கண்களின் அற்புதம்
கண்களின் அற்புதம் .
புலன்களில் முதன்மையானது பார்வை. கண்கள் மூலம் பார்க்கப்படும் காட்சிகள், மின் ரசாயனத் துடிப்புகள் மாற்றப்படுகின்றன. பின் தலையில் உள்ள 'ஸெரிப்ரல் கார்டெக்ஸ்' பகுதியின் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது . மூளையின் முதல் ஆச்சரியம் இதுதான்.
கண் என்பது ஒரு கேமராதான். அதற்கும் லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. ப்யுப்பில் என்று அழைக்கப்படும் பாப்பா கேமராவின் அப்பெர்ச்ச்சர் போல செயல்படுகிறது. தானாகவே 'அட்ஜஸ்ட்'செய்து கொள்ளக் கூடியது. குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும்.
கண் லென்ஸ் இந்த ஒளிக்கதிர்களை வளைத்து, உள்ளே உள்ள கண்ணாடி போன்ற திரவத்தின் வழியாக 'ரெட்டினா' என்ற திரையின் மேல் படிய வைக்கிறது. 'ரெட்டினா' என்றால் வலை. நரம்பு செல்களின் வலை. இந்த செல்களுக்கு 'ஒளி வாங்கி செல்கள்' என்ற பெயரும் உண்டு. இந்த ஒளி வாங்கி செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கோன் வடிவம், அதாவது கூம்பு. மற்றொன்று ராடு வடிவம். அதாவது குச்சி. கூம்பு வடிவ செல்கள் 60 லட்சம் உள்ளன. சிறிய கெட்டியான கூம்பு போன்ற வடிவம் கொண்ட இந்த செல்கள்தான் வண்ணங்கள நமக்கு தெளிவாக காட்டுகின்றன. இதனுடன் சேர்ந்து பன்னிரெண்டரை கோடி மெல்லிய குச்சிகள் போன்ற செல்களும் உண்டு. இவை தான் மெல்லிய வெளிச்சத்திலும் நம்மை பார்க்க வைக்கின்றன. இவைகள் வண்ணத்தை உணராது வெறும் கருப்பு, வெள்ளையை மட்டும் தான் உணர வைக்கும்.
இந்த கூம்பு செல்களிலும், குச்சி செல்களிலும் விழுந்த ஒளிக்கதிர்கள், ஒளி உணரும் சில ரசாயனங்கள் மூலம் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ட்ரான்ஸ்ட்யுசின் என்ற புரதம் ஒளி - செய்தி மாற்றத்தில் பயன்படுகிறது. இதிலிருந்து பார்வை நரம்பு மூலம் செய்தி உள்ளே போகிறது. கண் திரையில் படும் ஒவ்வொரு விவரமும் ஒழுங்காக பார்வை கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே அந்த பிம்பம் மறுபடி கோர்க்கப்ப்படுகிறது.
கார்ட்டெக்ஸ் பகுதிக்கு செய்திகள் நேராகப் போவதில்லை. பார்வை நரம்புகள் இரண்டும் இடம், வலம் மாறுகின்றன.
கண்ணின் சில ஆச்சரியங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. கண்ணின் விழித்திரை பகுதி எதற்க்காக மூளையின் பின்னால் அமைக்கப்பட்டிருக்கிறது? எதற்க்காக இடது வலம் என்று பிம்பங்கள் மாறுகின்றன? கண் திரையில் விழும் பிம்பம் தலிகீழானது. அது எங்கே, எப்படி நேராக நிமிர்த்தப்படுகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment