மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5
எலுமிச்சை.
2. தாவரப்பெயர் :- CITRUS MEDICA.
3. தாவரக்குடும்பம் :- RUTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்
5. வளரியல்பு :-
எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை
அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை
முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிழகம்
முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு
வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு
எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு.
எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான்.
எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை
மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில்
இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள்
நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது.
வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை
வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
6. மருத்துவப்பயன்கள் :-
பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும்,
மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட
ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும்.
பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும்.
பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப்
பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக்
கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும்.
இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.
பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு,
பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி
வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து
வளரும்.
பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.
பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து
பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல்,
பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.
வயிற்றோட்டம், வாந்திக்கு
எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன்
ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம்
குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.
பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.
இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15
கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த
நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.
இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.
பற்பம் என்பது சுண்ணாம்பு
சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம்,
முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.
இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து
பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும்.
பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.
படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.
வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம்
இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை
படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால்,
புகை ஆகாது.
எலுமிச்சம் பழச்சாறு அளவோடு
மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல்
எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம்
எற்படும்.
இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து
அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து
உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம்
குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.
குடற்புண், காச்சல், டைப்பாய்டு
சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது
திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி
போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.
கொத்தமல்லி:.
மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி
தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம்.
வளரியல்பு :-
கொத்துமல்லி நன்செய்,, புன்செய் நிலங்களில் முக்கியமாக கரிசல்மண்,,
செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இதன்
தாயகம் தென் ஐரோப்பா,, மற்றும் வட ஆப்பிரிக்கா, தென் மேற்கு ஆசியா ஆகும்.
பின் இது மத்திய ஆசியா, மெடட்டரேனியன், இந்தியா, தெற்கு ஆசியா, மெக்சிகன்
டெக்கான், லேட்டின் அமரிக்கா,
போர்ச்சுகஸ், சைனா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மற்றும்
ஸ்கேண்டிநாவின் ஆகய நாடுகளுக்குப் பரவிற்று. இதன் தண்டுகள் மென்மையாக
இருக்கும்.
இது 50 சி.எம்.உயரம் வரை
வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்து நீண்ட முப்பிறிவாக
பசுமையாக நறுமணத்துடன் இருக்கும். இந்த இலையில் B, B12 & C
வைட்டமின்கள் உள்ளது. சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும்.
பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன்
மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த
விதைகளை தனியா என்று சொல்வார்கள்.
இதன் விட்டம் 3 – 5 மில்லி இந்த
விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் ஆனால் குறைந்த சதவிகிதம் தான்
கிடைக்கும். இந்த எண்ணெய் மருத்துவ குணம் உடையது. இதில் வையிட்டமின் A,C
& k உள்ளது. இதில் கேல்சியம், இரும்பு, மெங்னீசியம், பொட்டாசியம், ஜிங்
உள்ளது. தோல் வியாதிய்யைக் குணப்படுத்தும். இது கார்ப்பு சுவையுடையது.
தனியாவை வணிக ரீதியாகப் பயிரிட அந்த நிலத்தை
தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும். காயவைத்து கட்டிகள் இல்லாமல் சமப்படுத்த
வேண்டும். பின் தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும்.
அதன் பின் சமப்படுத்தும் மரத்தில்
சமஅளவாக முளைக்குச்சிகள் பொருத்தி ஏர் போல் ஒரு முறை ஓட்ட வேண்டும். பின்
வேண்டுமென்றால் பாத்தி பிடித்துக் கொள்ளலாம். அதன் பின் தண்ணீர்
பாய்ச்சவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை வரும்போது விதைகள் முளைத்ததுக்
கொள்ளும். தண்ணீர் பாச்சும் போது ஒரு வாரத்தில் விதைகள் முழைக்க
ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை தண்ணீர்
பாச்ச வேண்டும். 90 நாட்க்களில் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கும்.
அதன் பின் தண்ணீர் பாச்சக்கூடாது.
அதன் பின் செடிகளைப் பிடுங்கி சுத்தமான களத்தில் நன்கு காயவைத்து லேசாக
தடியால் அடித்துத் தூற்றி எடுத்து தனியாவை ஒன்று சேர்த்து மூட்டையாகக்
கட்டுவார்கள். ஆனால் கொத்துமல்லி இலை சமையலுக்கு மிகவும் தேவைப் படுவதால்
வீட்டுத் தோட்டத்திலும் மாடித் தோட்டத்திலும் தேவைக்கு ஏற்ற வாறு கீரையாகப்
பயிர்
செய்வார்கள்.
மருத்துவப்பயன்கள் :-
சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு,
நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி,
எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல்,
செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை,
தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல்,
மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல்,
கல்லீரல் பலப்படுத்த,
இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை
குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு,
பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு,
பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு,
வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம்
கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம்
குறையும்.
கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை,
புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து
உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர்,
வியர்வையைப் பெருக்கும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை
இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி,
பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம்,
நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்துமல்லியைச் சிறிது காடியில்
அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக்
கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால்
புண் குணமாகும்.
கொத்துமல்லி விதை 100 கிராம்,
நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம்
சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல்,
நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.
கொத்துமல்லி 300 கிராம் சீரகம்,
அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50
கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக்
கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி
சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி,
விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம்,
நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான
தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி,
உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல்,
வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.
கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து
அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி
பித்த கிறுகிறுப்பு நீங்கும்.
நன்றி: இயற்கை வைத்தியம்
நன்றி: இயற்கை வைத்தியம்
No comments:
Post a Comment