Tuesday, 4 June 2013

தெரிந்து கொள்வோம் வாங்க-36

ஆரோக்கியம் தரும் மிளகு

மிளகில் உள்ள சத்துக்கள் 

தாது உப்புகள் 

கால்சியம்
பாஸ்பரஸ்
இரும்பு


வைட்டமின்கள் 

தயாமின்
ரிபோபிலவின்
ரியாசின்


சளி தொல்லைக்கு 

  • மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும் .

  • அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும் .

  • கொஞ்சம் மிளகு ,ஓமம் ,உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும் .

  • கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும் .



பற்களுக்கு 

  • மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி , சொத்தை பல் ,ஈறுவலி ,ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும் ,பற்களும் வெண்மையாக இருக்கும் ,வாயில் துர்நாற்றத்தை போக்கும் .

தலைவலி 

  • மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி ,தலை பாரம் குணமாகும் .

  • மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும் .

  • மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு 

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை ,மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .


பசியின்மைக்கு

  • ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும் .

  • மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது .

  • மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது .


  • மிளகு , சுக்கு ,திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

  • மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது .

    தகவல்:K Health Tips

No comments:

Post a Comment