|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Saturday, 14 January 2012
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!
மழைக் கால உணவுகள்
|
Friday, 13 January 2012
அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2
அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2
இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.
* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.
* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.
* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.
* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.
* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.
* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.
* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.
*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.
*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.
*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.
*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.
*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.
*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.
தொடரும்...
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!
இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்
சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோ
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,
* கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்
* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:
* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.
* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.
* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவரவியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)
இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi"
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum"
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"
இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.
இலைகளின் பலன்கள்:
* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.
* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.
* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும்
இறுதியாக,
எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இல்லாமல் இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது. ஆனாலும் மனிதன் எல்லா நோய்களுக்கும் நிவாரணியை முழுமையாக உடனுக்குடன் கண்டுபிடித்துவிட முடியவில்லை. நோய் அறிமுகமான பிறகே பலவித ஆராய்ச்சிகளில் இறங்கி, கிடைக்கும் முடிவுகளை வைத்து மருந்துகளை சோதனை ஓட்டமாக முதலில் அறிமுகம் செய்து, அதிலும் வெற்றி கிடைத்த பிறகே மருந்துகள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்கு வருகின்றன. அதற்குள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள்கூட ஏற்பட்டுவிடுகின்றன. இவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நோயைக் குறிப்பிட்டு 'இதற்கு மருந்தே கிடையாது' என்று சொல்வது தற்காலிகமானதே என்று சொல்லலாம்.
"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூற்கள்:முஸ்லிம், பைஹகீ
"ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி); நூல்:முஸ்லிம் (4432)
அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா, பைஹகீ
இந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:
அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்:
அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1
அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1
இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.
*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.
*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.
*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.
*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.
*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.
*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.
*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.
*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.
*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்
*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.
*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள?.
*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.
*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.
*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...
அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது
Subscribe to:
Posts (Atom)