. ·
ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல
இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய
தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய
தேவையும் வரலாம்.
குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும்
தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ
ஆர் எல் தளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தில் என்ன விஷேசம் என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்
எந்த ஒரு இணையதளத்தையும் பி டி எஃப் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.
இணையமுகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் அத்னை பி டி எஃப் வடிவில்
சுலபமாக மாற்றித்தந்து விடுகிறது.
சில தகவல்களை அப்புறம் படிக்கலாம் என்று இணைய பக்கமாக
சேமித்து வைப்பீர்கள் அல்லவா? அத்தகைய தகவல்களை அப்படியே பி டி
எஃப் பக்கமாக மாற்றிகொண்டால் இணைடெர்நெட் இணைப்பு இல்லாத நிலையில்
படிப்பது மிகவும் சுலபம்.
அதே போல் ஆவனப்படுத்த விரும்பும் தளங்களையும் இப்படி மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இ புக் ரீடர் சாதனம் வைத்திருப்பவர்கள் பி டி எஃப் வடிவில் கட்டுரைகளை படிக்க முடியும்.
http://www. pdfmyurl.com/
பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்பது எப்படி?
பிடிஎஃப் பிரியர்கள் என்று யாராவது இருக்கின்றனரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாளர்கள் இருக்கின்றனரா?
என்னைப்பொருத்தவரை சில நேரங்களில் நான் பிடிஎஃப் ஆதரவாளர்.சில நேரங்களில் பிடிஎஃப் விரோதி.
பிடிஎஃப் என்பது ஒரு கோப்பு வடிவம்.ஆவனங்களை பரிமாரிக்கொள்ள அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.துவக்கத் தில்
பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை வாசிப்பதும் கடினமாக
இருந்தது. இதற்கு அடோப் மென்பொருள் தேவை.இதனால் இண்டெர்நெட்டில்
பிடிஎஃப் கோப்புகளை அனுப்புவதும் பெறுவதும் சிக்கலானதாக இருந்தது.
ஆனால் பிறகு அடோப் இறங்கி வந்து பிடிஎஃப் கோப்புகளை
வாசிப்பதற்கான ரீடர் மென்பொருள் கிடைப்பதை சுலபமாக்கியது.கடந்த
ஆண்டு இது ஒபன் சோர்ஸ் முறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதெல்லாம் தொழில்நுட்ப விவரங்கள்.விஷயம் என்னவென்றால் பிடிஎஃப்
கோப்புகள் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்.உதாரணத்திற்கு தமிழில் ஒரு செய்தியை அனுப்பும் போது பிடிஎஃப்
கோப்பாக மாற்றும் பட்சத்தில் எழுத்துரு பிரச்ச்னை எழாது.அதனை அப்படியே
திறந்து வாசிக்கலாம்.
இதே போல செய்தி மடல் போன்றவற்றை அனுப்ப இந்த வடிவமே
ஏற்றது.வாழ்த்து அட்டை மற்றும் அழைப்பிதழ்களுக்கும் இது
பொருந்தும்.இந்த காரணங்களினால் நான் பிடிஎஃப் ரசிகன்.
ஆனால் சில நேரங்களில் பிடிஎஃப் பொருமையை
சோதித்துவிடும்.உதாரணத்திறகு தகவல்களை தேடிக்கொண்டிருக்கும் போது
பிடிஎஃப் கோப்புகள் வந்து நின்றால் சிக்கலாகிவிடும்.சாதரண வடிவிலான்
கோப்பாக இருந்தால் உடனே காபி செய்து கொள்ளலாம்.அல்லது சுலபமாக
பிரிண்ட் கொடுத்துவிடலாம்.பிடிஎஃப் கோப்பு என்றால் இதெல்லாம்
சாத்தியமில்லை.
அதோடு அடோப்பின் சமீபத்திய மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்ட
கோப்பாக இருக்குமானால் நம்மிடம் இருக்கும் பழைய அடோப் ரீடர்
மென்பொருளை கொண்டு அதனை வாசிக்க இயலாது.இது போன்ற காரணங்களினால்
எனக்கு பிடிஎஃப் கோப்புகளை பிடிக்காது.
நிற்க என் விருப்பு வெறுப்பு பற்றியதல்ல இந்த பதிவு.இத்தகைய
சிக்கல்கலை மீறி பிடிஎஃப் கோப்புகளை பயன்படுத்துவதற்கான
இணையதளம் பற்றி அறிமுகம் செய்யவே இந்த பதிவு.
ஃபிரிமைபிடிஎஃப் என்னும் பெயரிலான அந்த தளம் பெயருக்கு ஏற்பவே பிடிஎஃப் கோப்புகளை விடுவித்து தருகிறது.
நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிடிஎஃப் கோப்பு அல்லது
பயன்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பிடிஎஃப் கோப்பை இங்கு
சமர்பித்தால் அந்த கோப்பில் உள்ள பூட்டுகளை எல்லாம் நீக்கி சுலபமாக
வாசிக்க மற்றும் அச்சிட வசதி செய்து தருகிறது.
பிடிஎஃப் கோப்புகளை அடிக்கடி எதிர்கொள்பவர்களுக்கு பயனுள்ள தளம் இது.
—-
link;
http://freemypdf.com/
http://freemypdf.com/
No comments:
Post a Comment