Wednesday, 28 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-13




2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-13 தொடர்கிறது.....

'
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-13


நாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவிஎமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகேபூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது.இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றனஇருந்தாலும்இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டதுகாரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும்குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான்.
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும்நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோநட்சத்திரத்தையோநட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றனகாரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை  அவற்றைஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள்எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.
பிளானெட் என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில்சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும்சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது.ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்ததுIRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியதுபிளானெட் Xஎன்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல்வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம்இதற்கும் காரணம் உண்டு. 

எமது அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars)  இருக்கின்றனஇப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள்தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும்அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும்சில இரட்டை நட்சத்திரங்கள்தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும்எமது சூரியனுக்கு அடுத்ததாகஅண்மையில்  இருக்கும் நட்சத்திரமான 'அல்பா சென்டாரி  (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர்ஆனால் அது அல்பா சென்டாரி a,அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது 
இந்த அல்பா சென்டாரி போலஎங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும்அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது.
இன்றைய நிலையில்அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில்ஒரு வருடத்துக்கு முன்பிளானெட் என்னும் கோள்பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AUதூரத்தில் இருக்கும்மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும்உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் இருக்கும்அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும்இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.
இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில்சாதாரண தொலைநோக்கிகளால் இது எமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள்.ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லைஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்லஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறதுஎவ்வளவு காரணம் கேட்டாலும்நாஸா "அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லைஎன்றும், "குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல்லிக் கொண்டு வருகிறதுஇந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றுஅமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயோர்க் டைம்ஸ்' (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன.
நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர்மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும்ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும்அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்குநான் எங்கள் மாயன்களின் கடவுளான'குக்கிள்கான்' (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது.
 மாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான்இவர் மனித வளர்ச்சிக்கும்,கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார்மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில்குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறதுஇந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன்.
குக்கிள்கானுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளதுஅத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளதுஅந்த அதிசயம் என்னவென்று பின்னர் சொல்வதாக முன்னர் சொல்லியிருந்தேன்ஆனாலும் இப்போதும் கூட அதை சொல்ல முடியவில்லைஅதை நான் தனியாகவே ஒரு அத்தியாயத்தில் எழுத வேண்டும்எனவே அதை இனி வரும் அதியாயங்களில் தருகிறேன்.
தனது கையில் ஒரு பாம்பை வைத்திருக்கும் இந்தக் குக்கிள்கான்உண்மையில் மாயன்களின் கடவுளாஅல்லது அவர் ஒரு அரசராஎன்று ஆராய்ந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்குக்கிள்கானின் சிலை ஒன்றுஅவருக்கு என்று அமைக்கப்பட்ட பிரமிட்டிலேயே செதுக்கப்பட்டு இருக்கிறதுஅந்தச் சிலையையும்மாயன்களின் சித்திர எழுத்துகளையும் ஆரய்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
குக்கிள்கான்வெள்ளை நிறத்தவராகவும்நீலக் கண்களை உடையவராகவும்,வெள்ளைத் தலை முடியைக் கொண்டவருமாக இருந்திருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டு கொண்டனர்அத்துடன் அவரது தலை பின் பக்கம் நீண்டதாகவும் இருந்திருக்கிறதுஇவை எவையும் மாயன்களின் அடிப்படைத் தன்மைக்கு சற்றும் ஒத்துவராத சாயலாக இருந்திருக்கிறதுமாயன்கள் கருத்த நிறமும்தலைமுடியும் கொண்டவர்கள்.
இதனடிப்படையில் மேலும் ஆராய்ந்து பார்த்த போதுகுக்கிள்கான் கடவுளாக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு மனிதனாகவமாயன்களின் அரசராக இருந்ததற்குச் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்அப்படி அவர் மனிதனாக இருந்த பட்சத்தில்நிச்சயமாக அவர் மாயன் வம்சத்தில் உள்ள ஒருவராக இருந்திருக்க முடியாது.
அப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார்மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்?
ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர்ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள்அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு.மாயன்களின் பதிவின்படிகுக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார்அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார்அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார்சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லைஅதன்  பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது. அப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால்குக்கிள்கான் சென்ற இடம் 'சுமேரியா' (Sumeria) எனத் தெரிய வந்ததுஅவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும்இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும்அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றனஆனால் சுமேரியரின் வரலாறோ 10000வருடங்களுக்கு முந்தயதுஉலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது.
எம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கேஅந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான்  என்ற ஒரு சுமேரியர் என்றால்அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும்? 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல்தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றனமாயன்கள் வைத்திருந்த 'கிறிஸ்டல் மண்டையோடுகள்கூட(Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால்,நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்.
ஆனாலும்இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம்அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லைஅது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான்எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.
சுமேரியர்களின் அரசர்வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டதுஅந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டதுஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது.
அந்த ஓவியத்தில்எமது சூரியன் மையத்தில் இருக்கஅதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும்அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்ததுஅது மட்டுமில்லாமல்அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன.
மிகச் சமீபத்தில்தான்நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம்அதுவரை பூமியைத்தான்சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம்ஆனால் சுமேரியர்களோ,சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல்அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.
அத்துடன் நவீன விஞ்ஞானமே 'நெப்டியூன்' (Neptun), 'புளூட்டோ' (Pluto) ஆகியவற்றை சமீபமாகக் கண்டு பிடித்த வேளையில்சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேஅவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர்இது எப்படிச் சாத்தியம்நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இதுஅதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
சுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்ததுஇந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான்அது என்ன தெரியுமா……? பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்டநாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது.
நுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்ததுஅது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள்இவ்வளவு நுணுக்கமாக,சூரியன்வியாழன்னிபூமிசெவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…?
பின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும்கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்ததுஅதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை 'நிபிருஎனச் சொல்லியிருக்கிறார்கள்சுமேரியன் மொழியில்'நிபிருஎன்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம்எப்படிஇப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்இவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானாஅல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், "ச்சேஅப்படி எதுவும் இல்லைபயப்பட வேண்டிய அவசியமே இல்லை"என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன்ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லைஅது உண்மையோபொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாதுஅது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள். அப்படி என்னதான் எம்மைச் சுற்றிச் சதி நடக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்?சொல்கிறேன்ஆனால் அடுத்த தொடரில் சொல்கிறேன்எனவே அடுத்த தொடர் வரை பொறுத்திருங்கள்அதுவரை நிம்மதியாக உறங்குங்கள். 

No comments:

Post a Comment