Monday, 27 August 2012

மன்னிக்கும் குணம் இருக்கிறதா? உங்களுக்கு இதயநோய் வராது: ஆய்வில் தகவல்.


இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு;



 
கோபம் பற்றி இஸ்லாம்; 
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல் : புகாரி 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
************************************************************
நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அய்ந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்வதையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். 
(செய்தி மட்டும்) நன்றி; விடுதலை 21 -8 -12

மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்


உங்களுடைய வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், மொபைல் போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு முடிவினை மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ஓர் அறிக்கையில் அளித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல துறைகளுக்கான அமைச்சரவை இணைந்து, மொபைல் போன் டவரின் மின் காந்த அலைக்கதிர் வெளிப்பாட்டினைக் 450 mw/sq m என்ற அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தன. ஆனால், இன்றுவரை இது அமல்படுத்தப்படவில்லை என பேரா. குமார் தெரிவித்துள்ளார்.
இது சார்ந்து மேற்கொண்ட இன்னொரு ஆய்வில், இந்த கோபுரங்கள் அருகே வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு மூளையில் கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், மிக அருகே வசிப்பவர்களுக்கு, தூக்கமின்மை, தலைவலி, மயக்கம், மூட்டுவலி போன்றவையும் வரலாம். தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி போன்றவை வர வாய்ப்புள்ளதாக, புது டில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் அறுவை மருத்துவர் டாக்டர் சமீர் கௌல் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு மென்மையான தலை ஓட்டினைக் கொண்டுள்ள சிறுவர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், மொபைல் போன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான அமைப்பு இதனை மறுத்துள்ளது. அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் கதிர்வீச்சுடன்தான் தற்போது மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாதிப்பு வர வாய்ப்பில்லை என்று அந்த அமைப்பின் முதன்மை இயக்குநர் மாத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கோபுரங்கள் பாதுகாப்பாகத்தான் இயங்குகின்றன என்றால், ஏன் அது குறித்து இத்தனை சட்டங்களும், ஆய்வுகளும் இருக்கின்றன என்று பொது நல அமைப்பாளர்கள் கேட்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோபுரங்கள் உள்ள இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
நன்றி : உங்களுக்காக

உயிர் உடைத்த புகைப்படம்...




புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?


கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி  ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


 ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am  Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

Wednesday, 22 August 2012

"என்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை?





டெல்லி:நாடு முழுவதும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.


ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“அரசுக்கு எதிராக வேலை செய்பவர்கள், கலவரத்தில் ஈடுபடுபவர்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்பவர்கள், பெண்களையும், குழந்தைகளையும் சித்திரவதை செய்பவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்பதனாலேயே இங்கே துன்பப்படுகின்றேன்.”

-முர்துஸா (29), மகாராஷ்ட்ராவில் ஜவுளி ஏற்றுமதி முகவர், ரகசிய காப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். (மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸோஷியல் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழுவிடம் இவர் தெரிவித்தது.)

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதற்காக தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். அதன் பின்பாவது மீடியாவின் ஒரு பிரிவினராலும், புலனாய்வுத் துறையினராலும் முஸ்லிம்களை ‘பயங்கரவாதிகள்’, ‘அடிப்படைவாதிகள்’ என்றழைப்பது நின்று போகும், உண்மையான சவாலான காவி பயங்கரவாதத்திற்கெதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள்.

ஆனால், அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. மாறாக, நேரெதிரான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன.

காவல்துறையோ, புலனாய்வுத் துறையோ, நுண்ணறிவுப் பிரிவோ கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பாடம் பயின்றதாகத் தெரியவில்லை.
ஓர் அறிவிக்கப்படாத அவசரநிலை (எமர்ஜென்சி) இன்று அமுலில் உள்ளது. முஸ்லிம்கள், பழங்குடியினர், ஏழை எளிய மக்கள் ஆகியோரே இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். இப்படி தொடுத்து நடத்தப்படும் சித்திரவதைகளையும், பாகுபாட்டையும் நீதித்துறை கூட கண்டுகொள்ளத் தவறிவிட்டது.

கதீல் சித்தீக்கி, ஃபஸீஹ் மஹ்மூத்

கதீல் முஹம்மத் சித்தீக்கி என்பவர் புனேயிலுள்ள ஏர்வாடா சிறையில் கஸ்டடியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக அரசே நடத்தும் தொடர் கொலைகளின் தற்போதைய நிகழ்வு இது.

அதிக பாதுகாப்புள்ள அறையில் வைத்து அதே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் கதீல்.

முன்னதாக கதீல் டெல்லி காவல்துறையின் சிறப்பு செல்லினால் கைது செய்யப்பட்டு, மும்பை போலீசின் பயங்கரவாதத்திற்கெதிரான படையின் காவலில் இருந்தார்.

இஸ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், பிரஜாபதி, சொஹ்ரபுத்தீன் ஷேக் போன்றோர் குஜராத் போலீசின் போலி மோதல்களில் கொல்லப்பட்டதும், டெல்லி பாட்லா ஹவுசில் ஆதிஃப் அமீன், முஹம்மத் ஸாஜித் ஆகியோர் கொல்லப்பட்டதும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறது என்று ஏற்கனவே இந்திய ஜனநாயகத்தின் பெயர் கடுமையாக கெட்டுப் போகும் அபாயத்தில் இருக்கிறது. ஆனால் அதனை உணராமல் தனது மதச்சார்பற்ற தன்மையைத் தக்க வைக்கத் தவறி வருகிறது அரசு.

சிறுபான்மையினரை வேட்டையாடும் அடுத்த கட்டமாக பீகாரைச் சார்ந்த ஃபஸீஹ் மஹ்மூத் என்ற பொறியாளர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுண்ணறிவுப் பிரிவினரால் ஃபஸீஹ் கைது செய்யப்பட்ட விதமும், அதனைத் தொடர்ந்து அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்று யாருக்கும் தெரியாததும் மர்மக் கதையாகவே உள்ளன. அவரின் குடும்பத்தார் தைரியமாக எடுத்த சில முயற்சிகளினால் உச்சநீதிமன்றம் ஃபஸீஹின் இருப்பிடம் குறித்து மத்திய அரசிடம் வினவியது. இது இந்திய நுண்ணறிவுப் பிரிவினரால் செய்யப்பட்ட வேலையே என்று ஃபஸீஹின் குடும்பத்தார் தகுந்த ஆதாரங்களுடன் உறுதியாகக் கூறுகின்றனர்.

மொத்த நாட்டையுமே சூறையாடுபவர்களையும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடும் படு பயங்கரமான கிரிமினல்களையும் சுதந்திரமாகத் திரிய விடும் நுண்ணறிவுப் பிரிவும், பாதுகாப்புப் பிரிவுகளும் ஏன் இப்படி மர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று யாருக்கும் புரியவில்லை.

வலதுசாரி ஹிந்துத்துவா கொள்கையுடன் அனுசரித்துப் போகும் நமது பாதுகாப்புக் கொள்கைகள்தான் இம்மாதிரி இமாலயப் பாகுபாட்டுக்கு முக்கிய காரணம்.

சட்டவிரோதக் காவல், கொட்டடி சித்திரவதைகள் என்று கண்ணீர்க் கதைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
டெல்லியைச் சார்ந்த 32 வயது முஹம்மத் ஆமிரின் கதை அப்பேற்பட்டதுதான். அவர் ‘பயங்கரவாத’ குற்றம் சுமத்தப்பட்டு 1998ம் ஆண்டு அவருக்கு 18 வயதாக இருக்கும்பொழுது கைது செய்யப்பட்டார். ஆனால் ஆமிருக்கு அப்பொழுது தெரியாது தான் நீண்ட 14 வருடங்களுக்கு திஹார் சிறையில் அடைபட்டுக் கிடக்கப்போகிறோம் என்று. அதுவும் தன் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டது என்றே தெரியாமல்.

அவர் மீது மொத்தம் 20 வழக்குகள் போடப்பட்டிருந்தன. 18 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டு விட்டார். மீதி இருக்கும் இரண்டு வழக்குகளிலும் குற்றங்களை நிரூபிப்பதற்கு காவல்துறைக்கு இவருக்கெதிராக எந்த ஆதாரமும் இல்லை.
இப்படி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இளமை வாழ்க்கை அரசால் அழிக்கப்பட்டு விட்டது. ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ நடக்கும் வேளையில் பக்கவாட்டில் நடக்கும் பாதிப்பு என்று இதனை ஒதுக்கிவிட முடியாது.

அதிர்ஷ்டமில்லாத விசாரணைக் கைதியான அப்துந் நாசர் மஃதனி குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்று விடுவிக்கப்படுவதற்கு 9 வருடங்கள் கோவை சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது.

ஆனால், அவர் விடுதலையானவுடனேயே, மீண்டும் அதே விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் – இம்முறை கர்நாடகா போலீசால்! விசாரணைக் காவல் என்ற பெயரில் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

உடலில் பல நோய்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மார்க்கப் பண்டிதரான மஃதனியின் பிணை மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. கர்நாடகாவை ஆளும் ஹிந்துத்துவா அரசு மஃதனியை விடுவிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கையைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி நிராகரித்து வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்ட பின்பும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. அவர்கள் எப்பொழுதும் கண்காணிக்கப்படுகின்றனர். சமூகம் எப்படி இவர்களைப் பார்க்கிறது அல்லது சமூகத்தை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

இளைஞர்களைக் கைது செய்வதிலும், துன்புறுத்துவதிலும் மிக வேகமாக இருக்கும் அரசு, அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட பின் சட்டவிரோதக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதில் மிகவும் தயக்கமும், தாமதமும் காட்டுகிறது.

சிறைகள்:முஸ்லிம்கள் அதிகப் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே இடம்.

மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் குற்றவியல் மற்றும் நீதிக்கான மையத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வறிக்கை மகாராஷ்ட்ராவில் முஸ்லிம்களின் அதிர்ச்சிகர நிலையை எடுத்துரைக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மகாராஷ்ட்ரா முஸ்லிம்களுக்கு எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தோர் என்ற ஒரே காரணத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த அளவுக்குக் கடுமையான பாரபட்சம் போலீசாரிடம் நிலவுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

மகாராஷ்ட்ராவில் ஆர்தர் சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 19 வயது நிரம்பிய அப்பாவி ஜலால் போன்று பல சிறைவாசிகளுக்கு அவர்கள் மேல் என்ன வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை.

தங்கள் மக்கள் தொகைக்கு அதிகமாக சிறைகளில் பிரதிநிதித்துவம் உள்ள முஸ்லிம்களின் நிலை மகாராஷ்ட்ராவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலைதான்.

சச்சார் கமிட்டியின் கருத்துப்படி, கல்வியிலும், அரசு வேலைகளிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதேசமயம், சிறைகளில் மட்டும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கிறது.

29.10.2006 தேதியிட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் சிறைவாசிகளின் நிலை குறித்து சச்சார் கமிட்டியின் கண்டுபிடிப்புகளைக் கொண்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:

மீண்டும் ஒன்றுகூடும் சிமி கதை

இந்தச் சட்டவிரோதக் கைதுகளை நடுத்தர வர்க்கத்திடம் நியாயமானதுதான் என்று திணிப்பதற்கு பாரபட்சமுள்ள மீடியாவுக்கும் இந்த சிமி கதை உதவுகின்றது.

சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையும் அல்லது நிறுவனத்தையும் களங்கப்படுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் இந்த சிமி கதை பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலமான சந்தேகம் நிலவுகிறது.

முஸ்லிம் தீவிரவாதிகளைப் பிடிக்கின்றோம் என்ற பெயரில் 15 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட பலமான முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக களங்கப்படுத்தப்படுகின்றது. இந்தச் சட்டவிரோத ஈனச் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவு.

மாறாக, சில வேளைகளில் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நடந்த மாதிரி அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. மனித உரிமை மீறல்களில் நாம் மிகவும் முன்னணியில் உள்ளோம். காவல்துறையினரும், பாதுகாப்புத் துறையினரும் மிகவும் ஆபத்தான சிந்தனைப் போக்கில் பணி புரிகிறார்கள்.

கறுப்புச் சட்டங்களும், கறுப்பு ஆடுகளும்!

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நீதித்துறையும் இம்மாதிரி சட்டவிரோதக் கைதுகளைக் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிடுகின்றது. வேகமான, வெளிப்படையான நீதி விசாரணை நடந்தால் இந்த மண்ணில் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை நிலை நிற்கும்.

போலீசையும், புலனாய்வுத் துறையையும் முழுவதுமாகச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு, புலனாய்வு, நுண்ணறிவு போன்ற துறைகளில் முஸ்லிம்களின், இன்னபிற சிறுபான்மையினரின் உரிய பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்பட அரசு தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.

பல ஆண்டுகள் சிறையில் வைத்து பின் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டும். தவறு செய்த அதிகாரிகளுக்குத் தக்க தண்டனை அளிக்கவேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற சிறுபான்மை துன்புறுத்தல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கப்படும்.

நீதித்துறையும் இதில் விழிப்பாக இருக்கவேண்டும். நாட்டில் எந்த ஒரு குடிமகனும் அவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதனால் மட்டுமே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படாமல் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் இந்தச் சமூகம் அன்னியப்படுத்தப்பட்டு, தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கப்ட்டுக்கொண்டே இருக்கும்.

நீதிக்காக எழுந்திருங்கள்!

சட்டவிரோதமான கைதுகள் நிறுத்தப்படுவதற்கான போராட்டத்தை பொது சமூகம் பலப்படுத்துவதற்கான உரிய தருணம் இது. விசாரணைக் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவதில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக் கூடாது. சட்டவிரோதமாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நீண்ட நாட்கள் வைப்பதற்கு ஏதுவான எல்லா கறுப்புச் சட்டங்களும் பின்வாங்கப்பட வேண்டும்.

அப்பாவிக் கைதிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்குத் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தண்டிப்பதற்குண்டான சட்டங்களும் இயற்றப்படவேண்டும்.

சிறுபான்மை வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிடவும், நீதியின் அடிப்படையில் நம் தேசத்தைக் கட்டியெழுப்பிடவும் தேசிய அளவில் ஒர் இயக்கம் கம்பீரமாக எழும்பிட வேண்டும்.

Thursday, 16 August 2012

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!


Health Benefits of Figs - Food Habits and Nutrition Guide in Tamil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
* முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

பாட்டி வைத்தியம்

Tuesday, 7 August 2012

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

 
சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்...லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப் பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் "அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்" என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் "இஸ்லாம் & முஸ்லிம்" என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான "என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?" என்பதை முன் வைத்தார்.

இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

"மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

----ooOoo----

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் 'ஜம்மியத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், "தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக"ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.

பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

"வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்" என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.

----ooOoo----

ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், "முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்" என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

"முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.

கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். "மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்றார் டாக்டர் ஜைனப்.

அபூ ஸாலிஹா

யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி

 
யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி

''ட்ரூ கால்'' islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''

உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உ...ள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.
ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.

ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.

முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.

ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.

ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?

முஹம்மது யூஃஸுப்: சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ''சுன்னா''வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட 'தர்ஹா' வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ!)

ட்ரூ கால்: சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி...?

முஹம்மது யூஃஸுப்: அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ''ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 - 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.

ட்ரூ கால்: இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்... இல்லையா?

முஹம்மது யூஃஸுப்: ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது அவர்களுடைய தவறு அல்ல இது நம்முடைய தவறு தான என்று உறுதியாக சொல்லலாம்.. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.

ட்ரூ கால்: இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?

முஹம்மது யூஃஸுப்: நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ''இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி'' என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த 'அழைப்புப்பணி'யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.

ட்ரூ கால்: குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.

ட்ரூ கால்: (இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ''இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்: நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.

ட்ரூ கால்: நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?

முஹம்மது யூஃஸுப்: அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.

ட்ரூ கால்: நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.

ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ''சுன்னா''வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடிணமான காரியமல்ல.

ட்ரூ கால்: நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்: ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையான ''சுன்னா'' வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.

ட்ரூ கால்: உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

முஹம்மது யூஃஸுப்: இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.

ட்ரூ கால்: உங்களின் பரபரப்பாக நேரத்தில் ''பேட்டி'' அளித்தமைக்கு மிக்க நன்றி.

முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا - Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ

உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்

 
உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்

லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார்.
ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி... துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’ என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.

‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.

‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.

‘இதென்ன வேடிக்கை! எனது ஆடையை நானே சுத்தம் செய்கிறேன் என்றால் எதற்காக உங்களிடம் அதை நான் தரவேண்டும்? உண்மையில் நான் உடுத்திய ஆடையை துவைக்காமல் அப்படியே தான் உங்களிடம் தருகிறேன்’ என்று எதார்த்த நிலையை அப்பெண்ணிடம் சொன்னார் மாணவர்.

இந்த பதில் அந்த ஆங்கிலப் பணிப்பெண்ணை வியப்பின் உச்சிக்கே இழுத்துச்சென்றது. ‘உண்மை நிலை நீங்கள் சொல்வது எனில் மற்ற மாணவர்களுடைய உள்ளாடையில் நான் காணும்; ஒருவித கறையும், துர்வாடையும் உங்களது ஆடையில் மட்டும் காண முடிவதில்லையே! ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினார்.

அந்த மாணவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சொன்னார், ‘சகோதரியே! நான் ஒரு முஸ்லிம். எனது மார்க்கம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்னை பணிக்கின்றது. எனது ஆடையில் ஒரு துளி சிறுநீர் பட்டுவிட்டாலும் கூட அதை உடனே கழுகி சுத்தம் செய்யாத நிலையில் என் இறைவனை நான் வணங்க முடியாது. எனது ஆடையில் துர்வாடையோ, அசுத்தமோ காணப்படாமல், உடுத்தி களைந்த ஆடைகூட துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைபோல் சுத்தமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!’ என்று விளக்கமளித்தார்.

இதைக்கேட்ட மாத்திரத்தில் அப்பெண், ‘இஸ்லாம் இவ்வளவு சிறிய விஷயத்தில் கூட கற்றுத்தருகிறதா?’ என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்.

அப்பணிப்பெண்ணுக்கு அவ்வாலிபரின் பேச்சு பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பியது. இதன்பின் அந்த ஆங்கிலப்பெண், அந்த முஸ்லிம் மாணவரின் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவ்வாலிபரின் எளிமை, தூய்மை, பத்தினித்தனம், கலாச்சாரம், வீணான பேச்சுக்களைவிட்டும் ஒதுங்கியிருக்கும் பண்பு இவையணைத்தும் அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் ஒளி குடியேறக் காரணமாயிற்று.

படிப்படியாக அவ்வாலிபரிடம் இஸ்லாத்தைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். இதனால் அப்பெண்ணின் உள்ளத்தில் உண்மையான ஈமானிய ஒளிக்கதிர் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.

இறுதியில் தனது குடும்ப அங்கத்தினர் பலருடன் இஸ்லாத்தின் அரவணைப்பில் வந்துவிட்டடார்.

(ஆதாரம்: ‘அத்தளாமுனில் இஸ்லாமி’ எனும் அரபி நாளேடு)
 

''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.

இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

 
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றே...ார்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ''ஏன்?''

அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.

''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

( இக்கட்டுரை முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து சுவனத்தென்றல் நிர்வாகியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.)


''Jazaakallaahu khairan'' - Suvanathendral.com

21 மணிநேர நோன்பை கடைபிடிக்கும் டென்மார்க், ரஷ்யா முஸ்லிம்கள் ..!



டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே
நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.

அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்