Sunday, 11 September 2011

அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்


அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்

உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை. 2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள்.


அதிபர் புஷ் பெட்ரோலிய கம்பெனிகள் மூலம் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர். துணை அதிபர் டிக் செனாய் ஹாரிபர்ட்டன்�� எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சுமார் 5 முதல் 6 கோடி டாலர்கள் ஈட்டியவர். டாம் பிரௌன்�� என்ற எண்ணெய் கம்பெனியில் அதிபராக இருந்த டொனால்ட் இவான்ஸ் - பல கோடிகளின் அதிபதி - வர்த்தகத் துறை அமைச்சர். தேசிய பாதுகாப்பு செயலர் கொண்டலிசாரைஸ் ஹசெவ்ரான்� என்ற புகழ் பெற்ற எண்ணெய் கம்பெனியின் இயக்குநர். இவ்வாறு புஷ் அரசாங்கம் - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்�� ஆக உள்ளது என்று அச் செய்தியில் விமர்சிக்கப்பட்டது. 

ஒட்டு மொத்த அமைச்சர்களும் - துணை அதிபர், அதிபர் உட்பட - பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு பல இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் அரசு என்ன செய்யும் என யூகிக்க முடியாதா என்ன? உலகின் எந்த மூலையில் பெட்ரோல் வளம் இருந்தாலும் அங்கே படையெடுப்பதுதானே இவர்களின் குறிக்கோள்! படையெடுப்புக்கு ஏதேனும் ஒரு காரணத்தை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். அப்படி சொல்லப்பட்ட வெற்றுக் காரணம்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - என்பது. 

உலகிலேயே அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் இராக்கும் ஒன்று. அதேபோல் பல நாடுகளுக்கும் பெட்ரோலியத்தை குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் முக்கிய கேந்திரமாகவும், பெட்ரோலிய வளம் கொண்ட நாடாகவும் உள்ளது ஆப்கனிஸ்தான். இந்த இரு நாடுகள் மீதான பயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? முதலில் ஆப்கனிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை காண்போம். 

கேஸ்பியன் கடல் எண்ணெக் குழாய் திட்டம் 
ஆப்கன் வழியாக குழாய்கள் பதித்து துர்க்மேனிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்ல ஹஹகேஸ்பியன் கடல் எண்ணெய்க் குழாய் திட்டம்�� - உருவாக்கப்பட்டது. இத் திட்டத்திலே ஹஹஅமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும், பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வம் காட்டியதாக�� 29-12-1997-ல் பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழாய் திட்டத்தை நிர்மாணிக்க ஹஹசென்ட்கேஸ்�� என்ற அமைப்பு 1997-ல் உருவாக்கப்பட்டது. சென்ட்கேஸ் அமைப்பின் முக்கிய பங்குதாரராக சுமார் 46.5 சதவிகிதம் பங்குகளை கொண்ட ஹயூனோகால்� என்ற அமெரிக்க எண்ணெய் கம்பெனி இருந்தது. இந்த கம்பெனியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ரைஸ். இவர் அதிபர் புஷ் நிர்வாகத்தில் வான்படை செயலராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.. 

அமெரிக்க ஆதரவு அரசு 
இந்த எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏதும் காட்டாமல் துணை நிற்க வேண்டும் என்பதற்காக தாலிபான் அமைப்புக்கு இந்த யூனோகால்� நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுக்க முன் வந்துள்ளது. 1998-ல் அமெரிக்கா வெளிப்படையாக தன் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தது. ஆப்கனில் அமெரிக்க ஆதரவு அரசு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 12-2-1998-ல் நடைபெற்ற அமெரிக்க அரசின் வெளிநாட்டுக் கொள்கைக்கான கமிட்டியின்�� கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடப்பட்டது. அது- யூனோகால்�� - எரிவாயு குழாய் திட்டம் உட்பட பல்வேறு எண்ணெய் குழாய் திட்டங்களை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது. ஆனால், குழாய் வரும் வழியில் உள்ள நாடான ஆப்கனிஸ்தானில் தற்போதுள்ள அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. ஆனால் குழாய் திட்டத்தை ஆதரிக்கிறோம்��. 

ஹஹஇந்த குழாய் திட்டத்துக்கான சாத்தியப்பட்ட ஒரே வழி ஆப்கனிஸ்தான் வழியாக வருவதுதான். ஆனால், ஆப்கனிஸ்தானில் நமக்கு சவால்கள் காத்திருக்கின்றன��. 

ஹஹசர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசு ஆப்கனில் அமையும் வரை ஹசென்ட்கேஸ்� நிறுவனம் கட்டுமானங்களை துவக்க முடியாது�� - என குறிப்பாக ஆப்கனில் உள்ள அரசை நீக்கிவிட்டு புதிய அமெரிக்க ஆதரவு - பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது. 

1998 நவம்பர் 3-ம் தேதி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அமெரிக்க எண்ணெய் நிறுவனமான ஹயூனோகால்� நிதியுதவிடன் ஆப்கனில் ஒரு பயிற்சித் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 3-11-98 அன்று அமெரிக்காவின் ராணுவம் 80-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஆப்கனிஸ்தான் மீதும் சூடான் மீதும் ஏவியது. இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் யூனோகால்�� நடத்தி வந்த பயிற்சி திட்டம் மூடப்பட்டது. இந்த ��யூனோகால்�� நிறுவனம்தான் துர்க்மேனிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானுக்கு, ஆப்கன் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனம்�� . இதுதான் அந்த செய்தி. 

அமெரிக்கா தன் தாக்குதலை 1998லேயே தொடங்கி விட்டது. தொடர்ந்து 2-1-1999 அன்று ஆப்கனில் உசாமா பின்லேடனின் அமைப்பினர் தங்கியுள்ள முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி குண்டு மழை பொழிந்தது. 15-3-2001-ல் ரஷ்யா, அமெரிக்கா ஈரானுடன் இந்தியாவும் இணைந்து கொண்டது. ஆப்கனின் தாலிபான் அரசை வீழ்த்துவதுதான் இந்த நாடுகளின் உடனடி திட்டம். இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாலேயே ராணுவ நடவடிக்கைகளின் முக்கிய கேந்திரமான பாமியன் நகரை கைப்பற்ற முடிந்தது என டெல்லி ராணுவ வட்டாரங்கள் பெருமிதப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஊடகங்கள் வெளிப்படுத்திய உண்மை 

2001 செப்டம்பர் 3-ம் தேதியே பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மத்திய கிழக்கு பகுதிக்கு, இங்கிலாந்தின் ராணுவமும், போர்க் கப்பல்களும் விரைவதாக செய்தி சொன்னது. 24 போர்க் கப்பல்கள், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள்�� எச்.எம்.எஸ். இல்லஸ்ரியஸ்�� என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலின் தலைமையிலே இங்கிலாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகக்கு விரைகிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மிகப் பெரும் பேரழிவு நடவடிக்கைகளை இந்த ஆபரேஷன் மேற்கொள்ளும். இதனால் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் அரசுக்கு செலவாகும்�� என அச் செய்தி கூறியது. சரியாக ஒரு வாரத்தில் (செப்டம்பர் 11) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கா ஹஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்�� - பிரகடனம் செய்தது. உடனடியாக ஆப்கனில் நுழைந்த அமெரிக்க ராணுவம் தாலிபன் அரசை தூக்கி எறிந்தது. ஹஹசர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ளும் அரசை� நிறுவியது. இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையிலே நிறுவப்பட்டது. இந்த ஹமீத் கர்சாய் ஹஹயூனோகால்�ஹ எண்ணெய் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர். ஹஹயூனோகால்�� சார்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த ஹஹயூனோகால்�� நிறுவனம்தான் ஆப்கனில் எரிவாயு குழாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருந்தவர்கள். இப்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகரே ஆப்கனின் அதிபராக அமர்த்தப்பட்டு விட்டார். ஆப்கனில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களை பதிக்கும் அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரசை தூக்கி எறிந்து விட்டு, அமெரிக்காவின் பொம்மை அரசை நிறுவுவதற்காகவே ஆப்கன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் நடந்தது என்பதற்கு இதைவிட சான்று ஏதும் தேவையா? ஆப்கன் ஆக்கிரமிப்பு 12-2-1998லேயே திட்டமிடப்பட்டு, சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. 11-9-2001 இரட்டை கோபுர தாக்குதலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்�� வெறும் பம்மாத்துகளே என்பதை உலகமே அறியும். 

முன்னரே திட்டமிடப்பட்டது 
அடுத்ததாக ஈராக் ஆக்கிரமிப்பு. இரட்டை கோபுர தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஈராக் ஆக்கிரமிப்பு போரை அமெரிக்கா திட்டமிட்டு விட்டது. 2001 ஏப்ரலில் நடந்த அதிபர் புஷ்ஷின் அமைச்சரவை, ஹஹசர்வதேச சந்தையிலே எண்ணெய் வரத்து நிலைகுலைவதற்கு ஈராக் எண்ணெய் சப்ளை காரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. எனவே, ராணுவ நடவடிக்கை உடனடித்தேவை�� - என தீர்மானித்தது. இதை சண்டே ஹெரால்டு என்னும் இங்கிலாந்து செய்திப் பத்திரிகை 6-10-2002-ல் அம்பலப்படுத்தியது. 

ஹபயங்கரவாதத்துக்கு எதிரான போர்� பேரழிவு ஆயுதங்கள், இரட்டை கோபுர தாக்குதல், ஐ.நா.வின் பேரழிவு ஆயுத ஆய்வு, இராக்கிய மக்களின் மனித உரிமை மீறல் - இவை எதுவும் ஈராக் மீதான போருக்கு காரணமே அல்ல. புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்த எண்ணெய் கம்பெனிகள் மற்றும் புஷ்ஷின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எண்ணெய் கம்பெனி அதிபர்கள் விருப்பத்துக்கு இணங்கவே ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் துவங்கியது. 2002 செப்டம்பர் 12-ல் அமெரிக்க அதிபர் புஷ், ஐ.நா.வுக்கு சொன்னது, ஹஹஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிக்கவோ, அகற்றவோ, வெளிப்படையாக எடுத்துக் காட்டவோ மறுத்தால் அமெரிக்கா தாக்கியே தீரும்��. ஆனால் ஈராக் தன்னிடம் அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தது. 

1998-ல் ஐ.நா.வின் ஆயுத ஆய்வுக்குழுவில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய ஸ்காட் ரிட்டர் 2002 செப்டம்பர் 8-ம் தேதியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மையே இல்லை என்றும், குறிப்பாக ஈராக் இரட்டை கோபுரங்களை தகர்த்த சக்திகளுக்கு எதிராக நிற்கிறது என்றும், ஈராக்கிய பாராளுமன்றத்திலே உரை நிகழ்த்தினார். 

ஆனாலும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டு சேர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை தொடர முடிவு செய்து விட்டன. மிகப் பெரிய எண்ணெய் கம்பெனிகளும், ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் இதன் பின்புலமாக நின்றனர். காரணம் ஈராக் உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதால், அதை முழுக்க முழுக்க தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான். மேலும் போர் என ஆரம்பித்து விட்டால், அண்டை நாடுகள் மற்றும் அந்த பிராந்தியம் முழுவதமே போர் பதற்றம் நிலவும். அதனால் பல இலட்சம் கோடிகளில் ஆயுத வியாபாரமும் செழிப்பாக நடக்கும் என்பதுதான் இரண்டாவது காரணம். 

அமெரிக்காவின் எரிசக்தி துறை 1999-ல் ஒரு மதிப்பீட்டை செய்தது. ஹஹஈராக் தன்வசம் 112 பில்லியன் ( 1 பில்லியன் என்பது 100 கோடி) பேரல்கள் பெட்ரோலும், 110 டிரில்லியன் (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) கனஅடி எரிவாயுவும் வைத்துள்ளது. உலக அளவிலே எண்ணெய் வளத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஈராக் சர்வதேச எண்ணெய் மார்க்கெட்டிலே ஒரு தீர்மானகரமான சக்தி�� என அறிக்கை அளித்தது. 

ஹஹஅதிபர் புஷ் ஈராக் சம்பந்தமாக என்ன முடிவு செய்தாலும் சரியே. அது அமெரிக்காவின் எரிசக்தி துறையை பிரகாசமாக மாற்றுவதாகவே இருக்கும்�� என்றார். வௌ;ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திதொடர்பாளர் ஆரி பிளசர். 

அமெரிக்க இராணுவப் போரின் போது அழிக்கப்படும் ஆபத்து உள்ள எண்ணெய் கிணறுகளை முதலில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என வெளியுறவுக்கான கவுன்சில் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 2002-ல் பரிந்துரை செய்தது. 

2001 ஜனவரியில் அதிபர் புஷ் பதவியேற்ற 10 நாட்களுக்குள்ளாகவே ஈராக்கின் சதாம் உசேன் அரசை தூக்கியெறிவதற்கான வழிவகைகளை வகுக்குமாறு தன் சகாக்களுக்கு உத்தரவிட்டார். ஹஹசதாம் வீழ்த்தப்பட்ட பிறகான ஈராக்�� என்று பெயரிடப்பட்ட திட்டம் 2001 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஹஹஈராக் எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்ததாரர்கள் பட்டியல்�� ஈராக்கில் வளமான எண்ணெய் வயல்கள் இருக்கும் வரைபடத்தை உள்ளடக்கியதாக 5-3-2001-ல் தயாரிக்கப்பட்டது. 

சண்டே ஹெரால்டு செய்தி 
ஹசண்டே ஹெரால்ட்� என்ற செய்தித்தாள் 6-10-2002-ல் ஹஹமேற்குலகின் எண்ணெய்க்கான போர்�� என்ற தலைப்பில் ஹஹசெப்டம்பர் 11-க்கு முன்னமே ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஈராக் மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது�� என எழுதியது. 

29-1-2001 பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஹஹஎண்ணெயும் புஷ் நிர்வாகமும்�� என்ற செய்தியில், ஹஹஇதற்கு முன்பிருந்த அரபுகளுக்கும் புஷ் தலைமையிலான அமைச்சரவைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இவர்களில் பெரும்பான்மையினர் எண்ணெய் கம்பெனிகளுடன் வியாபார தொடர்புள்ளவர்கள்�� - எனக் கூறியது. அதே பி.பி.சி. 

18-01-2001-ல் ஹஹபுஷ் எண்ணெய் வர்த்தகத்தில் மிக நெருக்கமான நீண்ட கால உறவை வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல. அவர் அமைச்சரவையில் பலர் அப்படித்தான் உள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் நிறுவனங்கள் மறைமுகமாக பல்லாயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளன�� என செய்தி வெளியிட்டது. 

இந்த பின்னணியிலேதான் அதிபர் புஷ், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிர்க்கொல்லி, நச்சுக்கிருமி ஆயுதங்கள் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஈராக் ஒப்படைக்காவிடில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் சர்வதேச சட்டங்கள், விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு ஆக்கிரமிப்புப் போருக்கு தயாராகின. 

அடாவடி நடவடிக்கை 
இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் இருவரும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேய்ரை எச்சரித்தனர். 

ஈராக்கின் அமைச்சரவையிலேயே தனக்கு உளவு சொல்லும் ஒருவரை அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. வைத்திருந்தது. அவரை தொடர்பு கொண்டு சி.ஐ.ஏ. உளவுத் தகவல் சேகரித்தது. அத்துடன் ஈராக் வந்திறங்கிய சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈராக்கின் ஹஹபேரழிவு ஆயுதங்கள்�� குறித்த தகவல்களை மும்முரமாக சேகரித்தனர். இறுதியில் சி.ஐ.ஏ. வின் தலைவர் ஜார்ஜ் டெனட் ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே இல்லையென அமெரிக்க அரசுக்கு தகவல் அளித்தார். சி.ஐ.ஏ.வும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஈராக் மேற்குலகிற்கு ஒரு பயமுறுத்தல் அல்ல என்றும், அதனிடம் எவ்வித பேரழிவு ஆயுதமும் இல்லை என்றும், அதி காரப் பூர்வமாக அறிவித்தன. மேலும், ஈராக் மீது தாக்குதல் தொடுப்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு கேடாக முடியும் எனவும் சி.ஐ.ஏ. எச்சரித்தது. 

ஆனால், துணை அதிபர் டிக்செனாய் மற்றும் ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தை ஓரங்கட்டினர். ராணுவத்தின் துணை அமைச்சர் பால் உல்ப்ஹோவிட்ஸ் மேற்பார்வையில் டக்ளஸ்பைத் தலைமையில் சிறப்பு திட்டக் குழுவை உருவாக்கினர். இந்த குழு உளவுத் தகவல்கள் என்ற பெயரில் தாக்குதலுக்கு சாதகமான விஷயங்களை செனட்டுக்கும், அமைச்சரவைக்கும் அளித்தது. சில தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விட்டது. இதன் மூலம் தாக்குதல் தொடுக்க வேண்டியது நியாயமே என்ற பொதுக் கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது. 

கடைசியாக 20-03-2003-ல் அமெரிக்க ராணுவம் அதி 
காரப் பூர்வமான ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. 1-5-2003-ல் சதாம் அரசு தூக்கியெறியப்பட்டு ஈராக் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது. இராக்கின் அதிகாரப்பூர்வ ராணுவமும் கலைக்கப்பட்டது. சதாமின் மகன்கள் உத்தய் மற்றும் குசாய் இருவரும் 22-6-03-ல் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் உசேன் 14-2-2003-ல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வருடம் தேடியும் அமெரிக்கா சொன்ன பேரழிவு ஆயுதங்கள் எதுவுமே ஈராக்கில் இல்லை என்பதால் அவற்றை தேடும் திட்டம் 24-1-2004-ல் நிறுத்தப்பட்டது. 

உலகின் இயற்கை எரிவாயுவில் மொத்தம் 40 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஈரான்- அமெரிக்காவின் அடுத்த குறி. ஈரான் பேரழிவு ஆயுதமான அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா பிலாக்கனம் பாட ஆரம்பித்து விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஏராளமான படைகளையும், ஆயுதங்களையும் ஏற்கனவே குவித்து வைத்துள்ளது. ஈரானின் இருபுற எல்லைகளான ஈராக்கும், ஆப்கனும் தற்போது அமெரிக்காவின் பிடியில். 

இன்னுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கூடிய விரை வில் ஒரு ஹஹபயங்கர வாத எதிர்ப்பு போர்�� அல்லது ஹஹபேரழிவு அணு ஆயுத எதிர்ப்பு போர்�� என அமெரிக்கா பரணி பாடும். கொலைக்கார கூட்டத்தின் குரல் வளையை நெறிக்கும் வரை அதன் வெறியாட்டம் ஓயாது. என்ன செய்யப் போகிறோம்??? 

No comments:

Post a Comment