Tuesday 29 January 2013

உலகின் அதிகூடிய கொள்ளளவை கொண்ட USB Flash Drive.

உலகின் அதிகூடிய கொள்ளளவை கொண்ட USB Flash Drive.

டிஜிட்டல் நினைவகங்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான kingston நிறுவனமானது  அண்மையில் 1TB எனும் அதி கூடிய நினைவகத்தை கொண்ட USB Flash Drive ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மேற்பகுதி zinc alloy எனும் உலோகக் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் USB 3.0 க்கு ஆதரவளிக்கும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Kingston 1tb flash drive
இதன் மூலம் 160 MB per second எனும் வேகத்தில் தரவுகளை சேமிக்க முடிவதுடன் 240 MB per second எனும் வேகத்தில் தரவுகளை வாசிக்கவும் முடியும். மேலும் முறையே 2.83″ x 1.06″ x 0.83″. எனும் நீளம், அகலம், உயரத்தினையும் கொண்டுள்ளது.
இது Windows 8, Windows 7, Windows Vista, Windows XP and Linux போன்ற இயங்குதளங்களுக்கு ஆதரவளிக்ககூடியதுடன், இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment