Monday, 17 October 2011

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை



மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில்பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசிகாதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்துஹிந்துவாக்கி மனம்புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும்மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள்  இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும்ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களேசகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும்கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்: 
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள்என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது
5. மார்க்கத்தை போதிக்காமல்காதல் படம்பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரம்.. வீட்டில் தனி அறைதனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.. பெண்களை தனியாக ஜவுளி கடைநகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)
1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்
2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளிகல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவதுதிரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள்மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்
4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது
5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் த வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது
6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர்கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்
7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில்அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோமெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே
9. கல்லூரிபள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறிபார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன்பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோஉணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும்  தெரியப்படுத்துங்கள்
12. முதன்மையாக ஆண்,ெண் இருவருடைய உள்ளத்திலும்செயலிலும் இறையச்சம்ஈமான் இருக்க வேண்டும்
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள்பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும்செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள்இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளிகல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும்தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும்பெற்றோரையும்சகோதரர்களையும்,வுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்
இறுதியில் இளமையும்செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல்எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம்மறுமையிலும் நரகம்
கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???
அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.
வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமனம் செய்கின்றார்.. சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..
தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும்வினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.
தனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெறிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.
தொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும்அனைத்து விபரங்களையும் தெறிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும்அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உவு கொள்கின்றான்.
கணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெறிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.
காலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான்வெளியில் தெறிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன்பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.
அவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பம்நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.
கதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திறிகிறாள்.
இது ஒரு உண்மைச்சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆக பெண்களேமாவிகளேஉங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கிஉங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்!!.
பெற்றோர்களேகணவன்மார்களேநீங்களும் சற்று சிந்திப்பீர்வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல்இப்போதே அணைபோட திட்டமிடுவீர்உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,
சிந்திப்பீர் செயல்படுவீர்!!
      சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!! சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள்அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்

‎5 நாடுகளுக்கு 188 நாடுகள் அடிமைகளாக இருக்கிறது -





ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 188 நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளுக்கு கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு சட்டத்தையே ஐக்கிய நாட்டுகள் சபை கொண்டுள்ளது. இது எவ்வாறு நாடுகளுக்கிடையில் நீதியை ஏற்படுத்தும்? என துருக்கி நாட்டுப் பிரதமர் தையூப் அர்துகான் கேள்வி எழுப்பினார்.

நேற்று புதன் கிழமை இஸ்தன்பூல் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய ஐக்கிய நாட்டுச் சபையின் சட்டத்தின் மூலம் நாடுகளுக்கிடையில் நீதியை நிலைநாட்ட முடியாது.

இச்சட்டம் மேலும் மேலும் நாடுகளுக்கிடையில் சமத்துவமின்மையையும், வறுமையையுமே ஏற்படுத்தும். இவ்வாறான சட்டம் தற்போது நடைமுறையிலுள்ளதால் தான் சோமாலியா, தென்னாபிரிக்க நாடுகள் போன்ற வறுமையான நாடுகள் உருவாகின்றன.

எனவே, ஐக்கிய நாட்டுச் சபையின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எல்லா நாடுகளுக்குமிடையில் சமத்துவம் நிகழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Sunday, 9 October 2011

புகை பிடிப்பதை நிறுத்தினால்..!



புகை பிடிப்பதை நிறுத்தினால்..!p46a.jpg


புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.
சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.  
பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!
பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?

Monday, 3 October 2011

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?உலக இதய தினம்


உலக இதய தினம் 2011

இதயம் காப்போம்!



மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.
இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.
இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:
பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.
இதற்கு "ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.
மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.



இதய நோய்: நவீன சிகிச்சை முறைகள்
 

பொதுமக்களிடம் தற்போது மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த குழாய்களில் அடைப்பு போன்ற பல நோய்கள் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நவீன சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. நிபுணத்துவம் உள்ள டாக்டர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துவிட்டு, நல்ல சிகிச்சைகளை மேற்கொண்டால் இதய நோய் ஏற்படாமல் சுகமாக வாழலாம்.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா இதயநோய் சிகிச்சை நிறுவன இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.விஜயகுமார் இதுபற்றி கூறுகிறார்:-

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.

பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டிசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு ரத்த சப்ளை செய்கிறது. பொதுவாக இந்த ரத்த நாளங்களின் உள்பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் ரத்த நாளங்கள் சுருங்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு ரத்த ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது. அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுபகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், ரத்த நாளங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் ரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சு திணறல் உணர்வு அல்லது மூச்சு திணறல் வலி. 4-வதாக மாரடைப்பு, 5-வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, ரத்த கொதிப்பு, பரம்பரையாக ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை, சோர்வு, உடற்பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ.சி.ஜி.யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ.சி.ஜி.) எக்கோ கார்டியோகிராபி, சி.டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.

ஆஞ்சினா பெக்டோரிஸ்
பொதுவாக இந்த பாதிப்பு மார்பின் நடுபகுதி, வயிற்றின் மேல்பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய்விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சு திணறல் போன்றவையும் ஏற்படக்கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசவுகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏற்படக்கூடும். இத்தகைய அசவுகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்கு பிறகு, அல்லது உணவுக்கு பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.
மையோ கார்டியல் இன்பார்க்ஷன் 
(மாரடைப்பு)

இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும். எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக்கூடும்.
ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைகளோடு "கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்'' என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும். எத்தனை அடைப்புகள் ரத்த நாளங்களில் இருக்கிறது? எத்தனை சதவீத அடைப்பு எந்த இடங்களில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். நல்ல அனுபவம் மிக்க டாக்டர்களால் செய்யப்படும் இந்த சோதனை எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்ய மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது.
இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.
இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.
ரத்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டிïப்பை டாக்டர்கள் பொருத்திவிடுவார்கள். இது நல்ல பலனை தருகிறது.இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளலாம். இது நீண்டகாலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன்மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.
தடுக்கும் வழிகள்
இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு (கொலஸ்டிரால்) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உணவு முறை
நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் (டயடிசியன்) ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
நடை பயிற்சி தான் உடற்பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும். இதய நோயாளிகள் தங்கள் உடற்பயிற்சி முறையை டாக்டரிடம் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும். மொத்தத்தில் இதயநோய் வராமல் தடுப்பது உங்களிடம்தான் இருக்கிறது.
 



நன்றி: இணையத் தமிழ் உலகம், மாலை மலர்