Thursday, 24 November 2011

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு


LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு


இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.


ஸ்கிரீன் அளவு: 

முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூ றுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பத ற்காக மிகச்சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.






சரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவி யின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூர த்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.
LCD, LED, PLASMA

அனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
பொதுவாக 42 அங்குல அகலத்திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும். பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி, ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டி க்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம்? இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.

அடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.
இவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிக ழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும். நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்ப ரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள்வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகிய வற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !


உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !


கண்கள் 

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்



 
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம்தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களைசரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு.வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம்தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையானநகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்

 

ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

சர்க்கரை நோயில் நடப்பது என்ன?



image.png

சர்க்கரை நோயில் நடப்பது என்ன?

சர்க்கரை அதிகமாவதற்கு இன்சுலின் குறைபாடு மட்டும் காரணமல்ல. குளுக்கோகான் அதிகமாகச் சுரப்பதும் ஒரு காரணம்.
இயல்பாக சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 70 முதல் 110 வரையும்சாப்பிட்டபின் 140க்கு அதிகமாகாமலும் இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் குறைப்பது இன்சுலின் என்ற ஹார்மோன்.
சர்க்கரையை அதிகமாக்கும் ஹார்மோன் எது தெரியுமாஅதுதான் குளுக்கோகான். கணையத்திலுள்ள பீட்டா செல்களிலிருந்து இன்சுலின் குளுக்கோகானும்தான் ரத்தத்தில் சர்க்கரையை சீராக வைக்க உதவுகின்றன.

சர்க்கரைநோய் இல்லாதவருக்கு சாப்பிட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்:
உணவு ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது.
அதிகமாகும் சர்க்கரை கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.
இன்சுலின் சுரந்து குளுக்கோஸை செல் களுக்குள் அனுப்புகிறது.
கல்லீரலிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை இன்சுலின் தடுக்கிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை சீராக வைக்கப் படுகிறது.
(சாப்பிட்டு 2-3 மணி நேரம் கழித்து)

ரத்தத்தில் சர்க்கரை குறைகிறது.
இதனால் இன்சுலின் சுரப்பது குறைகிறது.
உடலின் அன்றாட இயக்கத்திற்கும்மூளை செயல்படவும் குளுக்கோஸ் அவசியம். சாப்பிடாத போது குளுக்கோஸ் குறைவதைகணையத்திலுள்ள ஆல்பா செல்கள் உணர்ந்து குளுக்கோனைச் சுரக்கிறது.
குளுக்கோகான்கல்லீரலிலிருந்து குளுக் கோஸை வெளியேற்றுகிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை குறைந்து விடாமல் சீராக வைக்கப்படுகிறது.
இன்சுலின் அதிகமானால் குளுக்கோகான் குறைகிறது. குளுக்கோகான் அதிகமானால் இன்சுலின் குறைகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு:
சாப்பிட்டபின்:
சர்க்கரை அளவு அதிகமாகிறது.
இதற்கு ஏற்றவாறு இன்சுலின் சுரப்பதில்லை. குறைவாகச் சுரக்கும் இன்சுலினும் வேலை செய்வதில்லை. காரணம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை.
சாப்பிட்டவுடன் இன்சுலின் அதிகமானால் தான் குளுக்கோகான் குறையும். இன்சுலின் அதிகமாகாததால் தொடர்ந்து குளுக்கோகான் சுரந்து கொண்டேயிருக்கிறது.
இது கல்லீரலைத் தூண்டி குளுக்கோஸை வெளியேற்றுவதால் உடலில் சர்க்கரை மேலும் அதிகரிக்கிறது.

(இன்றையமருத்துவம்.காம்)

தெரியுமா? எத்தனை ஊடகங்களில் இது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று.

தெரியுமா? எத்தனை ஊடகங்களில் இது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று.

ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் ஒவ்வொன்றாய் அம்பலத்துக்கு வருகிறது 4 பேர் என்கவுண்டரில் பலி!

சிறப்புப் புலனாய்வு குழு உறுதி செய்தது!

அகமதாபாத், நவ 7- குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது.

குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது. 

அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மாஜிஸ்திரேட் விசாரணை

இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என்றும், அந்த என்கவுண்டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அருகிலிருந்து சுடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்திருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதிகாரியால் இந்த போலி என்கவுண்டர் அரங்கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

சிறப்பு புலனாய்வு முழு

இந்த காவல்துறை என்கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.

டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.

குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.

இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப்பதை பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட்சியங்களும் உறுதி செய்கின்றன.

எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை சரிதான் என்பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய்வில் உறுதி செய்யப்படுகிறது.

மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.
THANKS TO VIDUTHALAI DAILY

நன்றி”வாஞ்சூர்

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 
லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைக்காத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
  • 'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
  • மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை...இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25%லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!
  • லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
  • லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!
  • EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!
  • மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
  • லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்தகடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
  • ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!
  • ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!
  • அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர்ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
  • லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!
  • ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
  • ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
  • 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..!
  • நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project)நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..!
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!

இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?

லிபிய புரட்சியாளர்கள்...
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!

கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?

"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்"என்று சொல்லும் வரை..!

முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!

அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!

விளைவு..?

அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்..."இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)

'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!

ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக...!
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.

மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!

Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!

Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms

இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?

லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!

எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.

அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!

ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.

திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!

அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!

பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
  • தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!
  • என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!
  • மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!
  • எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!
  • தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!
அடுத்து...

இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..!

  • எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் மண்டை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்... அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!

கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..! 
 
 
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
 
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.