Wednesday, 4 April 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-12

அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-12

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன. 

*** 

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. 

*** 

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர். 

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின. 

*** 

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது. 

*** 

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். 

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள். 

*** 

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள். 

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது. 

*** 

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது. 

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது. 

***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது. 
_________________

*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும். 

================= 

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார். 

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்! 

================ 

* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும். 

=============== 

*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம். 

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல். 

 *தொடரும்...

World Muslim Population

   World Muslim Population  
Nearly one-fourth of the world’s population today is Muslim. The Muslim population is a diverse community of believers spanning the globe. Over fifty countries have Muslim-majority populations, while other groups of believers are clustered in minority communities on nearly every continent.
Although Islam is often associated with the Arab world and the Middle East, fewer than 15% of Muslims are Arab.
Countries With The Largest Muslim Populations (2009):
CountryNumber of Muslims
Indonesia203 million
Pakistan174 million
India161 million
Bangladesh145 million
Egypt79 million
Nigeria78 million
Iran74 million
Turkey74 million
Algeria34 million
Morocco32 million
Iraq30 million
Sudan30 million
Afghanistan28 million
Ethiopia28 million
Uzbekistan26 million
Saudi Arabia25 million
Yemen23 million
China22 million
Syria20 million
Russia16 million

World Muslim Population 

ContinentPopulation
(in million)
TotalPopulation
in 
2011 (inmillion)
Muslim PercentageMuslimPopulation
 in 
2011 (inmillion)
Africa1051.4
52.39 %
554.32
Asia4239.132 %1356.28
Europe740.017.6  %56.04
 North America346.22.2  %7.61
South America595.90.41 %2.45
Oceania37.141.5  %0.54
Total
7009.75
28.73 %
1977.24

Muslim Population is increasing at 1.84%
The Muslim population in 
2012
 is 2013.62 Million. = 
2.1 Billion
** Carnegie Endowment for International Peace

சுய தொழில்கள்-20-6 நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி

சேற்று நண்டு வளர்ப்பு

சேற்று நண்டு

ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது.
சேற்று நண்டின் வகைகள்
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், சில்லா (Scylla) என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
  • பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் 'பச்சை சேற்று நண்டு' என்ற அழைக்கப்படும்
  • இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
  • இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
  • சிறிய வகைகள், 'ரெட் கிளா' என்று அழைக்கப்படும்
  • இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
  • இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.

              வளர்ந்த சேற்று நண்டு

வளர்ப்பு முறைகள்
சேற்று நண்டுகளை, இரு முறைகளில் வளர்க்கலாம்
i.குரோ - அவுட் முறை
  • இம் முறையில் இள நண்டுகள், தேவையான அளவு வளரும் வரை (5-ல் இருந்து 6 மாதம் வரை), வளர்க்கப்படும்.
  • இம்முறையில், நண்டுகள் வளர்ப்புக்கு, சாதாரணமாக குட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படலாம் அல்லது காணப்படாமலும் இருக்கலாம்.
  • குட்டையின் அளவு 0.5-லிருந்து 2 ஹெக்டெர் வரை இருக்கலாம். போதுமான வரப்பு மற்றும் கடல் நீர் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
  • குட்டை சிறியதாக இருப்பின், வேலிகள் இருக்க வேண்டும். இயற்கையான பெரிய குட்டைகளில், நீர் வெளியேறும் பகுதிகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும்.
  • 10லிருந்து 100 கிராம் வரை அளவுடைய, இள காட்டு வகை நண்டுகளை விதை நண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்.
  • வளர்ப்பு காலம் 3ல் இருந்து 6 மாதங்கள் ஆகும்
  • ஒரு சதுர மீட்டருக்கு 1-லிருந்து மூன்று நண்டுகள் வரை இட்டு, துணை உணவு அளிக்க வேண்டும்.
  • பொதுவாக கழிவாகக் கருதப்படும் மீன்களுடன், வட்டாரத்தில் கிடைக்கும் ஏனைய உணவு வகைகள் நண்டுகளுக்கு உணவாக கொடுக்கப்படலாம். (உடல் எடையின் அளவின் 5 % எடை, ஒரு தினத்திற்கு உணவாக கொடுக்கப்பட வேண்டும்)
  • அடிக்கடி வளரும் நண்டினை எடுத்து, பொதுவான வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும்.
  • மூன்றாவது மாதத்திலிருந்து தகுந்த எடையையுடைய நண்டினை அறுவைடை செய்யலாம். இந்த எண்ணிக்கை குறைப்பு மூலம், மற்ற நண்டுகள் நன்றாக வளர வாய்ப்பு உள்ளது.

ii. ஃபேட்டனிங்க (தடிமனாக்கம் ) முறை
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் சேறு (சதை) என்று வழங்கப்படும். இவை சாதாரன மென் நண்டுகளை விட மூன்றில் இருந்து நான்கு மடங்க விலை அதிகமாக விற்கப்படும்
a. குட்டைகளில் தடிமனாக்கும் முறை
  • 1 - 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 - 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
  • விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
  • குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
  • நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
  • வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
  • மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
  • சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
  • வட்டாரம் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 - 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
  • வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
  • விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
  • ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பதன் மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும். பழைய டயர்கள், மூங்கில் கூடைகள் போன்ற தங்குமிடங்களை இடுவதன் மூலமும் தாக்குதல் மற்றும் நண்டே நண்டினை
  நண்டு தடிமனாக்கும் குட்டை
  
  நுழைவாயிலை மூங்கில் பாயால் வலுப்படுத்தப்பட்டுள்ளது
"inlets"

b. அடைப்பு பகுதி மற்றும் கூண்டினில் நண்டினை தடிமனாக்கும் முறை
  • கழிமுக நீர் நிலைகளிலோ அல்லது பெரிய இறால் குட்டைகளிலோ, அடைப்புப்பகுதி, மிதக்கும் வலைக்கூண்டு அல்லது மூங்கில் கூண்டு ஆகியவற்றைக் கொண்டும் நண்டினை வளர்க்கலாம்.
  • நெட்லான் அல்லது மூங்கில் கம்புகள் கொண்டு வலைகளை உருவாக்கலாம்.
  • கூண்டின் அளவு 3மீ x 2மீ x 1மீ ஆகும்
  • வலைகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் உணவு அளிப்பது மற்றும் பராமரிப்பது எளிதாகம்.
  • ஒரு சதுர மீட்டர் கூண்டிற்கு, 10 நண்டுகளும், ஒரு சதுர மீட்டர் அடைப்பகுதிக்கு 5 நண்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூண்டில் அதிகமான நணடுகள் இருப்பதால், நண்டின் கொடுக்கின் நுனியை கிள்ள வேண்டும். இதனால் தாக்குதல் குறைவு ஆகம்.
  • எனினும், குட்டைகளில் வளர்ப்பது போல் இம்முறை பிரபலம் ஆகபடவில்லை.
குரோ - அவுட் மற்றும் தடினமாக்கும் முறைகளை ஒப்பிடும் போது, தடிமனாக்கும் முறையிலேயே குறைந்த காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும். இந்தியாவில் நண்டு விதைகள் மற்றும் வர்த்தக ரீதியான உணவு கிடைக்காததால், குரோஅவுட் முறை பிரபலம் அடையவில்லை.

உணவு
Cநண்டுகளுக்கு தினமும் கழிவு மீன், வேகவைத்த கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றால், நண்டின் எடையளவில், 5-8% என்ற விகிதத்தில் உணவு அளிக்கப்படும். ஒரு நாளில், இருவேளை உணவு அளிக்கப்பட்டால், பெரும் பகுதியை சாயங்கால நேரத்தில் அளிக்க வேண்டும்.

நீர் தரம்y
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு நீரீன் தரம் இருக்க வேண்டும்
உப்புத் தன்மை
15-25%
வெப்பம்
26-30 டிகிரி செல்சியஸ்
உயிர் வாயு
> 3 பி.பி.எம்
கார-அமில தன்மை
7.8-8.5

அறுவடை மற்றும் விற்பனை
  • ஒழுங்காக நண்டின் தடிப்பு தன்மையை கண்காணிக்க வேண்டும்.
  • அறுவடையை விடியற்காலையிலோ அல்லது சாயங்கால நேரங்களிலோ செய்ய வேண்டும்.
  • அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை நல்ல உவர்ப்பு நீரால் கழுவி அழுக்கு மற்றும் சேற்றை நீக்க வேண்டும். அவற்றின் கால்கள் ஒடியாதவாரு அவற்றை கட்ட வேண்டும்.
  • அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை ஈரப்பதம் உடைய சூழ்நிலையில் இட வேண்டும். அவற்றை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளி நண்டுகளின் இறப்பை அதிகரிக்கும்

அறுவடை செய்யப்பட்ட நண்டு

  கடினமான சேற்று நண்டு
அறுவடைக்கு பின்னர்

நண்டு வளர்ப்பின் பொருளாதாரம் - வருடத்திற்கு 6 வளர்ப்பு - (0.1 ஹெக்டர் கடற்கரையோர குட்டை)
ஆ. வருடத்தின் நிலையான செலவு
ரூபாய்
குட்டை (குத்தகை செலவு)
10,000
மதகு வழி
5,000
குட்டை தயாரித்தல், வேலி அமைத்தல் மற்றும் இதர செலவுகள்
10,000
 
ஆ. செயல்பாட்டு செலவு (ஒரு வளர்ப்புக்கு)
 
1. நீர் நண்டின் விலை (400 நண்டுகள், ரூ. 120/கிலோ ).
    120/kg)
36,000
2. உணவு செலவு
10,000
3. ஆட்கூலி
3,000
ஒரு வளர்ச்சிக்கு (மொத்தம்)
49,000
6 வளர்ச்சிக்கு மொத்தம்
2,94,000
 
இ.வருடாந்திர மொத்த செலவு
3,19,000
 
ஈ. மகசூல் மற்றும் வறுமானம்
 
ஒரு சுழற்சியில் உற்பத்தியாகும் நண்டு
240 கிலோ
மொத்தம் 6 சுழற்சிக்கு (ரூ. 320/கிலோ)
4,60,800
 
உ. நிகர வருமானம்
1,41,800

  • ஒரு சராசரியான குட்டைக்கு (ஒரு சிறு/குறு விவசாயினால் பராமரிக்க படகூடிய), பொருளாதார கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை விடவும் சிறிய குட்டைகளிலும் வளர்க்கலாம்
  • நண்டின் அடர்த்தி குறைவு (ஒரு சதுர மீட்ருக்கு 0.4 எண்ணிக்கை) ஏனென்றால் பரிந்துரைக்கப்பட்ட அளவு 750 கிராம் ஆகும்.
  • முதல் வாரத்தில், நண்டின் எடையில் 10% என்ற விகிதத்தில் உணவும், பின்னர் 5% என்ற விகிதத்தில் உணவு அளிக்க வேண்டும். உணவு வீண் அடையாமல் இருக்கவும் மற்றும் தண்ணீரின் தரம் குறையாமல் இருக்கவும், உணவு தட்டுகளை பயன் படுத்தலாம்.
  • நன்றாக பராமரிக்கப்படும் குட்டைகளில், 8 முறை வளர்ச்சியை மேற்கொள்ளலாம் (80% - 85% உயிருடன் இருக்கும் நிலையில்) . ஆனால் இந்த கணக்கீட்டில் 75% உயிருடன் இருக்கும் நிலையில், 6 வளர்ச்சியே எடுக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட மீன் பதப்படுத்தும் (கருவாடு உற்பத்திமுறை

கருவாடு உற்பத்தி என்பது நமது நாட்டின் பழமையான, சிக்கனமான மற்றும் பாரம்பரிய முறையாகும்
இம்முறையில் உள்ள குறைபாடுகள்
  • பொதுவாக, கருவாடு உற்பத்திக்கு, தரம் குறைந்த மீனை உபயோகிப்பது.
  • இதில் உபயோகிக்கும் உப்பு, மிக தரம் குறைந்ததாக, மண் மற்றும் அழுக்குடன் இருக்கும். இதனால் இந்த உப்பை உபயோகித்து பதப்படுத்தப்படும் மீன், தரம் குறைந்ததாக இருக்கும்.
  • மீன் பதப்படுத்தப்படும் பண்ணையில் நல்ல நீர் கிடைப்பது அரிது.
  • கடலிலிருந்து கொண்டுவரப்படும் மீன்கள், பெரிய சிமெண்ட் தொட்டியில் அடுக்கடுக்காக, உப்பினை நடுவில் இட்டு அடுக்கப்படும். இடமும் சுத்தமாக இருக்காது. இப்படி தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வைத்த பின்னர், கடற்கரையில் திறந்த வெளியில், சூரியனில் உலர்த்தப்படும். இப்படி வைக்கும் பொது, நிறைய மணல் மீன் மேல் ஒட்டிக் கொள்ளும். பின்னர் குவித்து வைக்கப்படும்.
  • இப்படி பதப்படுத்தப்படும் மீன், சிகப்பு ஹலோபிலிக் பாக்டீரியாவால் மாசுபடுவதனால், இரண்டிலிருந்து மூன்று வாரம் மட்டுமே, பதப்படுத்திய மீனை சேமிக்கலாம்.
கேரள மாநிலம், கலிக்கட்டில் உள்ள, மத்திய மீன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், தரமான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புக்கு, சில முறைகளை வகுத்துள்ளது. அவற்றின் குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
முறை
  • புதிய மீன் கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட பின்பு, உடனடியாக சுத்தமான கடல் நீரில் கழுவி, மீன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், அழுக்கு மற்றும் ஏனையவற்றை நீக்க வேண்டும்.
  • இவைகளை பின்னர் பதனிடும் இடத்திற்குச் எடுத்துசென்று, மிக கவனமாக சுகாதாரம் மற்றும் தரத்தை பேன வேண்டும். வழக்கமான முறையை போல் அல்லாமல், ஏனைய பதனீட்டு செயல்பாடுகளை, மேஜைகள் மேல், மேற் கொள்ள வேண்டும். இதனால் அழுக்கு, மணல் போன்றவைகளால் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும்.
  • 10% குளோரின் அளவு கொண்ட நீரை சுத்தப்படுத்த பயன்படுத்துதல் நல்லது.
  • பதனிடப்படும் மேஜைகளில், மீன்கள் உள்உடலுறுப்புகளை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். Êசார்டீன் போன்ற மீன்களில், பதப்படுத்தப்பட்ட பொருளின் தோற்றத்தை மேம்படுத்த, செதில்களை நீக்கலாம். நீக்கப்பட்ட உடலுறுப்புகள், மேஜையின் கீழ் வைக்கப்பட்ட கழிவு கூடையில் உடனே போடப்பட வேண்டும். உள்உடலுறுப்புகளை நீ்க்குவது சாத்தியமற்ற சிறிய மீன்களை, நன்றாக சுத்தம் செய்த பின்னர் நேரடியாக உப்பில் இட வேண்டும்.
  • இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மீன்களை, நல்ல நீரில் கழுவி, நீரை வடிகட்ட வேண்டும். இதை ஜல்லடை போன்ற அமைப்பையுடைய பிளாஸ்டிக் பாத்திரத்தில் எளிதாக செய்யலாம்.
  • நன்றாக வடிகட்டிய பின்னர், மீனை உப்பிடும் மேஜைக்கு எடுத்துச் சென்று, தரமான உப்பை ஒழுங்காக கையினால் இட வேண்டும். இதை இடும் வேலையாட்களின் கை, சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக மீன் மற்றும் உப்பின் விகிதம் 1:4 என்ற முறையில் இருக்க வேண்டும்.
  • உப்பு நேர்த்தி முடிந்தவுடன், மீனை சத்தமான சிமெண்ட் தொட்டியில் குறைந்தது 24 மணி நேரம் அடுக்கி வைக்க வேண்டும். பின்னர் மீனை வெளியில் எடுத்து, மேலே ஒட்டியுள்ள உப்பு கட்டிகள் நீங்கும் பொருட்டு, நீரினால் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு உப்பிடபட்ட மீன்கள், சுத்தமான உலர்த்தும் மேடைகளில் உலர்த்தப்பட வேண்டும். மேடைகளானது, உயர்த்தப்பட்ட சிமெண்ட் மேடை அல்லது மூங்கில் தட்டிகளாகவோ இருக்கலாம். இவை இல்லையென்றால், மீனை மூங்கில் பாயிலும் உலர்த்தலாம்.
  • ஒவ்வொரு தருணத்திலும், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
 
பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ேதிப் பொருள்கள்
  • இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு, கால்சியம் புரோபியோனேட் மற்றும் தூள் உப்புக் கொண்ட கலவையை தூவ வேண்டும்.
  • இந்த கலவையை மூன்று பகுதிகள் கால்சியம் புரோபியோனேட் மற்றும் 27 பகுதிகள் தூள் உப்புக் கொண்டு, உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளலாம்.
  • மீனின் அனைத்து பரப்புகளிலும், ஒரே சீராக படும்படி கலவையை இட வேண்டும்.
  • பொதுவாக 1 கிலோ கலவையைக் கொண்டு 10 கிலோ மீனுக்கு தூவலாம்.
  • இதன் பின்னர், உதிரி விற்பனைக்கு குறிப்பிட்ட அளவினை எடையிட்டு, பாலீதீன் பைகளில் அடைக்கலாம். மொத்த விற்பனைக்கு, பாலீதீன் இழையிடப்பட்ட, சாக்குகளில் அடைக்கலாம். இவ்வாறு பாக்கேஜ் செய்யப்படுவதால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, பதப்படுத்த்ப்பட்ட மீன் அதிகமாக உலர்வது தடுக்கப்படும். மேலும், பாதிப்பு உருவாக்ககூடிய பாக்டீரியாவில் இருந்தும் பாதுகாக்கப்படும்.
  • Êசமைப்பதற்கு முன்னர், மீனை நீரில் ஈடும் போது, உப்புடன் சேர்ந்து, இந்த கவவையும் நீக்கப்படும்.
  • எனவே பதனிட்ட மீனை நீன்ட நாள் வைப்பதற்கு மிக எளிய, பாதுகாப்பான மற்றும் தரமான முறையாகும்.
  • இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மீனை குறைந்தது, எட்டு மாதம் வரை நல்ல நிலையில் வைத்து இருக்கலாம்.
 
இம் முறையின் சிறப்புகள்
  • இம்முறை மிக எளிய மற்றும் சராசரி மனிதனாலும் எளிதாக கையாளபடக்கூடிய முறை.
  • இது கொடிய பாக்டீரியாவில் இருந்து மீனை பாதுகாப்பதால், பதனிடப்பட்ட மீனின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும்.
  • மீனின் நிறம், வாசனை மற்றம் சுவையை, கால்சியம் புரோபியோனேட் எந்த வகையிலும் பாதிக்காது.
  • மற்ற முறைகளுடன் ஒப்பிடும் போது மிக மலிவான முறையாகும். சேமிப்பு காலம் அதிகரிப்பு மற்றும் அதிக விலை கிடைத்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், இம்முறைக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிகுதி, மிக குறைவாகும்
 
மூலம்: மத்திய மீன் தொழில்நுட்ப நிறுவனம், கொச்சீன், கேரளா

Luxury hotel in space by 2012 முதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’!

முதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’!
galactic-suite1.jpg

லகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.
விண்வெளி ஆராய்ச்சியில் நிபுணராகத் திகழ்ந்த முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட் இந்த விண்வெளி ஓட்டலை நிர்மாணித்து வருகிறார்.
3 நாள்கள் தங்க, ரூ.20.7 கோடி செலுத்துபவர்களுக்கு பயணத் தேதிக்கு முன்பாக 8 வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்குச் செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்களும் பயணிப்பர். பூமியில் இருந்து 450 கி.மீ மேலே அமைந்துள்ள ஓட்டல் என்பதால் விருந்தாளிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே இவர்களும் விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள்  அணிய வேண்டும். ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்தபடி தான் தங்களுக்கான இடத்தை இவர்கள் அடைய முடியும்.
கேலாட்டிக் சூட்டுக்கு ராக்கெட் மூலம் செல்ல ஒன்றரை நாட்கள் பிடிக்கும். மணிக்கு 0 முதல் 30ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் சுற்றும் இந்த ஓட்டல், பூமியை 80 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றிவரும். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த ஓட்டலில் தங்குபவர்கள் 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்த்து ரசிக்க முடியும்.
விண்வெளி ஓட்டலில் தங்க இதுவரை 200 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 43 பேர் பதிவு செய்துள்ளதாகவும் இதற்கான இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த ஓட்டலில் காபி சாப்பிட உங்களுக்கும் ஆசையா? அப்படின்னா 21 கோடி ரூபாயை கையில் வைத்துக்கொண்டு www.galacticsuite.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாமே!
இணையத்திலிருந்து