|
உங்களுடைய
வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், மொபைல்
போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ்
அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள
ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ்
குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு
முடிவினை மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ஓர் அறிக்கையில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல துறைகளுக்கான அமைச்சரவை இணைந்து, மொபைல்
போன் டவரின் மின் காந்த அலைக்கதிர் வெளிப்பாட்டினைக் 450 mw/sq m என்ற
அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தன. ஆனால், இன்றுவரை
இது அமல்படுத்தப்படவில்லை என பேரா. குமார் தெரிவித்துள்ளார்.
இது சார்ந்து மேற்கொண்ட இன்னொரு ஆய்வில், இந்த கோபுரங்கள் அருகே வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு மூளையில் கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், மிக அருகே வசிப்பவர்களுக்கு, தூக்கமின்மை, தலைவலி, மயக்கம், மூட்டுவலி போன்றவையும் வரலாம். தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி போன்றவை வர வாய்ப்புள்ளதாக, புது டில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் அறுவை மருத்துவர் டாக்டர் சமீர் கௌல் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு மென்மையான தலை ஓட்டினைக் கொண்டுள்ள சிறுவர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், மொபைல் போன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான அமைப்பு இதனை மறுத்துள்ளது. அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் கதிர்வீச்சுடன்தான் தற்போது மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாதிப்பு வர வாய்ப்பில்லை என்று அந்த அமைப்பின் முதன்மை இயக்குநர் மாத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கோபுரங்கள் பாதுகாப்பாகத்தான் இயங்குகின்றன என்றால், ஏன் அது குறித்து இத்தனை சட்டங்களும், ஆய்வுகளும் இருக்கின்றன என்று பொது நல அமைப்பாளர்கள் கேட்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோபுரங்கள் உள்ள இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

நன்றி : உங்களுக்காக
No comments:
Post a Comment