1)வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீனஹைபிஸ்கஸ்.
2)தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.
3)குடும்பம்- MALVACEAE.
4)வளரும் தன்மை-எல்லா வகை இடங்களிலும் நன்றாக வளரும். இது சீன நாட்டிலிருந்து வரப்பெற்ற செம் பருத்தி. அழகுச்செடி எனப் பல தோட்டங்களில் இந்தியா முழுவதிலும் பயிறடப்படுகிறது இது 5-10 அடி உயரம் வரை வளரவல்லது. இதன் இலைகள் பசுமையாகவும் ஓரங்களில் அரிவாள் போன்ற பற்க ளுடனும் இருக்கும். செம்பரத்தையின் மொட்டுக்கள் சிவப்பு நிறமாக நீண்டு இருக்கும்.விரிந்ததும் ஐந்து இதழ்களை உடையதாகவும் நடுவில் குழல் போன்று மகரந்த தாளையும் கொண்டிருக்கும்.
இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாகப் பல அடுக்குகளையுடைய அடுக்குச்செம்பருத்தியையும் காணலாம். துவர்ப்பும். பசையும் உடைய பூவில் தங்கச்சத்து உள்ளது.இதை இனப்பெருக்கம் செய்ய நன்றாக முதிர்ச்சி அடைந்த அரை அடி நீளமுள்ள தண்டுக் குச்சிகளை நாற்றங் காலில் நட்டு வேர் பிடிக்கச்செய்ய வேண்டும் 90 நாட்களில் குச்சிகள் வேர்பிடித்துவிடும்.
5)வகைகள் -கோ 1, திலகம் சிகப்பு நிறப்பூக்கள், கோ 2, புன்னகை, மஞ்சள் நிறப்பூக்கள் , அடி பாகத்தில் சிகப்பு நிறங்கொண்ட மஞ்சள் நிறப் பூக்கள்.
6)பயன்தரும் பாகங்கள் - பூக்கள், இலைகள், பட்டை
மற்றும் வேர்கள்.
7)பயன்கள் - செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப் பயன் படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம்
பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார்செய்ய பயன்படுகிறது. இது கருப்பை கோளறுகள் உதிரப்போக்கு , இருதய நோய் ரத்தஅழுத்த நோய் குணமடையப் பயன்படும்.
அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக் கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை போம். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாம்.
செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை, நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம், வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்த புண், புரைகளும் போம்.
பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்க வேண்டும்.
பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக இதயபலவீனம் தீரும்.
பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும். செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டை மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு தீரும்.
செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்து சிறுதீயில் எரித்துக்குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச் சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.
இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட இதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்பு இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதி யாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும். இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும்.
தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். நாழும்10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது
விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி படும், ஆண்மை எழுச்சி பெறும். உலர்த்திய பூ சூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதை
உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.................இன் பம் நீடிக்கும்

உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.................இன்
நன்றி: மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு!
No comments:
Post a Comment