Thursday, 29 March 2012

'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-14



'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-14

"அறிவியல்அறிவியல்  என்று இதுவரை காலமும் எமக்குப் படம்காட்டிவிட்டுதிடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்என்று நீங்கள் என்னைப்பற்றிகடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். "பேய்இருக்காஇல்லையான்னு எனக்குத் தெரியாதுஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறதுஎன்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான்உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும்.ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்துமாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை 'எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறதுபல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியேதீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன். 
ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டுடிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்அவர்கள் சொன்னபடி....,1. சூரியன்பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ(Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.
2. பூமியின் வடதென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம்மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.
3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid)ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.
4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.
5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.
இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும்,அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகஅந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.
இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டுஎந்த அளவுக்குப்பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள,எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லைநாட்டின் நலன்களும்நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம்அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றனஉண்டுஇல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானேஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை?மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?
இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால்உலக மக்களைச் சுற்றி,அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளதுஅத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளதுஎனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும்வைத்துஇந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாதுஅப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோபெரியவனோ கிடையாதுஇவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும்பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.காரணம்இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது. நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும்அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும்.அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம்(American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளைநீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூராஇவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாதுஅதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர்பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போலஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார்அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூடபல படங்களில் இவர் நடித்திருக்கிறார்இதில்விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து'பிரெடேட்டர்' (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த ஜெஸ்ஸி வென்டூராஉலகில் நடக்கும் சதிகளைத்தொலைக்காட்சி மூலம்வெட்ட வெளிச்சத்துக்குத் துணிச்சலாக கொண்டுவருகிறார். நான் இனி தரும் விபரங்கள் இவரும்வேறு பலரும் வெளிக்கொண்டு வந்தவையாக இருக்கும்ஆனாலும் ஆதாரத்துக்காகஒருவரையாவது உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிலையில் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 
இனி நான் தரும் எல்லாமே அதிர்ச்சி தரும் தகவல்களாகவே இருக்கும். எனது தொடரின் உச்சக்கட்டமாக அமைவதும் இவைகளாகத்தான் இருக்கும்இவற்றை நீங்கள் வாசிக்கும்போது,உங்களால் நம்பவே முடியாமல் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளனஎனவே தயங்காமல்நான் தரும் தகவல்களையும்,பெயர்களையும் கொண்டு கூகிள் (Google) மூலமாகவும்யூட்யூப் (Youtube)மூலமாகவும்வேறு இணையத் தளங்கள் மூலமாகவும் தேடினீர்களென்றால்தகவல்கள் அருவி போல கொட்டும். இதற்கு மேலும் இது பற்றி விளக்கிக் கொண்டிருக்காமல் விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்.......!    உலக மக்கள் அனைவரையும் உண்மையை அறிய விடாமல் தடுக்கும் இந்த சக்திகள் யார்ஏன் இவர்கள் தடுக்கிறார்கள்என்பன மில்லியன் டாலர் கேள்விகள்இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில்பலஇடங்களிலிருந்து எமக்குக் கிடைக்கிறதுஅவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்முதலில் நாம் அமெரிக்காவில் உள்ள 'கொலராடோ' (Colorado) மாநிலத்தில் அமைந்த 'டென்வெர் விமான நிலையத்தில்' (Denver Airport) இருந்து எமது தேடலை ஆரம்பிக்கலாம்நீங்களும் ஒருதரம் ஆசுவாசமாக மூச்சை விட்டுக்கொண்டு வாசிப்பதற்குத் தயாராகுங்கள்........!
சாதாரணமாகப் பார்த்தால் பயணிகள் சுறுசுறுப்பாகப் பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம்தான் இதுஆனால்அந்தப் பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறதுபின்னர் எப்படியோ,  இப்படி ஒன்று நடப்பது மெது மெதுவாக கசியத் தொடங்கியதும்தான் மீடியாக்களும் மக்களும் பயத்தில் விழித்துக் கொண்டனர்ஐக்கிய அமெரிக்கப் (USA) பெருநிலத்தில்நட்ட நடுவே அமைந்தது இந்த டென்வெர் விமான நிலையம்விமான நிலையத்துக்குக் கீழேமிக ஆழத்தில் பலர் தங்கியிருக்கக் கூடிய கட்டடங்கள்அமெரிக்க அரசினாலேயே அமைக்கப்படுகின்றனஅப்படி அமைக்கப்படும் சுரங்க கட்டடத்தின் நீள அகலம் எட்டுச் சதுரக் கிலோ மீட்டருக்கும் அதிகம். இவ்வளவு மிகப்பெரிய பிரமாண்டமான நிலக் கீழ் கட்டடங்கள்மிக ஆழத்தில்அதுவும் ஒரு விமான நிலையத்திற்கும் கீழே கட்டப்படுவதன் காரணம் என்ன
இந்த நிலக் கீழ் கட்டடங்கள் எந்த ஒரு அழிவுகளினாலும் பாதிக்கப்படமுடியாதவாறு மிகமிகப் பலம் வாய்ந்த முறையில்நவீனமாக அமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படுவது பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் மிக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகிறதுபாதுகாப்பென்றால்எப்படிப்பட்டபாதுகாப்பென்று நினைக்கிறீர்கள்அமெரிக்க இராணுவத்தின் அதியுயர்பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டிருக்கிறதுஇந்தக் கட்டடம் அமைப்பவர்களிடம் இது பற்றிக் கேட்டால் கிடைக்கும் பதில் மௌனம் மட்டும்தான்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால்பலமானபாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போதுபலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறதுஅதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும்அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை.  எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன. கட்டடம் கட்டப்படும் இடத்தில், 'New World Airport Commission' என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறதுஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால்,அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாகஎங்குமே பதிவு செய்யப்படவில்லைஅந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், 'நியூ வேர்ல்ட் ஆர்டர்' (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால்பல உண்மைகளையும்பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.
"அடஅவர்களா நீங்கள்?" என்ற ஆச்சரியத்துடன் இதைஆய்வுக்குட்படுத்தியபோதுகிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.அமெரிக்காவைப் பொறுத்தவரைஇந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாதுஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில்சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத்தொடங்கியிருக்கின்றனர்அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளதுஉலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர்யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும்நான் அவற்றை  இங்கு குறிப்பிட்டுச்சொல்லவில்லைஉலகின் பணக்காரர்கள் எல்லோரும்ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள்யாருக்கும் தெரியாமல்மிகமிக இரகசியமாக. 
சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்ஏன் விமான நிலையத்துக்குக் கீழேநிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன?உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களாஅந்த ஒரு சிலரில் நானோநீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும்உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான்காப்பாற்றப்படுவார்களாஇந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயேசமீபத்தில் வெளிவந்த '2012'என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்ததுஅந்தப் படத்தை ஒரு 'ஆக்ஷன் த்ரில்லர்என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம்.ஆனால்ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்.  அந்தப் படம்எடுக்கப்பட்டதேஉலகம் அழியுமானால்அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும்கோடீஸ்வரர்களும்அதியுயர் அதிகாரிகளும்,விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள். 
உலக அழிவு பற்றிய பயத்தினால்நாம் இப்படி எல்லாம் அவர்களைப்பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம்அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான்,டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும். 
மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான்பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும்,மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளனஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா?விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாகமிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றனஅந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்லஉலக அழிவைப் பற்றித்தான்.விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம்மேலே உலக அழிவைச்  சொல்லும் சித்திரங்கள்கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில்குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றதுஎந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள்சவப்பெட்டிகள்மனித அவலங்கள் எனச் சித்திரங்கள்வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………!
படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றனஎல்லாவற்றையும் இங்குஉங்களுக்குத் தர முடியவில்லை.
அதிகம் எதற்குஎந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களாஅதுவும் இருக்கிறது அங்கே! 
எல்லாம் சரிஉலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலகஅழிவா...அதுவும் அங்கே காணப்படுகிறதுமாயன் இனத்துச் சிறுமி ஒருத்திமாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது.இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறதுஅதையும் பாருங்கள். 
இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா...? இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றனரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவைஆனால் ஏன்.....?  
இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போலஅமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றனஅத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாகபல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றனகுறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.இவையெல்லாம் எதற்குஇவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..
மேலே படங்களில் உள்ளவைஅமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள்வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை.  அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால்வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றனஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனாரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்லஅங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள்இதனாலேயே நான் முன்னர் சொன்ன '2012'என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூடஉலக உயர் சக்திகள்சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள். 
இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவைஇதைவிட இன்னுமொன்றும் உண்டுஅதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்இதுவும் தெரிந்து விட்டால்உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில்அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும்இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா,ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும். நோர்வே நாட்டுக்குச் சொந்தமாகவட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டுஎங்கு பார்த்தாலும் மலைகளும்,அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும்இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறதுஅது என்ன தெரியுமா...?சொல்கிறேன்......! 
உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள்செடிகள்கொடிகள்ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும்தண்டுகளும் கோடிக்கணக்கில்டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறதுஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுமலைகளைக் குடைந்துநிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.உலகம் அழிந்தாலும்இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றனமாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.
உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில்அதன் பின்னர் உருவாகும்மாற்று உலகத்தில்அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போதுஇல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?
இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்?பூமியின் வடதென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள்குளிர்ப் பிரதேசங்களாகவும்குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா
உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின்மரங்களைப் பாதுகாக்கும்இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம்அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால்வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா?மனிதர்கள் அங்கேமரங்கள் இங்கேஎன்ற இந்த புத்திசாலித்தனமானசெயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்உலகப் பணக்காரர்களையும்அரசியல்வாதிகளையும்,பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது?நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவாஅவர்கள் யார் என்பதையும்அவர்களால் இன்னும் என்ன என்னசதிவலைகள் பின்னப்படுகின்றன என்பதையும் அடுத்த தொடரில்பார்ப்போமா?

Wednesday, 28 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-13




2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-13 தொடர்கிறது.....

'
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-13


நாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவிஎமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகேபூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது.இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றனஇருந்தாலும்இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டதுகாரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும்குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும்நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோநட்சத்திரத்தையோநட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றனகாரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை  அவற்றைஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள்எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.
பிளானெட் என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில்சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும்சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது.ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்ததுIRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியதுபிளானெட் Xஎன்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல்வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம்இதற்கும் காரணம் உண்டு. 

எமது அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars)  இருக்கின்றனஇப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள்தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும்அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும்சில இரட்டை நட்சத்திரங்கள்தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும்எமது சூரியனுக்கு அடுத்ததாகஅண்மையில்  இருக்கும் நட்சத்திரமான 'அல்பா சென்டாரி  (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர்ஆனால் அது அல்பா சென்டாரி a,அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது 
இந்த அல்பா சென்டாரி போலஎங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும்அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது.
இன்றைய நிலையில்அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில்ஒரு வருடத்துக்கு முன்பிளானெட் என்னும் கோள்பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AUதூரத்தில் இருக்கும்மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும்உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் இருக்கும்அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும்இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.
இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில்சாதாரண தொலைநோக்கிகளால் இது எமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள்.ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லைஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்லஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறதுஎவ்வளவு காரணம் கேட்டாலும்நாஸா "அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லைஎன்றும், "குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல்லிக் கொண்டு வருகிறதுஇந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றுஅமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயோர்க் டைம்ஸ்' (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன.
நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர்மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும்ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும்அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்குநான் எங்கள் மாயன்களின் கடவுளான'குக்கிள்கான்' (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது.
 மாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான்இவர் மனித வளர்ச்சிக்கும்,கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார்மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில்குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறதுஇந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன்.
குக்கிள்கானுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளதுஅத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளதுஅந்த அதிசயம் என்னவென்று பின்னர் சொல்வதாக முன்னர் சொல்லியிருந்தேன்ஆனாலும் இப்போதும் கூட அதை சொல்ல முடியவில்லைஅதை நான் தனியாகவே ஒரு அத்தியாயத்தில் எழுத வேண்டும்எனவே அதை இனி வரும் அதியாயங்களில் தருகிறேன்.
தனது கையில் ஒரு பாம்பை வைத்திருக்கும் இந்தக் குக்கிள்கான்உண்மையில் மாயன்களின் கடவுளாஅல்லது அவர் ஒரு அரசராஎன்று ஆராய்ந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்குக்கிள்கானின் சிலை ஒன்றுஅவருக்கு என்று அமைக்கப்பட்ட பிரமிட்டிலேயே செதுக்கப்பட்டு இருக்கிறதுஅந்தச் சிலையையும்மாயன்களின் சித்திர எழுத்துகளையும் ஆரய்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
குக்கிள்கான்வெள்ளை நிறத்தவராகவும்நீலக் கண்களை உடையவராகவும்,வெள்ளைத் தலை முடியைக் கொண்டவருமாக இருந்திருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டு கொண்டனர்அத்துடன் அவரது தலை பின் பக்கம் நீண்டதாகவும் இருந்திருக்கிறதுஇவை எவையும் மாயன்களின் அடிப்படைத் தன்மைக்கு சற்றும் ஒத்துவராத சாயலாக இருந்திருக்கிறதுமாயன்கள் கருத்த நிறமும்தலைமுடியும் கொண்டவர்கள்.
இதனடிப்படையில் மேலும் ஆராய்ந்து பார்த்த போதுகுக்கிள்கான் கடவுளாக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு மனிதனாகவமாயன்களின் அரசராக இருந்ததற்குச் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்அப்படி அவர் மனிதனாக இருந்த பட்சத்தில்நிச்சயமாக அவர் மாயன் வம்சத்தில் உள்ள ஒருவராக இருந்திருக்க முடியாது.
அப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார்மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்?
ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர்ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள்அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு.மாயன்களின் பதிவின்படிகுக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார்அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார்அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார்சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லைஅதன்  பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது. அப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால்குக்கிள்கான் சென்ற இடம் 'சுமேரியா' (Sumeria) எனத் தெரிய வந்ததுஅவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும்இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும்அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றனஆனால் சுமேரியரின் வரலாறோ 10000வருடங்களுக்கு முந்தயதுஉலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது.
எம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கேஅந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான்  என்ற ஒரு சுமேரியர் என்றால்அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும்? 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல்தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றனமாயன்கள் வைத்திருந்த 'கிறிஸ்டல் மண்டையோடுகள்கூட(Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால்,நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்.
ஆனாலும்இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம்அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லைஅது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான்எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.
சுமேரியர்களின் அரசர்வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டதுஅந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டதுஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது.
அந்த ஓவியத்தில்எமது சூரியன் மையத்தில் இருக்கஅதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும்அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்ததுஅது மட்டுமில்லாமல்அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன.
மிகச் சமீபத்தில்தான்நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம்அதுவரை பூமியைத்தான்சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம்ஆனால் சுமேரியர்களோ,சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல்அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.
அத்துடன் நவீன விஞ்ஞானமே 'நெப்டியூன்' (Neptun), 'புளூட்டோ' (Pluto) ஆகியவற்றை சமீபமாகக் கண்டு பிடித்த வேளையில்சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேஅவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர்இது எப்படிச் சாத்தியம்நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இதுஅதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
சுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்ததுஇந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான்அது என்ன தெரியுமா……? பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்டநாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது.
நுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்ததுஅது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள்இவ்வளவு நுணுக்கமாக,சூரியன்வியாழன்னிபூமிசெவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…?
பின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும்கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்ததுஅதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை 'நிபிருஎனச் சொல்லியிருக்கிறார்கள்சுமேரியன் மொழியில்'நிபிருஎன்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம்எப்படிஇப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்இவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானாஅல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், "ச்சேஅப்படி எதுவும் இல்லைபயப்பட வேண்டிய அவசியமே இல்லை"என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன்ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லைஅது உண்மையோபொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாதுஅது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள். அப்படி என்னதான் எம்மைச் சுற்றிச் சதி நடக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்?சொல்கிறேன்ஆனால் அடுத்த தொடரில் சொல்கிறேன்எனவே அடுத்த தொடர் வரை பொறுத்திருங்கள்அதுவரை நிம்மதியாக உறங்குங்கள்.