Monday, 2 April 2012

ஈமு கோழி வளர்ப்பு பகுதி-2




ஈமு கோழி வளர்ப்பு பகுதி-2
ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்ததுஇது ஆஸ்திரேலியாவில் இரண்டாவதுமிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச்கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.
ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்

தோற்றம்
ஆஸ்திரேலியா
குடும்பம்
ராட்டைட்
பயன்கள்
எண்ணெய்இறைச்சிதோல்மற்றும் இறகுகள்
வாழ்நாள்
30 வருடங்கள்
பொரிக்கும் போது குஞ்சின்எடை
400-450 கி
முதிர்ந்த கோழியின் உடல்எடை
50-70 கிகி
உயரம்
5-6 அடி
பருவமடையும்
வயது
18-24 மாதங்கள்
விற்பனை
வயது
15-18 மாதங்கள்
பாலின விகிதம்
1:1
ஓடும் வேகம்
60 கிமீ / மணிக்கு
ஆண்டொன்றிற்கு ஒரு கோழிஇடும்
முட்டைகள்
50 முட்டைகள்
இனச்சேர்க்கை
வயது
2-40 வருடங்கள்
அடைகாக்கும் காலம்
50-54 நாட்கள்
முட்டையின் எடை
680 கிராம்
இடஅளவு
ஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு100×25அடி
ஈமு கோழியைப் பிடிப்பதற்கு
தோலினால் ஆன கையுறை

இன வேறுபாடு கண்டறிதல்
1.       பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.
1.       எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.
1.       பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றனஆண் பறவைகள் பன்றியினைப் போல்உறுமும்.

போக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்
ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவைஇல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோகாயங்கள் ஏற்படும்முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள்வலுவானவைஎனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ்ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும்எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்டபறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.
அதற்கு
1.        
A.     ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
B.     அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.
ஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம்எனவே முடிந்தவரை குளிர்ந்தஇரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும்அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாதுசரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும்.ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும்.ஈமு பறவைகள் சாதுவானவைஎனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்லஅதிலும் சற்று வயது முதிர்ந்தபறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.
ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவுஎனவேஅவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.

ஈமுக்களைப் பிடிக்கும் முறைகள்

பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
emu catching
பின் பக்கமாக வந்து பிடித்தல் 
வேறொரு முறையில் ஈமு பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.  அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால் நகரமுடியாமல் அடங்கிவிடும்.
முதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.
பிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும்.
பிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல் துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும் கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.
கைக்கடிகாரம்  போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.

உணவு மற்றும் நீர் தேவை


emu_feeding
தீவன ஊட்டம்
emu_watering
நீர்த் தொட்டி 
10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு 6-7 லிட்டர் தண்ணீர்  நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை 7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள் போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.

நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு


ஈமுக்கோழியின் வயது (மாதங்களில்)நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்)
3200
4300
5350
6400
7500
8600
9700
10800
11800
12900
13900
14900
15900
16900
17900
18900

தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்


கால்சியம்
நீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.
வயதுபறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்)
3-5 மாதங்கள்1.0
5-8 மாதங்கள்2.0
8 மாதங்களுக்கு மேல்3.0
வைட்டமின் ஏ, டி3
நீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
வயது
நாளொன்றுக்கு  ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)
3-9 மாதங்கள்0.5
9 மாதங்களுக்கு  மேல்1.0
விட்டமின் பி காம்ப்ளக்ஸ்
குரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.
வயது
நாளொன்றுக்கு  ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)
3-5 மாதங்கள்1.0
5-8 மாதங்கள்2.0
8 மாதங்களுக்கு மேல்3.0

ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை


ஊட்டச்சத்துக்கள்
ஆரம்பத்தில்வளரும் பருவத்தில்இறுதியில்
கிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி268526402860
பண்படா புரதம் %222017
மெத்தியோனைன் %0.480.440.38
லைசின் %1.100.940.78
பண்படா நார்ப்பொருள்6-86-86-7
கால்சியம்1.51.31.2

வளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.

Posted on October 10, 2010 by admin
அட்டவணை 1
லெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில் ஈமுவுக்குத் தேவையான ஆற்றல்.
தேவையான சத்துக்கள்
ஆரம்பத்தில்வளரும் பருவம்முடிவில்
கிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் / கி.கி11.210.210.2
லைசின் (%)0.90.80.7
மெத்தியோனைன் + (%) சிஸ்டைன்0.70.70.6
கால்சியம் (%)1.61.61.6
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%)0.60.60.6
சோடியம் (%)0.20.20.2
அட்டவணை 2
தேவையான ஊட்டச்
சத்துக்கள்
ஆரம்பத்தில்வளரும் போதுஇறுதியில்
கிரகிக்கக் கூடிய ஆற்றல் (மெகா. ஜீல் / கி.கி)11.211.011.0
லைசின் (கிராம் / மெகா ஜீல் )0.800.750.70
மெத்தியோனைன்0.500.500.50
மெத்தியோனைன் + சிஸ்டைன்0.800.800.80
டிரைப்டோபன்0.190.190.19
ஐசோலியூசின்0.650.650.65
திரியோனைன்0.600.600.60
கால்சியம் (%)1.61.61.6
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%)0.60.60.6
சோடியம் (%)0.20.20.2
ஈமுக்களுக்கு பொதுவாகவே அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். ஆதலால் ஆற்றல் அதிகம் கொண்ட அதே சமயம் விலைக் குறைந்த தீவனங்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதனால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். தீவனத்தில் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 11.2 மெகா ஜீல் / கிகி அளவு கிரகிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட தீவனங்கள் அளிப்பதே சிறந்தது.

காலில் ஏற்படும் கோளாறுகள்


ஈமுக் கோழிகளில் அவற்றின் காலில் ஏற்படும் கோளாறுகள் ஒரு பிரச்சினை ஆகும். இது கால்சியம் / பாஸ்பரஸ் சீரற்ற நிலையில் இருப்பதாலோ, மெத்தியோனைன் பற்றாக் குறையினாலோ ஏற்படும். தாய்வழி ஊட்டச்சத்து மூலமாகக் கூட ஏற்படலாம். ஓ மெல்லி என்பவர் கலவைத் தீவனத்தை இரு வேளையாகப் பிரித்து மொத்தம் 4 மணி நேரத்தில் கொடுக்கும் போது இவ்வகைப் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர். பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பினும் இந்நோயைத் தடுக்க சிறந்த முறைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கலவைப் பொருட்கள் (%)
ஆரம்பம்வளரும் போதுஇறுதியில்
வெள்ளைச் சோளம்34.730.931.6
கோதுமை36.030.030.0
இறைச்சி  மற்றும் எலும்புத் துகள் (55%)10.310.010.1
சோயாபீன் தூள் (45%)3.2--
சூரியகாந்தித் தூள் (32 %)9.98.66.7
பருத்தி விதைகள்2.9--
மில்ரன்-15.015.0
லியூசர்ன் தூள்-2.91.1
சுண்ணாம்புக்கல்1.81.51.5
உப்பு0.280.210.20
டிஎல் மெத்தியோனைன்0.230.190.17
எல் லைசின் ஹெச்சிஎல்0.230.170.11
விட்டமின் மற்றும் தாதுக் கலவை0.500.50

முட்டை உற்பத்தி மேலாண்மை

ஈமு பறவை 20-24வது மாத வயதில் இனப்பெருக்கம் செ்யய ஆரம்பிக்கும். பருவத்திற்க வந்த ஜோடியற்ற பறவைகளனைத்தையும் ஒரு கொட்டிலுக்குள் விட்டுவிடவேண்டும். பொதுவாக அவைகளே தங்களுக்கேற்ற ஜோடியைத் தோந்தெடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் / ஜனவரி மாதங்களில் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும். ஜோடியற்ற பறவைகள் ஒரு ஜோடியை மட்டும் கூண்டுக்குள் விட்டால் அவைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அல்லது சரியாக இனச்சேர்க்கை செய்யாது. இது முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு பறவைகளும் ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவை ஜோடி சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனிக் கொட்டிலுக்குள் அடைத்துவிடவேண்டும். இனச்சேர்க்கை முடிந்த பின் வேண்டுமெனில் அப்படியே விட்டு விடலாம் அல்லது அந்த ஜோடியைப் பிரிக்க விரும்பினால் பல பறவைகளைச் சேர்த்து ஒரே கொட்டிலுக்குள் அடைத்தால் பிரிந்து விடும்.
ஜோடிகள் தனித்தனியாக இல்லாமல் ஒரே கொட்டகைக்குள் பல ஜோடிகள் இனச்சோ்க்கைக்கு விடப்படும் வோது போதுமான இடவசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது பறவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். மேலும் ஆண், பெண் பறவைகளின் விகிதம் சமமாக இருப்பது அவசியம்.
பெட்டைக் கோழிகள் ஏப்ரலில் முட்டையிட ஆரம்பித்து அக்டோபர் / நவம்பர் வரை இடும். பெரும்பாலான கோழிகள் முட்டை சேகரிக்கும் போது அமைதியாகவே இருக்கும். எனினும் சில கோழிகள் முட்டையை எடுக்க அனுமதிக்காது. அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொண்டு தாக்க வரலாம். எனவே அவைகளுக்குத் தெரியாமல் பின்பகுதி வழியே சென்று முட்டையை சேகரித்துக் கொள்ளுவதே சிறந்தது.
எப்போதும் ஈமுக்களை முன்பகுதி வழியே அணுகுவது சிறந்ததல்ல. ஏனெனில் அவை பயந்தால் உதைக்கவோ, அலகினால் கொத்தவோ செய்யும். பறவையிடமிருந்து 1 மீட்டர் தொலைவிலேயே நின்று கொள்ளவேண்டும்.

அடைகாத்தல்

இயற்கையாகவே அல்லது செயற்கை முறையிலோ அடைகாக்கலாம். எனினும் இப்போது பரவலாக செயற்கை முறையே பின்பற்றப்படுகிறது.

இயற்கை முறை அடைகாப்பு

இயற்கை முறையில் பெட்டைக் கோழிகள் முட்டையிட ஆரம்பித்த பிறகு ஆண் கோழிகள் முட்டை மீதமர்ந்து அடைகாக்கின்றன. முட்டைகள் கொட்டகை முழுவதும் ஆங்காங்கு இடப்பட்டு இறுதியில் முட்டையிடும் காலம் முடிந்த பிறகு, கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்பட்டு அதில் அடைகாக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் முட்டைகளை புற்கள், இலைகள், குச்சிகள் மூலம் ஆண் கோழ எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கூட்டிற்கு எடுத்து வந்து அடை காக்கும்.
Emu_natural incubation
அடைகாக்கும் கோழி
ஈமு பறவைகளில் ஒரு முட்டைக்குப் பின் அதிக நாள் இடைவெளி விட்டு மெதுவாகவே முட்டையிடுகின்றன. இரண்டு நாளுக்கு ஒரு முறை முட்டை அதிகமாக இடும். 6-10 முட்டைகள் வரை இட்டபின் ஆண் கோழிகள் அதன் மீதமர்ந்து அடைகாக்க ஆரம்பிக்கும். பின்பு இடப்படும் முட்டைகளையும் உருட்டி வந்து இந்த அடைகாக்கும் முட்டைகளோடு சேர்த்துவிடும். அனைத்து முட்டைகளையும் சேர்த்த பிறகு, ஆண் கோழி எங்கும் செல்லாமல், நீர், தீவனம் எதுவுமின்றி நீண்ட நேரம் முட்டை மீதே அமர்ந்து இருக்கும். மற்ற பறவைகளை கொட்டிலை விட்டு நீக்கி விடுதல் அவைகள் ஒன்றொடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். முட்டை பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஆண் கோழி அடைகாக்க ஆரம்பித்த 56வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும். எனினும் 50ம் நாளிலிருந்தே ஏதேனும் குஞ்சுகள் பொரித்திருக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கும் போது ஆண் கோழிய மெதுவாக சிறிது உயர்த்தி முட்டைகளின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குஞ்சுகளை குஞ்சு வளர்ப்பகத்தில் வளர்ப்பதாக இருந்தால் குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை வளர்ப்பதற்திற்கு எடுத்துச் சென்று விடவேண்டும் அல்லது ஆண் கோழியுடன் சேர்த்து விட்டு விடுவதாலக இருந்தால் பொரிக்காத முட்டைகளை அகற்றவிடவேண்டும். குஞ்சுகள் சிறிது வளரும் வஐர வளர்ப்பகத்தில் வைத்து கழுகு, காகம், நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பாக வளர்ப்பதே சிறந்தது.
இயற்கை முறை குஞ்சு பொரிப்பில் அதிக அளவு இடம் தேவைப்படுகிறது. மேலும் இவ்வாறு செய்வதற்கு முன் இதைப்பற்றி போதிய விவரங்களை வளர்ப்பாளர் அறிந்திருக்கவேண்டும்.
மேலும் இயற்கை முறையில் ஈரமான சூழ்நிலைகளில் பாக்டீரிய தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு ஆரம்பத்தில் இடப்பட்ட முட்டைகள் நான்கைந்து வாரங்கள் வெப்பநிலை மாற்றத்திற்கு உட்பட்டு இரவின் குளிர்ந்த வெப்பநிலையால் கரு இறந்து விட நேரிடலாம். இது போன்ற காரணங்களால் இயற்கை முறையில் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்படும்.

செயற்கை முறையில் அடைகாத்தல்

செயற்கை முறையில் ஒரு நாளின் காலை, மாலை இரண்டு முறை முட்டையை சேகரித்து அடைகாப்பானில் வைக்கப்படுகிறது. சேகரித்த முட்டைகளை தொற்று நீக்கிக் கொண்டு சுத்தம் செய்து குளிர்ந்த அறை வெப்பநிலையில் அதாவது 10-16 டிகிரி செ 10 நாட்கள் வரை வைக்கவேண்டும். ஒவ்வொரு குழு முட்டைகளாக குறிப்பிட்ட இடைவெளியில் (10 நாட்கள் இடைவெளி) அடைகாத்தல் வேண்டும்.
ஈமு கோழியின் முட்டைகளுக்கென தனி அடைகாப்பான்கள் உள்ளன. மேலும் கோழியின் அடைகாப்பானையே சிறிது பெரியதாக மாற்றியும் ஈமு முட்டைகளைப் பயன்படுத்தலாம். குளிர் வெப்பநிலையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு எடுத்து வந்து 12-18 மணி நேரம் வைத்துப் பின்பு தான் அடைகாப்பானுக்கு மாற்றுதல் வேண்டும். அடைகாப்பானில் 35.25-35.5 டிகிரி செ (ஒளிர் விளக்கு) ஈரப்பதம் 45-50 % (குளிர் / ஈர விளக்கு) இருக்குமாறு 50 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
emu_incubator
செயற்கை முறையில் அடைகாக்கப்படும் முட்டைகள்
நாளொன்றுக்கு 3 முறை முட்டையைத் திருப்பி விடுதல் வேண்டும். இதை நாமாகவோ அல்லது அடைக்காப்பானின் தானியக்கித் திருப்பி மூலமாகவோ செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கரு ஓரிடத்தில் தங்கி ஓட்டுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கலாம்.
50வது நாள் முட்டைகள் சுத்தமான தனித்த குஞ்சு பொரிக்கும் தளத்திற்கு மாற்றப்படுகின்றன. அங்கு 35 டிகிரி செ  வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பின்பற்றப்படுகிறது.
இந்த ஈரப்பதம் உள்ளே உள்ள சவ்வு ஈரமடைந்து முட்டையின் ஓட்டை இளக்குவதால் முட்டை பொரிப்பதற்கு ஏதுவாகிறது. இந்த சமயத்தில் முட்டையைத் திருப்பி வைக்கக்கூடாது.
ஈமு முட்டைகளும் பிற பறவைகளின் முட்டைகளைப் போல் பாக்டீரியத் தொற்றால் பாதிக்கப்படும். எனவே தகுந்த தொற்று நீக்கும் புகையூட்டிகளைப் பயன்படுத்தி முட்டைகளை சேகரித்த உடனே சுத்தம் செய்யவேண்டும். காலியான உள்ள அடைகாப்பான், பொரிப்பகம் போன்றவைகளயும் அந்த புகையூட்டி மூலம் தொற்று நீக்கம் செய்யலாம்.
செயற்கை முறை அடைகாப்பான்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்டவை. கீழ்க்கண்ட தவறுகளால் மட்டுமே அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. அவை
  • முட்டைகள் சரியாக சேகரிக்கப்படாமலோ, தொற்று நீக்கம் செய்யப்படாமலோ குளிர் வெப்பநிலையில் வைக்கப்படாமலோ இருந்தால்
  • வெப்பநிலை மற்றும ஈரப்பதம் சரியான அளவு பயன்படுத்தப்படாவிடின்
  • அடைகாப்பான், குஞ்சு பொரிப்கம் சரியாகச் சுத்தம் செய்யப்படாவிடின்
முட்டையானது உயிருள்ள ஒரு பொருள் அது தூய புதிய ஆக்ஸிஜனை அதன் ஓட்டின் வழியே எடுத்துக் கொண்டு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது. எனவே தினமும்  தவறாமல் போதுமான அளவு தூய காற்று அடைகாப்பானுள்ளும், குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளும் காற்று செலுத்தப்படவேண்டும். இதற்கு அடிக்கடி அதனைத் திறந்து மூலமாகவோ, செயற்கைக் காற்றோட்ட விசிறியைப் பொருத்துவதன் மூலமோ காற்று கிடைக்கச் செய்யலாம்.

அடைகாத்தல்

அடைக்காப்பானில் பொரிக்கவைக்கப்படும் குஞ்சுகள் 6 வார வயது வரை அடைகாக்கப்படுகிறது. தட்பவெப்பநிலையைப் பொறுத்து இக்காலம் மாற்றி அமைக்கப்படலாம். வெப்பநிலை மிதமானதாக இருந்தால் ஓரிரு வாரங்கள் ஆன குஞ்சுகளை சிறிது வெளியே உலவ அனுமதிக்கலாம். பறவையை அடைகாக்கும் இடத்திற்கு எடுத்து வருமுன் மஞ்சள் கரு அல்லது தொப்புள் கொடியை ஏதேனும் நோய் தாக்கியுள்ளதா என்பதை சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். அயோடின் பயன்படுத்துவது சிறந்தது.
செயற்கை அடைகாப்பு முறையில் குஞ்சுகளுக்கு கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
  • வெப்பம்
  • நீர்
  • உணவு / தீவனம்
  • காற்றோட்டம்
  • ஒளி
  • கூளம்
வெப்பம்
சரியான அளவு இடத்தில் சரியான வெப்பநிலையில் குஞ்சுகள் அடைகாக்கப்படவேண்டும். குஞ்சுகளின் வெப்பநிலை ஏற்றுக் கொள்ளும் திறனே இதை அறிய சிறந்த வழிகாட்டி. அதிக மற்றும் குறைந்தளவு வெப்பநிலையை அளவிட ஒரு வெப்பநிலைமானி பொருத்தப்படவேண்டும். இவ்வெப்பநிலைமானி அடைகாக்கும் வீட்டின் வெப்பநிலை மாற்றங்களை குறிப்பாக இரவில் ஏற்படும் மிகக்குறைந்த வெப்பநிலையை அளவிட உதவுகிறது. குஞ்சுகள் வளரும் போது வெப்பநிலையைச் குறைத்து விடலாம். கீழ்க்கண்ட வெப்பநிலை அட்டவணை குஞ்சுகளுக்கு அளிக்கவேண்டிய வெப்பத்தை அதன் வயதிற்கு ஏற்றாற் போல காட்டுகிறது.
emu_chicks brooding
செயற்கை அடைகாப்பு முறை
வயது (நாட்களில்)வெப்பநிலை குஞ்சுகளுக்கு டிகிரி செல்சியஸில்
1-730+
7-1428
14-2126
21-2824
நீர்
பிறந்த குஞ்சுகளுக்கு தண்ணீர்த் தொட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். இவ்வாறு தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் சில குஞ்சுகள் தாகத்தால் இறந்து விடும். எனவே குஞ்சுகள் எளிதில் கண்டுணரக் கூடிய வகையில் நல்ல பளிச்சென்ற நிறங்களில் நிறைய தண்ணீர்ப் பாத்திரங்கள் வைத்து அதில் எப்போதும் சுத்தமான குளிர்ந்த நீர் நிரப்பி இருக்குமாறு பாாத்துக் கொள்ள வேண்டும்.
தீவனம்
முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சிறிது சிறிதாக தீவனம் அளிக்கவேண்டும். அப்போது தான் அவைகள் தீவனங்களை அலகினால் கொத்தி உண்ணப்பழகும். இளம் பறவைகளுக்கு 18 சதவிகிதம் புரதம் நிறைந்த புதிய நல்ல தரமான தீவனமளித்தல் வேண்டும். இது நன்கு அரைக்கப்பட்டு, துகளாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இதோடு சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட லுயூசர்ன், கிக்குயா போன்ற பசும் புற்களை கொட்டிலில் தூவிவிடவேண்டும். ஈமுக்கள் புற்களின் பச்சை நிறத்தால் ஈர்க்கப்படுவதால் நன்கு கொத்தி உண்ணும்.

காற்றோட்டம்
ஈமு குஞ்சுகள் நன்கு ஆரோக்கியத்துடன் வளர அவற்றின் நல்ல காற்றோட்டம் அவசியம். குஞ்சுகள் எளிதில் குளிர்ந்து விடுவதால் எக்காரணம் கொண்டும் வறட்சியைத் தாங்கிக் கொள்ளாது. சூடான காற்று வீசும் போது 300-450 செ.மீ உயரம் கொண்ட அடைப்புப் பலகை ஒன்றைத் தயார் செய்து வைக்கலாம். குஞ்சு வளர வளர இப்பலகையின் தூரத்தை அதிகப்படுத்தி உள்ளே நல்ல காற்றும் இடவசதியும் இருக்குமாறு செய்தல் வேண்டும்.

ஒளி
இப்பறவைக்கேற்ற ஒளி அளிக்கும் முறை இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஒரு முறையான ஒளி வழங்கப்படின் குஞ்சுகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது.  இது இரவிலும் கூட குஞ்சுகள் கொட்டிலுக்குள் உலாவி நீர் மற்றும் தீவனத்தை எடுத்துக் கொள்ளப் பயன்படுகிறது. 40 வாட்ஸ்  விளக்கு அல்லது அதற்கு ஈடான் 50 லக்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒளியை 23 மணி நேரம் கொடுப்பது நல்ல வளர்ச்சியைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் குஞ்சுகளுக்கு சிறிது இருட்டும் தேவைப்படும். இது பறவைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு இருப்பதால் மூச்சுத் திணறலைத் தவிர்க்க உதவுகிறது.

கூளங்கள்
கூளங்கள் பயன்படுத்துவது பற்றி பலவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும் ஈமு கோழியில் பயன்படுத்தும் கூளமானது குஞ்சுகளின் (அனைத்துத் ) தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு கூளம் சுத்தமானதாகவும், இராசயனங்களற்ற, மென்மையான, உறிஞ்சக்கூடிய துகள்கள் / தூசுகளற்றதாக இருக்குமாறு பயன்படுத்தவேண்டும். பைன் மரத்துண்டுகளின் செதில்கள், மணல், மரத்துகள் போன்ற பொருட்களை கூளங்களாகப் பயன்படுத்தலாம்.

அடைகாப்பு முறைகள்


இரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் சூடுபடுத்தும் வகை
பல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப் பயன்படுகின்றன.

அகச்சிவப்பு அடைப்பான்கள்
இவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100 வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குஞ்சுகளுக்குப் போதுமானது. இவ்விளக்குகளை கூளத்திற்கு மேல் 450-600 மிமீ உயரத்தில் பொருத்தவேண்டும். ஒரு விளக்கு அணைந்து விட வாய்ப்புண்டு. எனவே எப்போதும் இரண்டு விளக்குகள் பயன்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒளி மற்றும் வெப்பம் கடத்தக்கூடிய எதிரொளிப்பான் இருப்பது அவசியம். எனினும் இம்முறை குளிர்ப் பிரதேசங்களில் வளர்க்கும் ஈமுக்களுக்கு சரியான பலனைத் தருவதில்லை.
இவ்வகை அடைகாக்கும் பகுதியில் சரியான பலனைத் தருவதில்லை. உயரத்தில் காற்றோட்டத்திற்காக ஒரு திடப்பகுதியில் சூழப்பட்டு இருக்கும். அடைகாப்பான் மூடியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் உள்ளே வெப்பநிலை சரியாக பராமரிக்க முடியும். குளிர்க் காலங்களில் சற்று அதிக வெப்பநிலை அளிக்கப்படவேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து புதிய காற்று உள்ளே உலவச் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் காளான் நோய் பரவவிடலாம்.

வாயு அடைப்பான்கள் மற்றும் மின்சார சூடாக்கிகள்
பெயருக்கேற்றார் போல் இம்முறையில் மின்சாரம் மூலமாகவோ, அகச்சிவப்புக் கதிர்கள் மூலமோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பமூட்டப்படுகிறது. இவை உருவத்திலும் சூடேற்றும் திறனிலும் வேறுபடுகின்றன. அகச்சிவப்பு முறை போன்று தான் இம்முறையும் பின்பற்றப்படுகிறது. எனினும் அகச்சிவப்பு விளக்கு முறையை விட சிறந்தது.

முழு இடமுறை
இம்முறையில் அடைகாப்பான் முழுவதும் சீராக வெப்பப்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெப்பப்படுத்த வாயுக்களையே மின்சாரம், எண்ணெய் அல்லது கெரசின் போன்ற பொருட்களையோ பயன்படுத்தலாம். இவை அடைகாப்புக் கொட்டகையில் நிலையாகப் பொருத்தப்படுகிறது. ஒரு குறப்பிட்ட வெப்பநிலை எல்லா இடங்களிலும் சீராகப் பரவி இருக்கவேண்டும். பொதுவாக அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கொட்டகை முழுவதும் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆஸ்பர்ஜில்லோசஸ் – நோய்

அறிவியல் பெயர்     :   ஆஸ்பர்ஜில்லஸ் ஃபிளேவஸ்
இது பிறந்த குஞ்சுகள எளிதில் பாதிக்கும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. நோய் முற்றும் போது தான் குஞ்சுகள் சுறுசுறுப்பின்றி சோர்ந்து காணப்படும்.  பாதிக்கப்பட்ட குஞ்சுகள் மூச்சு விடுவதற்கு சிரமப்படும். நெஞ்சு அடைத்துக் கொள்வதால் வாய் வழியே மூச்சு விட ஆரம்பிக்கும். இதுவே நேர்ய முற்றிய நிலை. இதன் பின் குஞ்சு இறந்து விடும். இறந்த குஞ்சுகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்நோயை உறுதி செய்து கொள்ளலாம்.

ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்

Posted on October 10, 2010 by admin
ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் வந்த பின்பு குணப்படுத்த இயலாது. ஆகையால் வருமுன் காப்பது சிறந்தது. அதற்கு 3 முக்கிய முறைகள் பின்பற்றப்படவேண்டும். அவை

பூஞ்சை / காளான் வளர்தளத்தை நீக்குதல்
ஈரமான, பூஞ்சை படர்ந்த வைக்கோல், கூளங்கள் மரத்துகள்கள் போன்ற பொருட்களை அடிக்கூளமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதே போல் கெட்டுப் போன, தீவனங்களையோ அசுத்தமடைந்த நீரையோ பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது.
அடை காக்கும் இடத்தில் தூசுகளை நீக்குதல்
அடைகாக்கும் இடம் இளஞ்குஞ்சுகளின் கொட்டகைக்கு அருகில் இருப்பதால் அங்கு எந்தவிதத் தூசிகளுமின்றிப் பராமரித்தல் அவசியம்.கீழே கிடக்கும் கூளங்களை எடுப்பதாலோ, நீக்கும் போதோ நிறையத் தூசிகள் மேலெம்புகின்றன. எனவே கூளங்களை சற்று அழுத்திப் போடுதல் நல்லதாகும்.
நல்ல கூளங்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும். பைன் மரத்துகள் செதில்கள் போன்றவற்றைக் கூளமாக உபயோகிக்கலாம். மிகவும் தூளாக உள்ள கூளங்கள் எளிதில் தூசியாக மாறிவிடுவதால் பிரச்சனை ஏற்படுத்தும்.
சுகாதாரம்
அடைகாக்கும் போதிலிருந்தே முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதும் இந்நோய்ப் பரவரைத் தடுக்க உதவும்.முட்டைகள் சரியான தொற்று நீக்கிக் கொண்டு முட்டைகள் கழுவியோ, புகையூட்டியோ சுத்தப்படுத்தலாம். அதே போல் அடைகாப்பான் குஞ்சு பொரிப்பகம் போன்றவையும் சுத்தப்படுத்தப்படவேண்டும்.
குளுட்டரால்டிஹைடு, ஏன்டெக் விக்ரான் எஸ் மற்றும் ஏன்டெக் ஃபார்ம் ஃபுளூயிட் எஸ் போன்ற தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி இனப்பெருக்கப் பருவத்திற்கு சற்ற முன்னரே கொட்டில்களையும் தூய்மை செய்து விடுதல் நல்லது.

நுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)

இந்நோய் சால்மோனெல்லா என்னும் பாக்டீரிய வகையினால் பரவுகிறது.
அறிகுறிகள்
  • இந்த நோய் முதிர்ந்த பறவைகளிலும் ஏற்பட்டாலும் குஞ்சுகளைப் போல் இவற்றில் பாதிப்பு அதிகமில்லை. முட்டைகளையும் இந்நோய் தாக்குகிறது.
  • இந்நோயில் இறப்பு விகிதம் அதிகம். குஞ்சு பொரித்த 2-3 நாட்களில்  பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இறக்க ஆரம்பிக்கும். இது 3 வாரங்கள் வரை தொடரும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் சோர்ந்து, தலையைத் தொங்கவிட்டபடி எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். அவை தீவனம் உண்ணாது. ஆனால் நீர் அதிக அளவு அருந்தும். நீர்ம நிலையில் வயிற்றுப் போக்கு இருக்கும். கண் குருடாதல் / பாதிக்கப்படுதல், மூட்டில் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். மேலும் பாராடைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.
  • இறந்த கோழிகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்த பாக்டீரிய நோய்த் தாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

சிகிச்சைகள்

எதிர்ப்பொருள் சிகிச்சை அளிக்கலாம். நைட்ரோ ஃபியூரான் மருந்துகள் அளிக்கப்படலாம். எனினும் அவை சிறிது நேரத்திற்கே ஆறுதல் தரும். சோதனைச் சாவடியிலிருந்து மாதிரிகளின் முடிவை வாங்கி கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த மருந்தை அளிப்பதே சிறந்தது.
நோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களான தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.
  • ஃபார்மால்டிஹைடு வாயுக்கொண்டு தினசரி சேகரிக்கும் முட்டைகளை புகையூட்டம் செய்யவேண்டும்.
  • கரைசல் கெர்ணடு கழுவுவதை விட புகையூட்டம் செய்வதே சிறந்தது. ஏனெனில் 43-49 டிகிரி  செ வெப்பநிலையில் ஒரு தொற்று நீக்கக் கரைசல் கொண்டு கழுவும் போது ஓடுகள் ஈரமாக்கப்படும். பின்பு உடனே சூடான காற்று கொண்டு முட்டையை உலர்த்த வேண்டும். முட்டை ஓட்டின் உட்சவ்வுகள் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
  • கைகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் எளிதில் பரவக்கூடும். எனவே முட்டைகளைக் கையாளும் போது கையுறை அணிந்து கொள்வது சிறந்தது.
  • பொரிப்பகத்தையும் விரிக்கான் எஸ் வாயு ஃபாாமால்டிஹைடு அல்லது ஆர்த்தோசான் குளூட்டரால்டிஹைடு போன்ற தொற்று நீக்கிகள் கொண்டு ஒவ்வொரு குழு குஞ்சு பொரிப்பு முடிந்தவுடன் பொரிக்காத முட்டைகளையும், ஓடுகளையும் அகற்றிவிட்டு சுத்தம் செய்தல் அவசியம்.
  • குஞ்சுகள் இறக்க ஆரம்பித்த உடனே சோதனைச் சாலைக்கு அனுப்பி நோயினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப மருந்து கொடுத்தல் அவசியம்.
  • எதிர்ப்புப் பொருள் அளிக்கும் சிகிச்சையைக் குஞ்சுகளுக்கு நோய்பரவுவதற்கு முன்பே செய்தல் நலம்.
ஈமூ கோழி பற்றிய மற்ற சில விபரங்களுடன் நாளையும் தொடரும்....

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-8



அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-8
*இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.



*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது 
*தொடரும்...

ஈமு கோழி வளர்ப்பது எப்படி


பாகம்-1

  

ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?


ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பற வைகள்அவற்றின் விலை மதிப்பு மிக்க இறை ச்சி, முட்டைகள், தோல், தோலி லிருந் து பெறப்படும் எண் ணெய் மற்றும் இறகுகள் போன்ற வற்றுக்காக வளர்க்க ப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்ப வெப்ப நிலை யையும் தாங்கி வளரக் கூடிய வை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள்
ரேட்டைட் இனத் தைச் சார்ந் தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழி கள் உலகத்தின் பல பகுதி களில் அவற்றின் இறை ச்சி, தோல், தோலிலிருந்து பெற ப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதி யாக வளர்க்கப் படுகின்றன. இப் பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பற வைகள் திறந்தவெளியிலும், தீவிர முறை யிலும் வளர்க்கப் படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு: ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய
தலையையும், கால்களில் மூன்று விரல் களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காண ப்படும். ஆனால் இந்த கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடை உடையன வாகவும் இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில் களுடனும் காணப்ப டுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின்இயற்கையான உணவு பூச்சிகள், செடிக ளின் இலைகள், பழங்கள் மற்றும் காய் கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைக ளைவிட பெரியதாக இருக்கும். ஈமுக் கள் முப்பது வருடம் வரை வாழக் கூடியவை. ஈமுக்களை மந்தையாக வோ அல்லது ஆண், பெண் பறவை களாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்: ஈமு கோழிக்கறி குறை ந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் மேல் தோல் மென்மை யாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பானஅமைப்பினைக் கொண்டிருப் பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப் படும் எண் ணெய் உணவுக் காகவும் மருந்தாகவும், அழகு சாதன பொருட் கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளா தாரம்: ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினைப் பற் றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட் டை யினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமு கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமு கோழிக்குஞ்சு ஒன்றின் விற் பனை விலை ரூ.2500 – 3000. எனவே, ஈமு கோழிப் பண்ணை யினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் தீவனச்செலவு குறைவா கவும் குஞ்சு பருவத்தில் இறப்ப சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, ஓல்ட் ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா, எம்.எஸ்சி., எம்.பில்., அக்ரி கிளினிக்,8903757427.

ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறதுபண்ணை அமைத்து சிரத்தையுடன்தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசிஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவதுநான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்துவந்தேன்விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன்ஆந்திரா,புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாகஅறிந்துகொண்டேன்.

2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன்அவை முட்டையிடதுவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்துஅவற்றையும் சேர்த்து வளர்த்தேன்ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன்தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு.ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாதவளர்ப்பு முறைஅதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்தஅடிப்படையிலும்சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்அக்கம்பக்கத்தினர்வீட்டுத்தேவைக்கும்விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள்ஓட்டல்கள்உணவு விடுதிகளுக்கும் நேரடியாகஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்மற்ற பறவைவிலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவுமுட்டைஇறைச்சி,எண்ணெய் கிடைக்கிறதுஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மைவாய்ந்தவைஆடுமாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும்சிவப்பு மாமிசம் கொடுக்கும்பறவை இனம் ஈமுஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடைகொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும்சுத்திகரிப்புசெய்து வலி நிவாரணிஅழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறதுஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல்கிடைக்கும்மிருதுவாகவும்அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்புகைப்பைபர்ஸ்கள் செய்யபயன்படுத்தப்படுகிறது.
இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும்அழகானதொப்பிகள்ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறதுஆஸ்திரேலியாஅமெரிக்காபோன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர்ஈமு முட்டைகளைவீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம்வேண்டும்இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலிதீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறியஆஸ்பெஸ்டாஸ் ஷெட்தீவனம் வைக்க 2 பாத்திரம்தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்),முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்)போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக்கொள்ளலாம்இன்குபேட்டர்ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.


குஞ்சுகள் தேர்வு
ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வைகேட்கும் திறன் சரியாக உள்ளதாகால்களை வளைக்காமல் நடக்கிறதாஎன்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும்முட்டையில்இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்குபின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.
வளர்ப்பு முறை 
மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம்ஆண்பெண் தெரிந்த பின்  தனித்தனியாகபிரித்து வளர்க்க வேண்டும்பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும்தொண்டையில்இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில்இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.
குஞ்சு பொரிப்பு
ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும்பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும்சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்குவைக்க வேண்டும்பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.
வருமானம்
மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும்ஒரு கிலோ இறைச்சிகுறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம்இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும்வெட்டப்படும் கோழிகளில்இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும்ஒரு லிட்டர்ரூ.1500க்கு விற்கப்படுகிறதுஇதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும்இறைச்சிகொழுப்பு மூலம் ஒரு ஆண்டில்ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.
இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள்ரூ.25 ஆயிரம்ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில்இறைச்சிக்காக ஈமுக்களை வெட்டாமல் இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில்பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும்.இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.


D˜ ÚLÖ³ Y[Ÿப்“ CÚTÖ‰ TWYXÖL E·[‰. HÁ GÁ\Ö¥ ARÁ JªÙYÖ£ TÖL˜• TVÁT|•. D˜ ÚLÖ³ CÛ\op –L°• rÛYVÖL C£eh•. YÖÁÚLÖ³ CÛ\op ÚTÖX C£eh•. B]Ö¥ A‰ N¼¿ Y¨YÖL C£eh•. A‡L ÚSW• heL¡¥ ÛY†‰ NÛU†RÖ¥ G¸‡¥ ÙY‹‰ –£‰YÖf«|•.


D˜ ÚLÖ³ htrL· Y[Ÿப்TR¼h RtÛN A£ÚL E·[ “‰eÚLÖyÛP›¥ E·[ R–²SÖ| LÖ¥SÛP A½«V¥ T¥LÛXeLZL YyPÖW BWÖšop ÛUV†‡¥ «ÛXeh fÛPeh•. J£ D˜ ÚLÖ³ htr ÙTÖ½†R EPÁ ARÁ «ÛX ¤.1,500. ARÁ ‘Á]Ÿ J£ UÖR• YÛW E·[ htr «ÛX ¤.2 B›W†‰ 500. G¥XÖY¼Û\• «P S¥X ÙNš‡ GÁ] ÙYÁ\Ö¥ D˜ ÚLÖ³›Á CÛ\op ÙLÖXÍyWÖ¥ C¥XÖR‰ Bh•. C‰ J£ fÚXÖ ¤.400-eh «¼LT|f\‰.
D˜ ÚLÖ³LÛ[ Y[Ÿ†‰ S¥X XÖT• N•TÖ‡eLXÖ•.
இன்னும் தொடரும்.......

இணையத்தில் இருந்ததை  உங்கள் இதயத்தில்  இணைப்பவர்