Friday, 16 September 2011

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்



தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்:

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்குசொடுக்கவும்.

இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும்.

ஆக இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் இயற்பியல் விதிகளை மீறமுடியாது, அதை உருவாக்கியவனை தவிர. விதியை இயற்றியவன் இறைவன் என்கிற போது அது இறைவனுக்கு இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளை எவ்வளவு அறிவியல் பூர்வமாக விளக்கினாலும் அது அடிப்படை நம்பிக்கை சார்ந்த மார்க்கமாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான நம்பிக்கையே அது, இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, அறிவியலுக்கும் அதே நம்பிக்கை தான் ஆணிவேர். ஆம் ஒரு கண்டுபிடிப்பை ஆதாரங்களுடனான நம்பிக்கை மூலம் அணுகினால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

பல நாத்திகர்கள் இறைவனின் ஆற்றல், அதிசயம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதை காண முடிகிறது. இயற்கையாக நடைமுறையில் உள்ளதை யாராவது அதிசயம் என்று கூறுவார்களா? மனிதனின் சக்திக்கு மீறிய இயற்கைக்கு மாறாக நடைபெறுவது தான் அதிசயம். அது இயற்பியல் விதிகளுக்கு மாறாக கூட இருக்கலாம். இதில் தான் நாத்திகர்களின் கேள்விகள் எழுகின்றன. மற்ற அனைத்தும் சில வரையரைகுட்பட்டவைகள்.

இதை வைத்து பார்க்கும் போது இஸ்லாம் விளக்கிய அனைத்தும் கூட இறைவன் உருவாக்கிய பிரபஞ்ச விதிகளுக்குள் கட்டுப்பட்டுதான் நடக்கும். அந்த விசயங்களை மனிதனால் சுலபமாக விளக்க முடியும். இதுவல்லாமல் இறைவனின் அதிசயங்கள்,ஆற்றலை வெளிப்படுத்த கூடியவைகள் உதாரணமாக சந்திரன் பிளக்கப்பட்டது, இறந்த மனிதனை ஏசுநாதர் எழுப்பியது, மோசேயின் கைத்தடி பாம்பாக மாறியது etc. இது போன்றவைகள் இயற்பியல் விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அது அதிசயம் என்றும் கூறப்படும், மேலும் இது இறைவனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை சார்ந்தது, இதற்கு அறிவியலில் ஆதாரம் கேட்பது, இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுவது ஏற்றுகொள்ள முடியாதது. ஏனெனில் இறைவன் உருவாக்கியதை இறைவனால் மீற முடியாதா என்ன? என்ற ஏற்றுகொள்ளதக்க கேள்வி வரும். அந்த அதிசயங்களும் நேரில் கண்டால் மட்டுமே புரியக்கூடியது ஆகும்.

இந்த வரைமுறைகளை வைத்து இறைவனும் விதிகளுக்கு உட்பட்டவன் என்பதாக கருதுகின்றனர். இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே. இதை இறைவனின் சில வசனங்கள் மூலம் விளங்கலாம்,

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி     (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ –ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வேஅவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன்ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்10:03)

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு  வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம். இறைவனின் புறத்தில் ஆகுக என்றால் ஆகிவிடுகிறது, ஏனெனில் அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பார்வை நாளை என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்க்கும் பார்வை அல்ல. மனிதனுடைய பார்வையில் காலம் என்றொன்று சேர்ந்து விடுகிறது.

இதை இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும்அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால்நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(அல் குர்ஆன் 70:4–7)

“இஸ்லாம் கூறும் சார்வியல் கோட்பாடு” என்ற தலைப்பில் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் செங்கொடி என்பவர் தன்னுடைய பொய்களை இணைத்து “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” என்ற தலைப்பில் பதிவாக இட்டது பதிவுலகில் உள்ளவர்கள் அறிந்ததே, இவரின் பதிவில் குர்ஆன் வசனங்களையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையையும் விளங்கி கொள்ளாமல் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளார் என்றால் அது மிகை இல்லை.

சார்பியல் கொள்கைகளை தெள்ள தெளிவாக எடுத்து வைக்கும் மூன்று குர்ஆன் வசனங்களுக்கும் சார்பியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே செங்கொடி போன்ற இறை மறுப்பாளர்களின் வாதம், தங்களுடைய பொய் பிரசாரத்திற்காக அவர்களால் எடுத்து கொள்ளப்பட்ட சில குர்ஆன் வசனங்களும் அதன் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, 

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். 
22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
22: 48. And to how many populations did I give respite, which were given to wrongdoing? in the end I punished them. To me is the destination [of all].

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

எதற்காக இறைவன் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூற வேண்டும், இங்குதான் சார்பியல் கோட்பாடு வருகிறது.

மேலே கொடுக்கப்பட்ட முதல் இரண்டு வசனங்கள் 22:47,48 ஆகியவை இறைவனின் வேதனையை பற்றிய வசனங்கள், அதாவது வேதனை வந்தடைவதர்கான கால அளவை பற்றி குறிப்பிடுகிறது, அதை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள் என்றும், இரண்டாம் பகுதியில் குறிப்பிடும் போது கால அளவையும் குறிப்பிடுகிறான், தண்டனையின் வேகத்தை பற்றி குறிப்பிடும் போது கால அளவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன, அப்படியெனில் காலத்தை குறிப்பிட்டாலே அதில் வேகமும் உள்ளது என்று தான் அர்த்தம். கடந்த நூற்றாண்டில் தான் வேகத்தை பொருத்து காலம் மாறுபடும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது, சார்பியல் கொள்கைக்கு பிறகுதான்.


அதே போன்று 70:4 வசனத்தில் வானவர்களின் பிரயாணம் பற்றி பேசும் குர்ஆன் பிரயாணத்தில் இருக்கும் போது வானவர்களின் ஒரு நாளின் அளவு என்பது பூமியில் இருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறுகிறது.

அடுத்த வசனமான 32:5 என்ற வசனமும் கால மாறுதல்களை பற்றி குறிப்பிட்ட போதும் இதற்கு மாறாக ஒவ்வொறு காரியமும் பயணிப்பதாக கூறுகிறது. (அதை பிறகு பார்போம்)

மேலே கூறப்பட்ட மூன்று வசனங்களும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் வெவ்வேறு பொருள்களை அல்லது செய்திகளை பற்றி விளக்குகிறது.

முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது, பிரயாணத்தின் போது கால மாறுதல்கள் ஏற்படும் என்ற சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த உண்மையை முஹம்மது நபி எவ்வாறு கூறி இருக்க முடியும்இதை பற்றி நாத்திக வாதிகள் கூறும்போது அல்லாஹ்வின் நாள் என்பது பெரியது என்று கூறி மக்களை ஏமாற்றவே முஹம்மது நபி அவ்வாறு கூறியதாக கூறுகின்றனர், இதை பார்க்கும் போது வசனங்களையும், சார்பியல் கொள்கை பற்றியும் எதையும் தெரியாமல் உளறுகின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் இதே கருத்து குர்ஆனில் சில வசனங்களில் தெளிவான முறையில் அமைந்துள்ளது. மேலும் எதை வைத்து ஆயிரம், ஐம்பதாயிரம் என்ற அளவுகள் கூறி இருக்க முடியும், இரண்டு அளவுகளும் சரியான எப்படி அமைய முடியும். எப்படி சரியாக அமைகிறது என்று வரும் விளக்கங்களில் பார்க்கலாம்.

சார்பியல் விதிப்படி ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் அதிக பட்ச வேகம், எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது, ஒளியின் வேகத்தில் ஒன்று பயணிப்பதாக இருந்தால் அதற்கு காலம் என்பது நின்று விடும். இன்று வரை எவ்வளவோ முயற்சி செய்தும் ஒளியின் 99.9999.. % அளவிற்கு நுண்ணிய அணுக்களை (Sub Elementary Particles)அனுப்பினாலும் ஒளியின் வேகத்தை தொடமுடியவில்லை. அதற்கு ஒரு தடையும் (Barrier) உள்ளது. அப்படியும் ஒளியை மிஞ்சிய வேகத்தில் ஒன்று பயணித்தால் (ஒரு வாதத்திற்கு மட்டும்) அதற்கு இயற்கை விதிகள் முற்றிலும் மாறுபடும்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

22:47 வசனத்தில் வேதனைகள் வருவதற்கான செய்திகளை பற்றி குறிப்பிடுகிறது, தற்போதைய அறிவியலே அதற்கு நேரிடையாக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்ற அறிந்த நிலையில் அதை பற்றிய விளக்கம் தேவை இல்லை. 

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

சரி அது என்ன ஒரு நாள் என்பது ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகிறது, அதற்குதான் Lorentz transformation வருகிறது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஜோசப் லார்மேர் மற்றும் ஹென்றிக் லாரன்ஸ் ஆகியோர் கால மாறுதல்களுக்கு அளவை அறிய lorentz factor  என்ற ஒரு சூத்திரத்தை வெளியிட்டனர். இயக்கத்தில் உள்ள பொருளுக்கும் நிலையாக உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால மாறுதல்களை (Time Dilation) அதன் திசை வேகத்தை வைத்து கணக்கிடகூடிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தினர், அது loretz factor என்று அழைக்கப்படுகிறது. இதை கொடுக்கப்பட்ட இறை வசனங்களுக்கு பொருத்தி பாப்போம்.

                   
            Δt’- நாம் கணக்கிட கூடிய கால அளவு (நிலையாக உள்ள பொருள்)
            Δt  - நகரும் பொருளின் காலம்
             V   - திசைவேகம் (நகரும் பொருளின் வேகம்)
             C   - ஒளியின் வேகம் (299,792,458 மீட்டர்/செகண்ட் = 1C) 

உதாரணமாக நகரும் பொருளின் காலம் நாள் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் திசை வேகத்தையும் ஒளியின் வேகத்தையும் வைத்து மேற்கண்ட சமன்பாட்டை செய்தால் பூமியில் நிலையாக உள்ளவரின் காலம் வந்துவிடும்.

                                 Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299792458) 2)1/2

சமன்பாடுகள் செய்ய கடினமாக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று Inputகொடுத்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

Time dilation:

பொதுவாக அரை மடங்கு (.5C) ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கும் கூட கால மாறுதல்கள் தோராயமாக ஒன்றரை மடங்காக இருக்கும், அதுவே ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அதன் கால மாறுதல்கள் வேகமாக அதிகரித்து, ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அந்த பொருளுக்கு காலம் என்பதே நின்று விடுகிறது. கீழே உள்ள படத்தில் மாற்றங்களை காணலாம்.

                                                   
ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்கிற போது, ஆண்டுகளையும் முதலில் நாட்கணக்கில் கொண்டுவருவோம்.
       
        1000 ஆண்டுகள் = 365000 நாட்கள்
        T என்பதில் 365000 என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது,  0.9999999999962469 என்ற ஒளி வேகத்தில் பயணித்தால்பூமியில் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு (365000~ நாட்கள்) சமமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஆயிரம் ஐம்பதாயிரம் என்று இருவேறு மாதிரி வசனங்கள் கூறுவதால், குறிப்பிடப்பட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் என்கிறபோது, அதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக காலம் மாறுகிறது எனில் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. வெறும் சில மில்லிமீட்டர் அளவு வேகத்தை அதிகபடுத்த அதன் கால மாறுபாடு ஐம்பதாயிரம் என்று ஆகிறது.

        50000 ஆண்டுகள் = 18250000  நாட்கள்
        T என்பதில் 18250000  என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது வெறும் சில மில்லிமீட்டர் வேகத்தை அதிகரித்து அதாவது 0.9999999999999984 C  என்கிற வேகத்தில் பயணித்தால் போதும், அது பூமியில் கணக்கிடகூடிய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்பதையும் அறிய முடியும். மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று நாட்களையும் வேகத்தையும் சரியாக அளந்து கொள்ளலாம்.

ஆக தற்போதைய அறிவியலின் படி ஒரு ஒளி அல்லது ஒளியின் ஆன்மா ஒளிக்கு இணையான99.999...% வேகத்தில் செல்வது சாத்தியமே, 99.999… அந்த வேகத்தில் செல்ல முடியும் என்பதை இறை வேதம் பறைசாற்றுகிறது என்பதை ஒப்போகொள்கிரீர்களா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

நாம் கூறாமல் விட்ட மற்றொரு வசனமான 32:5 ல் ஒரு நாள் அனைத்து பொருள்களும் முடிவில் அவனிடத்தில் திரும்ப செல்லும் என்றும் செல்லக்கூடிய (நகரும் பொருளின்) அந்த நாளின் அளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றான்.

அனைத்து பொருள்களும் என்று இவ்வசனத்தில் குறிப்பிடபட்டுள்ளது, அனைத்து பொருள்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அளவுள்ள வேகத்தில் பயணிக்க போவதாக குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா... அதை பற்றியும் பார்க்கலாம்.


பிரபஞ்ச உருவாக்கத்தை பற்றி விவரிக்கும் பிக் பாங் கொள்கை, பிரபஞ்சம் உருவாகும் பொது அது விரிவடையும் விகிதம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான வேகத்திலோதான் விரிவடைந்த தாக கூறுகிறது. சார்பியல் விதிகளுக்கு எதிராக இருக்கிறதே என்று என்ன வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் தான் ஒளி வேகத்தில் செல்லாது ஆனால் வெளியோ ஒளி வேகத்தில் விரிவடையும் என்கின்றனர் அறிவியலாளர்கள். வெளி விரிவடைவது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதை எட்வின் ஹப்ல் (Edwin hubble)என்ற விஞ்ஞானி டோப்ளர் எபக்ட் (Doppler Effect) மூலம் விளக்கினார்.

அதே போல விரிவடைந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு  அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு மீண்டும் அதே அழுத்தத்துடன் சுருங்க ஆரம்பிக்கும், விரிவடைந்த அதே வேகத்தில் தான் சுருங்கும், இதை விவருக்கும் விதமாக உள்ளதே பிக் ரிப், பிக் கிரன்ச் ஆகிய கொள்கைகள், அதாவது குர்ஆன் கூறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணை என்கிறபோது அது ஒளியின் 99.999... %C என்ற வேகத்தில் சுருங்கும்.


(Its expansion will slow down until it reaches a maximum size. Then it will recoil, collapsing back on itself. As it does, the universe will become denser and hotter until it ends in an infinitely hot, infinitely dense singularity.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அந்த நாள் என்பது வேகத்தையே குறிக்கிறது, அதை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனமே இது.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.


                                                          தொடரும்...

அஸ்ஸலாமு அலைக்கும்
 
மலேகான் குண்டுவெடிப்பில் கைதான் 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.  காவி சிந்தனை உடையவர்களின் தவறுகளால், இழந்த 6 வருடங்கள் திரும்ப வருமா?. ஆதாரமில்லாமல், கைது செய்தவர்களுக்கு என்ன தண்டனை? உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்களா?
 

Nine Muslim men in jail for Malegaon blasts are innocent, concludes NIA: Sources

NDTV Correspondent, Updated: September 13, 2011 08:26 IST
 
Mumbai: NDTV has learnt that the National Investigation Agency (NIA) has finally concluded that the nine Muslim men who were arrested and jailed in 2006 in connection with the Malegaon blasts are innocent.

Five years ago, these men were accused of carrying out the twin blasts as part of a plot by the outlawed Students Islamic Movement of India (SIMI). But sources have told NDTV that the investigation agency will now not oppose their bail pleas when they come up in court. Thirty one people were killed and 312 were injured in the 2006 blasts.

NDTV has also found that in a U-turn from its previous stand, the Central Bureau of Investigation (CBI) has submitted an internal report to the NIA saying only the right-wing Hindutva group activists arrested last year should be probed for the blast. In 2009, the CBI toed the Maharashtra ATS line and chargesheeted the nine Muslim men. The agency retracted in 2010, when Swami Aseemanand confessed that the blasts were the handiwork of a Hindutva group.

As a result of this error in the terror probe, these nine innocent men had to spend five years in prison. The Hindutva group, on the other hand, has not even been named in this case.
The revelation is significant as this is the first time an investigation agency has internally confirmed that the initial Malegaon arrests were wrong and is going to act to set the error right and prepare grounds to discharge them.
 

சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு


சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு

Chinese Muslims4
சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு
·         முன்
·         1 of 2
·         அடுத்தது
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களைக் காரணம் காட்டி சீனா, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்களை சீன அரசாங்கம் சிறைப்பிடித்துள்ளதாக "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட ஷின்ஜியாங் எனப்படும் இப்பிரதேசம். சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உய்குர் முஸ்லிகள் வாழ்கின்றனர்.
பின்னர், சீன அரசாங்கத்தினால் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் உய்குர் முஸ்லிம்களுக்கும் ஹான் சீன இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
அத்தோடு உய்குர் இன முஸ்லிம்கள் தாம் வாழும் ஷின்ஜியாங் பகுதியை தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனா இதனை பயங்கரவாத அமைப்பு என தடை செய்துள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் செயல்பட்டு வரும் "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பின் தலைவர் ரெபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் அமைதியான முறையில் தமக்குள் நடக்கும் அரசியல்சமூககலாசார நிகழ்வுகளைக் காரணம் காட்டி இரட்டைக் கோபுர தகர்ப்ப்புக்குக் காரணம் எனக் கூறி அடக்கி வருகிறது என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை சீன அரசு ஏற்க மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு "பயங்கரவாதம்" என முத்திரை குத்தியுள்ளது.

Sunday, 11 September 2011

அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்


அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்

உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை. 2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள்.


அதிபர் புஷ் பெட்ரோலிய கம்பெனிகள் மூலம் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர். துணை அதிபர் டிக் செனாய் ஹாரிபர்ட்டன்�� எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சுமார் 5 முதல் 6 கோடி டாலர்கள் ஈட்டியவர். டாம் பிரௌன்�� என்ற எண்ணெய் கம்பெனியில் அதிபராக இருந்த டொனால்ட் இவான்ஸ் - பல கோடிகளின் அதிபதி - வர்த்தகத் துறை அமைச்சர். தேசிய பாதுகாப்பு செயலர் கொண்டலிசாரைஸ் ஹசெவ்ரான்� என்ற புகழ் பெற்ற எண்ணெய் கம்பெனியின் இயக்குநர். இவ்வாறு புஷ் அரசாங்கம் - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்�� ஆக உள்ளது என்று அச் செய்தியில் விமர்சிக்கப்பட்டது. 

ஒட்டு மொத்த அமைச்சர்களும் - துணை அதிபர், அதிபர் உட்பட - பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் அரசு என்ன செய்யும் என யூகிக்க முடியாதா என்ன? உலகின் எந்த மூலையில் பெட்ரோல் வளம் இருந்தாலும் அங்கே படையெடுப்பதுதானே இவர்களின் குறிக்கோள்! படையெடுப்புக்கு ஏதேனும் ஒரு காரணத்தை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். அப்படி சொல்லப்பட்ட வெற்றுக் காரணம்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - என்பது. 

உலகிலேயே அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் இராக்கும் ஒன்று. அதேபோல் பல நாடுகளுக்கும் பெட்ரோலியத்தை குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் முக்கிய கேந்திரமாகவும், பெட்ரோலிய வளம் கொண்ட நாடாகவும் உள்ளது ஆப்கனிஸ்தான். இந்த இரு நாடுகள் மீதான பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? முதலில் ஆப்கனிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை காண்போம். 

கேஸ்பியன் கடல் எண்ணெக் குழாய் திட்டம் 
ஆப்கன் வழியாக குழாய்கள் பதித்து துர்க்மேனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்ல ஹஹகேஸ்பியன் கடல் எண்ணெய்க் குழாய் திட்டம்�� - உருவாக்கப்பட்டது. இத் திட்டத்திலே ஹஹஅமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வம் காட்டியதாக�� 29-12-1997-ல் பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழாய் திட்டத்தை நிர்மாணிக்க ஹஹசென்ட்கேஸ்�� என்ற அமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது. சென்ட்கேஸ் அமைப்பின் முக்கிய பங்குதாரராக சுமார் 46.5 சதவிகிதம் பங்குகளை கொண்ட ஹயூனோகால்� என்ற அமெரிக்க எண்ணெய் கம்பெனி இருந்தது. இந்த கம்பெனியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ரைஸ். இவர் அதிபர் புஷ் நிர்வாகத்தில் வான்படை செயலராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.. 

அமெரிக்க ஆதரவு அரசு 
இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் காட்டாமல் துணை நிற்க வேண்டும் என்பதற்காக தாலிபான் அமைப்புக்கு இந்த யூனோகால்� நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளது. 1998-ல் அமெரிக்கா வெளிப்படையாக தன் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தது. ஆப்கனில் அமெரிக்க ஆதரவு அரசு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 12-2-1998-ல் நடைபெற்ற அமெரிக்க அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கான கமிட்டியின்�� கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடப்பட்டது. அது- யூனோகால்�� - எரிவாயு குழாய் திட்டம் உட்பட பல்வேறு எண்ணெய் குழாய் திட்டங்களை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது. ஆனால், குழாய் வரும் வழியில் உள்ள நாடான ஆப்கனிஸ்தானில் தற்போதுள்ள அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. ஆனால் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறோம்��. 

ஹஹஇந்த குழாய் திட்டத்துக்கான சாத்தியப்பட்ட ஒரே வழி ஆப்கனிஸ்தான் வழியாக வருவதுதான். ஆனால், ஆப்கனிஸ்தானில் நமக்கு சவால்கள் காத்திருக்கின்றன��. 

ஹஹசர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசு ஆப்கனில் அமையும் வரை ஹசென்ட்கேஸ்� நிறுவனம் கட்டுமானங்களை துவக்க முடியாது�� - என குறிப்பாக ஆப்கனில் உள்ள அரசை நீக்கிவிட்டு புதிய அமெரிக்க ஆதரவு - பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது. 

1998 நவம்பர் 3-ம் தேதி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அமெரிக்க எண்ணெய் நிறுவனமான ஹயூனோகால்� நிதியுதவிடன் ஆப்கனில் ஒரு பயிற்சித் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 3-11-98 அன்று அமெரிக்காவின் ராணுவம் 80-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஆப்கனிஸ்தான் மீதும் சூடான் மீதும் ஏவியது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் யூனோகால்�� நடத்தி வந்த பயிற்சி திட்டம் மூடப்பட்டது. இந்த ��யூனோகால்�� நிறுவனம்தான் துர்க்மேனிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானுக்கு, ஆப்கன் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனம்�� . இதுதான் அந்த செய்தி. 

அமெரிக்கா தன் தாக்குதலை 1998லேயே தொடங்கி விட்டது. தொடர்ந்து 2-1-1999 அன்று ஆப்கனில் உசாமா பின்லேடனின் அமைப்பினர் தங்கியுள்ள முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி குண்டு மழை பொழிந்தது. 15-3-2001-ல் ரஷ்யா, அமெரிக்கா ஈரானுடன் இந்தியாவும் இணைந்து கொண்டது. ஆப்கனின் தாலிபான் அரசை வீழ்த்துவதுதான் இந்த நாடுகளின் உடனடி திட்டம். இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாலேயே ராணுவ நடவடிக்கைகளின் முக்கிய கேந்திரமான பாமியன் நகரை கைப்பற்ற முடிந்தது என டெல்லி ராணுவ வட்டாரங்கள் பெருமிதப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மை 

2001 செப்டம்பர் 3-ம் தேதியே பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மத்திய கிழக்கு பகுதிக்கு, இங்கிலாந்தின் ராணுவமும், போர்க் கப்பல்களும் விரைவதாக செய்தி சொன்னது. 24 போர்க் கப்பல்கள், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள்�� எச்.எம்.எஸ். இல்லஸ்ரியஸ்�� என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலின் தலைமையிலே இங்கிலாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகக்கு விரைகிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மிகப் பெரும் பேரழிவு நடவடிக்கைகளை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளும். இதனால் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் அரசுக்கு செலவாகும்�� என அச் செய்தி கூறியது. சரியாக ஒரு வாரத்தில் (செப்டம்பர் 11) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கா ஹஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - பிரகடனம் செய்தது. உடனடியாக ஆப்கனில் நுழைந்த அமெரிக்க ராணுவம் தாலிபன் அரசை தூக்கி எறிந்தது. ஹஹசர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ளும் அரசை� நிறுவியது. இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையிலே நிறுவப்பட்டது. இந்த ஹமீத் கர்சாய் ஹஹயூனோகால்�ஹ எண்ணெய் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர். ஹஹயூனோகால்�� சார்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த ஹஹயூனோகால்�� நிறுவனம்தான் ஆப்கனில் எரிவாயு குழாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தவர்கள். இப்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகரே ஆப்கனின் அதிபராக அமர்த்தப்பட்டு விட்டார். ஆப்கனில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசை தூக்கி எறிந்து விட்டு, அமெரிக்காவின் பொம்மை அரசை நிறுவுவதற்காகவே ஆப்கன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நடந்தது என்பதற்கு இதைவிட சான்று ஏதும் தேவையா? ஆப்கன் ஆக்கிரமிப்பு 12-2-1998லேயே திட்டமிடப்பட்டு, சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. 11-9-2001 இரட்டை கோபுர தாக்குதலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்�� வெறும் பம்மாத்துகளே என்பதை உலகமே அறியும். 

முன்னரே திட்டமிடப்பட்டது 
அடுத்ததாக ஈராக் ஆக்கிரமிப்பு. இரட்டை கோபுர தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஈராக் ஆக்கிரமிப்பு போரை அமெரிக்கா திட்டமிட்டு விட்டது. 2001 ஏப்ரலில் நடந்த அதிபர் புஷ்ஷின் அமைச்சரவை, ஹஹசர்வதேச சந்தையிலே எண்ணெய் வரத்து நிலைகுலைவதற்கு ஈராக் எண்ணெய் சப்ளை காரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. எனவே, ராணுவ நடவடிக்கை உடனடித்தேவை�� - என தீர்மானித்தது. இதை சண்டே ஹெரால்டு என்னும் இங்கிலாந்து செய்திப் பத்திரிகை 6-10-2002-ல் அம்பலப்படுத்தியது. 

ஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்� பேரழிவு ஆயுதங்கள், இரட்டை கோபுர தாக்குதல், ஐ.நா.வின் பேரழிவு ஆயுத ஆய்வு, இராக்கிய மக்களின் மனித உரிமை மீறல் - இவை எதுவும் ஈராக் மீதான போருக்கு காரணமே அல்ல. புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்த எண்ணெய் கம்பெனிகள் மற்றும் புஷ்ஷின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எண்ணெய் கம்பெனி அதிபர்கள் விருப்பத்துக்கு இணங்கவே ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் துவங்கியது. 2002 செப்டம்பர் 12-ல் அமெரிக்க அதிபர் புஷ், ஐ.நா.வுக்கு சொன்னது, ஹஹஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிக்கவோ, அகற்றவோ, வெளிப்படையாக எடுத்துக் காட்டவோ மறுத்தால் அமெரிக்கா தாக்கியே தீரும்��. ஆனால் ஈராக் தன்னிடம் அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தது. 

1998-ல் ஐ.நா.வின் ஆயுத ஆய்வுக்குழுவில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய ஸ்காட் ரிட்டர் 2002 செப்டம்பர் 8-ம் தேதியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மையே இல்லை என்றும், குறிப்பாக ஈராக் இரட்டை கோபுரங்களை தகர்த்த சக்திகளுக்கு எதிராக நிற்கிறது என்றும், ஈராக்கிய பாராளுமன்றத்திலே உரை நிகழ்த்தினார். 

ஆனாலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டு சேர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை தொடர முடிவு செய்து விட்டன. மிகப் பெரிய எண்ணெய் கம்பெனிகளும், ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் இதன் பின்புலமாக நின்றனர். காரணம் ஈராக் உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால், அதை முழுக்க முழுக்க தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான். மேலும் போர் என ஆரம்பித்து விட்டால், அண்டை நாடுகள் மற்றும் அந்த பிராந்தியம் முழுவதமே போர் பதற்றம் நிலவும். அதனால் பல இலட்சம் கோடிகளில் ஆயுத வியாபாரமும் செழிப்பாக நடக்கும் என்பதுதான் இரண்டாவது காரணம். 

அமெரிக்காவின் எரிசக்தி துறை 1999-ல் ஒரு மதிப்பீட்டை செய்தது. ஹஹஈராக் தன்வசம் 112 பில்லியன் ( 1 பில்லியன் என்பது 100 கோடி) பேரல்கள் பெட்ரோலும், 110 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) கனஅடி எரிவாயுவும் வைத்துள்ளது. உலக அளவிலே எண்ணெய் வளத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஈராக் சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டிலே ஒரு தீர்மானகரமான சக்தி�� என அறிக்கை அளித்தது. 

ஹஹஅதிபர் புஷ் ஈராக் சம்பந்தமாக என்ன முடிவு செய்தாலும் சரியே. அது அமெரிக்காவின் எரிசக்தி துறையை பிரகாசமாக மாற்றுவதாகவே இருக்கும்�� என்றார். வௌ;ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் ஆரி பிளசர். 

அமெரிக்க இராணுவப் போரின் போது அழிக்கப்படும் ஆபத்து உள்ள எண்ணெய் கிணறுகளை முதலில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என வெளியுறவுக்கான கவுன்சில் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 2002-ல் பரிந்துரை செய்தது. 

2001 ஜனவரியில் அதிபர் புஷ் பதவியேற்ற 10 நாட்களுக்குள்ளாகவே ஈராக்கின் சதாம் உசேன் அரசை தூக்கியெறிவதற்கான வழிவகைகளை வகுக்குமாறு தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார். ஹஹசதாம் வீழ்த்தப்பட்ட பிறகான ஈராக்�� என்று பெயரிடப்பட்ட திட்டம் 2001 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஹஹஈராக் எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்ததாரர்கள் பட்டியல்�� ஈராக்கில் வளமான எண்ணெய் வயல்கள் இருக்கும் வரைபடத்தை உள்ளடக்கியதாக 5-3-2001-ல் தயாரிக்கப்பட்டது. 

சண்டே ஹெரால்டு செய்தி 
ஹசண்டே ஹெரால்ட்� என்ற செய்தித்தாள் 6-10-2002-ல் ஹஹமேற்குலகின் எண்ணெய்க்கான போர்�� என்ற தலைப்பில் ஹஹசெப்டம்பர் 11-க்கு முன்னமே ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஈராக் மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது�� என எழுதியது. 

29-1-2001 பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஹஹஎண்ணெயும் புஷ் நிர்வாகமும்�� என்ற செய்தியில், ஹஹஇதற்கு முன்பிருந்த அரபுகளுக்கும் புஷ் தலைமையிலான அமைச்சரவைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இவர்களில் பெரும்பான்மையினர் எண்ணெய் கம்பெனிகளுடன் வியாபார தொடர்புள்ளவர்கள்�� - எனக் கூறியது. அதே பி.பி.சி. 

18-01-2001-ல் ஹஹபுஷ் எண்ணெய் வர்த்தகத்தில் மிக நெருக்கமான நீண்ட கால உறவை வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல. அவர் அமைச்சரவையில் பலர் அப்படித்தான் உள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக பல்லாயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளன�� என செய்தி வெளியிட்டது. 

இந்த பின்னணியிலேதான் அதிபர் புஷ், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிர்க்கொல்லி, நச்சுக்கிருமி ஆயுதங்கள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஈராக் ஒப்படைக்காவிடில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்வதேச சட்டங்கள், விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு ஆக்கிரமிப்புப் போருக்கு தயாராகின. 

அடாவடி நடவடிக்கை 
இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேய்ரை எச்சரித்தனர். 

ஈராக்கின் அமைச்சரவையிலேயே தனக்கு உளவு சொல்லும் ஒருவரை அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. வைத்திருந்தது. அவரை தொடர்பு கொண்டு சி.ஐ.ஏ. உளவுத் தகவல் சேகரித்தது. அத்துடன் ஈராக் வந்திறங்கிய சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈராக்கின் ஹஹபேரழிவு ஆயுதங்கள்�� குறித்த தகவல்களை மும்முரமாக சேகரித்தனர். இறுதியில் சி.ஐ.ஏ. வின் தலைவர் ஜார்ஜ் டெனட் ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லையென அமெரிக்க அரசுக்கு தகவல் அளித்தார். சி.ஐ.ஏ.வும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஈராக் மேற்குலகிற்கு ஒரு பயமுறுத்தல் அல்ல என்றும், அதனிடம் எவ்வித பேரழிவு ஆயுதமும் இல்லை என்றும், அதி காரப் பூர்வமாக அறிவித்தன. மேலும், ஈராக் மீது தாக்குதல் தொடுப்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடாக முடியும் எனவும் சி.ஐ.ஏ. எச்சரித்தது. 

ஆனால், துணை அதிபர் டிக்செனாய் மற்றும் ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தை ஓரங்கட்டினர். ராணுவத்தின் துணை அமைச்சர் பால் உல்ப்ஹோவிட்ஸ் மேற்பார்வையில் டக்ளஸ்பைத் தலைமையில் சிறப்பு திட்டக் குழுவை உருவாக்கினர். இந்த குழு உளவுத் தகவல்கள் என்ற பெயரில் தாக்குதலுக்கு சாதகமான விஷயங்களை செனட்டுக்கும், அமைச்சரவைக்கும் அளித்தது. சில தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விட்டது. இதன் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டியது நியாயமே என்ற பொதுக் கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது. 

கடைசியாக 20-03-2003-ல் அமெரிக்க ராணுவம் அதி 
காரப் பூர்வமான ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. 1-5-2003-ல் சதாம் அரசு தூக்கியெறியப்பட்டு ஈராக் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது. இராக்கின் அதிகாரப்பூர்வ ராணுவமும் கலைக்கப்பட்டது. சதாமின் மகன்கள் உத்தய் மற்றும் குசாய் இருவரும் 22-6-03-ல் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் உசேன் 14-2-2003-ல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வருடம் தேடியும் அமெரிக்கா சொன்ன பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே ஈராக்கில் இல்லை என்பதால் அவற்றை தேடும் திட்டம் 24-1-2004-ல் நிறுத்தப்பட்டது. 

உலகின் இயற்கை எரிவாயுவில் மொத்தம் 40 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஈரான்- அமெரிக்காவின் அடுத்த குறி. ஈரான் பேரழிவு ஆயுதமான அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா பிலாக்கனம் பாட ஆரம்பித்து விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் ஏற்கனவே குவித்து வைத்துள்ளது. ஈரானின் இருபுற எல்லைகளான ஈராக்கும், ஆப்கனும் தற்போது அமெரிக்காவின் பிடியில். 

இன்னுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கூடிய விரை வில் ஒரு ஹஹபயங்கர வாத எதிர்ப்பு போர்�� அல்லது ஹஹபேரழிவு அணு ஆயுத எதிர்ப்பு போர்�� என அமெரிக்கா பரணி பாடும். கொலைக்கார கூட்டத்தின் குரல் வளையை நெறிக்கும் வரை அதன் வெறியாட்டம் ஓயாது. என்ன செய்யப் போகிறோம்??? 

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!



எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில் திரண்டு அரசியல் சீர்திருத்தம், இஸ்ரேலுடனான உறவு முறித்தல் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

அவர்களின் போராட்டம் சிறிதுநேரத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. பக்கத்திலிருந்த இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு புகுந்துத் தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடடம் இடிக்கப்பட்டது. தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப் பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்துக்குத் தீவைக்கப்பட்டது.

கலவரத்தை க்கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் சுதந்திர மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவே விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார். 

இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கலவரம் தொடர்ந்து நடந்தது. 

இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். "இது மோசமான சம்பவம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் "இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அரசாங்கரீதியாக நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ள நாடு எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை காரணங்களுள் ஒன்று, இஸ்ரேலுடனான ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய உறவு என்று கூறப்படுகிறது. எகிப்தும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.