Friday, 13 January 2012

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ




முழு அளவு படத்தைப் பார்

முழு அளவு படத்தைப் பார்


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.



            ரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். 


நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. 

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo


English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .


குங்குமப்பூ மகத்துவம் 

சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.


குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-Posted Image

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

Posted Image

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.
இணையத்திலிருந்து அள்ளித் தருபவர்

தொப்பை குறைய






தொப்பை குறைய என்னன்ன சாப்பிடலாம்?

இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.
VN:F [1.9.11_1134]
முழு அளவு படத்தைப் பார்






காலை காலையில் எழுந்த உடன் சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து  துளசி இலைகளை போட்டு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் காப்பி குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்
ஒருமணிநேரம் கழித்து எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 9  மணியளவில்  1 டம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.

காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்

காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்  நாட்டுச் சர்க்கரை ,  வாழைப்பழம்,  கொஞ்சம்  ஏலக்காய் பொடி  எல்லாவற்றையும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

 மதியம் சாப்பாட்டுக்கு  20 நிமிடத்திற்கு முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி வேகவைத்து  அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம்.

இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம.  பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.

மனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா?

மனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா? 


உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology) என்பது உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன, செல்களில் உள்ள குரோமோசோம்களில் உள்ள மரபுகள் (Genes) எப்படி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது என்பதை பற்றிய உள் நுழைந்த பதிவு. இதன் மூலம் உயிரிகளின் அடிப்படை விசயங்களையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் மிக தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

உயிரி தொழிற்நுட்பம் (Bio technology) படிப்பவர்களுக்கு இந்த கோட்பாட்டின் ஆழம் தெரிந்திருக்கும் எனினும் அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகவே இந்த மைய கோட்பாடு உள்ளது என்பதனால் முடிந்த அளவு இலகுவாக தர முயன்றிருகின்றேன், பரிணாமம் பற்றிய சில யூகங்களை விளக்குவதாகவும் இது அமையும் என நம்பிக்கையுடன் தொடருகிறேன். 

பதிவிற்கு செல்வதற்கு முன்பு, சில முக்கிய தொழிற்நுட்பம் சம்பந்தமான குறிச்சொற்களை (Technical words) அறிந்துகொள்வது அவசியமானது. 

A – Adenine , C – Cytocine, G – Guanine, T – Thymine, U – Uracil 

(இவைகள் எல்லாம் Basepairs – வேதியியல் மூலக்கூறுகள்) 

Nuclic acid - நுயுக்ளிக் (மைய) அமிலம் 

DNA – DeoxyRibo Nucleic acid – A, C, G, T மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

RNA – Ribo Nucleic acid – A, C, G, U மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

Gene – மரபு (குறிப்பிட்ட DNA க்கள் சேர்ந்தது, நம்முடைய செயல்பாடுகள், உடலமைப்பு என அனைத்திற்கும் மூல ஆதாரம், ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மரபு காரணம்) 

Protein – புரதம் (மரபிலிருந்து உருவாகக்கூடியது) 

Amino Acid - அமினோ அமிலம் (புரதத்தின் உள் உள்ளது) 


Chromosome – குரோமோசோம் (பல மரபுகள் சேர்ந்தது, ஒரு ஜோட்டி வடிவத்தில் இருக்கும்) 

Cells – செல்கள் (மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கொண்ட ஒரு கட்டமைப்பு) 

Organ – உறுப்புகள் (புரதத்திளிருந்து உருவாகக்கூடியது) 

Sequence – கணினி புரோக்ராமிற்கு ஒத்தது - மரபுகளை கணினியின் உதவியுடன் ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டது. ( DNA, RNA Sequence – A, T, G, C, U and Protein Sequence – A,B,C… (20 basepairs))



வெற்றிகரமாக நடைபெறும் ஆண் பெண் விந்தணு கருமுட்டையின் சேர்க்கையால் அடுத்த சந்ததி உருவாக ஆரம்பிக்கும், அதன் பிறகு முதல் செல்லில் நடைபெறக்கூடிய மைய நிகழ்வுகளையே தற்போது நாம் காண போவது.



நாம் பார்த்த அறிந்தவற்றை விட செல்களில் நடைபெற கூடிய செயல்கள் மிகவும் ஆச்சரியமானவை.மூலக்கூற்று உயிரியலின் மைய கோட்பாடு செல்லில் (Cell) நடைபெறக்கூடிய முக்கியமாக இரண்டு நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது, Transcription and Translation என்பவை தான் அவை.

1) குரோமோசோம்களில் உள்ள DNA வை DNA polymerase எனும் அமைப்பு RNA வாக மாற்றுவது Transcription எனப்படும், இது முதல் முக்கிய நிகழ்வு.

2) இதன் பிறகு இந்த RNA வை செல்லில் உள்ள ரிபோசொம் (Ribosome) எனப்படும் ஒரு அமைப்பு புரதமாக (Protein) மாற்றும் இந்த நிகழ்வை Translation என கூறுவர், இது இரண்டாவது நிகழ்வு. 

(படத்தை காண்க, முதல் நிகழ்வில் போது RNA வாக மாற்ற பட்ட இந்த மரபுகள் திரும்பவும் DNA வாக ஒருபோதும் மாறாது.ஆனால் சில வைரஸ்கள் RNA விலிருந்து DNA வாக மாறும், அதாவது எய்ட்ஸ் (AIDS – Acquired Immuno Deficiency Syndrome) நோயை உருவாக்க கூடிய HIV க்களும் தலை கீழாக மாற கூடியவை, இந்த வினைக்கு Reverse Transcriptase என்று கூறுவர். இதன் காரணமாகவே எய்ட்ஸ் நோய்க்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, புற்றுநோய் (Cancer), காச நோய் (Tuberculosis) ஆகிய நோய்களுக்கும் இது வரை மருந்து கண்டுபிடிக்க முடியாமைக்கு காரணம் இந்த நோய்கள் மரபுகள் சார்ந்து இருப்பதும் மனிதனின் அடிப்படை மூலப்பொருளான இந்த மரபுகளையே தாக்குவதும் தான்).
புரதம் பின்பு கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates), லிபிட்ஸ் (Lipids) அதாவது கை கால் என மற்ற அனைத்து உறுப்புகளும் உருவாக மூலகாரணமாக உள்ளது, இது உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியில் செல்லில் நடைபெற கூடிய அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள். 

DNA என்பது double helix எனப்படும் ஒரு சிக்கலான அமைப்பை கொண்டது, DNA தன்னை தானே மீள்பதிவு எடுத்து கொள்வது DNA Replication எனப்படும், மரபு காப்பி (Copy) எடுப்பது என்று கூறுவர், கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்று A என்பது T உடனும், G என்பது C உடனும் கெட்டியாக பிணைக்கப்பட்டிருக்கும்.

A, T, C, G, U இவைகள் எல்லாம் மூலக்கூறு அமிலங்கள் இதற்கும் உள்ளேயும் சென்று ஒரு உயிரினத்தை அக்கு அக்காக பிரித்தால் கடைசியில் மிஞ்சுவது வேதியியல் மூலக்கூறுகள் அவைகளில் கார்பன் (Carbon) மூலக்கூறுகளும் சுகர் (Sugar), பாஸ்பேட் (Phosphate) மூலக்கூறுகளும் இணைக்கப்பட்டிருக்கும், (இதுவரையில் மனிதனால் விளங்க முடியாதது உயிர் மட்டுமே. இது எங்கிருந்து வருகிறது எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என அனைத்தும் ??? தான்). வளைந்த அமைப்பில் இருக்கும் DNA வை பிரித்து அதில் உள்ள மூலக்கூறின் அமைப்பை வரிசை படுத்தினால் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது போன்று கோடிங்காக இருக்கும். 

மரபுகளின் இந்த தொடர் மிக முக்கியமானது, தற்போதை கண்டுபிடிப்பு படி ஒருவன் அமைதியானவனா அல்லது கோபக்காரனா என்பது உட்பட மரபில் பொதிந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், இதை வைத்து மனிதனின் சுபாவம் உட்பட தலைமுறையாக தொடரக்கூடிய செய்திகளும் இதில் பதியப்பட்டிருக்கும்.

(தலைமுறையாக இது தொடரும் எனினும் அவற்றை தண்ணீர் தொட்டியில் போட்டு போதி தர்மரின் பழைய நினைவுகளை தூண்டுதல் என்பதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்)

>gi|363399400|gb|CY103856.1| Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene, partial cds

ATGAATCCAAACCAAAAGATAATAACCATTGGTTCGGTCTGTATGACAATTGGAATGGCTAACTTAATAT
TACAAATTGGAAACATAATCTCAATATGGATTAGCCACTCAATTCAACTTGGGAATCAAAGTCAGATTGA
AACATGCAATCAAAGCGTCATTACTTATGAAAACAACACTTGGGTAAATCAGACATATGTTAACATCAGC
AACACCAACTTTGCTGCTGGACAGTCAGTGGTTTCCGTGAAATTAGCGGGCAATTCCTCTCTCTGCCCTG
TTAGTGGATGGGCTATATACAGTAAAGACAACAGTATAAGAATCGGTTCCAAGGGGGATGTGTTTGTCAT
AAGGGAACCATTCATATCATGCTCCCCCTTGGAATGCAGAACCTTCTTCTTGACTCAAGGGGCCTTGCTA
AATGACAAACATTCCAATGGAACCATTAAAGACAGGAGCCCATATCGAACCCTAATGAGCTGTCCTATTG
GTGAAGTTCCCTCTCCATACAACTCAAGATTTGAGTCAGTCGCTTGGTCAGCAAGTGCTTGTCATGATGG
CATCAATTGGCTAACAATTGGAATTTCTGGCCCAGACAATGGGGCAGTGGCTGTGTTAAAGTACAACGGC
ATAATAACAGACACTATCAAGAGTTGGAGAAACAATATATTGAGAACACAAGAGTCTGAATGTGCATGTG
TAAATGGTTCTTGCTTTACCATAATGACCGATGGACCAAGTGATGGACAGGCCTCATACAAGATCTTCAG
AATAGAAAAGGGAAAGATAGTCAAATCAGTCGAAATGAATGCCCCTAATTATCACTATGAGGAATGCTCC
TGTTATCCTGATTCTAGTGAAATCACATGTGTGTGCAGGGATAACTGGCATGGCTCGAATCGACCGTGGG
TGTCTTTCAACCAGAATCTGGAATATCAGATAGGATACATATGCAGTGGGATTTTCGGAGACAATCCACG
CCCTAATGATAAGACAGGCAGTTGTGGTCCAGTATCGTCTAATGGAGTAAATGGAGTAAAAGGATTTTCA
TTCAAATACGGCAATGGTGTTTGGATAGGGAGAACTAAAAGCATTAGTTCAAGAAAAGGTTTTGAGATGA
TTTGGGATCCAAACGGATGGACTGGGACAGACAATAACTTCTCAATAAAGCAAGATATCGTAGGAATAAA
TGAGTGGTCAGGATATAGCGGGAGTTTTGTTCAGCATCCAGAACTAACAGGGCTGGATTGTATAAGACCT
TGCTTCTGGGTTGAACTAATCAGAGGGCGACCCAAAGAGAACACAATCTGGACT

இது மனிதனை தாக்க கூடிய (Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene) வைரஸின் மரபணு தொகுப்பு. இந்த கோடிங்கில் அந்த வைரஸின் தலை வால் அதன் உணவு முறை என அனைத்தும் பதியப்பட்டிருக்கும். இதே போன்றே அனைத்து உயிரினங்களுக்குள்ளும் பதியப்பட்டிருக்கும். இந்த வைரஸ் நுண்ணுயிரி என்பதால் கோடிங் சிறியதாக உள்ளது.

1990 ம் ஆண்டு NIH - National institute of health ஒரு ஆராய்ச்சியை துவங்கியது அது மனிதனின் அனைத்து மரபுகளையும் தொகுக்கும் ஆராய்ச்சி, அதற்கு மனித மரபியல் தொகுப்பு (Human Genome Project) என்று பெயரிட்டது. 15 வருட காலத்தில் முடிப்பதாக திட்டமிடப்பட்ட இந்த ஆராய்ச்சி விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியால் 13 வருட காலத்தில் அதாவது கடந்த 2003ல் முடிக்கப்பட்டது, மனித உடம்பில் இருக்க கூடிய 20000 – 25000 மரபுகளை பகுப்பது, மனித மரபில் இருக்கும் 3 பில்லியன் வேதியியல் மூலக்கூறுகளை கணினியில் sequence ஆக மாற்றி அதை database வடுவில் சேமித்து வைப்பது ஆகும்,தற்போது அனைத்து மனித மரபுகளும் பகுக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டது, அதை வைத்து கணினி மென்பொருள் மூலம் மற்ற மரபுகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம், இரண்டு விலங்கின் அல்லது மனிதனின் மரபுகளை சோதிக்கவேண்டும் எனில் அதை நாமே மென்பொருள் உதவிகொண்டு பகுத்தாய்ந்தாய்வதற்கு ஏதுவாக பல சுலபமான மென்பொருள்கள் (Tools) வந்துவிட்டன. இதை தொடர்பு படுத்தியே மனிதனின் மரபிற்கும் (Human Genome) சிம்பன்சி மரபிற்கும் (Chimpanzee Genome) உள்ள 96% ஒற்றுமையை கூறுகின்றனர். 

மரபுகளை பகுத்தாய்வதில் மருத்துவ ரீதியாக அதிக பயனுண்டு, Gene therapy மூலம் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல் மேலும் கொலை கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை DNA testing கொண்டு சுலபமாக கண்டுபிடித்து விடலாம். நம்மை தாக்க வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கான தீர்வைகாணவும் இந்த ஆராய்ச்சி உதவுகின்றது. இனி ஒரு காலம் வரலாம், மனிதனின் மரபை வைத்து அவனின் உருவம் கணினியில் வரையப்படலாம், அதாவது மனிதனின் ஒரு முடி கிடைத்தால் (வேருடன் கூடிய முடி ஏனெனில் வேரில் தான் DNA பதியப்பட்டிருக்கும் பார்பர் கடையில் இருக்கும் முடியை வைத்து ஒரு உபயோகமும் இல்லை) போதும் அவனின் உருவத்தை வரைந்து விடலாம் என்ற நிலை ஒரு நாள் வரும். 

மரபில் உள்ள atgc யில் திடிரென ஒரு 'a' வை யாராவது இடையில் இணைதாலோ அல்லது எடுத்தாலோ, பரிணாம வாதிகளின் சிந்தனைப்படி திடிரென வேறொரு உயிரினம் உருவாகிவிடாது, இது போன்று சில நேரங்களில் சிறு மாற்றங்கள் (புற ஊதா கதிர் மற்றும் அகசிவப்பு கதிர் மற்றும் கெமிக்கல் பாதிப்பால் சீர்குலைய வாய்ப்புள்ளது) ஏற்படும் போது அந்த மரபு மாற்றமான உயிரினத்திற்கு நோய் அல்லது ஊனம் போன்ற ஏதேனும் ஒன்று ஏற்பட்டு விடும், அதையே mutation என்று கூறுவர், அந்த மாற்றமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டு விடாது, அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன, வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள். இது முழுமையாக எழுதி வைக்க பட வேண்டும். வேறொரு உயிரினம் வேண்டும் என்றால் வேறொரு மாதிரி இந்த மரபு கோடிங்கை மாற்றி எழுத வேண்டும். அப்பொழுது தான் புது விலங்கு தோன்றும், சில காலங்களுக்கு முன்னால் கூட ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புது வகையான ஊதா வண்ண ரோஜா உருவாக்கினர், தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனையான மரபணு மாற்று கத்தரிக்காயும் இதே அடிப்படையிலேயே செய்யப்படுகின்றது. அதேபோன்று மனித மரபணு மாற்று உருவாக்கமும் எதிர்காலத்தில் சாத்தியமே. 

உயிரினங்கள் ஒரு வரைமுறையில் இருப்பதால் தான் அவற்றை மாற்ற வாய்ப்பு இருக்கிறது, தானாக வந்திருந்தால் அவற்றை மாற்ற வாய்ப்பே இருந்திருக்காது அல்லவா?


பில் கேட்ஸ் ஒருமுறை மரபுகளை பற்றி கூறும்பொழுது மனிதன் உருவாக்கிய கணினி மென்பொருளை உருவாக்க கூடிய மொழியை விட (0,1) மிகைத்த ஒரு மொழியை கொண்டு உருவாக்க பட்டுள்ளது என்று கூறினார். மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு (A,T,C,G) வேதியியல் மூலக்கூறுகளில் மட்டும் தான் அனைத்து செய்திகளையும் DNA பதிகின்றது இந்த நான்கு வேதியியல் மூலக்கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவைகளை மாற்றி, இணைத்து ஒரு புரத மூலக்கூறை தருகிறது என்பது ஒரு விசித்திரமான செய்தி மேலும் அந்த செல்கள் அனைத்தும் உயிர்வாழ வழிவகையும் செய்து அதன் மூலமே இரத்தமும் சதையும் உருவாக்கி உயிரினங்கள் வாழ்கின்றன என்றால் அது ஒரு விசித்திரமான செய்திதான். நாம் பயன்படுத்துகின்ற கணினியும் அதை சார்ந்தவையும் தானாக உருவாயின, அதன் கோடிங் எல்லாம் தானாகவே உருவாகியது என்று கூறினால் முட்டாள் என்று கூரமட்டார் பிறகு மரபணுக்களை தன்னகத்தே கொண்ட உயிரினங்களும் தானாக வந்தது என்று கூறுபவரை என்ன வென்று கூறுவது. 
 
 
 
 
 
 

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!


தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது.
இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த ஆபரணங்களுக்கு விடுமுறை கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .
த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம் ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு ‘பா‌ல் நெ‌க்ல‌ஸ்’-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையி;ல் .
‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.
பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.
தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை’ போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.
என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.
லண்டனில் கிடைக்கிறது தாய்ப்பாலில் ஐஸ்கிரீம்





ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாளர், (Matt O'Connor) 'மாட் ஓ'கோனர்' என்பவர் லண்டனில் 'கோவென்ட் கார்டன்' என்ற இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் நடத்திவருகிறார். இவர் நேற்று வெள்ளிக்கிழமை (25.02.11) முதல் 'பேபி ககா' என்ற பெயரில் தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் செய்து வியாபாரம் செய்கிறார். தாய்ப்பாலுடன், (Madagascan Vanilla Pod) 'மடகாஸ்கன் வேனில்லா பாட்' என்ற பழமும், எலுமிச்சம்பழத்தின் (Lemon zest) ஒரு பகுதியும் (பழத்திற்கும், தோலுக்கும் நடுவில் உள்ள பகுதி?) சேர்த்து செய்யப்படுகிறது. ஐஸ்கிரீமின் விலை 14 பவுண்ட்கள்.

Mother's forum என்ற தளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, தாய்ப்பால் தர சுமார் 15 தாய்மார்கள் இசைந்திருக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த விக்டோரியா HILEY, அவருடன் இணைந்து சில பெண்களும் தாய்ப்பால் தருகிறார்கள். என்னிடம் கூடுதலாக இருக்கும் பாலை பணத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு, நானே ஐஸ்கிரீம் சாப்பிட்டுப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்று HILEY சொல்கிறார். தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், அதன் சுவையையும் அருமையையும் வெளியில் சொன்னால், இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தயங்கமாட்டர்கள் என்றும் HILEY சொல்கிறார். 

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்


இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்

insomnia
சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .

1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
2. ஓட்ஸ் உணவுகள் (Oats)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. 
3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)
செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.
The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)
ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே

குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?


குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?

இயற்கை மருத்துவ முறையில, இன்னுமொரு விநோத சிகிச்சை முறைங்க அப்பு இந்த மண்குளியல் சிகிச்சை.


உடல்ல இருந்து அதிகமான உஷனத்தை நீக்கறதுக்கு இது பயன்படுதுங்க. குறிப்பா சரும நோய்கள் எதுவா இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை செய்யலாமுங்க!

மத்தியானம் உச்சி வெயில்ல, புத்து மண், இல்லன்னா, பசையுள்ள செம்மண்ணு, இல்லன்னா களி மண்ணை எடுத்து, நீரில நல்லா குழைச்சி, உடல் முழுக்க பூசிகொள்ளுவாங்க. இந்த சிகிச்சியின் போது, உள்ளாடை மட்டும் தான் போட்டிருப்பாங்க. 


அரைமணி நேரம் வெய்யில்ல இருப்பாங்க. காத்து பட்டு ஆறும்போது சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கும் பாருங்க!  (ஜில்லுன்னு ஒரு காதல் கணக்கா!) கொஞ்ச நேரம் ஆனபின்னாடி மண் காய காய, தோலை பிடிச்சி இழுக்கும் பாருங்க! அதுவும் கூட ஒரு அனுபவம் தான் பங்காளி!

பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க! உடல்ல இருக்கிற கெட்ட நீர் எல்லாம் இந்த மண்குளியல் சிகிச்சையினால உறிஞ்சி வெளியேற்றப்படுதுங்க. அதனால மனசும் உடலும் லேசாயிடும்.

ஆஹா! அந்த குளிமை! அந்த ஆனந்தம்!! அதை அனுபவிச்சி பாத்தாதான் தெரியும்! வாய்ப்பு இருக்கிறவங்க செஞ்சி பாருங்க!  

சரி என்ன கேட்டீங்க? மண்ணில வேற என்ன மாதிரி சிகிச்சை முறைகள் இருக்குன்னு தெரியனுமுங்களா, அப்பு?

அதையும் சொல்லிடறேன். கவனமா கேட்டுகோங்க ராசா! (பங்காளி பயலுகளுக்கு தான் என்ன ஒரு ஆர்வம்பா!!!)

ஈரமண் பட்டி (Wet Mud Pack), போடுவாங்க. அதாவது, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது, ஒரு வேட்டி துணியில ஈர மண்ணை வைச்சி ஒரு அகலமான பெல்ட் போல - பட்டியாக்கி, நெத்தி, அடிவயிறு, தொப்புள் மேலேயும் இடுவாங்க. நல்லா சில்லுன்னு இருக்கும். ஒரு அரை மணி கழிச்சி எடுத்திடலாம். நல்ல பலன் கொடுக்கும்.


இப்படி மண் இல்லாம கூட வெறும் துணியை, தண்ணியில நினைச்சி கூட போடுவாங்க. இதுக்கு பேரு ஈர துணிப் பட்டி (Wet Cloth Pack). மேல சொன்ன காரணங்களுக்காக இதை பயன்படுத்தலாமுங்க! அதே போல பலனும் கொடுக்குமுங்க!

கடவுள்' இருப்பது உண்மை தான்!!



கடவுள்' இருப்பது உண்மை தான்!!


கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.

அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம்(/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.html) ஆகிய கட்டுரைகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.

அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’


பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
RAFEEK AHMED.H - Dubai.

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கேஉங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
  • 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
  • 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாகஇருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
  • 4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறைகாரணிகளாகிறது.
  • 5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்துகுறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
  • 6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
  • 7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றைஎரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
  • 8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
  • 9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
  • 10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
  • 11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
  • 12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாகநஞ்சாகிவிடுகிறது.
  • 13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பதுஅல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லைஅழிக்க உதவியாகிறது.
  • 14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
  • 15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
  • 16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம்போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
  • 1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒருமுக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலைஎடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
  • 3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
  • 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும்உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ்மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
  • 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?



ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது"என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.

இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. தடை செய்வதாக‌ இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்தில் "X"குறியிட்டுள்ள‌ இரண்டு வகைகள்தான் :




இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.

ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்!ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!
 
==================
அறியத்தந்த சகோதரி அஸ்மா   மற்றும் பரங்கிப்பேட்டை Jamal Maraicayar இவர்களுக்கு சமுதாயம் சார்பாக நன்றி