Sunday, 7 October 2012

பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்



என் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தலையை தரையில் பதித்தேன்

பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தியாம்ஸ் என்றழைக்கப்படும் மெலனி ஜார்ஜியடெஸ் (Mélanie Georgiades, known as Diam’s) பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சுமார் மூன்று வருடங்களாக தமது இசை நிகழ்ச்சிகளை விட்டு ஒதுங்கிக்காணப்பட்ட அவர் என்ன செய்கிறார் என்ற ஏக
்கம் ஆவலும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியை கொடுத்தார்.

TF1 என்ற தனியார் தொலைக்காட்சியில் பர்தாவுடன் தோன்றிய அவர் தாம் இஸ்லாத்தினை பரிப்பூர்ணமாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை பிரென்ஞ் அரசு தடை செய்தாலும் அதற்கு மாற்றமான விளைவுகளையே அது சந்தித்துவருவதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு

தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சவுகர்யமாகவும் அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்று பதிலளித்தார். இஸ்லாத்தினை நன்கு உணர்ந்த பிறகும் புனித குர்ஆனை நன்கு படித்த பின்புமே முழுமனதுடன் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தற்போது நான் ஏன் வாழ்கிறேன் எதற்காக பூமியில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன் என்றும் கூறினார்.

என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் தாம் தொழுகைக்கு செல்வதாக கூறினார் அப்போது தாமும் வருவதாக கூறி தொழுகைக்கு சென்றேன். அப்போது என் வாழ்நாளில் முதல் முதலாக என்னுடைய தலையை தரையில் பதித்தேன். அப்போது தமக்கு ஏற்பட்ட உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பதை உணர்ந்தேன். அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது என்பதனையும் உணர்ந்தேன் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment