Tuesday, 17 July 2012

சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் நடந்தது என்ன? (வீடியோ)



சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் கடந்த வாரம் ( 06.07.2012 )  ஜும்மா மேடையில் முஸ்லி  யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம்  மௌலவி சம்சுதீன் காசிமி அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார், அந்த ஜுமுஆவில் முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் அனாசாரங்கள், புதுமைகள், ஷிர்க், பித்அத்   பற்றி  ஆதாரபூர்வமான ஹதிஸ்களுடன் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார்.
ஜும்மா தொழுகை முடிந்தவுடன் ஒரு குழுவினர் பள்ளிவாசலில் புகுந்து மௌலவி சம்சுதீன் காசிமி அவர்களை தாக்க முயன்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.


மக்காஹ் மஸ்ஜித் இமாம் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர், தமுமுகவின்  S.ஹைதர் அலி, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழக  தலைவர்  எஸ்.என்.சிக்கந்தர், மௌலவி முப்தி முஹம்மது ஷெரிப், மற்றும் பிரமுகர்கள் மக்கா  மஸ்ஜித்திற்கு  நேரடியாக சென்று விசாரித்தனர்.
அப்பொழுது பேசிய தலைவர்கள் இந்த செயலை கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் தாக்க முயன்ற அமைப்பினரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டன.
மக்காஹ் மஸ்ஜித் முழுவதும்  போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

இந்த மிரட்டலுக்கு மௌலானா அவர்கள் அடுத்த  ஜுமுஆவில் (20.7.2012) இன்ஷா அல்லாஹ் இன்னும் தெளிவாக பேசுவேன்"என்று தொழுகையாளிகளுடைய இடி முழக்க தக்பீருடன் அறிவித்தார்கள். அதன்படி, இன்ஷா அல்லாஹ் அடுத்த வார ஜுமுஆவில் இன்றும் விரிவாக பித்அத் மற்றும் அனாச்சாரங்களை பற்றியும் அதனை இந்தியாவில் உருவாக்கிய அஹ்மத் ரசா கான் பறேலவியின் வண்டவாளங்களையும் 20.7.2012 அன்று பேசவுள்ளார்கள் என்பதை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 


மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை
தலைப்பு :முஸ்ளி யார்? 

No comments:

Post a Comment