Thursday, 20 October 2011

சகோதரிகளின் கவனத்துக்கு


சகோதரிகளின் கவனத்துக்கு 


"
ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனாநீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்கஅவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...''என்றாள் ரக்ஷனா. கோபமான அப்பஅவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
... 
''
ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனாநீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்லஉங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்கஅவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்கஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''
வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே,முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய்எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும்அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும்அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள்தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''
சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோஇ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணிஇப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில்அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனைஅவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?

''
ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்லனு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகிஅவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்துஅவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணிஅவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்துஅந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.

'' '
ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா
ஆம்... புகைப்படம்மெயில் ஐ.டிமொபைல் நம்பர்பள்ளிகல்லூரிஅலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு! .....






முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!  எச்சரிக்கை – கவனம் – உஷார்.  
மார்க்கம் அறியாத பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   
தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம் பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்என்ன இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல்வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள்கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன் கம்ப்யூட்டர் கிளாஸ் ட்ரைனிங்கிளாஸ் ஹாஸ்டல் இண்டெர்நெட் கஃபே,ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர்என்று போகும் இடங்களில்மாற்று மத பெண்களுடனும்ஆண்களுடனும்,பழகும் வாய்ப்பும்நட்பும்தோழமையும்ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும்,ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும்நண்பர்களாகவும்பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.

சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)
கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD  பிளேயர்கள் with USB-PORT.
                 
வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட்வசதி இருப்பின் >>>
லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >>  பெண்களின் பெற்றோர்களும்,பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

·         மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
·         யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
·         மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
·         தனி அறையில் இருந்து T.V  யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
·         கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
·         இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...

என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு

in

இறைவனுக்கு உருவம் கற்பித்த டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கண்ணீர்புகை வீச்சு


திரையிட்ட கார்ட்டூன் படம் ஒன்றில் முஸ்லிம்கள் வணங்கும் இறைவனுக்கு உருவம் இருப்பதுபோல் கற்பனையாகக் காண்பித்ததால்
துனிஷிய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக, ஆயிரக்கணக்கான துனிஷிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம், பேரணி கண்டனர். “இஸ்லாமில் இது மதநிந்தனைக் குற்றமாகும்” என்று அவர்கள் கூறினர்.
தனது வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர், எரிக்க முயன்றனர் என்று சர்ச்சைக்குரிய துனிஷிய தொலைக்காட்சியான நெஸ்மாவின் உரிமையாளர் நபில் கரோயி கூறினார்.
அண்மைக்காலமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கான ‘முதலெழுத்தை’ துனிஷியாவே துணிந்து எழுதியது என்பது குறிக்கத்தக்கது.
இந்நிலையில், புரட்சிக்குப் பிந்தைய துனிஷியாவின் அரசியலமைப்புப் பேரவைக்கு அடுத்தவாரம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
நெஸ்மா என்ற அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக துனிஷிய முஸ்லிம்களின் இத்தகைய பேரணி இரண்டாவது முறையாகும் என்று கூறப்படுகிறது.
1979ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியை விளக்கும் வகையிலமைந்த பெர்செபொலிஸ் (Persepolis) என்ற ஓவியப்படத்தில் இறைவன்  ஒரு இளம்பெண்ணுடன் பேசுவது போன்ற காட்சியமைப்பும், இன்னும் பல கற்பனை காட்சியமைப்புகளும் நெஸ்மா திரையிட்ட கார்ட்டூன் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை மதகுருமார்களும், மற்ற முஸ்லிம் மக்களும் கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கும், பேரணிக்கும் அழைப்பு விடுத்தனர்.
கடந்த வெள்ளியன்று மதியத் தொழுகைக்குப் பின்னர் கூடிய கூட்டம் அமைதியான முறையில் பேரணி கண்டதாகவும், ஆயினும், மத்திய தூனிஸ்ஸில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள இடமருகே, சிலர் அத்துமீற முயன்றனர் என்று காவல்துறை கண்ணீர்புகைக் குண்டுகளைக் கூட்டத்தினர் மீது வீசியது. தொடர்ந்து இருபக்கமும் கல்வீச்சு நடந்துள்ளது.
இதற்கிடையே  தொலைக்காட்சி உரிமையாளர் நபில் கரோயி முழுமனதுடன் மன்னிப்பு கோரியுள்ளார். “ஆர்ப்பாட்டக்காரர்கள் எனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த நாட்டில் இறைவனையே இழிவுபடுத்த எண்ணுகிறார்கள். ஆளுவோர் மீது சிறிய விமர்சனம் என்றாலும் அடக்குமுறையைக் கையாளுகிறார்கள்” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் பேரணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கண்களின் அற்புதம்


கண்களின் அற்புதம் .

புலன்களில் முதன்மையானது பார்வை. கண்கள் மூலம் பார்க்கப்படும் காட்சிகள், மின் ரசாயனத் துடிப்புகள் மாற்றப்படுகின்றன. பின் தலையில் உள்ள 'ஸெரிப்ரல் கார்டெக்ஸ்' பகுதியின் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது . மூளையின் முதல் ஆச்சரியம் இதுதான்.

கண் என்பது ஒரு கேமராதான். அதற்கும் லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. ப்யுப்பில் என்று அழைக்கப்படும் பாப்பா கேமராவின் அப்பெர்ச்ச்சர் போல செயல்படுகிறது. தானாகவே 'அட்ஜஸ்ட்'செய்து கொள்ளக் கூடியது. குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும்.

கண் லென்ஸ் இந்த ஒளிக்கதிர்களை வளைத்து, உள்ளே உள்ள கண்ணாடி போன்ற திரவத்தின் வழியாக 'ரெட்டினா' என்ற திரையின் மேல் படிய வைக்கிறது. 'ரெட்டினா' என்றால் வலை. நரம்பு செல்களின் வலை. இந்த செல்களுக்கு 'ஒளி வாங்கி செல்கள்' என்ற பெயரும் உண்டு. இந்த ஒளி வாங்கி செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கோன் வடிவம், அதாவது கூம்பு. மற்றொன்று ராடு வடிவம். அதாவது குச்சி. கூம்பு வடிவ செல்கள் 60 லட்சம் உள்ளன. சிறிய கெட்டியான கூம்பு போன்ற வடிவம் கொண்ட இந்த செல்கள்தான் வண்ணங்கள நமக்கு தெளிவாக காட்டுகின்றன. இதனுடன் சேர்ந்து பன்னிரெண்டரை கோடி மெல்லிய குச்சிகள் போன்ற செல்களும் உண்டு. இவை தான் மெல்லிய வெளிச்சத்திலும் நம்மை பார்க்க வைக்கின்றன. இவைகள் வண்ணத்தை உணராது வெறும் கருப்பு, வெள்ளையை மட்டும் தான் உணர வைக்கும்.

இந்த கூம்பு செல்களிலும், குச்சி செல்களிலும் விழுந்த ஒளிக்கதிர்கள், ஒளி உணரும் சில ரசாயனங்கள் மூலம் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ட்ரான்ஸ்ட்யுசின் என்ற புரதம் ஒளி - செய்தி மாற்றத்தில் பயன்படுகிறது. இதிலிருந்து பார்வை நரம்பு மூலம் செய்தி உள்ளே போகிறது. கண் திரையில் படும் ஒவ்வொரு விவரமும் ஒழுங்காக பார்வை கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே அந்த பிம்பம் மறுபடி கோர்க்கப்ப்படுகிறது.

கார்ட்டெக்ஸ் பகுதிக்கு செய்திகள் நேராகப் போவதில்லை. பார்வை நரம்புகள் இரண்டும் இடம், வலம் மாறுகின்றன.

கண்ணின் சில ஆச்சரியங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. கண்ணின் விழித்திரை பகுதி எதற்க்காக மூளையின் பின்னால் அமைக்கப்பட்டிருக்கிறது? எதற்க்காக இடது வலம் என்று பிம்பங்கள் மாறுகின்றன? கண் திரையில் விழும் பிம்பம் தலிகீழானது. அது எங்கே, எப்படி நேராக நிமிர்த்தப்படுகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தக்காளி பழத்தின் மகிமை


தக்காளி பழத்தின் மகிமை என்ன?


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.
தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.
தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.
பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.
தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.
தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

இதய நோயை கட்டுப்படுத்தும் தக்காளி!


அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
 தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்
இணையத்திலிருந்து.....உங்களுக்காக

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்



புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். "உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது" என்றார்.
"அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்" என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி பூஜை செய்யும் முஸ்லீம் பெண்கள்


262893_10150275362453463_646363462_7739219_4259725_n.jpg
அகிலபாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில்செயல் படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின்  மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் பாசிச வெறி நாய்களை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.எச்சரிக்கை சகோதரர்களே.பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்.ஈசி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈசி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெசேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர்.எனவே தயவு செய்து ஈசி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள் சென்று செய்துகொடுங்கள்.

283389_10150273540698463_646363462_7722238_7776186_n.jpg223149_10150273546518463_646363462_7722250_3793269_n.jpg282549_10150273547598463_646363462_7722256_2277598_n.jpg
இப்புகைப்படங்கள் ராமேஸ்வரத்தில் நடந்த கடல்முர்ருகை போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.சங்க்பரிவார பாசிஸ்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் ராமேஸ்வரத்தில் கிடைத்த வெற்றி என தலைப்பிட்டு இதை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.



216597_10150266403548463_646363462_7646594_929198_n.jpg
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார் ?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன்   பின்னணி என்ன?என்பதனை சிந்திக்க வேண்டுகிறேன்.சங்கபரிவார பயங்கரவாதிகளின் நூறாண்டு செயல் திட்டத்தின் விளைவு தான் இது என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இந்தியா இந்து தேசம்.நீ இங்கே வாழ வேண்டுமெனில் தொப்பி தாடியுடன் நாமும் இட்டுக்கொள்.அல்லாஹு அக்பர் என்பதுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் சொல்.அப்படியெனில் மட்டுமே நீ இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமகனாய்  வசிக்க முடியும் என்று பகிரங்கமாக  அறைகூவல் விடுத்து அதை செயல்படுத்தும் வெறியோடு பல பிரிவுகளாய் பிரிந்து ஆனால் ஒரே நோக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.எனும் ஒரே  தலைமைக்கு கட்டுப்பட்டு அதி தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.அரசு துறை அதிகார வர்க்கம்,ஆளும் வர்க்கம்,மீடியா,இணையதளம் இப்படி எல்லாவகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.நமக்கோ இயக்க சண்டை போடவும் ,அடுத்தவர்களின் குறைகளை கண்டறிந்து அதை பரப்புவது ,பல பிரிவுகளாய் பிரிந்து செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது.ஏதோ இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கவில்லை.சமிப காலமாய் இது அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கூட பழனி,சபரி மலைக்கு பாதயாத்திரை செல்வது,விநாயகர் சதுர்த்தி அன்று வரவேற்பு செய்வது ,நம் பெண்கள் ஹிந்து சமூகத்தை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது
 அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த  பாஜக தயாராகிவிட்டது. பிரசாரமும்  சமூக வலைத்தளங்கள்  மூலம் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் நமது நிலையோ சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள்.சமுதாய நலனுக்கு என்று  சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து  இந்த சமுதாயம் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள்.சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே   இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்..

Wednesday, 19 October 2011

மழை பொழிவு பற்றிய ஒரு ஆய்வு !!!



பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன. இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம். இதை பற்றி உலக போது மறையான திருகுரானிலே (24:43) என்கிற வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.
24:43.    (நபியே!) நீர் பார்க்கவில்லையாநிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்துபின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்துஅதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்;அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.