Saturday, 26 May 2012

சுய தொழில்கள்-28 பால் பண்ணைத் தொழில்



விவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமுறைகளும் கீழே காணலாம்.
இந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்


கறவை இனங்கள்:

சாஹிவால்
அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.


சாஹிவால் பசு
பால் உற்பத்தி - கிராம சுழலில் : 1700 கிலோ - வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ

32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது

கறவை கால இடைவெளி - 15 மாதம்.



கிர்தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.


கிர் வகை பசு
பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ

தார்பர்கர்
ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.


தார்பர்கர்
பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ – வணிக பால் பண்ணை: 2500 கிலோ


சிவப்பு சிந்து
பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.


சிவப்பு சிந்து
பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ – வணிக பால் பண்ணை : 1900 கிலோ

கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்

ஓங்கோல்
ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1500 கிலோ

வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.


ஓங்கோல்
ஹரியானா
கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்தியபிரதேசம்

பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ

வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

கங்ரெஜ்
குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ - வணிக பால் பண்ணை : 3600 கிலோ

36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்

காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.


டியோனி
ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள்

அம்ரித்மஹால்
கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.


அம்ரித்மஹால்
உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

ஹல்லிகார்
கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.


காங்கேயம்
தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.


உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள்
ஜெர்சி
26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்

பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ

ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.

ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்
இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ

பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும்.


சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

எருமை இனங்கள்

முர்ரா
ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1560 கிலோ

சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது

ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.

கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்

சுர்த்தி
குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

ஜப்ராபதி:
குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

நாக்பூரி
நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ

கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை

கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.
அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.
அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்

கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.
வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்

இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்).

எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள். சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை.

எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.

உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும்.

ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.

வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை

பசுமாடுகள்

ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000) நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது. கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.

பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.

எருமைகள்

மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.

பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.

எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.

எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.

எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.

ஆதாரம்: பெய்ஃப் டெவலப்மென்ட் ரிசர்ச் பெளன்டேசன், பூனா. இந்தியா






மாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு

எழுதியது ஈரோடு கதிர்
காலவோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும் மனிதர்களைச் சந்திக்காத தருணம் என்று எதைச் சொல்ல முடியும். அப்படிச் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் நட்பாய் மனதோடு இருக்கமாய் ஒட்டிக் கொள்வதுண்டு. தொடர்ந்து ஓடும் ஓட்டங்களில் அப்படிப் பட்ட நட்புகளை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாலும் கூட, மனதை விட்டு அகலாமல் ஆணித்தரமாய் இருக்கும் நட்புகள். அப்படிப்பட்ட ஒரு நண்பன் திருப்பூரைச் சார்ந்த “சந்துரு”.
திருப்பூர் நகரை எதற்காக நினைத்தாலும் பளிச்சென மனதில் மின்னலடிப்பது சந்துரு என்ற அந்த நண்பன் தான். அவரோடு சேர்ந்து திருப்பூரில் சுத்தாத வீதிகள் இல்லை, போகாத பயணங்கள் இல்லையென்றே சொல்லலாம். எந்தவித தயக்கமும் இல்லாமல் புழங்கிய வீடு. அன்பால் பின்னிப் பிணைந்த கணவனும் மனைவியுமாய் என் குடும்பத்தோடு மிக நெருங்கிய உள்ளங்கள்.
திருப்பூர் நகரத்து சந்தடியில் பரபரப்பாய் தன் தொழிலில் இயங்கிக் கொண்டிருந்தவரிடம் எதேச்சையாய் ஒரு நாள் பேசும் போது திடீரென ஒரு வரி வீர்யமாய் வந்து விழுந்தது “கதிர், மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”. ஒரு விநாடி என் காதில் விழுந்ததை சற்றும் நம்பாமல், திரும்பத் திரும்பக் கேட்டேன் “என்ன, உண்மையாவா?”
என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. கிராமம் நாலுகால் பாய்ச்சலில் நகரத்தை நோக்கி ஓடி வரும் நேரத்தில், திருப்பூர் போன்ற தொழில் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிய பயணத்தையும், கிராமத்து தொழிலை நோக்கிய பார்வையையும் எண்ணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
கோவை சூலூருக்கு அருகே பண்ணை வேலைகள் ஆரம்பமானது, அடுத்தடுத்து அவ்வப்போது பேசும் நாட்களில் பண்ணை வேலைகள் குறித்து பேசுவதும், மாடுகள் வாங்குவது குறித்துப் பேசுவதும் என எங்கள் உரையாடல்கள் பண்ணை குறித்தே அதிகம் இருந்தது. கட்டிட வேலை, மாடுகள் கொள்முதல், கறவைக்கான கருவிகள், வாகனம் என முதலீட்டில் பாரத ஸ்டேட் வங்கியும் கை கொடுக்க இன்று சுரபி பால் பண்ணை மிக அழகாய் தன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலங்கள் கரைந்ததில் நகரத்துச் சாயல் படிந்த நண்பரின் கனவு மாட்டுப் பண்ணை மிக அழகாய் செழித்து நிற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடு வகைகள், திட்டமிட்ட வளர்ப்பு முறை, ஆரோக்கியமான தீவனம், மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பு என ஒரு நிபுணத்துவம் வாய்ந்த தொழில் முறையில் விவசாயம் சார்ந்த மாட்டுப் பண்ணை நவீனத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.
நகரத்துத் தொழில் நிமித்தம் சொகுசான வாழ்க்கை, சொகுசான பயணம் என்று சொகுசாய் வாழ்ந்து பார்த்த நண்பனை, இன்று கடிகாரத்தில் எழுப்பும் மணி வைக்காமலே அதிகாலை மூனரை மணிக்கு பண்ணைக்கு ஓடுவதை அறியும் போது ஆச்சரியமும், பிரமிப்பும் என்னைச் சூழ்கிறது. தினமும் காலையும் மாலையும் பண்ணை நிர்வாகம், பால் விற்பனை என சுழன்று ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.
மனம் விட்டுப் பேசும் நேரங்களில், ”எப்படி இதுல ஆர்வம் வந்துச்சு” என மனதைக் கிளறும் போது ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்” என்ற கொள்கையே இதற்குக் காரணம் உத்வேகத்தோடு பேசுகிறார். நேர்மையான, நல்ல வியாபாரக் கொள்கை கொண்டவரின் ”சுரபி பாலு”க்கு சூலூர் பகுதியில் மிகப் பெரிய வரவேற்பு மக்கள் தரத்தின் பொருட்டு அளித்திருக்கிறார்கள் என்பது விற்பனை முறையை உற்று நோக்கும் போது தெளிவாகிறது.
பண்ணையில் கறக்கும் பாலை மற்ற நிறுவனங்களுக்கு விற்காமல், நேரிடையாக தாங்களே கடைகள் அமைத்து நேரிடையாக விற்பதால் வாடிக்கையாளர் வரை தரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார். கூடவே தங்கள் பண்ணையின் பால் மட்டுமல்லாது, அருகிலிருக்கு விவசாயிகளிடமும் ஒப்பந்த அடிப்படையில் பால் கொள்முதல் செய்து தங்கள் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

பண்ணை முகப்பு - பதிவர்கள் ஆரூரன், பழமைபேசி மற்றும் சந்துரு


பண்ணையில் சந்துரு


தீவனக் கலப்பு


கறவைக் கருவிகள்


உணவு, மருத்துவ திட்டமிடல் விபரங்கள்



நேர்த்தியான பண்ணை மற்றும் சிறந்த பால் விநியோகத்தைக் கண்டு பொதிகை தொலைக்காட்சி இவர்களுடைய பண்ணைக்கு நேரில் வந்து ஒரு கலந்துரையாடலை பதிந்து ஒளிபரப்பியது குறிப்பிடத் தகுந்தது. புதிதாய் பால் பண்ணைத் தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை மகிழ்ச்சியோடு தெரிவித்தும் வருகிறார். (தொடர்புக்கு: சந்துரு             98428-42049      , e-mail : surabidairy@gmail.com)
பொருளீட்டுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், பொருளீட்டுவதில் ஒரு நியாயத்தையும் கற்பிக்க நினைக்கும் ”சந்துரு” மற்றும் அவருடைய கனவுத் திட்டமான சுரபி பால் பண்ணை வளர்ந்தோங்கங்கட்டும்.
___________________________________________


இந்தியாவில் பால் உற்பத்தி 11 கோடி டன்!!!
சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டில் நாட்டின் பால் உற்பத்தி 10.50 டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது . இது அடுத்த 2009-2010 நிதியாண்டில் 10.80 வாகஇருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது .இந்தியாவில் பஞ்சாப் ,குஜராத் ,கர்நாடகா,ஆந்திரா,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு அதிகளவில் கலப்பின பசுக்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது .மேலும் இதனால் பால் உற்பத்தியும் இந்த மாநிலங்களில் அதிகரித்துவருகிறது .பஞ்சாப் மாநில அரசு பால்பண்ணை அரய்சியில் ஒரு பசு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் நாற்பது முதல் ஐம்பத்தைந்து லிட்டர் பால் கறக்கிறது.இது நாம் பெருமை பட வேண்டிய செய்தி . இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்க வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் ஹனான் அஷ்ராவி



ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.
1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.
பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள கவாக்ஸி, 21ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கலாச்சார சின்னமான ஹிஜாபின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றவர். மதச்சார்பற்ற அரசாங்கம், மதச்சார்பற்ற சமூக அமைப்பில் இதுபோன்ற ஓர் போராளியைக் காண்பது மிகவும் அபூர்வம்.
மர்வா கவாக்ஸி 1968 ஒக்டோபர் 30 இல் அங்காராவில் பிறந்தார். 1999 ஏப்ரல் 18 இல் ஸ்தன்பூல் தொகுதியில் Virture கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்டப்டார். மே 02 இல் ஹிஜாப் அணிந்தமைக்காக பாராளுமன்றம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். கவாக்ஸி அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒரு ஹாபிழ். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தவர். அதே பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.
தற்போது ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாகக் கடமையாற்றி வருகின்றார். அதேபோன்று ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். மணவாழ்வில் இணைந்த அவருக்கு பாத்திமா, மர்யம் என இரு பெண்கள் உள்ளனர். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாற்றும் துறை ‘சர்வதேச உறவுகள்’ (International Relation) என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாவாட் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், ஹாவாட் பல்கலைக்கழத்தில் MPA கற்கையைப் பூர்த்தி செய்தவர். அமெரிக்காவிலுள்ள மற்றொரு பிரபலமான டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் Software Engineering துறையில் BSc பட்டத்தையும் பெற்றுள்ளார்.
துருக்கியில் அங்காரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைத்தபோது வைத்தியராகக் கற்று வெளியேற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே அணிந்து வந்த ஹிஜாப் அதற்குத் தடையாக இருந்தது. கவாக்ஸி ஹிஜாபில் மிகவும் பற்றுள்ளவராக இருந்ததனால் அங்காரா பல்கலைக்கழக நிருவாகிகள் அவரை அங்கு கற்பதற்கு அனுமதிக்கவில்லை.
கவாக்ஸி பிறந்து வளர்ந்த குடும்ப சூழல் இஸ்லாத்தை பற்றுறுதியோடு பின்பற்றி வந்த குடும்பமாகும். அவரது தாயும் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டிருந்தார். கவாக்ஸியின் தாய் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். ஹிஜாபினால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை இழந்தவர். 1980 களில் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தடைச் சட்டமே இத்தனைக்கும் பின்னணியாக இருந்தது. தாயைப் போன்று கவாக்ஸியும் இந்த சோதனையையே எதிர்கொண்டார். கவாக்ஸியின் தாய் அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவர். அவரது குடும்பம் முன்னாள் ஆட்சியாளர் கமால் அதாதுர்க்கின் கையாட்களால் பல கெடுபிடிகளுக்கு உள்ளானது. ஹிஜாப் அணிந்தமையால் பல அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் அவர் உட்பட்டார்.
கவாக்ஸியின் தந்தை யூஸுப் ஸியா கவாக்ஸி அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை பீடத்தில் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். பெண்களின் உரிமைகளுக்காக -குறிப்பாக, ஹிஜாப் உரிமைக்காக- தொடர்ந்தும் போராடி வந்தவர். இஸ்லாமிய மாணவர்களின் உரிமைக்காகப் போராடியதால் பதவி துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்.
மருத்துவ பீடத்திற்கு அவர் தெரிவானபோதும் தனது ஹிஜாபினால் அந்த வாய்ப்பை இழந்தார். பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் திருப்பி அனுப்பியது. மருத்துவராவதா அல்லது ஹிஜாப் அணிவதா என்ற தெரிவுக்கு முன்னால், கவாக்ஸி இரண்டாவது தெரிவை ஏற்றுக்கொண்டார்.
1990 களில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய கவாக்ஸி, அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார். தொடக்கத்தில் பேராசிரியர் நஜ்முதீன் அர்பகான் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ரபா கட்சியின் பெண்கள் அணிக்குத் தலைவராக இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து அணியில் பிளவுகள் ஏற்பட்டது.
துருக்கியின் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இஸ்லாமிய பாஸிலாத் கட்சியில் (Virture) இணைந்து பாராளுமன்ற அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டார். 1999 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். மதச்சார்பற்ற துருக்கியில் தனது தனித்துவமான ஹிஜாபுடனேயே அவர் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது தூர நோக்கிற்கும் அரசியல் வெல்திறனுக்கும் கிடைத்த வெற்றியாகவே அவரது பாராளுமன்ற அங்கத்துவம் இருந்தது. எனினும், மக்களின் அமோக ஆதரவோடு பாராளுமன்றம் நுழைந்தபோது, மதச்சார் பற்றவர்கள் அவருக்கு தடங்கல்களை ஏற்படுத்தினர். சத்தியப் பிரமாணம் செய்யும் இடத்திற்கு அவர் சென்றபோது அங்கிருந்தவர்கள் "பாராளுமன்றத்தை விட்டு வெளியேறு" என கூச்சலிட்டனர்.
1999 மே 2 இல் நடைபெற்ற இச்சம்பவம் துருக்கியில் மாத்திரமன்றி, முழு ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "அரசியலமைப்புச் சட்டத்தில் பாராளுமன்றத்தில் நுழையும் பெண் ஹிஜாப் அணிந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் என்னை அவமானப்படுத்துவதற்கும் மதச்சார்பின்மையின் தூய்மையைப் பாதுகாக்கவும் காட்டுக் கூச்சல் போட்டனர். ஆண்கள் ஷேட்டும் நீள் காற்சட்டை அணிய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு சட்டத்திலும் அவ்வாறில்லை. அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த வெறுப்பையே தமது வார்த்தைகளில் உமிழ்ந்தனர். மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளிடையே இஸ்லாத்தைப் பின்பற்றும் நான் அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பவில்லை. பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினேன் என்று கவாக்ஸி தனது அனுபவத்தை பத்திரிகையொன்றில் எழுதியுள்ளார்.
இந்த கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் துருக்கிய பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டு அவரது குடியுரிமையைப் பறித்தனர். அவர் பிரதிநிதித்துவம் செய்த பாஸிலாத் கட்சிக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் கவாக்ஸி வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
துருக்கியின் கிராமப்புறமொன்றில் பிறந்து, அமெரிக்காவின் அதி முன்னோடி பல்கலைக்கழகங்களில் பயின்று, ஹிஜாப் குறித்து தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்த முதல் பெண் இவராகவே இருப்பார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் வொஷிங்டன் திரும்பிய அவர், அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கின் முடிவு 2007 இலேயே வெளிவந்தது.
கவாக்ஸி மிகச் சாதாரணமானதோர் பெண்ணல்ல. சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ள, அறிவுத் துறையில் மிகவும் ஆழமான ஒருவர். இதனால்தான், முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவரால் விரிவுரை ஆற்ற முடிந்தது. ஆங்கிலம், பிரென்ஞ், ஆகிய மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுள்ள அவர், பல்வேறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாம் குறித்த விரிவுரைகளை ஆற்றி வருகின்றார். சர்வதேசளவில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
2004 இல் பெசிலோனியாவில் நடந்த உலக சமயங்களுக்கான மன்றத்தில் அவர் ஆற்றிய உரை மிகப் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு புத்திஜீவியாகவே கவாக்ஸி கருதப்படுகின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின், அமெரிக்க காங்கிரஸின், ஹெல்சிங்கியிலுள்ள மனித உரிமைப் பேரவையில் கவாக்ஸி ஆற்றிய உரைகளும் முக்கியமானவை.
அமெரிக்காவின் மெரியாட்டிலும் ஐரோப்பிய, கனேடிய பல்கலைக் கழகங்களிலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் கவாக்ஸி, ஹார்வேர்ட், யாலே, கேம்பி ரிட்ஜ், பேர்லின், ஒட்டோவா, மிலான், இன்ஸ்பேர்க் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்ட உலகின் செல்வாக்குள்ள 500 பேரின் பட்டியலில் கவாக்ஸியும் ஒருவர். Naap மற்றும் பூகோளப் பெண்கள் ஒன்றியம் 2005 இல் அவரை ‘அதிசிறப்பு மிக்க பெண்ணாகத் தெரிவுசெய்தது. மனித உரிமை முன்னேற்றத்துக்காகவும் பெண்களை வலுவூட்டுவதற்காகவும் போராடியவர் என்ற வகையில், அவரது பணிகள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் ஒன்றியம், மனித இனத்துக்காகப் பணியாற்றியவர் என்ற விருதினை வழங்கியது. இவ்விருது ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் வழங்கப்பட்டது. இதேபோன்று 1999 இல் இந்த ‘ஆண்டின் தாய்’ (Mother of the year) எனும் விருதினை துருக்கியின் அங்காரா தேசிய இளைஞர் கழகம் வழங்கியது.
கவாக்ஸி ஒரு காலத்தில் அமெரிக்கக் காங்கிரஸுக்கான முஸ்லிம் உலகு தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அவர் திகழ்கின்றார். Mediterraneal Quaterly எனும் பிரபலமான சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக உள்ள கவாக்ஸி, இதுவரை 6 நூல்களை எழுதியுள்ளார். அவரது இணையத்தளத்தினூடாகவும் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதுவதினூடாகவும் இஸ்லாமிய சிந்தனைகளையும் கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். அவர் எழுதிய நூல்களில் Basortusus Demokrasi எனும் நூல் அறபு, ஆங்கிலம், பிரென்ஞ், பாரசீகம் ஆகிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது.
ஓர் அரசியல் செயற்பாட்டாளராக, சமூகப் போராளியாக, மாபெரும் அறிவு ஜீவியாக, எழுத்தாளராக என மர்வா ஸபா கவாக்ஸியின் பன்முக ஆளுமை விரிகின்றது. கவாக்ஸி இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. அவரிடம் கற்பதற்கு எமது பெண்களுக்கு நிறையவே உள்ளன.

Wednesday, 2 May 2012

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள்



நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும்.
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்: இந்த ஊட்டசத்து நம் உடம்பில் நிகழும் தேவையற்ற ஆக்ஸைடேஷனை தடுக்க உதவுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக விட்டமின் இ, விட்டமின் உ மற்றும் செலேனியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
நார் சத்து: இதே நார் சத்துக்கள் நம் உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. உதாரணமாக சைலியம் பௌடர் , தவிடு ,மற்றும் பெக்டின் ஆகியவற்றை கூறலாம்.
என்சைம்கள்: நாம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதற்கு இந்த என்சைம்கள்தான் உதவுகின்றன. நாம் உட்கொள்கின்ற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று இவற்றையெல்லாம் ஜீரணம் செய்வதற்கு இந்த என்சைம்கள் உதவுகின்றன.
எண்ணெய்: நம் உடம்பிலுள்ள திசுக்கள் மற்றும் மூட்டுகளுக்கெல்லாம் நல்ல இயக்கம் வருவதற்கும் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கும் எண்ணெய் உதவுகின்றது. ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெயை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்துக்கள்
மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான உணவு வகைகள் மேற்சொன்ன ஊட்டச்சத்துக்களை எல்லாம் நமக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு வகைகள் இந்த ஊட்டச் சத்துக்களை தராதவைகளாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்
பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின் கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப் படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை, பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், மீன் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள், சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். ஆனால் புல் தின்று வளரும் கால்நடைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவைகளினுடைய இறைச்சி ஆரோக்கியமான புரதமாகக் கருதப்படு கின்றது.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது. மீன் எண்ணை மற்றும் வால்நட் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா 3 என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.
மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா 6 )கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கிய மற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கிய மற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படு கின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.
மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.

பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
 இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரைமயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளைமாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத் தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.
ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் 5 உள்ளன. அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா 3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.
1. காய்கறிகள், பழவகைகள்: பயனுள்ள காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று நாம் நிறைய சொல்லலாம். பெரும்பாலான பயனுள்ள காய்கறிகளும், பழவகைகளும் நல்ல பிரகாசமான நிறம் கொண்டவைகளாக இருக்கும். முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் வகைகள் மற்றும் டர்னிப் ஆகியவைகளை உதாரணமாகச் சொல்லலாம். பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவைகளும் இவற்றில் அடங்கும். ஆப்பிள், திராட்சை, ஏப்ரிகாட், எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, மாதுளம்பழம் போன்ற பழங்களும் இவற்றில் சேரும்.
உடல்நலத் தாக்கம்: முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிறைய நார்சத்து கொண்டவைகளாக இருப்பதால் உணவை நிதானமாக ஜீரணம் செய்ய உதவுகின்றது. அப்படி நிதானமாக ஜீரணம் செய்யும் பொழுது சர்க்கரை ரத்தத்தில் கலப்பதும் நிதானமாக நடக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளும் இதேமாதிரியே செயல்படுகின்றன. இப்பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்திற்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றவும் உதவுகின்றது.
அதிக நார்ச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல், மேற்கண்ட பழங்களும் காய்கறிகளும் புரதச்சத்து, என்சைம்கள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகின்றன. மேலும் இவற்றில் காணப்படுகின்ற பொட்டாசீயம், மக்னிசீயம். ஃபாலிக் ஆசிட் மற்றும் என்சைம்கள் நம்முடைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமலும் வழி செய்கின்றது.
பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் உடம்பிற்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகின்றன. ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. ஏப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. மேலும் ஈரலின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. எலுமிச்சம் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று. ஏனென்றால், உடம்பில் சர்க்கரை அதிகமாக சேரும் பொழுது ஏற்படக் கூடிய கூடுதல் அமிலத்தன்மையை எலுமிச்சம்பழம் குறைக்கின்றது. மேலும் மற்ற பழங்களைவிட, எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை குறைவு. மேலும் நமது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தவும் எலுமிச்சம் பழம் உதவுகின்றது. எலுமிச்சம் பழம் புளிப்பாக இருந்தாலும் உடம்பில் அதனுடைய செயல்பாடு காரத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. அமிலத்தன்மை உடம்பில் அதிகரிப்பதால் விளைகின்ற மூட்டுவலிக்கு இது ஓர் எதிர்ப்பாக அமையும். ஆங்கிலத்தில் கிரேப் புரூட் என்றழைக்கப்படும் பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. வடிகட்டிய தண்ணீர்
: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் அக்வா கார்டு என்ற வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளேடரில் புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். அக்வாகார்டின் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.
உடல் நலத்தாக்கம்: தண்ணீரின் மூலமாகத்தான் நம் உடலிலுள்ள செல்களுக் கெல்லாம் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான் செல்களும் மென்மையாக இருக்கின்றன. நம் உடம்பின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகின்றது. இப்படித் தண்ணீருக்கு பல உபயோகங்கள் இருப்பதால், இருப்பதிலேயே மிகச் சிறந்த தண்ணீரான வடிகட்டிய தண்ணீரை நம் உடம்பிற்கு வழங்குவது நல்லது. தண்ணீர் உடம்பிற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் தவறுதான். நாம் அளவிற்கு அதிகமாக குடிக்கும் பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக நம் உடம்பிற்கு தேவையான பல வகை தாதுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுவதால் இவற்றை யெல்லாம் உடம்பு இழக்க நேரிடும்.
3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் சால்மன், சார்டின், டூனா, மேக்கரல், டிலாப்பியா ஆகிய மீன் வகைகளும், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், தோல் எடுக்கப்பட்ட கோழிக்கறி, தோல் எடுக்கப்பட்ட வான் கோழிக்கறி, ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் இட்ட முட்டைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். கடல்வாழ் உயிரினங்களான இறால், நண்டு போன்றவைகளும் இதில் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்
: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் பால் பண்ணைகளில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களையும் தவிர்க்கின்றன. மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை உண்ணும் பொழுது, அவைகளின் மூலம் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.

4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்:
 இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச்சத்தும் ஓர் ஆரோக்கிய மான கொழுப்புச் சத்தாகும். இந்தக் கொழுப்புச் சத்து பூசணி விதைகள், வால்நட் கொட்டைகள் மற்றும் சால்மன், சார்டின், டூனா மற்றும் மேக்ரல் ஆகிய மீன் வகைகளில் கிடைக்கின்ற எண்ணெயிலும் இருக்கின்றது. ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும். ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் வால்நட் கொட்டைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.

5. முழுதானியங்கள்:
 இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: முழு ஓட்ஸ் தானியங்களில், 55 % கரைகின்ற நார்ச்சத்தும், 45 % கரையாத நார்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. மேலும் நமக்கு ரத்த அழுத்தமும் குறைகின்றது. வெள்ளை ரொட்டியில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அந்த ரொட்டியில் நமக்கு வேண்டிய புரதச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து எல்லாம் அப்படியே இருக்கும். மேற்கூறிய 5 பயனுள்ள உணவு வகைகளும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. ஆகவே இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ஜீரண சிஸ்டம் அதிக சிரமப்படாமல் வேலை செய்கின்றது.
பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.
பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.
நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7 முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது. நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.
கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செறிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செறிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.
சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.
உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதை யும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.
காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். கறி மற்றும் மீன் வகைகள் அதிக சூடு வைத்து வறுக்கும் பொழுது அவை நம் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களாக மாறுகின்றன. அளவுக்கு மீறிய சூடு வைக்கும் பொழுது கறி மற்றும் மீன் வகைகளிலுள்ள புரதச்சத்தும்,கொழுப்புச் சத்தும் அவற்றின் இயற்கை தன்மையை இழந்து சர்க்கரை நோயாளிகளுடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மை பெறுகின்றன. இத்தகைய பாதிப்பு வரக் கூடாது என்றால் மெலிந்த கறித்துண்டுகளைக் குறைந்த வெப்பத்தில் அதிக நேரத்திற்கு நாம் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் கறியை வறுத்து எடுக்கும் பொழுது ஆலிவ் ஆயிலை நாம் தடவி விட்டோம் என்றால் வறுத்த கறி உடன் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கலாம்.
எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோவேவ் ஓவனில் குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.
பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடு வது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.
பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.

உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும்  ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
கொலஸ்ட்ராலை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய பேர் முட்டையை முழுவதுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான அணுகு முறையாகும். ஏனென்றால் முட்டையில் நிறைய புரதச்சத்துள்ளது. இதில் சோளின் ஒமேகா 3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபாலிக் ஆசிட் ஆகியவை கிடைக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய இதயத்திற்கு நல்லதாகும். முட்டையில் 200 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுபோக 4 மி.கி. கொழுப்புச்சத்துள்ளது. இக்கொழுப்புச்சத்தில் 2.4 கிராம் தனித்த கலப்பில்லாத கொழுப்புச் சத்தாகும். 0.6 கிராம் அளவிற்கு கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்தும் உள்ளது. இவையிரண்டும் நல்ல வகையான கொழுப்புச் சத்தாகும். ஹைட்ரஜன் கலந்துள்ள தவிர்க்கப்பட வேண்டிய கொழுப்புச்சத்து முட்டையில் 1.6 கிராம் அளவிற்குத்தான் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சளை நாம் விலக்கினோம் என்றால் அதன் வழியே நாம் கொலஸ்ட்ராலை தவிர்த்து விடலாம். முட்டையிலுள்ள வெள்ளை பாகத்தில் மஞ்சளில் இருப்பதைவிட அதிக புரதச்சத்துள்ளது. மேலும் அதே சமயத்தில் வெள்ளைப் பாகத்தில் கொலஸ்ட்ரால் எதுவுமேயில்லை.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.
2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.
3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.
4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் காய்ச்சிய வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.
5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.
6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.
7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். sterilized செய்யும் பொழுது பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் sterilized செய்யும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.

9. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்:
 இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
10. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். கச்ஞிடுடிணஞ் உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.
11. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள இடஞுஞுண்ஞுஇல் ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.
12. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.
13. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.
14. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவும், பிறசத்துகள் அதிகமாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
15. தயிர்: இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.
உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது. இந்தப் பசி இரு வகையானது. 1.உணர்வு மயமான பசி, 2. உடல் ரீதியான பசி.
1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு.
பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.
2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.

Tuesday, 17 April 2012

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது


அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது! தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது... பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரி்நதவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை. தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...வறட்டு இருமல்... வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும். இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.தேனீ கொட்டிடுத்தா... தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.காது வலிக்குதா ... அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே.  அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் இதைப் பரி்ந்துரைக்கிறது.பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா.. பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது. விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.வெயில் புண்ணால் அவதியா... கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினீகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம். அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினீகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில். ஓட்மீல் பேஸ்ட்டும் கூட நல்ல பலனைக் கொடுக்குமாம்.பூச்சி கடித்தால் நெய்ல் பாலிஷ்... பூச்சி கடித்தால் உடனே பயப்படாமல் வீட்டில் இருக்கும் நெய்ல்பாலிஷ், சுடச் சுட நீரை வைத்து அதை பூச்சி கடித்த இடத்தில் தடவலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம்.  நீங்கள் பயன்படுத்தும் நெய்ல் பாலிஷ் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தடவினால் உடனடியாக வலியும், எரிச்சலும் குறையுமாம். இருப்பினும் வெட்டுக் காயம் போன்றவை ஏற்படும்போது இதைத் தவிர்ப்பது நலம்.தலை முடி பிசுபிசுப்புக்கு... பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம். சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர்அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும். இதெல்லாம் வெறும் அனுபவத்தால் மட்டும் கூறப்பட்ட மருத்துவம் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஆய்வகங்கள், பல்கலைக்கழக ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவை. முயற்சித்துப் பாருங்களேன் ... SOURCE:http://thatstamil.oneindia.in

கோடையை குளிர்ச்சியாக்கும்.....


கோடையை குளிர்ச்சியாக்கும்
ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!
கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!அத்திப்பழ மில்க் ஷேக் தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்-- (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப். செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.
தர்ப்பூசணி ரசாயணம் தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது - பொடிப் பொடியாக நறுக்கவும்) - 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம். செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)ஆப்பிள் ஜூஸ் தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப். செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.
இளநீர் டிலைட் தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் - அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் - ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டீஸ்பூன். செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.
மேங்கோ லஸ்ஸி தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் - தலா அரை கப், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.தண்டை தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் - 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை டீஸ்பூன். அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் - 4 (அல்லது) 5.  செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
மாங்காய் பன்னா தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) - ஒன்று, சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் - ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் - சிறிதளவு. அலங்கரிக்க: புதினா இலை - சிறிதளவு. செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும். (இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் - மாங்காய்)தர்ப்பூசணி சிப் தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் - ஒரு கப், தயிர் - அரை கப், புதினா விழுது - அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் - அரை கப், மிளகுப் பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி - ஒரு டீஸ்பூன். செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.வெள்ளரி ஷேக் தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் - தலா ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது - தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப். செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம். மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!ரெட் வொண்டர் தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) - பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) - ஒன்று, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன். அலங்கரிக்க: புதினா இலைகள். செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். (கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)ரோஜா சர்பத் தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் - அரை கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு - அரை கப். செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.பரங்கிக்காய் டிலைட் தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) - அரை கப், முந்திரி விழுது - இரண்டு டீஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை. செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) - அரை கப், பொடித்த லவங்கப் பட்டை - அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் - தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) - சிறிதளவு, ஓட்ஸ் - 3 டீஸ்பூன்,  செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.மசாலா மோர்
தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, கொத்துமல்லி - அலங்கரிக்க. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.முலாம் பழ ஜூஸ் தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தக்காளி ஜூஸ்தேவையான பொருட்கள்: தக்காளி - 3, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - 3 டீஸ்பூன். அலங்கரிக்க: புதினா இலை - 5. செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
மின்ட் ஐஸ் டீ
தேவையான பொருட்கள்: புதினா இலை - கால் கப், கொதிக்கும் நீர் - ஒரு கப், க்ரீன் டீ - - 1 பாக்கெட், தேன் - ஒரு டீஸ்பூன். அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை. செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
சாக்லேட் ஸ்மூத்தி! தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) - - ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - - அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு. செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். மின்ட் ஜூஸ் தேவையான பொருட்கள்: புதினா இலை - 10, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள். செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.பீ நட் பட்டர் மில்க் ஷேக்தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ - நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் - டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) - ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்க்யூப். செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.பானகம்தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) - அரை கப், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 3 டீஸ்பூன். செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
லஸ்ஸிதேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் -- சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் -- ஒரு டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.மலாய் குல்ஃபி தேவையான பொருட்கள்: கெட்டியான பால் - ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு. செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.  குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
கஸ்டர்ட் தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் - துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், பால் - -150 மி.லி, சர்க்கரை- - 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் - -2 டீஸ்பூன் செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!எலுமிச்சை ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் - தலா 1 கப், சர்க்கரை - 2 கப், சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன். செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும். குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம். மேங்கோ ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் - 5, சர்ககரை - அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் - 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் - சிறிதளவு, தண்ணீர் - மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு. செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.திராட்சை ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு - 2 கப், சர்க்கரை - 4 கப், க்ரேப் எசன்ஸ் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், ஃபுட் கலர் - கால் டீஸ்பூன். செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.  தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.ஆரஞ்சு ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு - 2 கப், சர்க்கரை - 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன். செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.தக்காளி ஸ்குவாஷ் தேவையான பொருட்கள்: தக்காளி - ஒரு கிலோ, சர்க்கரை - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன். செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.
நன்றி: