Sunday, 23 September 2012

PLEASE READ ALL MUSLIMS

Ulama (Scholars) have warned ALL MUSLIMS AROUND THE WORLD for Monday the 24 and Tuesday the 25 NOT to use the Google and Youtube websites. This is because Google has stated they are not going to block the movie about our Prophet Muhammad S.A.W. When approx 1.5 billion Muslims dont use these services its going to lead them in 210 million dollar loss. Spread this message InshAllah to all our dear Muslims around the world.

Tuesday, 18 September 2012

பாகிஸ்தானில் யூ ட்யூப்பைத் தடைசெய்ய உத்தரவு

கராச்சி: முஹம்மத் நபியை அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு திரைப்படம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்துப் போய் உள்ளனர். அதன் எதிரொலியாக லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, டியூனீஸியா, பிலிப்பைன், பிரித்தானியா, யேமன், ஈரான் முதலான பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் விளைந்த ஆவேசம், வன்முறையாக வெடித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பு அலையைக் கிளப்பியுள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகளை நீக்கிவிட மறுத்த யூ ட்யூப் தளத்தை முற்றாகத் தடைசெய்யுமாறு பாகிஸ்தானியப் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கடந்த திங்கட்கிழமை (17/09/2012) முதல் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானிலே யூ டியூப் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யூ ட்யூபில் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஆத்திரமடையும் மக்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், பங்களாதேஷிலும் மேற்படி சமூக வலைதளம் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களின் சீற்றம், "தனிமனித சுதந்திரத்தை மதித்தல்" என்ற போர்வையில் முஸ்லிம் மக்களைப் புண்படச் செய்யும் மதநிந்தனைத் திரைப்படத்தைத் தடைசெய்ய மறுத்த அமெரிக்க அதிகாரத் தரப்பை நோக்கித் திரும்பியுள்ளது.

இதன்விளைவாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது மக்கள் தாக்குதல்கள், சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கக் கொடிகளையும் கொடும்பாவிகளையும் எரித்துத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மேற்படி திரைப்படத்தினால் ஆவேசமடைந்த பொதுமக்கள்  பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலினால் லிபியாவின் அமெரிக்கத் தூதுவர் சிரிஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இருவரின் உயிர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.