Tuesday, 23 October 2012

மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!

ரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.
மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.

அறுவைசிகிச்சை அரங்குடன் கூடிய இந்த மருத்துவமனையில் மாதம் 45 முதல் 50 அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. அடுத்துத் தீவிரச் சிகிச்சைப் பிரிவும் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் களஞ்சியம் அமைப்பின் 18 வட்டாரத் தலைவர்கள்தான், இந்த மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர்கள். அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படிதான் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனையை அடுத்த ஐந்து ஆண்டுகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பது இவர்கள் கனவு.
இந்தத் திட்டம் எப்படிச் சாத்தியமானது? மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் ராஜபாண்டியனிடம் கேட்டோம். 'இந்த மருத்துவமனை ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. தானம் அறக்கட்டளையின் சுகாதாரத் திட்டத்தின் படிப்படியான வளர்ச்சிதான் இந்த மருத்துவமனை. மதுரையைத் தலைமையிடமாகக்கொண்ட தானம் அறக்கட்டளை, கிராமப்ப�

No comments:

Post a Comment