 20 ஷாப்பிங் பேக், 10க்கு 8 அளவுள்ள 20 சுருக்கு பை, 40 பென்சில் பவுச், 30 கிட் பவுச், 30 மொபைல் பவுச் இவற்றில் ஏதாவது ஒரு வகையை தயாரிக்க முடியும்.எதை உற்பத்தி செய்தாலும் ஒரு நாள் செலவு ரூ.1000. மாதம் 25 நாட்களுக்கு ரூ.25 ஆயிரம். இதர செலவு ரூ.5 ஆயிரம் என மாத உற்பத்திக்கு ரூ.30 ஆயிரம் தேவை.வருவாய்: மாதம் ரூ.25 ஆயிரம் செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75 சதவீத லாபத்தில் விற்கலாம்.  இதன் மூலம் வருவாய் ரூ.43 ஆயிரம், லாபம் ரூ.18 ஆயிரம். விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷி ன்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.சந்தை வாய்ப்பு: வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, டிபார்ட்மென்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.உற்பத்தி பொருட்கள்: சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)கிடைக்கும் இடங்கள்: சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். விலை குறைவு. இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.தயாரிக்கும் முறைசணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.  லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை. இலவச பயிற்சி: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் மத்திய சணல் வாரிய கிளைகள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டண முறையில் தனியார் பயிற்சி அளிக்கின்றனர். முதலீடு: உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும். பவர் தையல் மெஷின் ரூ.10 ஆயிரம், கட்டிங் டேபிள்  ரூ.3 ஆயிரம், கத்தரிக்கோல் ரூ.250, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் ரூ.10 ஆயிரம் போதும்.

இணையத்திலிருந்து

Monday, 9 April 2012

வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்


வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்

drink

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது. 

நோய்க்கான அறிகுறிகள் 

அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். 

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும். 

மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. 

உணவுகள்

இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 
கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. 

கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும். 

'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

மருந்துகள்

ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம்,காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ்,ஹய்ட்றஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை. 

சுய தொழில்கள்-23 பேக்கரி தொழில்


பேக்கரி தொழில் தொடங்க முழு விவரம்


டந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.
ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.
தயாரிப்பு முறை:
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி:
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.
கட்டடம்:
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்:
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற  இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்:
ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்:
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப்பொருள்:
இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்:
பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.
செயல்பாட்டு மூலதனம்:
முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
சந்தை வாய்ப்பு!
உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
ரிஸ்க்:
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்:
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.  பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?








சுய தொழில்கள்-22.2 கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு



கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும்வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும்லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.

சந்தை வாய்ப்பு!

எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய,பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல்பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள்ஓட்டல்கள்மதுபான விடுதிகள்,ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும்சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.

தயாரிக்கும் முறை!

உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன்மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால்இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கிஇதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கிமீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்துசூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.

தரக்கட்டுப்பாடு!

எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும்சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும்,சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோலஉங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும்கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.

இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்திகொல்கத்தா,கோயம்புத்தூர்சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.

அத்தியாவசிய தேவைகள்! தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

மூலப்பொருட்கள்!
 
உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரிதிருச்சி,கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்புகாரம்எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன்நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும்நேந்திரன் சிப்ஸில் 20சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.

வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1

செயல்பாட்டு மூலதனம்!

முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

சிறிய அளவிலும்கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம்,சுவைவாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.
நன்றி: நாணய விகடன்
முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''
கிழங்கு சிப்ஸ் தரும் கலக்கல் லாபம்! - 

தொழில்

Image

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். தரமான, சுவையான மரவள்ளி சிப்ஸை தயாரித்து வழங்கினால் நன்றாக சம்பாதிக்க லாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மரவள்ளி சிப்ஸ் விற்பனையாளர் மஞ்சுளா. அவர் கூறியதாவது: வீட்டிலேயே வடகம், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்று வந்தேன். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

வேறு தொழில் செய்ய நினைத்தபோது, முதலீடு அதிகம் தேவைப்பட்டது. குறைந்த முதலீட்டில் எளிதாக தொழில் செய்ய முயற்சித்தபோது, மளிகை கடைகளிலும், வீடுகளிலும் சிப்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். சிப்ஸ் தயாரிப்பது தொடர்பான தொழில் முறைகளை கற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க தொடங்கினேன்.

ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் இருந்தால் போதும். கடைகளுக்கு சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் சிப்ஸ் தயாரிக்க 3 நாள் ஆகும். மாதம் ஒன்றுக்கு 5 டன் வரை தயாரிக்க முடியும். நான் சிப்ஸ் தயாரிப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளை கவனித்துக்கொள்கிறேன். எனது கணவர் கடைகளில் ஆர்டர் பிடிப்பது, சப்ளை செய்வது, கலெக்ஷன் மற்றும் மரவள்ளி கொள்முதல் போன்ற பணிகளை கவனித்துக் கொள்கிறார். இது ஒரு லாபகரமான தொழில்.

சந்தை வாய்ப்பு

100 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என பேக்கிங் செய்யப்படும் சிப்ஸ் பாக்கெட்களை அருகில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகள், பேக்கரிகள், டாஸ்மாக் பார்கள் என உள்ளூரிலேயே எளிதில் விற்பனை செய்ய முடியும்.
டிப்ஸ்..

தயாரிக்கப்பட்ட தேதி யில் இருந்து 15 நாட்களுக்குள் சிப்ஸ் வகை களை சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் எதிர்பார்த்த சுவை இருக்காது. எனவே உடனுக்குடன் டெலிவரி செய்வது அவசியம். சிப்ஸை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் இருந்து பிரித்ததும் காற்றுபுகாத பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தால் மொறுமொறுப்புடன் இருக்கும். 
செலவு


ஒரு டன் மரவள்ளி கிழங்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.7500க்கு விலைக்கு வாங்கப்படுகிறது. தோட்டத்தில் இருந்து கடைக்கு கொண்டு வர வண்டி வாடகை மற்றும் ஏற்று , இறக்கு கூலி என ரூ.1500, எரிபொருள் ரூ.3000, 15 கிலோ கொண்ட 2 டின் பாமாயில் ரூ.1800, 4 கிலோ மிளகாய் தூள் ரூ.500, 4 கிலோ உப்பு ரூ.20, கலர் பொடி ரூ.50, சிப்ஸ் மாஸ்டர் சம்பளம் ரூ.400, சிப்ஸ் சீவுவதற்கு கூலி (2 நபர்களுக்கு) ரூ.500, பேக்கிங் செய்ய பயன்படும் கேரி பேக் ரூ.100, விற்பனைக்கு கொண்டு செல்லும்போது வாடகை ரூ.750 என ஒரு டன் மரவள்ளி கிழங்கு தயாரிக்க ரூ.16,120 வரை செலவாகும். இது தவிர இடவாடகை, மின்கட்டணம் தனி.
வருமானம்


ஒரு டன் மரவள்ளி கிழங்கில் 380 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும். கிலோ கணக்கில் விற்றால் ஒரு கிலோ ரூ.60க்கு விற்க முடியும். இதன்மூலம் டன்னுக்கு ரூ.22,800 கிடைக்கும். 500 கிராம், 250 கிராம் என பாக்கெட் செய்து சில்லரையில் விற்கும்போது ரூ.2000 வரை கூடுதலாக லாபம் ஈட்ட முடியும். ரூ.16,120 செலவு போக மீதம் ரூ.6,680 வரை லாபம் ஈட்ட முடியும்.

தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வருவதற்கு பதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுக்கும் பட்சத்தில் மரவள்ளி கொள்முதல் விலையில் டன் ஒன்றுக்கு ரூ.300 வரை சேமிக்க முடியும். மரவள்ளி கிழங்கில் இருந்து உரிக்கப்படும் தோலை, மாட்டுதீவனம் தயாரிக்க கிலோ ரூ.2க்கு விலைக்கு வாங்கி கொள்கின்றனர். இதன் மூலம் ரூ.150 வரை கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

மரவள்ளி கிழங்கை தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வந்து நன்றாக கழுவி தோலை உரிக்க வேண்டும். பின்னர் சிப்ஸ் சீவும் கட்டையை கொண்டு தேவையான சைஸ்களில் சீவலாம். வட்டமாக வேண்டுமெனில் அதற்கென உள்ள கட்டையில் சீவவேண்டும். குச்சி சிப்ஸ் என்றால் அதற்கு தனி கட்டை உள்ளது. சீவிய கிழங்குகளை கொதி நிலையில் இருக்கும் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களில் எடுத்து விடலாம். பேக்கிங் செய்வதற்கு முன்பாக சிறிதளவு மிளகாய் பொடி, உப்பு கலந்து சிப்ஸ் மீது லேசாக தூவ வேண்டும்.

எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால், பொடி நன்கு ஒட்டிக் கொள்ளும். பிறகு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். சுவை, தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு முறை தயாரிக்கும்போதும், அதை சுவைத்து பார்ப்பதும் முக்கியம்.

ரூ.10 ஆயிரம் போதும்

மரவள்ளி கிழங்கு, கேஸ் சிலிண்டர் (விறகு அடுப்பு என்றால் தென்னை மட்டைகள்), மிளகாய்த்தூள், உப்பு, பாமாயில், கலர்பொடி, வடைசட்டி, அரிகரண்டி, சாரணை, ஹீட்டர், கம்ப்யூட்டர் தராசு ஆகிய பொருட்கள் தேவை. மரவள்ளி கிழங்கு சீவும் கட்டை ரூ.750, எரிபொருள் ரூ.2000, வடைசட்டி ரூ.3000, அரிகரண்டி ரூ.500, சாரணை ரூ.400, ஹீட்டர் ரூ.300, கம்ப்யூட்டர் தராசு ரூ.3000 என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதலீடு போதும்.
தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...