Wednesday, 4 April 2012

சுய தொழில்கள்-20.5 விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன் வளர்ப்பு

விறு விறு லாபம் தரும் விரால் மீன்


 
ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்  என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து.  இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர்  ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச்  செயல்படுத்தி வருகிறது இம்மையம்.

மையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க.  விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற  பத்து ரகங்களுக்கும் நல்ல  விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழிப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.

“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.

விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.
“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல லாபமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நோய்களும்  பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்.
ஆறு சென்ட் குளத்தில் விரால் மீன் வளர்க்க இப்ராஹிம் சொல்லும் செலவு, வரவு கணக்கு
விவரம்
 செலவு
வரவு
தொழுவுரம்
100
 
மீன் குஞ்சு
1,000
 
உணவு
15,000
 
மின்சாரம் (தண்ணீருக்கு)
2,000
 
அறுவடை, பராமரிப்பு
1,500
 
200 கிலோ மீன் மூலம் வரவு
 
50,000
மொத்தம்
19,600
50,000
நிகர லாபம்
 
30,400
குறிப்பு: குளம் வெட்டுவதற்கான செலவான 15,000 ரூபாய் நிரந்தர முதலீடு என்பதால் அது செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
            நிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், “நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்தாலே வியாபாரிவர் தேடி வந்துடுவாங்க. எனக்கு நான்கு குளம் இருக்கறதால். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டால் குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில் விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.

பத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான்  லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமாக 200 கிலோனு வைத்துக் கொண்டால்  கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்கில் பத்து மாதத்தில் 50,000 ரூபாய்க்கு விற்றுவிடலாம். எல்லாச்செலவும் போக 30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு
நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி             0462-2560670      
ஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி:             94431-57415      
ஷெரீப், ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர், அலைபேசி:             98946-77286      
இப்ராஹிம், அலைபேசி:             97915-78187      
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்

விரால் மீன் வளர்ப்பு-2மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.

45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’
இணையத்திலிருந்து

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-11



அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-11
*மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம். 

*நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் டெலிவிஷனில் தோன்றிவிடுகிறார்.

*ஒரு மனிதன் வருடத்தில் சராசரியாக 1,460 தடவை கனவு காண்கிறான். 

*மனித உடலில் ஒரு வினாடிக்கு 1 கோடி சிவப்பு ரத்த செல்கள் உருவாகவும் கொல்லவும்படுகின்றன

காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும். 

*** 

*பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாயைத் திறந்தவாறே வைத்திருக்கும் கடல் மீன் எது தெரியுமா?... விரியன் என்னும் மீன். இதற்குக் காரணம் வாயை மூட முடியாதபடி அதன் பற்கள் மிக நீளமாக இருப்பதுதான். 

*** 

*உலகில் தினமும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. இடி மின்னல் ஏற்படுத்தும் மேகங்களோ உலகில் சுமார் 44. ஒரு தடவை மின்னல் தாக்கினால், தோன்றுகிற மின்சாரம் பத்துக் கோடி மின்சார பல்புகளை எரிய வைக்க போதுமானதாக இருக்கும். 

*** 

*இரவில் கூட்டமாக அமைந்திருக்கும் நட்சத்திரங்களை நாம் பார்க்கும்போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும். அது உண்மையல்ல. அவற்றுக்கு இடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும். ஆனால் நம்முடைய பார்வை கோணத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கின்றன. 

*** 

*வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட மேகமூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வானத்தை அடைய முடியாமல் மேக மூட்டம் தடுத்து விடுவது தான். இதன் காரணமாகத் தான் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது. 

*** 

*தெகான் பெக் என்றொரு வகைப் பூ மரம். இந்த மரம் பார்ப்பதற்கு கொய்யா மரம் போலவே இருக்கும். இது பூக்கும் பூ காலையில் வெள்ளை நிறமாகவும், நண்பகல் நேரத்தில் சிவப்பாகவும், இரவில் நீல நிறமாகவும் இருக்கும். 

*தொடரும்...

நன்னீரில் இறால் வளர்ப்பு



நன்னீரில் இறால் வளர்ப்பு


 நன்னீரில் இறால் வளர்ப்பு: தண்ணீர் வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறுகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நன்மையால் நீலக்கால் இறால் மற்றும் மோட்டு இறால் ஆகிய  இரு ரகங்களை மட்டுமே தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல், களிமண் கலவை 1.5 : 1 :  1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் செவ்வக வடிவத்தில் அமைக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் உள்மடை, வெளிமடை அமைக்க வேண்டும். சுலபமாக இறால் பிடிக்க வெளிமடைக்கு அருகே 2 மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் ஆழமும் உள்ள இறால் பிடிகுழி ஒன்று தயார் செய்ய வேண்டும். குளக்கரை சரிவு 1 : 1.5 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும்.

குளம் தயார் செய்தல்: நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு குளத்தில் இட்டு, குளத்தின் நீர்மட்டம் 30 செ.மீ. அளவில் இருக்கச் செய்ய வேண்டும். 100 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக முதல் தவணையாக போடவேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் பசுமையாக மாறியதும் நீர்மட்டத்தை 1 மீட்டருக்கு உயர்த்தி அதை அறுவடைக்காலம் வரை பராமரிக்க வேண்டும்.
இறால் குஞ்சு இருப்பு வைத்தல்: தனியார் மற்றும் அரசு இறால் குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து நன்னீர் இறால் குஞ்சுகளைப் பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து இரு வாரங்களுக்கு உணவு கொடுத்து பின்னர் விட்டால் பிழைப்பு விகிதங்கள் கூடும்.

இருப்பு செய்தபின் பராமரிப்பு: இருப்பு செய்த பின்னர் குளத்துநீரைப் பாதுகாப்பது முக்கியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கார அமிலத்தன்மை மற்றும் மிதக்கும்  உயிரினங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன் 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால்கள் நன்கு வளரும். நீரில் பிராணவாயு அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் சாதனத்தை உபயோகிக்கலாம்.
தீவனம்: ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவைக் கொடுக்கலாம். காய்ந்த நிலையில்  இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமைப் புண்ணாக்கு, மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவை கலப்பு பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்வதை வாங்கியும் பயன்படுத்தலாம். 

அறுவடை மற்றும் விற்பனை: 5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவில் வளர்ந்துவிடும். நீளக்கால் இறால்கள் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களைப் பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையை உபயோகிக்கலாம். நீரை  முழுமையாக வெளியேற்றிய பின்னர் கை தடவல் முறையிலும் பிடிக்கலாம்.
பொருளாதாரம்: ஒரு எக்டரில் (நீர்பரப்பு) - நிலம், கிணறு, காற்றூட்டி, மின் இணைப்பு, தங்கு அறை வரையில் செலவு சுமார் ரூ.2 லட்சம்.
செயல்முறை செலவுகள்: இறால் குஞ்சு விலை, தீவனம், உரம் மற்றும் இதர செலவுகள் ரூ.3 லட்சம்.
வருமானம்: 5 மாதங்களில் அறுவடை சராசரி வளர்ச்சி 50 கிராம் வீதம் 1500 கிலோ இறால் விற்பனை ரூ.3.75 லட்சம். ஒரு அறுவடைக்கு நிகர லாபம் ரூ.1.75 லட்சம். இரு அறுவடை (ஒரு ஆண்டில்) நிகரலாபம் ரூ.3.5 லட்சம்.(தகவல்: வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206.             04577-264 288      . -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன் 

Monday, 2 April 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-10



அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-10
குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.

அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

***

முதன் முதலில் தென் ஆப்பிரிக்க நாட்டில்தான் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது வெளி யுலகிற்குத் தெரிய வந்தது. அங்குள்ள டிம்பாவதி பகுதியில் வெள்ளைச் சிங்கம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் உண்மையில் அவை வெள்ளை நிறம் அல்ல, பிறவிக் கோளாறு காரணமாக இப்படி இவை பிறந்திருக்கலாம் என்று கருதினார்கள்.

ஆனால் உண்மையில் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது 1975-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் வெள்ளைச் சிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு வெள்ளைச் சிங்கம் என்று பொதுவான பெயர் இருந்தாலும் கூட அவற்றின் மீது மெல்லிய சாம்பல் நிறம் இருக்கிறது.

இந்த வெள்ளைச் சிங்கங்களை பிடித்து வளர்ப்பது சிரமமாக இருந்தது. இதனால் மிருககாட்சி சாலையில் இவற்றை வளர்க்க முடியாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக வெள்ளைச் சிங்கங்களை மிருககாட்சி சாலையில் இனப்பெருக்கம் செய்வதில் வெற்றி கிடைத்து விட்டது. அண்மையில் ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரில் ஒரு பெண் வெள்ளைச் சிங்கம் குட்டியொன்றை ஈன்றெடுத்தது.
***

அமெரிக்கா, கனடா நாடுகளில் மஞ்சள் நிற ராபின் குருவியை அதிக அளவில் பார்க்க முடியும். அண்மையில் இந்த பறவையை இங்கிலாந்து மக்கள் தங்களது நாட்டின் பெரும்பாலான இடங்களில் பார்க்க நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் குருவி நமது நாட்டிற்கு எப்படி வந்தது என்று புரியாமல் குழம்பினார்கள்.

வட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளிக் காற்றில் இந்தப் பறவை அட்லாண்டிக் கடலையும் தாண்டி வந்திருப்பது தெரிந்தது. காற்றின் போக்கிலேயே இங்கிலாந்து வந்து சேர்ந்த மஞ்சள் வயிற்று ராபின் குருவிகள் தற்போது தங்களின் புதிய இடத்தில் எந்த வித ஆபத்துமின்றி வாழ்கின்றன.

***

நமது நாட்டில் 1921-ம் ஆண்டு தீப்பெட்டி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை கொல்கத்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு தீப்பெட்டிகள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

***

தோன்றியதிலிருந்து அன்று முதல் இன்று வரை எந்த வித பரிணாம வளர்ச்சியும் அடையாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான்.

***

விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒரு வித இன்பாஸ்டிரேட் கதிரியக்கம்தான் விட்டில் பூச்சிகள் விளக்குகளை நோக்கி வரக்காரணமாக உள்ளது.

***

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிறுத்தை புலிகள் மான்களை விரட்டிப் பிடிக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்போது 125 அடி தூரத்தைக் கூட ஒரே துள்ளலில் தாண்டிவிடும். அகப்பட்டுக் கொண்ட மானின் எடை வாயில் கவ்வி தூக்கிச்செல்லக் கூடிய அளவில் இருந்தால் அப்படி மரத்தின் மீது ஏறி அங்கேயே உட்கார்ந்து கொண்டு இரையைத் தின்னும்.

கழுதைப் புலி போன்ற சிறிய விலங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறு இரையை மரத்தின் உச்சிக்கு சிறுத்தைகள் கொண்டு செல்கின்றன.

***

உலகப் புகழ்பெற்ற பாபா பிளாக் ஷீப் என்ற மழலையர் ஆங்கிலப் பாடலின் சில வரிகளை மாற்றியமைக்கப்போகிறார்க࠮?.பிளாக் ஷீப்  என்பது கறுப்பர் இனத்தைக் குறிப்பதாக புகார் வந்ததால் இந்த முடிவு. பிளாக் என்பதற்குபதில் ரெயின்போ என மாற்றப்போகிறார்கள். இனிமேல் இந்தப் பாடல் பாபா பாபா ரெயின்போ என்று பாடப்படும்.

இப்போது இந்தப் பாடல் இங்கிலாந்தில் பாபா பாபா கிரீன்ஷீப் எனவும் ஸ்காட்லாந்தில் பாபா பாபா ஹேப்பிஷீப் எனவும் பாடப்படுகிறது.

***

புகைப்பட காமிரா உருவத்தின் நீள, அகலத்தை மட்டுமே படம்பிடிக்கும். ஆனால் உருவத்தின் ஆழத்தைக் காட்ட இயலாது. நம் இரண்டு கண்களும் வெவ்வேறு இரண்டு உருவங்களைப் பார்க்கும்போது மூன்றாவது பரிமாணம் ஏற்படுகிறது. எனவேதான் பார்க்கும் பொருளின் ஆழத்தை நம் கண்களால் காண முடிகிறது.

***

ஆழ்கடலில் மலர்ச்செடி போல் அழகாக இருப்பது கடல் அனிமோன். இது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இரையைப் பிடிக்கும். இதன் உடலில் இழைகள் மொட்டுகள் போன்ற அமைப்புகள் உண்டு.

இரையைப் கண்டதும் தன் மொட்டுக்களை வெடிக்கச் செய்து ஒரு வித விஷத்தை அதன் உடலில் பாய்ச்சிவிடும். பிறகு அவற்றை உண்ணும்.

***

* உலகிலேயே மிகவும் சிறிய மரம் குட்டை வில்லோ என்னும் மரமாகும். இந்த மரத்தின் மொத்த உயரம் இரண்டே அங்குலம்தான்.

* ஆகாயத் துப்புரவு தொழிலாளி என்று காக்கையை அழைப்பார்கள்.

*விவசாயியின் நண்பன் மண் புழு என்பது உங்களுக்குத் தெரியும். பகைவன் யார் என்று தெரியுமா?... வெட்டுக்கிளிதான் அந்த புண்ணியவான். பெருமளவு பயிர்களை வெட்டுக் கிளிகள் வளரவிடாமல் அழிப்பதால்தான் அதற்கு இந்தப் பெயர்.

* கடல் நீரில் உப்பு 3.5 சதவீதம் கலந்துள்ளது.

* கடலின் சராசரி ஆழம் 3.75 கிலோ மீட்டர்கள். 

முட்டையிடும் சீன மனிதர்கள்!


முட்டையிடும் சீன மனிதர்கள்!
fake-egg4.jpg
வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.
fake-egg1.jpg
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.
fake-egg2.jpg
இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள்  வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
fake-egg3.jpg
ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.
fake-egg4.jpg
மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள்  உதவியால் வெள்ளைக்கரு  உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
fake-egg5.jpg
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
fake-egg6.jpg
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
fake-egg7.jpg
நிஜ முட்டையும் போலி முட்டையும்.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
fake-egg8.jpg
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள்  எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இணையத்திலிருந்து

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-9


அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-9

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?...

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார்.

***

*இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.


***

*பேப்பர் கிளிப்பை மூன்று பேர் கண்டு பிடித்தனர். 1899-ம் ஆண்டு வில்லியம் மிடில்புரூக்கும் 1900-ம் ஆண்டு பிராஸ்னனும் 1901-ம் ஆண்டு ஜோகன் வாலெரும் கண்டுபிடித்தனர். மூவருமே தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெற்றனர். இதனால் பேப்பர் கிளிப்பை யார் கண்டுபிடித்தது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

ஆனால் மூன்றாவதாக கண்டுபிடித்த ஜோகன் வாலெர்தான் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தவர் என்று அங்கீகாரம் தரப்பட்டது. காரணம்,1899-ம் ஆண்டே ஜோகன் வாலெர் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அவர் பிறந்த நாடான நார்வேயில் அப்போது காப்புரிமைச் சட்டம் கிடையாது. இதனால் அவர் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை கோரினார். இது தவிர மற்ற இருவரையும் விட வயதில் ஜோகன் இளையவராக இருந்தார். அவர் பிறந்த ஆண்டு 1866. இதனால் ஜோகன் வாலெரே பேப்பர் கிளிப்பின் கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

***

*ஒவ்வொரு ஆண்டும் உலகில் 19 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன. 6.5 ரிக்டர் ஸ்கேல் அள விற்கு அதிகமாக ஏற்படும் பூகம்பங்கள் மனிதர்களின் உயிருக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியவை. 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.4 ரிக்டர் ஸ்கேல் ஆகும். இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதே ஆண்டு தைவான்,மெக்சிகோ ஆகிய நாடுகளில் 7.6 ரிக்டர் ஸ்கேல் அளவு பூகம்பம் தாக் கியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற் பட்ட பூகம்பம் 8.7 ரிக்டர் ஆகும்.

ஆனால் இதையெல்லாம் விட மிகப்பெரிய பூகம்பம் 1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்டது. இது 9.5 ரிக்டர் அளவாக பதிவானது.

***

*பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.

பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.

குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய் கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.


***

*ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார்.

1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.

***

*ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நீர் வாழ் உயிரி கள் அருங்காட்சியகம் ஒன்றில் முதல் முறையாக எறும்புத் தின்னி குட்டி போட்டுள்ளது. அந்தக் குட்டிக்கு இப்போது 5 மாதங்கள் ஆகிறது. காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் இதைப் பார்ப்பதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அந்தக் குட்டிதான் தனது இரண்டு கால்களால் இப்படி நடந்து வருகிறது.

ஜப்பானிய மொழியில் எறும்புத் தின்னிகளுக்கு `தமாண்டுவா' என்று பெயர். ஜப்பானிய நீர்வாழ் உயிரிகள் அருங்காட்சியகம் அல்லது விலங்கியல் பூங்கா ஒன்றில் எறும்புத் தின்னி குட்டி போட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

***

*ஆர்டிக், அலாஸ்கா (அமெரிக்கா), கனடா, ரஷியா, இங்கிலாந்து, நார்வே, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் துருவக் கரடிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆண் துருவக் கரடி 10 அடி உயரம் வரை வளரும். எடை 650 கிலோ இருக்கும். பெண் துருவக் கரடி 7 அடி உயரம் வரை வளரும். எடை 300 கிலோ வரையே இருக்கும்.

25 வருடங்கள் வரை இவை வாழும். நீண்ட தூர நீச்சலில் துருவக் கரடிகள்தான் சாம்பியன் என்று சொல்லலாம். ஏனெனில் ஓய்வெடுக்காமல் ஒரே வீச்சில் 161 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தும். கடல் நீருக்குள் வாழாத ஒரு விலங்கு இவ்வளவு தூரம் நீந்துவது ஆச்சர்யமானது. தற்போது 40 ஆயிரம் துருவக் கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதற்கும் பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற் கள் முளைத்து விடுகின்றன.

ஒரு பல் விழுந்தால் அந்த இடத்தில் இன்னொரு பல் உட னடியாக முளைத்துவிடுவதே இதற்குக் காரணமாகும்.

இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதல் கீழ்தாடை பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அப்படியே மேல் தாடைக்கு அந்த இரையை தூக்கி வீசும். இப்படியே மேலும் கீழும் தூக்கி வீசித்தான் இரையை அது தின்னுகிறது. எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் அதை 10 நிமிடத்திற்குள் மென்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானது அதன் பற்கள்.


*கழுதைப் புலி ஒரு வேடிக்கையான விலங்கு. இறந்து போன விலங்குகளின் இறைச்சியைத்தான் இது விரும்பித் தின்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள࠯?. உண்மையில் கழுதைப் புலிகள் 95 சதவீதம் தனது இரையைத் தானே வேட்டையாடி வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. பெரும்பாலும் இது இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும். பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிடவேண்டும் என்றால் தனது கூட்டத்தினரோடு செல்லும். மான்,வரிக்குதிரை, காட்டெருமை ஆகியவை இதன் விருப்பமான இரைகளாகும்.

உடல் முழுக்க பெரும் திட்டுக்களைக் கொண்ட கழுதைப் புலியும் உண்டு. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. காடுகளில் வாழும்போது இவை 40 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் மிருககாட்சி சாலைகளில் வளர்த்தால் 20 வருடங்கள் வரையே வாழும். கழுதை என்ற பெயருடன் இருப்பதால் இது கழுதையின் உறவு இனமும் அல்ல. புலி என்ற பெயர் இருப்பதால் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் கிடையாது. இது எலி பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

***

*நீர்யானைகள் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் பெரிதும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்கு களில் யானைக்கு அடுத்து இதுதான் மிகப்பெரிய விலங்கு. பெரும்பாலும் ஏரிகளில்தான் இவற்றைப் பார்க்க முடியும். ஆனால் நதி, நீரோடைகளில் வாழ்கிற நீர்யானைகளும் உண்டு. இந்த நீர் யானைகளை குள்ள நீர்யானைகள் என்பார்கள். இவை 1.5 மீட்டர் நீளமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்டவை. இவற்றின் மொத்த எடை 300 கிலோவுக்குள் இருக்கும். இவை லைபீரியா நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பெரிய நீர் யானைகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை. தோள் பட்டை வரை 1,4 மீட்டர் உயரம் கொண்டது. அதிக பட்சம் வளரும் நீர்யானை 4 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

நீர் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 வரையிலான நீர் யானைகள் இருக்கும். இவை கொட்டாவி விட்டால் அது டேஞ்சர் என்று அர்த்தம். அது எதிரியைத் எந்த நேரத்திலும் தாக்கலாம்.

***

*சராசரி மனிதர்களைப் போல் 3 மடங்கு உயரம் வளரும் ஒட்டகச்சிவிங்களால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆழ்ந்த தூக்கம் என்றால் அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிகக் குறைவுதான். நின்று கொண்டே அவற்றால் தூங்க முடியாது. இதனால் அவ்வப்போது தூங்கி எழுந்து கொள்ளும். தரையில் நான்கு கால்களையும் பரப்பி வைத்து தலையைக் கீழே வைத்த நிலையில்தான் ஒட்டகச் சிவிங்கிகள் தூங்க முடியும். அந்தத் தூக்கமும் கூட சில நிமிடங்கள்தான். குட்டி பிறந்த ஒரு சில மணி நேரங்களில் எழுந்து நிற்க முடியும். தாயுடன் குட்டி 15 மாதங்கள் வரைசேர்ந்தே வாழும்.

சிங்கமும், சிறுத்தையும்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு கிலி தருபவை. தனியாக இருந்தால் இந்த இரண்டு மிருகங்களும் தங்களை வேட்டையாடித் தின்று விடும் என்பதால் புத்திசாலித் தனமாக வரிக்குதிரை மான் போன்ற பிராணிகளின் கூட்டத்தினருடன் சேர்ந்தே காணப்படும்.

***

*பூச்சிகளின் உடலிலிருந்து `பெரமோன்' என்னும் மணம் தரும் பொருள் தோன்றுகிறது. இப்பொருள் தரும் மணத்தின் மூலம் அவை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. பெரமோன் ரசாயனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள. இந்த மணத்தின் மூலம் வரும் ஆணைகளை பூச்சிகள் மீறுவதே கிடையாது.

வண்ணத்துப் பூச்சிகள், விட்டில்கள்,சிலந்திகள், தட்டான் பூச்சிகள், சில வகை வண்டுகள்,கொசுக்கள், முதுகெலும்பற்ற சில விலங்கினங்கள் ஆகியவை பெரமோன் மணத்தின் மூலம்தொடர்பு கொள்கின்றன. இத்தகைய ரசாயன சமிக்ஞைகள் பல மீட்டர் தூரத்திற்குக் கூட பரவும் சக்தி கொண்டது.

***

*தாமஸ் ஆல்வர் எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரத்து 39 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவரின் 12-ஆவது வயது முதல் எடிசனுக்கு காதும் கேட்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

***

* எல்லா வகைப் பறவைளுக்கும் இறக்கை இருந்தாலும் சில வகைகள் பறக்க முடிவதில்லை. கோழிகள் பறக்க முடியாத பறவை இனத்தைச் சேர்ந்தவை. பறக்க முடியாத பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி. இரண்டாவது மிகப் பெரிய பறவை எமு. நிïசிலாந்தில் காணப்படும் கிவி பறவையாலும் பறக்க முடியாது.

*எறும்பில் பல இனம் உண்டு. ஒவ்வொரு வகையிலும் மூன்று சந்ததிகள். பார்த்தால் எறும்பு மாதிரி இருக்காது. நீண்ட பெரிய வயிறு இருக்கும். இதுதான் எறும்பு. ஒரு புற்றில் ஒரு ராணிதான் இருக்கும். இரண்டாவதாக வீரர்கள். இதன் வேலை புற்றைக் காப்பாற்றுவது. இவைதான் நம்மை நறுக்கென்று கடிப்பது. இதன் வாயில் பார்மிக் அமிலம் இருப்பதால், தோலில் பட்டதும் அரிப்பு எடுக்கும். மூன்றாவது வேலைக்கார எறும்புகள். இதுதான் எண்ணிக்கையில் அதிகம்.

இரை தேடுவது, முட்டைகளை எடுத்துச் செல்வது, புற்றை விரிவாக்கம் செய்வது என்று சகல வேலைகளையும் யார் கட்டளையும் இல்லாமல் செய்யும். இவை மனிதர்களை கடிப்பதில்லை. பாவம் வாயில்லா பூச்சிகள்.

*1960-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கடல் பொறியியல் வல்லுனர்கள் பிக்கார்ட்,லெப்டினன்ட் வெல்ஸ், ஆகிய இரண்டு பேரும் கடலில் 35 ஆயிரத்து 800 அடி ஆழத்தில் வாளைமீன்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதை படம் பிடித்து வந்துள்ளனர். அது நாள்வரை பெரும்பாலான கடல் ஆய்வாளர்கள் ஆயிரத்து 800 அடி வரை மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்று நம்பி இருந்தனர். 
*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,