Saturday, 7 July 2012

அழகான கண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா!!! கவனமா இருங்க...



 
ஆரோக்கியமான உணவு சாப்பிடாததால பார்வை குறைபாடு நிறைய பேருக்கு இருக்கு. அப்படி இருக்கிறவங்க யாரும் கண்ணாடி போட விரும்ப மாட்டீங்குறாங்க. ஏன்னா அது அவங்களோட அழக கெடுக்குதுன்னுதான். அதுக்கு பதிலா இப்ப புது டிரென்டா கான்டாக்ட் லென்ஸ் போடுறாங்க. கான்டாக்ட் லென்ஸ் போட்டா மட்டும் பத்தாது, அதை போடுறவங்க கவனமாவும் இருக்கணும்.

கான்டாக்ட் லென்ஸ் போடுறங்களுக்கு கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல், இதுலாம் எதுக்கு வருது? ஏன்னா அவங்க அதை போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதுனால அவங்க கண் தான் பாதிக்கப்படும். ஏனென்றால் கண் ரொம்ப சென்ஸிடிவ், அதை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். கான்டாக்ட் லென்ஸயும், அதை போடும் போதும் என்னென்ன ஃபாலோ பண்ணணும்-னு பாக்கலாமா!!!

1. கான்டாக்ட் லென்ஸ் போடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். கழுவியதும் கையை ஒரு சுத்தமான துணியால் துடைத்துப் பிறகு தான் லென்ஸ் போடணும்.

2. கான்டாக்ட் லென்ஸ் எப்படி போடணும்-னு கொடுத்திருக்கிற இன்ஸ்ட்ரக்ஸன்-அ நல்லா படிச்சு, அது மாதிரி செஞ்சா லென்ஸ் ஆனது ரொம்ப நாள் வரும்.

3. மிகவும் முக்கியமான ஒன்று, லென்ஸ் போடும் முன்னும், போட்டு எடுத்து வைக்கும் முன்னும் அதை கொடுத்திருக்கும் மருந்தால் மறக்காமல் கழுவ வேண்டும். இந்த மருந்து லென்ஸில் பாக்டீரியா இருந்தால் அழித்து விடும். மேலும் கண்களில் எந்த ஒரு நோயும் வராது.

4. லென்ஸை கண்ட இடங்களில் வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் அந்த பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

5. லென்ஸை கழுவும் மருந்தின் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். ஏனென்றால் மருந்தின் தேதி முடிந்தும் உபயோகித்தால் அது கண்களையே பாதிக்கும். ஆகவே அதன் தேதியை கவனிப்பது மிகவும் முக்கியம்.

6. இப்ப மார்க்கெட்-ல கான்டாக்ட் லென்ஸை கழுவுவதற்கு மருந்துகள் பல வந்துள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்வு செய்து உபயோகிக்கணும்.

7. குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும் போதும் கண்டிபாக கான்டாக்ட் லென்ஸை கழட்டி வெக்கணும்.

8. மேப் கப் போடும் முன் கான்டாக்ட் லென்ஸை போட்டு தான் போட வேண்டும்.

9. மேக் கப் கலச்ச அப்புறம், கையை ஒரு ஆன்டி பாக்டீரியல் சோப்பால கழுவிட்டு, சுத்தமான துணியால கையை துடைச்ச அப்பறம் தான், கான்டாக்ட் லென்ஸை கண்ணுல இருந்து எடுக்கணும்.

10. கான்டாக்ட் லென்ஸை போட்டு வெயில்ல போகும் போது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர் நேரா கண்ணுல படக்கூடாது. அப்ப கண்ணுக்கு சன்கிளாஸ் அல்லது தொப்பி போட்டு போக வேண்டும்.

நன்றி:போல்ட்  ஸ்கை

தெர்மோக்கோல்.... ஒரு விழிப்புணர்வு பார்வை!

தெர்மோக்கோல் என்னும் அரக்கன்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...


அன்பர்களே....

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 


இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..
இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.

இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற  இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். 

பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு ....  மக்கும் தன்மையே கிடையாது...

ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...
இவை அனைத்தும் பூமிக்கு கேடு...


வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில் 
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக 
செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. 

முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி 
செய்யப்பட்டவையே...

இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர 
பயன் தரும் பொருட்கள் செய்து...பணம் ஈட்டலாம்...

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...
4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்...
வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)
  
5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள் 
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும். 

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

9.நாமே ஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி 
அதனுள் இதை எரிய விடலாம்...(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
(பார்க்க படம்.)

10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்...

விடியோக்கள்  பார்க்க

அன்பர்களே...பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் ... பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்...ஆனால் இந்த தெர்மொகோல் 
பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை  அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்...சற்றே  சிந்தித்து...இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...

இவற்றை பாதுகாப்பாக அழிக்க வேறு ஏதாவது யோசனைகள் இருந்தால் கமெண்ட்-ல் பகிரவும்...இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்... 

தமிழக பதிவர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை...

அன்பர்களே..
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்றும் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...

எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும் 
கடையாக பார்த்து வாங்கவும்....
 கழுகிற்காக
J.நக்கீரன்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, July 4, 2012, 21:58


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.
இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி
இது குறித்து TimesNow வெளியிட்டுள்ள வீடியோ செய்தி


Wednesday, 4 July 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-20

*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.

* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.

* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.

* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.

* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
 
இணையத்திலிருந்து

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...


பழமொழிகள்



  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

நாவடக்கம் - حفظ اللسان


ஆலிமா எம். வை. மஸிய்யா B.A (Hons)

அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது.

மனிதனை மதிப்பிட உதவுவது

ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன் என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே வழங்கியுள்ளனர்.
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்].

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன்

நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,
“முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான் [அல்-அஹ்ஸாப்: 70, 71].

 இவ்வசனங்கள் தரும் படிப்பினைகளை நோக்குவோம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ . مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

“(மனிதனுக்கு) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும்போது (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை [காப்: 17, 18].

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்,
¨ இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.
¨ நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.
¨ அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.
¨ நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:

¨ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].
¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் [அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].
¨ “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும் என்றனர். (மீண்டும்) அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, இதைத்தான் (பயப்படுகிறேன்) எனக் கூறினர். [அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

நா காக்காவிடின் நரகமா?

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது. [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

நடைமுறை வாழ்வில் நாவினால் செய்யப்படும் தீமைகள்

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போம் (இன்ஷா அல்லாஹ்).

Sunday, 10 June 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-19


 
 
* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.

*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர்.

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.
Posted Image

மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்!

சுய தொழில்கள்-32 அட்டைப் பெட்டிகள் தொழில்

அட்டைப் பெட்டிகள் தொழில்

டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மருந்துப் பொருட்கள், ஜவுளிகள், கண்ணாடிப் பொருட்கள், பிஸ்கெட், சோப் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுபவை அட்டைப் பெட்டிகள். அட்டைப் பெட்டிகளை நமக்குத் தேவையான அளவில் உருவாக்கிக் கொள்வதோடு, அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கிருக்கும் வர்த்தகப் பயன்பாடு மிக அதிகம்.

சந்தை வாய்ப்பு!

அட்டைப் பெட்டியின் பயன்பாடு ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், புது யூனிட்கள் தொடங்குவதன் மூலம் இந்தத் தொழிலில் இருக்கும் தேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்ற தொழிலில் இல்லாத ஒரு வசதி இதில் இருக்கிறது. அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து அதை நல்ல விலைக்கு விற்பது ஒருபுறமிருக்க, தயாரிப்பின் போது பெட்டிகள் கிழிந்து போனாலோ டேமேஜ் ஆனாலோகூட பதறாமல் அவற்றையும் விற்றுவிடமுடியும். இவற்றை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கான டிமாண்டும் இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத இந்தத் தொழிலுக்கு இருக்கும் மரியாதை அதிகம்தான்.

உற்பத்தித் திறன்!

நாம் இங்கே பார்க்க இருப்பது ஆண்டுக்கு 400 டன் உற்பத்தித் திறனுக்கானது.

நிலம் மற்றும் கட்டடம்!

மொத்தமாக இந்த உற்பத்தித் திறனுக்கு 2,000 சதுர அடி இடம் தேவைப்படும். இதில் 1,500 சதுர அடியில் கட்டடம் இருக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் தண்ணீர்!

நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.

மூலப் பொருட்கள்!

அட்டைப் பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் கிராப்ட் பேப்பர் எனப்படும் பேப்பர் ரோல். பேப்பர் ரோலின் அடர்த்திக்கு ஏற்றவாறு அட்டையின் தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் உள்ளன. இந்த அடர்த்தியைப் பொறுத்தே அட்டைப் பெட்டியின் கனமும், உழைப்பும் இருக்கும். இதன் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருட்கள் தொடங்கி, கடைசியாக அட்டைப் பெட்டி உருவாகும்வரை மொத்தம் ஆறு இயந்திரங்கள் தேவை. இவற்றின் விலை எட்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். இந்த ஆறு இயந்திரங்களும்

பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கிறது. பிற மாநிலங்களில் தயாராகும் இயந்திரங்கள் தரத்தில் சிறந்ததாக இருப்பதில்லை. ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகும் ஒரே ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரம், இந்த ஆறு இயந்திரங்களின் வேலையைச் செய்துவிடும். ஆனால், இதன் விலை ஒரு கோடி ரூபாய். அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இந்த இயந்திரத்தை வாங்கலாம்.

தயாரிப்பு முறை!

1. கார்கேஷன்: இந்த மெஷினில்தான் அட்டைப் பெட்டி செய்வதற்கான முதல் படி தொடங்கு கிறது. பேப்பர் வடிவிலான ஷீட் இந்த கார்கேஷன் மெஷினைக் கொண்டு ஸ்பிரிங் வடிவில் மடிக்கப் படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

2. பேப்பர் கட்டிங் மெஷின்: இந்த மெஷின் மூலம் பெட்டியின் அளவுக்கு ஏற்ப பேப்பரை வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

3. பேஸ்ட் மெஷின்: இந்த மெஷினில் ஸ்பிரிங் போன்ற வடிவிலான பேப்பரை நடுவில் வைத்து, அதன் இரு பக்கங்களிலும் பேஸ்ட் தடவி பேப்பர் ஒட்டப்படுகிறது. இப்படி செய்யப்படும் அட்டையானது மூன்று அடுக்குகளைக் கொண்டி ருக்கும். இந்த அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அட்டைப் பெட்டியின் தரம் கூடும். இப்படி ஒன்பது அடுக்கு வரை போடப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டிலிருந்து மூன்று ஆட்கள் வரை தேவை.

4. ரோட்டரி மெஷின்: தயாராகும் அட்டையை பெட்டிக்கேற்ப கட் செய்வது மற்றும் பெட்டி செய்ய ஏதுவாக ஓரங்களை மடக்க பயன்படும் மடிப்புகளைச் செய்து தருவது ஆகியவை இந்த மெஷினின் வேலை. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

5. ஸ்லாட்டிங் மெஷின்: மடிக்கப்பட்ட அட்டைகளில் பின் அடிப்பதற்கு தகுந்தவாறு ஆக்குவது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது ஒரு ஆள் போதும்.

6. டிச்சிங் மெஷின்: இந்த மெஷினின் வேலை, தயாரித்த பெட்டியின் நான்கு பக்கத்தினையும் மடக்கி பின் அடிப்பது. இந்த வேலையைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

இந்த அட்டைப் பெட்டி தயாரிக்க ஒருநாளில் சுமார் 12 பேர்கள் தேவைப்படுவார்கள். ஒரு ஷிப்ட்டில் பெரிய பெட்டி எனில் ஐந்நூறும் சின்ன பெட்டி என்றால் ஆயிரமும் தயார் செய்யலாம்.

பிளஸ்

அதிக பயன்பாடு இருக்கும் தொழில் என்பதால், தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

மைனஸ்

மூலப் பொருளான பேப்பர் ரோலின் விலை ஏற்ற இறக்கம் காண்பது.

பேக்கிங் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு எக்காலத்திலும் டிமாண்ட் இருக்கும் என்பதால் புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் தாராளமாக இதில் இறங்கலாம்.

நான் இந்தத் தொழிலைத் தொடங்கி 12 வருஷம் ஆகிறது. இந்தத் தொழிலை பொறுத்தவரை, முதலீடுதான் முக்கியம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது என்னிடம் குறைந்த அளவு முதலீடே இருந்தது. அப்புறம் வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் தொடங்கினேன். இப்போது நன்றாகத் தொழில் வளர்ந்திருக்கிறது. பலரும் இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதால் பலமான போட்டி இருக்கவே செய்கிறது. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரம்தான் வாடிக்கையாளர்கள் சாய்ஸ். வாடிக்கையாளர்கள் என்ன அளவு மற்றும் தடிமனில் பெட்டி செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாகச் செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களைவிட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள்.
Thnxs:Company Name: PREMIUM INTERNATIONAL
Street Address: 65, PAVALIAN STREET
City: SIVAKASI
Province/State: Tamil Nadu  
Country/Region: India  
Zip: 626123
Telephone: 91-4562-277375
Mobile Phone: 09842927732
Fax: 91-4562-277357
 

கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்



ருமை நண்பர்களே !!!
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.

ழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]

செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.

ப்பழத்தை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.

கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில் இது போன்ற பழவியாபாரிகளுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனே சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்
கால்சியம் கார்பைட் கற்களின் படம்[விக்கீபீடியா]
கால்சியம் கார்பைடின் ரசாயன குணங்கள்:-
Hazards
NFPA 704
NFPA 704.svg
3
3
2
W
Health (Blue)
3 Short exposure could cause serious temporary or moderate residual injury (e.g., chlorine gas)
Flammability (Red)
3 Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions (e.g., gasoline). Liquids having a Flash point below 23°C (73°F) and having a Boiling point at or above 38°C (100°F) or having a Flash point between 23°C (73°F) and 38°C (100°F)
Instability/Reactivity (Yellow)
Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water (e.g., phosphorus, potassium, sodium)
Special (White)
W Reacts with water in an unusual or dangerous manner (e.g., cesium, sodium, sulfuric acid)
நன்றி விக்கீபீடியா.

சுய தொழில்கள்-31 சீட் கவர் தயாரிப்பு

 
கலக்கல் லாபம் தரும் இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு


ஜெ.மாதவி : வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.

தயாரிக்கும் முறை

இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)


முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.

உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.

கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.

லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.

சந்தை வாய்ப்பு

இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது