Tuesday, 24 January 2012

ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!


ஈரானைத் தாக்கினால்..... - ரஷ்யா எச்சரிக்கை!


"ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு பயமுறுத்தல்களினாலோ தடைகளினாலோ நிலைமை மிகவும் மோசமாக ஆகிவிடும்" என அவர் கூறினார். "போர் தொடுப்போம் எனக் கூறுவது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மீது எண்ணெயை ஊற்றுவது போலாகும்" என தெரிவித்த லாவ்ரவ், "இவ்வாறு கூறுவதனால் ஏற்படும் பயங்கர விளைவுகள் எப்படி முடியும் எனக்குத் தெரியாது" என்று எச்சரித்தார்.

"ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்துவதற்கு தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்" என இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment