Thursday, 18 August 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்..தொடர் ..... 2

தொடர் ..... 2


நேரடியாக ஜம்மு செல்ல ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆக்ரா வரை மட்டுமே டிக்கெட் கிடைத்தது. ஆக்ராவிலிருந்து ஜம்முவுக்கு அன்று மாலை வேறு ஒரு ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால் அது கன்பார்ம் ஆகாமல் இருந்தது.

சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 18 அன்று இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டது. எங்களோடு இப்பயணத்தில் அதே நிகழ்வில் பங்கேற்க வழக்கறிஞர்கள் ஜெய்னுலாபுதீன், வாசுதேவன், புகைப்பட நிபுணர் சந்திரன் ஆகியோரும் வந்தனர்.

எங்கு செல்கிறோம்? உலகில் மிகவும் பதட்டமான பகுதிகளில் ஒன்றான காஷ்மீருக்கல்லவா........ போகிறோம். அடிக்கடி  துப்பாக்கி சூடுகள், சில சமயங்கள் குண்டு வெடிப்புகள், அரசுப் படைகளும், ஆயுத குழுக்களும் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள், யாரையும் சுட்டுக் கொள்ளலாம் என அனுமதி பெற்ற அரசுப் படைகள், காவல் நிலைய மரணங்கள், ஆயுதக் குழுக்களின் துப்பாக்கி சூடுகள், மனித உரிமை மீறல்கள் என சகல அபாயங்களும் நிறைந்த ஒரு பகுதிக்கல்லவா...... பயணிக்கிறோம்!

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவலைகளும், அறிவுறைகளும் எங்கள் மனதை சூழ்ந்து நிற்க எமது பயணம் புறப்பட்டது.

இரவு முழுக்க ஆந்திராவில் ஓடிய ரயில் காலை நாங்கள் கண்விழித்தபோது மஹாராஷ்டிராவில் ஓடிக் கொண்டிருந்தது. தென்மேற்கு பருவமழைக்காலம் என்பதால் மழையில் நனைந்த வயல்களையும், மழைச் சாரல்களையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.

இப்பயணத்தில் இந்திய விடுதலை போராட்டத்தின் முதன்மை தலைவர்களுடன் ஒருவரான அபுல்கலாம் ஆசாத் எழுதிய India wins Freedom என்ற நூலை நான் முழுமையாக படிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எங்களோடு ஆக்ராவுக்கு காலணி வணிகம் தொடர்பாக கொள்முதல் செய்ய மண்ணடியை சேர்ந்த இரு சகோதரர்களும் பயணித்தனர். இரவு மஹ்ரிபுக்கு பிறகு ரயில் மத்திய பிரதேசத்தில் நுழைந்தது. குவாலியர், ஜான்ஸியை தொடர்ந்து உ.பி.க்குள் நள்ளிரவில் பயணம் தொடர்ந்தது. விடியற்காலை பாங்கு சப்தம் கேட்ட அதிகாலையில் ஆக்ராவில் இறங்கினோம்.

(இடையில் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இக்கட்டுரை முடிந்த பிறகு தனிக்கட்டுரை ஒன்று எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்)

அன்று மாலை எங்களது ஆக்ரா -----------ஜம்மு ரயில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் மாலை 5 மணி ரயிலில் பயணிக்க முடியவில்லை.

மாலை 7 மணியளவில் டெல்லி செல்லும் ஒரு பேருந்தில் நெரிசலில் சிக்கியபடியே ஏறி அமர்ந்தோம். விடியற்காலை 2 1/2 மணியளவில் டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் என்ற பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு நேரடியாக ஜம்மு செல்வதற்கான பேருந்துகள் இந்த நேரத்தில் இல்லையென்றார்கள். பஞ்சாப் மாநிலம் பதான் கோட் என்ற நகருக்கு 3 மணிக்கு ஒரு பேருந்து நின்றது.

அதுதான் பஞ்சாபின் எல்லை. அங்கிருந்து சில கிலோ மீட்டர்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடங்கிவிடும். இரண்டு மணி நேரத்தில் பதான் கோட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தில் ஜம்மு நகருக்கு சென்றுவிடலாம் என்றார்கள். ஏற்கனவே ஆக்ராவிலிருந்து மோசமான பேருந்தில் வந்ததால் மிகுந்த களைப்புற்றிருந்தோம். இப்போது பதான் கோட் செல்லும் பேருந்தை பார்த்தால் 10,15 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பேருந்துகளின் ஞாபகம்தான் வந்தது.

வேறு வழியின்றி ஏறி உட்கார்ந்தோம். படு வேகமாக வண்டி புறப்பட்டது. தமிழகமே ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்கும் திஹார் சிறையில் வழியே புறப்பட்டு ஹிமாச்சல் பிரதேசத்திற்குள் வண்டி நுழைந்தது. ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளை கடந்து காலையில் பஞ்சாபுக்குள் நுழைந்தோம்.

இமயமலையில் உருவாகும் வற்றாத ஐந்து நதிகள் பாய்வதால் இதற்கு பஞ்சாப் என்று பெயர் வந்ததது. வழியெங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மழை காலங்களில் பசுமையாக இருப்பது போன்ற வயல்களின் காட்சிகளை இங்கு பார்த்தோம். எங்கும் பரவலாக சீக்கிய மக்கள். ஆங்காங்கே நதிகள் ஓடும் கால்வாய்கள்! விவசாயம் மட்டுமல்ல, தொழில்களும் நிறைந்த மாநிலம் அது.

இடையில் படையெடுப்பது போல பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்த சட்லெஜ் நதியை பார்த்தோம். இவையெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்தவை.

ரயிலில் வந்திருந்தால் முக்கிய நகரங்களையும், முக்கிய காட்சிகளையும் பார்த்திருக்க முடியாது. காரணம் பெரும்பாலும் ரயில்கள் ஊருக்கு வெளியேதான் ஓடும்!

சிறிது நேரத்தில் புகழ்பெற்ற லுதியானா, நகரை கடந்தோம். தையல் மெஷின்கள் தயாரிப்பு, டிராக்டர்கள் தயாரிப்பு, ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு என லூதியானா பஞ்சாபிகள் வர்த்தக நகரங்களில் ஒன்றாகும்.

1980 களின் தொடக்கத்தில் சீக்கியர்கள் பஞ்சாபை தனிநாடாக்கி சுதந்திர காலிஸ்தான் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது எண்ணற்ற சீக்கிய இளைஞர்கள் ரத்தம் சிந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.

காலை 11 மணிவாக்கில் ஜலந்தர் நதரின் முக்கியப் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். ‘தியாகிகளின் தலைவர்’ பகத்சிங் பேருந்து நிலையம் என அதற்கு பெரிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு மருதநாயகம், கட்டபொம்மன் போல பஞ்சாபியர்களின் பெருமைக்குரிய விடுதலை நெருப்பு பகத்சிங் என்பதை அனைவரும் அறிவோம்.

மதியம் 4 மணி அளவில் பதான்கோட் வந்து சேர்ந்தோம். அங்கேயே எங்களது பரபரப்பு தொடங்கியது. நிறைய ராணுவ வாகனங்கள். ராணுவ வீரர்கள் என இந்தியாவின் தலைப்பகுதிக்குரிய பாதுகாப்பு அம்சங்கள் தெரிந்தது.

சற்று நேரத்தில் அதே போன்ற இன்னொரு பழைய பேருந்து ஜம்மு செல்ல நின்றுக் கொண்டிருந்தது. ஆக்ராவில் தொடங்கிய ‘டப்பா’ பேருந்து பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஓய்வே இல்லை. எல்லோரும் சோர்ந்து விட்டோம்.

எங்களோடு ரயிலில் ஹாரூன் வரவில்லை. காரணம் அவர் வணிக நிமித்தமாக முன் கூட்டியே புறப்பட்டு குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு சென்றிருந்தார்.

அங்கிருந்து டெல்லி வழியாக ஜம்முவுக்கு விமானத்தில் வருவதாக சொல்லியிருந்தார். அதன் படியே ஜம்முவுக்கு அப்போதுதான் வந்து இறங்கி, தான் ஜம்மு பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும் இங்கு Postpaid செல்போன்கள் மட்டுமே இயங்குவதாக கூறி தனது Prepaid  செல்போன்கள் இயங்கவில்லை என்றார்.

பிறகு ஜம்மு பேருந்து நிலையத்தில் ஒரு பெட்ரோல் அருகில் நிற்பதாகவும், அந்த இடத்திற்கு வந்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு சின்ன கவலை தொற்றியது. புரியாத, பரபரப்பான ஒரு நகரில் செல்போன் தொடர்பற்ற நிலையில் அவரை எங்குபோய் தேடுவது என யோசித்தோம்.

மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஜம்மு போய் சேர்ந்ததும், அவரை அதே இடத்திற்கு சென்று சந்தித்துக் கொண்டோம்.

(பயணம்  தொடரும்...)

காஷ்மீரில் பேருந்துகளின் தோற்றம்...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்



முன்னுரை
 தொடர் - 1
(அன்பார்ந்த சகோத, சகோதரிகளே அனைவரும் மீதும் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக! நீங்கள் படிக்க போகும் இத்தொடர் வரலாறு, மனித உரிமை மீறல்கள், உணர்வு பூர்வமான உண்மைகள், சுற்றுலா தகவல்கள் என உள்ளடக்கியதாக இருக்கும். இது பயணக் கட்டுரையாக மட்டுமில்லாமல் பயண இலக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதால் பயண அனுபவங்களையும், அது குறித்த பின்னணிகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். இது பிறகு விரிவாக இன்ஷா அல்லாஹ் புத்தக வடிவம் பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சந்திப்போம்....)

காஷ்மீர் என்றாலே இதயம் குளிரும். கண்கள் மிளிரும். அப்பூமி இறைவனின் அருட்கொடை. அது ஆசியாவின் இதயம் என்றும், கிழக்கின் சுவிட்சர்லாந்து என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இமயமலையின் எழில் மிகு பகுதியில், இயற்கை கவிதைகளாய் அமைந்திருக்கும் காஷ்மீரில், புகழ்பெற்ற டால் ஏரியும், பனிக்கட்டிகள் ஐஸ்கீரீம்களாய் கொட்டிக் கிடக்கும் காட்சிகளும் அனைவராலும் அறியப்பட்டவை.

ஓங்கி உயர்ந்து நிற்கும் தேவதாரு மரங்களும், குங்கும்பூ வயல்களும், ஆப்பிள் மற்றும் மாதுளை தோட்டங்களும் அதன் பசுமையின் மறுபக்கங்கள்.

ஆனால் இவையும் தாண்டிய பல விஷயங்கள் உண்டு. வரலாற்று சிறப்பு மஸ்ஜிதுகள், பல்சமய மக்களின் ஆலயங்கள், அழகிய முகலாய பூங்காக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் அழகிய காஷ்மீரின் சிறப்புகளை!

ஆனால்; இவைற்றையெல்லாம் தாண்டிய சொல்லப்படாத காஷ்மீர் மக்களின் சோகங்களை சொல்வதுதான் எனது இத்தொடரின் நோக்கம்!

வரலாறும், உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டு, பிரிவினை மற்றும் பயங்கரவாத முத்திரைக்குத்தப்பட்ட காஷ்மீரைதான் நம்மில் பெரும்பாலோர் இதுவரை அறிந்திருக்கிறோம்.

எழில் மிகு அழகும், கவிதை உணர்வும் கொண்ட மெல்லிய மனங்களை கொண்ட அம்மக்களின் உணர்வுகளையும், அவர்கள் சொல்லத் துடிக்கும் உண்மைகளையும் அறிய ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்தது.

ஏற்கனவே விடியல் பதிப்பகம் 1990 -களில் வெளியிட்ட ‘காஷ்மீரீல் தொடரும் துயரம்’ என்ற நூலை நான் வாசித்திருக்கிறேன். பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் நேரில் சென்று வந்து மக்கள் உரிமையில் தொடராக எழுதிய ‘என்ன நடக்குது காஷ்மீரில்....’ என்ற கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன்.

அதே நேரம் தன்னுரிமை போருக்கு முன்னுரிமை கொடுக்கும் உலக விடுதலை போராட்டங்களை கூர்ந்து கவனிப்பவன் என்ற வகையில் நான் காஷ்மீரையும், நாகாலாந்தையும், மணிப்பூரையும் அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்களையும் ஆய்வு செய்து வருகிறேன்.

இப்பகுதிகளுக்கு நேரில் சென்று அம்மக்களிடம் பழகி உண்மைகளையும், அவர்களது உணர்வுகளையும் அறிய வேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது.

மனித உரிமை களங்களில் ஈடுபாடு காட்டிவரும் தமுமுக பொருளாளர் ளி.ஹி.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இலங்கைக்கு ஒருமுறையும், நக்ஸல்கள் வாழும் சத்தீஸ்கருக்கு ஒரு முறையும் மனித உரிமைகளை அறியும் வகையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு நான் அவரிடம், இப்படியொரு பயணம் காஷ்மீருக்கு புறப்படுவதாக இருந்தால், நானும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன்.

இந்நிலையில் தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.யி.ஷி.ரிபாயி அவர்கள் ஜூன் 24 அன்று தோப்புத்துறைக்கு கொள்கை சகோதரர் ஜியாவுல் ஹக் என்பவரின் திருமணத்திற்கு பங்கேற்க வந்திருந்தனர். அவருடன் சகோ. குணங்குடி. ஹனீபா மற்றும் வழக்கறிஞர் ஜெய்னுலாபுதீன் ஆகியோரும் வந்திருந்தார்.

அன்று மாலை எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அக்கறைப்பள்ளி தர்ஹா இருக்கும் பெரிய குத்தகை கிராமத்திற்கு ஓய்வுக்காக சென்றிருந்தோம். அது கடலும், ஆறும் சூழ்ந்த ஒரு தீவு எனலாம். அதன் மணல்பாங்கும், பனை மரங்களும், மா மற்றும் முந்திரி தோப்புகளும், சவுக்கு காடுகளும் அக்கிராமத்தின் முகவரிகள்.

ஒருமுறை நான் கவிக்கோ. அப்துல் ரஹ்மானை அங்கு அழைத்துப் போயிருந்தேன். அப்பகுதியை பார்த்ததும் இது யாழ்ப்பாணம் போல் இருக்கிறது என்று வியந்தார்.

அந்த பொன்மாலைப் பொழுதில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது யி.ஷி.ரிபாய்க்கு அவரது நண்பர் டாக்டர். அஜ்மல் என்பவரிடமிருந்து காஷ்மீர் நிகழ்ச்சி குறித்து போன் வந்தது.

என்னிடம் போகலாமா? என்றார். இதே போன்ற அழைப்பு ஒரு மனித உரிமை அமைப்பிலிருந்து    ளி.ஹி. ரஹ்மத்துல்லாவுக்கும் வந்திருக்கிறது.

நாங்கள் சென்னை திரும்பியதும் இது குறித்து விவாதித்தோம். மத்திய அரசின் பிரதமர் அமைச்சகத்தின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் நிணீஸீபீலீவீ ஷினீக்ஷீவீtவீ & ஞிணீக்ஷீsலீணீஸீ ஷிணீனீவீtவீ என்ற காந்திய சிந்தனைகளை நாடெங்கிலும் பரப்பும் தொண்டு இயக்கம் ஜூலை 23 முதல் 25 வரை காஷ்மீரில் தோடா (ஞிளிஞிகி) நகரில் மூன்று நாட்கள் கருத்தரங்கை நடத்துவதாக அறிந்தோம்.

இதோடு பல மனித உரிமை அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன என்பதும் தெரியவந்தது.

எங்களைப் போல 25 பேருக்கு மட்டும்தான் தமிழகத்தில் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளதாக நிதழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து தகவல் வந்தது. வேறு சில அனைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் அடக்கம்.

எங்களோடு மமக பொருளாளர் ஹாருன் ரஷீதும் இணைந்துக் கொள்வதாக கூறினார். நாங்கள் எமது தலைமை நிர்வாகக் குழுவில் இப்பயணத்திற்கு ஒப்புதல் பெற்று ஜூலை 18 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்படுவதாக திட்டமிட்டோம்.

(பயணம் நாளை தொடரும்....)

காஷ்மீரில் நிகழ்ச்சி நடைபெற்ற டோடா நகரில் ஒரு மலைத் தொடர் காட்சி....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...........

அன்பான சகோதர சகோதரிகளே!

நபி (ஸல்) அவர்கள் சந்திரனை அடிப்படையாக வைத்து நோன்பை வையுங்கள், சந்திரனை அடிப்படையாக வைத்து நோன்பை விடுங்கள் என்று கூறியதை நாம் 29 வது நாளின் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், 29 வது நாளின் பிறையை பார்த்து நோன்பு விடுங்கள் என்று செயல்படுத்திவருவதை நாம் தற்போது கவனித்து வருகின்றோம்.

இந்த அடிப்படை சரியா? தவறா? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  சந்திரனின் அஹில்லாக்கள் அனைத்தும் மக்களுக்கு தேதியை அறிவிப்பதற்காக என்று அல்லாஹ் நமக்க இறக்கிவைத்த வேதத்தில் 2:189 வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான் என்பதை நம்மில் அதிகமானோர் அறிந்து வைத்துள்ளனர்.

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன............ (2:189)

இந்நிலையில் நாம் தற்போது ஹிஜ்ரி ஆண்டுமான கணக்கின் அடிப்படையில் 1432 வது வருடத்தின் ரமளான் மாதத்தை அடைந்துள்ளோம்.  இந்த 1432 ரமளான் மாதம் கீழ்கண்டவாறு மூன்று தினங்கள் உலகில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நம்மில் குறைவான நபர்களை தவிர உலக மக்கள் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை ரமளான் 1 (கிறிஸ்துவ நாட்காட்டிபடி Sunday 31.07.2011) -  குர்ஆன் கூறும் சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் ஆரம்பிக்கபட்ட நாள்

திங்கள் கிழமை ரமளான் 1  ( "  Monday 1.8.2011)  -  சவூதியை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட நாள்

செவ்வாய் கிழமை ரமளான் 1 ( " Tuesday 2.8.2011)  - பிறையை கண்ணால் பார்த்து இந்தியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள்.

கிழமை மாறினால் தேதி மாறும் என்பது இயற்கை விதி.  மேலே 1432 ரமளான் மூன்று கிழமைகளில் உலகில் துவங்கியது.  கிழமைமாறிவிட்டது தேதி மட்டும் மாறாமல் இருப்பதை கவனியுங்கள்.  

இந்த நாட்காட்டி விதியை கூட தற்போது சிலர் எங்களுக்கு தேதியும் கிழமை மாறியுள்ளது தானே என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்களுக்கு உலகத்திற்கு அருள்கொடையாக வந்த ஒரே தூதர், இறுதித்தூதர், நபி(ஸல்) அவர்களின் வேதத்தில் உள்ள நாட்காட்டி பற்றிய அடிப்படை விதியே தெரியாமல் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் இது போன்று கூறி மக்களிடம் தப்பித்து வருகின்றார்கள். அப்படி கூறுபவர்களுக்கு பவுர்ணமி தினம் மட்டும் ஒரே கிழமையில் வருவது ஏன் என்பதை சிந்திக்க தவறிவிட்டார்கள்.  அவர்கள் சொல்வது உண்மையென்றால், மூன்று தினங்களில் பவுர்ணமி தினம் வரவேண்டும் தானே? ஏன்என்றால் வித்தியாசமான மூன்ற கிழமைகளில் 1432 ரமளான் மாதத்தை ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமி நாளும் மூன்று கிழமைகளில் வந்தால் தான் அவர்கள் கூறுவது சரியாகும் என்பதை சாதாரணமாக சிந்தித்தாலே நாம் புரிந்து கொள்ளலாம். 

தற்போது நாம் விஷயத்திற்குள் வருவோம்.

1432 ரமளான் மூன்று கிழமைகளில் ஆரம்பித்ததால் யாருக்கு பவுர்ணமி தினம் ( பூரண சந்திரன்) சரியாக வரும் என்பதை நாம் தற்போது கணக்கிடுவோம்.

ஞாயிற்றுக்கிழமை (31.07.2011) குர்ஆன் கூறும் சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் (Sunday 31.07.2011) ரமளானை ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமி தினம் (யவ்முல் பத்ர்) 14 வது நாள் சனிக்கிழமை (13.08.2011) வருகிறது. 

அதற்கு அடுத்து சந்தினின் மன்ஸிலை பார்க்க முடியாத 30வது நாள் (நபி(ஸல்) அவர்கள் கூறிய கும்மவுடைய நாள்) திங்கள்கிழமை (29.08.2011).  அன்று சந்திரன் சந்திர மாதத்திற்கான ஒரு சுற்றை முடித்து புதிய சுற்றை ஆரம்பிக்கும் நாளாகும். அன்றையதினம் பூமியில் இருந்து சந்திரனை யாரும் பார்க்க முடியாமல் இருக்கும். 

நபியவர்கள் சொன்ன அடிப்படையில் பிறையை பார்க்க முடியாத கும்மவுடைய நாளை, நாம் பிறையை கண்ணால் பார்த்து கணக்கிட்டு எண்ணிக்கொண்டு வருகின்ற 1432  ரமளான் மாதத்தில்,  ஞாயிற்றுக்கிழமை (28.8.2011) அன்று 29வது நாளின் பிறையை பஜ்ர் தொழுதுவிட்டு கிழக்குபகுதியில் உதிக்கும் நிலையில் பார்க்க முடியும். இதைத்தான் அல்லாஹ் உர்ஜ{னல் கதீம் என திருக்குர்ஆன் அத்தியாயம் 36:39 வசனத்தில் கூறுகின்றான்.   

எனவே 1432 ரமளானின் 29 வது நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் பிறை தெரியாத திங்கள்கிழமையை கூட்டிவிட்டால் மாதம் 30 ஆக நிறைவு பெற்றுவிடும்.  

ஞாயிற்றுக்கிழமை (31.7.2011) 1432 ரமளானை ஆரம்பித்தவர்கள் 14வது நாளில் பவுர்ணமி தினத்தை அடைவார்கள். அதற்கு அடுத்து 16 நாட்களுடன் 1432 ரமளானை முப்பது நாட்களை கொண்டு முடிப்பார்கள். குர்ஆன் கூறும் மன்ஸில்கள் அடிப்படையில் பிறையை கணக்கிட்டவர்கள் 1432 ரமளான் மாதத்தில் மாறி மாறிவரும் 29 பிறை மன்ஸில்களை பார்க்க முடியும். ஒரு திங்கள்கிழமையன்று (29.08.2011) பிறையை பார்க்க முடியாத 30வது நாளாக இருக்கும்.  எனவே அவர்கள் முப்பது நாள்கள் நோன்பு நோற்று அல்லாஹ் சொன்ன அடிப்படையில் 1432 ரமளான் மாத்தின் எண்ணிக்கையை முழுமையாக பூர்த்தி செய்து செவ்வாய் கிழமை (30.8.2011) அன்று ஷவ்வால் மாதத்தின் முதல்நாளில் நுழைவார்கள்.  அன்று நபியவர்கள் நோன்புவைக்க கூடாது என்று தடுத்து ஹராமாக்கிய ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினமாகும்.


அடுத்ததாக சவூதியை அடிப்படையாக வைத்து நோன்பை ஆரம்பித்தவர்களின் நிலையை பார்ப்போம்.

திங்கள் கிழமை ரமளான் 1  ( "  Monday 1.8.2011)  -  சவூதியை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட நாள்

சவூதி அரேபியாவும், அவர்களை பின்பற்றியவர்களும், 1432 ரமளானின் முதல் நாளை ஷஃபானில் நுழைத்துவிட்டார்கள்.  ஏன்என்றால் அவர்கள் ஷஃபானின் முப்பதாவது நாள் என்று கூறிய ஞாயிற்றுக்கிழமையன்று (31.07.2011) அன்று சந்திரனின் முதல் நாளுக்குரிய படித்தரத்தை கண்களால் பார்க்க முடிந்தது. அது கடைசி நாளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் கூறிய சந்திரனை பார்க்க முடியாத கும்மவுடைய நாளாக அது இருந்திருக்க வேண்டும். அன்றைய தினம் உலகில் 1432 ரமளான் மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறை மன்ஸிலை உலகில் அதிகமானோர் கண்களால் பார்த்ததை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே சவூதியை பின்பற்றி 1432 ரமளான் மாதத்தை திங்கள்கிழமை (1.8.2011) முதல் நாள் என கூறி ஆரம்பித்தவர்கள்பெளர்ணமி தினத்தை (யவ்முல் பத்ர்) சனிக்கிழமை தான் (13.8.2011) அடைவார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு ரமளான் மாதத்தின் 13 வது நாளாக இருக்கும்.  13வது நாளில் பவுர்ணமி தினம் வருவது மிகவும் அறிதான ஒன்று. 1432 ரமளான் மாதத்தை இவர்கள்  துவங்கிய அடிப்படையில் பவுர்ணமி தினம் வேறு கிழமையில் தானே இவர்களுக்கு வரவேண்டும். இவர்களுக்கும் சந்திர மன்ஸில்களின் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்தவர்களுக்கும் பவுர்ணமி தினம் மட்டும் ஒரே கிழமையில் எப்படி வருகின்றது என்பதைத்தான் இங்கு நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் சவூதியை பின்பற்றுவதால், சவுதியின் பிறை நாட்காட்டி கணக்கின் அடிப்படையில் இவர்கள் 30 நாட்களை கொண்ட 1432 ரமளான் மாதத்தை திங்கள்கிழமை (29.08.2011) அன்று 29 நாட்களுடன் பிறையை கண்ணால் பார்க்காமலேயே முடித்து செவ்வாய்கிழமை பெருநாளை கொண்டாடுவார்கள் என்பதை நாம் இங்கே தகவலாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.   திங்கள் கிழமை பிறையை பார்க்க முடியாத கும்மவுடைய நாளாக உள்ளதால், அன்று உலகில் யாரும் பிறையை கண்களால் பார்க்க முடியாது.

அடுத்து பிறையை கண்ணால் பார்த்து ஆரம்பித்தவர்கள் நிலையை நாம் பார்ப்போம்.

செவ்வாய் கிழமை ரமளான் 1 ( " Tuesday 2.8.2011)  - பிறையை கண்ணால் பார்த்து இந்தியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள்.

இவர்கள் பிறை மன்ஸில்களை கணக்கிட்டு ஆரம்பித்தவர்களுக்கும், சவூதியை பின்பற்றி ஆரம்பித்தவர்களுக்கும் மாற்றமாக அதன் பின்னால் தத்தமது பகுதியில் பிறையை பார்த்து ரமளான் முதல் நாளை செவ்வாய்கிழமை (2.8.2011) ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் பவுர்ணமி தினம் சனிக்கிழமைதான் (13.08.2011)  வருகின்றது.  இவர்கள் இருநாட்கள் கழித்து மூன்றாம் பிறையை முதல் பிறையாக கொண்டவர்களுக்கு பவுர்ணமி மட்டும் எப்படி ஒரே கிழமையில் வருகிறது என்பதையும் நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.  முதல் நாளை இரண்டு நாட்கள் தள்ளி ஆரம்பித்தவர்கள் எப்படி ஒரே கிழமையில் பவுர்ணமி தினத்ததை பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 

செவ்வாய்கிழமை (2.8.2011) அன்று ரமளான் மாதத்தை துவக்கியவர்கள்,  1432 ரமளான் மாதத்தில் 28 நோன்புதான் வைக்க முடியும். அவர்களுடைய 29வது நாளான செவ்வாய்கிழமை (30.8.2011) சந்திர மன்ஸில்களின் அடிப்படையில் பெருநாளுடைய தினமாகும்.  எனவே அவர்கள் தங்களுடைய 29வது நோன்பை ஷவ்வால் மாதத்தில் நோற்பார்கள். செவ்வாய்கிழமையன்று (30.8.2011)ஷவ்வால் மாதத்தின் முதல் நாளுக்குரிய சந்திர மன்ஸிலை கண்களால் பார்க்க முடிகின்ற நாள் என்பதால் அன்ற பிறையை கண்களால் பார்க்க முடியும். எனவே அவர்கள் அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை (31.08.2011) பெருநாள் கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் மழையால் மேகமூட்டம் ஏற்பட்டால் புதன்கிழமையை 30 வது நாளாக எடுத்துக்கொண்டு காரணத்தினால் வியாழக்கிழமை (01.09.2011) பெருநாள் கொண்டாடுவார்கள். 

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,  ரமளானை மூன்று கிழமைகளில் ஆரம்பித்தவர்களுக்கும் முடிப்பவர்களுக்கும், பவுர்ணமி தினமும் மூன்று கிழமைகளில் வரவேண்டும் என்பதுதானே உண்மை. 

அதற்கு மாற்றமாக சந்திர மன்ஸில்களின் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்தவர்களுக்கும் சனிக்கிழமைதான்பூரண சந்தினை ஏற்படுகின்றது.   

திங்கள்கிழமை 1432 ரமளான் ஒன்று என சவூதியை பின்பற்றி ஆரம்பித்தவர்களுக்கு பவுர்ணமிசனிக்கிழமையன்றுதான் ஏற்படுகின்றது.  

அதே போல் மூன்றாம் பிறையை முதல்பிறையாக கணக்கிட்டு செவ்வாய்கிழமை 1432 ரமளான் முதல் நாளை ஆரம்பித்தவர்களுக்கும் சனிக்கிழமையன்றுதான் பவுர்ணமி தினம் ஏற்படுகின்றது.   

பவுர்ணமி தினம் (13.08.2011) ஒரு கூட்டத்திற்கு சனிக்கிழமை 14 ம் தேதி,
 
மற்றொரு கூட்டத்திற்கு அதே சனிக்கிழமை 13 ம் தேதி.  

இன்னுமொரு கூட்டத்திற்கு அதே சனிக்கிழமையே 12 ம் தேதியாக உள்ளது.  

ஒரே சனிக்கிழமைக்கு மூன்று தேதிகள் கொடுக்க முடியுமா என்பதையும் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  இஸ்லாமியர்களின் நாட்காட்டிப்படி அப்படித்தான் வரும் என்று மனோ இச்சையின் அடிப்படையில் கூறப்போகின்றீர்களா?  இல்லையென்றால் அல்லாஹ்வின் நாட்காட்டி விதிகளை ஆய்வு செய்து, சரியான முறையில் இயற்கை விதிகளுக்கு எதிரில்லாமல், அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை நடைமுறைப்படுத்த போகின்றீர்களா?

உங்கள் சிந்தனைக்காகவே இந்த விஷயம் பதிவிடப்படுகின்றது. யாரையும் புண்படுத்துவதற்காக இது எழுதப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை நாம் பயன்படுத்தி அதை உலக மக்களுக்கும் மீண்டும் அறிமுகப்படுத்தி, உலகில் உள்ள யூத, கிறிஸ்துவ காலண்டர்கள் பொய்யான காலண்டர்கள் என்பதை உலகிற்கு நாம் உணர்த்தி ஈறுலகிலும் வெற்றிபெற பிரார்த்திக்கும் உங்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டி சகோதரர்கள்.

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
12.09.1432 வியாழக்கிழமை (CE:11.08.2011 கிறிஸ்துவ நாட்காட்டி)

பெண்களே! சிந்தியுங்கள்!


பெண்களே! சிந்தியுங்கள்!

(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை, அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள், மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள், பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்…. (புகாரி)

Sunday, 14 August 2011

மூதாதையர்களின் மடமையை கண்மூடித் தனமாகப்...


மூதாதையர்களின் மடமையை கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்! “மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்”
 
(அல்-குர்ஆன் 2:170-171)

ஜகாதுல் ஃபித்ர் - ஏன் குடுக்க வேண்டும்


ஜகாதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் தர்மம்
ஏன் கொடுக்கவேண்டும்? எப்போது கொடுக்கவேண்டும்?
“நோன்பாளி வீணான, தவறான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தை தூய்மைப் படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருநாள் தர்மம் ஆகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்கள் : அபூதாவூத், இப்னு மாஜா, தாராகுத்னி, ஹாக்கிம்
என்ன கொடுக்கவேண்டும்? யாருக்கு கொடுக்க வேண்டும்?
“பேரிச்சம் பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு”ஸாஉ” என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்- நூல்கள்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத், இப்னு மாஜா.
“ஸாஉ” என்பது இருகைகளால் நான்கு தடவை தானியங்கள் அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும். சாதாரண அரிசி என்றால் ஒரு ஸாஉ என்பது 2.30 கிலோவை குறிக்கும். மேலும் இந்த பித்ராவை உணவுப் பொருளாகவே கொடுக்க வேண்டும் என்று பல ஹதீஸ்கள் வலியுறுத்து கின்றன. “இன்றைய தினம் ஏழைகளை தேவையற்றவர்களாக ஆக்குங்கள்” நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் கண்டிப்பாக ஏழைகளுக்கே கொடுக்க வேண்டும்

எப்படி கொடுக்கவேண்டும்? எங்கு கொடுக்க வேண்டும்?
இதற்கென்று ஒரு குழு அமைக்கப் பட்டு, அதன்படி வசூலிக்கப் பட்டு முறைபடி ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளன. மேலும், அதனை சொந்த ஊருக்கு போக மீதியை மற்ற ஊர்களுக்கு கொடுக்க இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகம் கடந்த 16 வருடங்களாக இந்த ஃபித்ராவை வசூலித்து, முறையாக விநியோகித்து வருகிறது.

Friday, 12 August 2011

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

மறுமை நாள் கியாமத் நாள் நியாயத் தீர்ப்புநாள்.இப்படி முஸ்லிம்களிடம் அறியப்பட்டுள்ள-உலகம் அழிந்து மறு உலகம் என்று அறியப்பட்டுள்ள – நாள் பற்றியும், அதற்கு முன் ஏற்படும் அடையாளங்கள் பற்றியும் இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.
1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து விட்டன. அவர்களின் முன்னறிவிப்பு நடந்ததிலிருந்து அவர்கள் ஒர் ‘ இறைத்தூதர் தான்’ என்பது நிரூபணமாகி உள்ளது.
நடந்தது போக இனியும் நடக்கும் என அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.
மறுமை நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம் யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.
மறுமை வராது என்று நம்பவோர் ஒரு புறம், வருவதை நம்பினாலும் இப்போது வராது என்று நம்புவோர் ஒரு புறம் என, மறுமை பற்றிய சந்தேகிப்பேர் வழிகளுக்கு மறுமை வரும் அதற்கு முன் சில அடையாளங்கள் நிகழும் என்பதையே இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.
இந்த அடையாளங்கள் ஏற்படும் காலங்களில் நாம் வாழ நேரிடலாம், இயலாமலும் போகலாம். இந்த அடையாள நிகழ்வின் போது (ஈமானிய) இறை விசுவாசத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை அறிவதால், அக்காலத்தை அடையும் முஸ்லிம்கள் முழுமையான ஈமானுடன் மரணிக்க நாம் பிராத்திக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட மறுமைக்கான அறுவடை நிலமாக இவ்வுலக வாழ்க்கை அடைந்திட வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!அன்புடன்
கே.எம்.முஹம்மது மைதீன் உலவி
1-மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்
அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.
இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.
மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.
அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)
வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)
வானங்களையும், பூமியையும் படைத்து, சந்திரனையும், சூரியனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்தான்’ என பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 29:61).
வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து, காய்ந்த பூமியை உயிர்ப்பித்(து விளையச் செய்)தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்தான்’ என்று பதில் கூறுவார்கள் .. (அல்குர்ஆன் 29:63).
அல்லாஹ்வை நம்பியிருந்தனர் மக்காவாசிகள். ஆனாலும் அவர்களில் பலர் ‘இறை மறுப்பாளர்கள்’ என அறிவிக்கபட்டனர். காரணம், அவர்கள் கொண்ட நம்பிக்கையில் உள்ள குறைபாடுதான். அல்லாஹ்வை நம்பினார்களே தவிர, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக்கூடாது என்ற உண்மையை மறந்து விட்டனர். விளைவு! ‘இறைமறுபாளர்கள்’ ‘நரகத்திற்குரியவர்’ என்று அறிவிக்கப்பட்டனர். எனவே ஈமான் எனும் நம்பிக்கை முழுமை பெற்றதாக அமைய வேண்டும்.
நம்பிக்கை கொள்ளப்பட வேண்டிய ‘மறுமைநாள்’ பற்றிய எச்சரிக்கை திருமறைக் குர்ஆன் நெடுகிலும் உள்ளது. இறைமறுப்பாளர்கள், இணை வைப்பேர் இதை நம்பிக்கை கொள்வதில் குறை வைத்துவிட்டனர் என்பது பெரிய ஆச்சரியம் அல்ல. ஆனால் முஸ்லிம்களும் கூட இதில் முழு நம்பிக்கை இல்லாவர்களாக உள்னர் என்று கருதும் அளவுக்கே வாழ்கின்றனர்.
மறுமை நாள் மீதான நம்பிக்கை அவசியமானது. கட்டாயமானது என ஒரு சிலர் விளங்கி இருந்தாலும், அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்வதும் இல்லை. ‘எப்போதோ வரும் ஒன்று, இப்போதே நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?’ என்ற எண்ணம் மேலோங்கியதே இதற்குக் காரணமாகும்.
ஒரு சிலர் இஸ்லாமியச் சட்டங்களை பின்பற்றுதில் அல்லது அதை நம்புவதில் முழு ஈடுபாட்டைக் காட்டினாலும், மறுமை நம்பிக்கை மீது மட்டும் ஏனோ தானோவென்றே உள்ளனர். இதனால் தங்களின் ஈமானை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
அல்லாஹ்வை நம்புங்கள் என்று வலியுறுத்திய நபி (ஸல்) அவர்கள் அதே அளவிற்கு ‘மறுமையை நம்புங்கள்’ என்றும் வலியுறுத்தினார்கள். ‘இவ்வுலகத்துடன் நம் வாழ்வு முடிந்திடவில்லை, மரணத்திற்குப்பின் பின் இன்னுமொரு வாழ்வு உண்டு’ என்ற உண்மையை நபி (ஸல்) அவர்கள் போதித்துக் கொண்டே இருந்தார்கள்.
2-இறந்த பின் வாழ்வா?
இந்த கேள்வி எவருக்கும் எழத்தான் செய்யும். இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போய் விடுகிறோம். சிலரோ இறந்தபின் எரியூட்டப்பட்டு சாம்பலாய் போய் விடுகின்றனர். ஆதி மனிதர் முதல், உலகம் அழியும் போது உள்ள மனிதர்கள் வரை மீண்டும் எழுப்புவது என்பது இயலாத காரியம் என்று தங்களுக்குத் தாங்களே விவாதம் செய்து கொள்கின்றனர்.
இன்னும் சிலர் இக்கேள்விக்கு பதில்காண இயலாமல், ‘உலகிற்கு அழிவில்லை’ என்று முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சில கடவுள் நம்பிக்கையாளர்கள், ‘தங்களின் செயல்களில் நன்மைக்கான பயனையோ, தீயவைகக்களுக்கான தண்டனையையோ நாம் அடையத்தான் வேண்டும். ஆனால் இதற்காக ‘மறுஉலகம்’ என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இறந்த பிறகும் பிறப்பு தொடரும். நல்லவனாக இருப்பின் நல்ல பிறவியாகவும், கெட்டவனாக இருப்பின் கெட்டப் பிறவியாகவும் பிறப்போம். இதுதான் தீர்வு என்று கூறி ‘மறுபிறவி’ தத்துவத்தை போதிக்கின்றனர்.
இதே மாதிரியான சந்தேகமும், கேள்வியும் நபி (ஸல்) அவர்களின் காலத்து மக்களுக்கும் இருந்தது என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.
அவன்தான் வானங்களையும், பூமியையும், ஆறுநாட்களில் படைத்தான். அவனது அர்ஷ், தண்ணீர் மீதுள்ளது. உங்களில் எவர் நற்செயல் செய்வதில் சிறந்தவர்? என்பதை உங்களில் சோதிப்பதற்காக இவ்வாறு படைத்தான். மேலும் ‘மரணத்திற்குப் பின் நீங்கள் எழுப்பபடுவீர்கள்’ என நீர் கூறினால், ‘இது தெளிவான சூன்யமே தவிர வேறில்லை’ என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர் (அல்குர்ஆன் 11:7).
மேலும், அவர்கள் ‘நாம் இறந்து விட்டோம். மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டோம். இதன் பின்னரும் எழுப்பப்படுவோமா? நம்முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் (அல்குர்ஆன் 56:47-48).
இறந்தபின்பும் வாழ்வுண்டு!
இறந்த பின் இனி வாழ்க்கை இல்லை என்போருக்கும், அல்லது மறுபிறவி தான் உண்டு புதிய வாழ்வு என்பதில்லை என்போருக்கும் பதில் கூறும் வகையில், ‘இறந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து புதியதோர் வாழ்வுண்டு. அந்த வாழ்வின் நாளே நிரந்தரம். அந்த வாழ்வின் காலமே மறுமை நாளாகும்’ என்று அல்லாஹ், மிகத் தெளிவாக அறிவிக்கிறான்.
மறுமை நாள் மீது சத்தியம் செய்கிறேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(மக்கிப்போய் விட்ட) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என மனிதன் எண்ணுகிறானா, அப்படி அல்ல! அவனின் விரல் நுனிகளையும் சரியாக அமைக்க நாம் ஆற்றல் உள்ளவர்கள் தாம் (அல்குர்ஆன் 75:1-4).
நிச்சயமாக முன்னோரும், பின்னோரும் குறிப்பிட்ட நாளில் ஒரு நேரத்தில் எல்லோரும் ஒன்று கூட்டப்படுவீர்கள் என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 56:49-50).
3-மறுமை எப்போது வரும்?
‘இறந்தபின் வாழ்வுண்டு’ என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறும் பணியில் தீவிரமாக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், ‘மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்? என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர்.
(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் ‘அது எப்போது வரும்?’ என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்’ (அல்குர்ஆன் 79:42-45).
மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். ‘அது வரும்’ என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்வைல. கூறும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை.
காரணம் என்ன?
மறுமை நிச்சயம் வரும் என்ற நிலையில், அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித்திருக்கலாமே! அறிவிக்கத் தயங்குவது ஏன்? என்ற சந்தேகம் வரலாம்.
நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் ரகசியமாக வைத்துள்ளேன் (அல்குர்ஆன் 20:15).
மறுமை நாள் வரும் எனக் கூறும் இறைவன், ‘அது எப்பொது வரும்?’ என்பதை மட்டும் ஏன் மறைத்து வைத்துள்ளான் என்பதற்கு சரியான காரணத்தை இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.
ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால் தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது.
மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒரு புறம், எப்போதுவரும்? என்ற சந்தேகம் ஒரு புறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் எரும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அறிவிக்கின்றனர்.
நிகழப்போகும் (மறுமையின்) வேதனை பற்றி கேள்வி கேட்பவன் கேட்கிறான். இறை மறுப்பாளர்களுக்கு (அது ஏற்படும் போது) அதைத் தடுப்பவர் எவரும் இருக்கமாட்டார். உயர் வழிகளைப் பெற்ற அல்லாஹ்வின் மூலம் (அது ஏற்படும்). ஒரு நாள் வானவர்களும் (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் அவனிடம் உயர்வார்கள். அந்நாளின் அளவு, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் இருப்பீராக! அவர்களோ அதை (மறுமையை) வெகு தூரமாகக் காண்கிறார்கள். நாமோ அதைச் சமீபமாகக் காண்கிறோம் (அல்குர்ஆன் 70:1-7).
‘. . . இரண்டு நபர்கள் (விற்பனைகுரிய ) துணிகளை விரித்து (ப்பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்க மாட்டார்கள். சுருட்டிக் கூட வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். மேலும் ஒரு மனிதர் மடி கனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போதுதா)ன் பாலுடன் (வீடு) திரும்பி இருப்பார். அதற்குள் மறுமை ஏற்பட்டு விடும். ஒருவர் தமது நீர் தொட்டியை (அப்போதுதான்) கல் வைத்து பூசி இருப்பார். இன்னும் அதில் நீர்கூட இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை வந்து விடும். உங்களில் ஒருவர் தமது உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார், அதற்குள் மறுமை வந்துவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பவர்:அபூஹீரைரா(ரலி), நூல்: (புஹாரி 6506).
மறுமை நாள் வெகு தூரத்தில் இல்லை. சமீபத்தில் உள்ளது. அது நிகழ்வும் கூட சில வினாடித் துளிகளில் நடந்து முடிந்து விடும் என்பதை இந்த வசனம்-ஹதீஸ் மூலம் அறியலாம்.
மறுமை வரும் அதை அறிவது எப்படி?
மறுமை எப்போது வரும்? என்ற கேள்விக்கு அல்லாஹ் ‘வரைவில் வரும்’ என்று பதில் கூறினாலும், மறுமை வரும் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்ற கேள்வி கூடவே எழத்தானே செய்யும். இதற்கும் அல்லாஹ் பதில் கூறவே செய்கிறான்.
‘அவ்வாறல்ல, அவர்கள் அதை விரைவில் அறிவார்கள். மேலும் வெகு சீக்கிரத்தில் அதை அறிவார்கள்’ (அல்குர்ஆன் 73:4-5).
‘மறுமை நாள் வரும். வரப்போகிறது என்பதை அறிந்து கொள்வார்கள்’. அது வரும்முன், வரப்போகிறது என்பதற்கான சில சான்றுகள் உங்கள் முன் நிகழும். அந்தச் சான்றுகளை வைத்தே அது வரப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற கருத்திலேயே, விரைவில் அறிவார்கள் என்று கூறுகிறான்.
4-மறுமை வருவதற்கான சில அடையாளங்கள்!
மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மறுமை நாள் நெருங்கிட்டது என்பதற்கானச் சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கிறான்.
மறுமை அடையாளங்களில் சிறிய அடையாளங்களும் உண்டு. பெரிய அடையாள்களும் உண்டு. சில அடையாளங்கள் நடந்து முடிந்துள்ளன. அந்த அடையாளங்களை நாமும் கண்டு, அனுபவித்துள்ளோம். சில அடையாளங்களோ வெகு விரைவில் ஏற்பட உள்ளன. மறுமை அடையாளங்கள் பற்றி இனி அறிவோம்.
சிலை வணக்கம் செய்வர் முஸ்லிம்கள்!
எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதீ, அபூ தாவூத்.
தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், இன்றும் கூட சிலை வணக்க வழிபாடுகிளில் ஈடுபாடு கொள்வதைக் காணலாம். குழந்தை இல்லாத முஸ்லிம் பெண்களில் சிலர். தங்களுக்கு குழந்தை வேண்டி, கோவில்களில் தொட்டில் கட்டிவிடும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். கோவில் விழாக்களில் முழு அளவில் பங்கெடுக்கும் சில முஸ்லிம்களும் உண்டு. ஓரிறைக் கொள்கைப்படி வாழ வேண்டியவர்கள், சிலை வணக்கத்திலும் ஈடுபடுவது மறுமை நாளின் அடையாளமாகும்.
5-அறியாமை பெருகும்
‘மறுமை நாளுக்கு முன் ஒரு காலகட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும். கல்வி அகற்றப்படும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ஹர்ஜ் என்பது கொலையாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), அபூ மூஸா (ரலி) நூல்-புகாரீ 7063.
முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லாத பல வசதிகளை இன்று நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் முன்னோர்களிடம் இருந்த நற்செயல்கிளில்பல, நம்மிடம் இல்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும். அறிவுள்ள நடவடிக்கை என்பது நம்மிடம் குறைந்து காணப்படுவது நம்மிடம் அறியாமையும் குடியேறிவிட்டது என்பதற்கானச் சாலச் சான்றாகும். அறிவாளிகள் என்று அறியப்படுவோரிடம் அறிவு கெட்ட செயல்கள் மலிந்துள்ளதைக் காணும் போது. மறுமை நாள் மிக அருகில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
6-விபச்சாரம், குடி அதிகரிக்கும்!
‘கல்வி உயர்த்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஓர் ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மறுமை நாளின் அடையாளங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு பாலிக் (ரலி) நூல் – புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.
மறுமை நாளின் அடையாளங்களாக விபச்சாரமும், குடியும் பெருகும் என் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இன்று உண்மையாகி உள்ளது. விபச்சார விடுதிகளை அரசே அங்கீகாரம் செய்து ‘ரெட்லைட் ஏரியா’ என ஒரு பகுதியை ஒதுக்கி விபச்சாராம் நடைபெற அனுமதிக்கிறது. நட்சத்திர ஹோட்டல் என்ற பெயரிலும் ‘ஹை-லெவல்’ விபச்சாரமும் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.
குடியைச் சொல்ல வேண்டியதே இல்லை. குடியைத் தடுக்க வேண்டிய அரசு, குடிபானங்களில் அரசு அங்கீகாரம் பெற்றவை என முத்திரையிட்டு விற்பதைக் காணலாம். அரசே மதுபானக் கடைகளின் ஏகபோக உரிமையாளர்களாக இருப்பது தான் ஆச்சரியம். எப்படியோ, நபி (ஸல்) அவர்கள் கூறிய அடையாளம் உண்மை படுத்தப்பட்டது. இதன் மூலம் மறுமை விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.
‘கொலை’ அதிகரித்தல்!
‘மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் – புகாரீ 7066).
அநியாயமாக ஓர் உயிரைப் பறிக்கும் கொலைபாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்தக் காலம். இப்போதோ கொலை செய்வதற்கு என கூலிப் படைகள் உண்டு. கையை வெட்ட ஒரு கூலி, காலை எடுக்க ஒரு கூலி, உயிரைப்பறிக்க ஒரு கூலி என ‘பேரம்’ பேசி கொலை செய்யும் கும்பல் அதிகரித்து விட்டது.
தங்களுக்கு பிடிக்காத நாடுகளில் உயிர் பலிகள் சர்வ சாதாரணமாக நடைபெற, பெரிய நாடுகள் ஏற்பாடு செய்கின்றன. இதனால் குண்டு வெடிப்பும், அணுச்சோதனையும், ரசாயன ஆயுதப் புரட்சியும் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளாக மாறி விட்டன. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டது என்பதற்கு அத்தாட்சிகளாக உள்ளன.
காலம் சுருங்கும்!
காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் அஹ்மத்.(மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 7061.
காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்குப் பயணம் எனில் பலமாதம், பலவாரம், பல மணிநேரம் என செலவழித்து ஒட்டகை-குதிரை என பயணம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாத காலம் பணம் செய்து போய் சேர வேண்டிய காலத்தை, சிலமணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழிபோக்குவரத்து மூலம் காலத்தைச் சுருக்கி விட்டோம்.
செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்வற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குப் பின் அச்செய்தியை சேர்க்க படாதபாடு பட்ட மனித இனம், இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
7-குழப்பங்கள் மலியும்
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன்-அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 7081.
குழப்பம் ஏற்படும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தருகிறார்கள். குழப்பநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் குழப்பமே மிகைத்து நிற்கிறது. நபித்தோழர்களின் காலத்திலேயே, ஆட்சியதிகராப் போட்டி துவங்கியது முதல் இன்று வரை குழப்பம் இருக்கவே செய்கிறது.
மேலும் குழப்ப நிலைகள் தோன்றும் என்பதும் உறுதியாகிறது. அந்த குழப்பத்தின் போது மனிதன் தன்னை விலக்கிக் கொள்வதே சரியான செயலாகும். குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இருக்கும் என்பதை கவனிக்கும் போது, மறுமை நாள் மிக நெருக்கத்தில் வர உள்ளது என்பது உறுதியாகிறது.
தனிமையே விருப்பமாகும்
மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களில் இருந்து தமது மார்க்க (விசுவா)த்தைக் காப்பாற்ற அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய், பள்ளத்தாக்கு) பகுதிகளுக்கும் சென்று வாழ்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபுஸயீத் அல் குத்ரி (ரலி), நூல் – புஹாரி 6495.
குழப்பம் மலிந்து ஈமானை பாதுகாத்திட வழி இருக்காதா? என எண்ணும் நிலை வரும். அப்போது தன் ஈமானைப் பாதுகாக்க ஒரு முஸ்லிம் தன் ஆட்டை ஓட்டிக்கொண்டு, மக்களை விட்டும் தனியே போய் இருக்கும் அளவுக்கு சூழல் அமையும்.
இப்போது இந்த நிலை வந்துவிட்டது. நமக்கேன் வம்பு? என்று எண்ணும் நிலை உருவாகி, தனிமையே நல்லது என்றாகிவிட்டது. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டதற்குச் சான்றாகும்.
வாழும் ஆசை அற்றுப் போய் விடும்
ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 7115.
தனிமையை விரும்பும் மனிதன் இறுதியில், மரணித்து விட்டால், இந்த குழப்பத்திலிருந்து தப்பிக்கலாமே! என்று கருதும் அளவுக்கு குழப்பம் மலிந்து போய் இருக்கும். அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருவதை உணர முடிகிறது.
எதிர்காலத்தில் இது அதிகமாகலாம். குழப்ப நிலை ஏற்பட்டு, தனிமை என்றாகி இறுதியில் மரணித்தால் நலம் என்று எண்ணும் அளவுக்கு குழப்பம் ஏற்படுவதும் மறுமை றாளின் அடையாளமாகும்.
8-தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்
நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 6496.
தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலம் தற்போது ஏற்பட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறையச்சமும், நேர்மையும் உள்ள ஒருவனே அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும். இன்றோ, தகுதி இல்லாத நபர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நிலையைக் காண்கிறோம். இதுவும் மறுமை நாள் சமீபித்து விட்டது என்பதற்கான அடையாளமாகும்.
9-மோசமான ஆட்சியாளர்கள் வருவர்.
ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்பேது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்: சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல்-புஹாரி – 7068.எனது உயிரை தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, உங்கள் இமாமை நீங்கள் கொன்று, சண்டை செய்து கொண்டு உங்களின் உலகத்தை உங்களில் கெட்டவர் ஆட்சி செய்யும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) நூல்-இப்னுமாஜா.
காலம் செல்லச்செல்ல ஆட்சியாளிடம் மோசமான நடவடிக்கை பெருகும். நல்ல ஆட்சியாளரைக் காண்பது அரிதாகும். மறுமை நாள் வரை இது தொடரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மோசமான ஆட்சியாளர்கள் ஆளும் நிலை தொடர்கிறது. இதுவும் மறுமை நாள் மிகமிக அருகில் வந்து விட்டதற்கான அத்தாட்சியாகி விட்டது.
10-போர் மூளும்
மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி, திர்மிதி, முஸ்லிம்.
தகுதியற்றவனிடம் ஆட்சி தரப்பட்டு, அவனும் மோசமான செயல் உடையவனாக அமையும் போது, அவனது நடவடிக்கைகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தாக்கப்படும் அவலம் நீடிக்கும் முஸ்லிம்களும் போர் புரியும் நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள்.
இந்தப் போரின் உச்சக்கட்டமாக நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடும் சமூகத்தவருடன் போரிடும் காலம் வரும், அப்போது மறுமை நாள்வரும் அடையாளமாக அது அமையும்.
இப்போதும் கூட முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்நது கொண்டே இருக்கின்றன. இதனால் சில முஸ்லிம்கள் அந்த நாடுகளில் ஆயுதம் தாங்கி போர் புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையும் விட கொடுமை ஒரே வாதத்தை வைத்தே இருதரப்பார் சண்டை போடுவார்கள் என்பதுதான்.
ஒரே வார்த்தையை முன் வைக்கின்ற இரு குழுவினர் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் – புஹாரி 3608.
11-ஆண்களின் எண்ணிக்கை குறையும்.
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன்.
கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிhவாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து, பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளமாகும். இவை ஏற்படாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் – புஹாரி 6808.
பயணங்களில் ஏற்படும் விபத்து, போர் கால மரணம் என மரணத்தை அதிகம் அனுபவிப்பது ஆண்கள்தான். இதனால் ஆண் இனம் அழிக்கப்பட்டு வருவது என்பது உண்மை. வரதட்சணை போன்ற காரணங்களுக்காக குழந்தைப் பருவத்திலேயே பெண்கள் கொலை செய்யப்பட்டாலும், இன்றும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களே அதிகம் உள்ளனர். காலப்போக்கில் இன்னும் கூடுதலாக பெண்களின் எண்ணிக்கை பெருகி ஆண்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஐம்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் பெண்-ஆண் விகிதாச்சாரம் அமையும்.
அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்து, முஸ்லிமில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸில் ஓர் ஆணை நாற்பது பெண்கள் இச்சைக் கொண்டு பின் தொடர்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இதிலிருந்து பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாகும் என்பதையும் புரியலாம். இதுபோன்ற நிலை ஏற்படும் போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்று உணரலாம். இப்போதே ஆண்கள் குறைந்து போவதற்கான அறிகுறியும் தென்படத்துவங்கி விட்டது.
தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள்
(மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண். தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர் (ரலி) முஸ்லிம் நூலில் உள்ள நீணட ஹதீஸல் ஒரு பகுதி)
எத்தனையோ ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் இறுதியில் நிர்பந்தம் காரணமாக தன் மகளின் கீழ்வாழும் நிலை ஏற்படும். அப்போது அவள் தன் தாயிடம் எஜமானி போல் நடந்து கொள்வாள்.
பெண் ஒருத்தி, தன் மகளின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் நிலை உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. இதுவும் மறுமைநாள் சமீபத்தில் உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.
சாதாரண மனிதன் உயர் நிலையை அடைவான்.
‘ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகும’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
‘செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).
(இந்த இரண்டும் முஸ்லிம் நூலில் இடம்பெறும் ஹதீஸின் ஒரு பகுதியாகும்.).
‘அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகிலேயே பாக்கியசாலியாக ஆகாதவரை மறுமைநாள் ஏற்படாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுபைதா இப்னு யமான் (ரலி) நூல்-திர்மிதீ, அஹ்மத்.
செல்வம் பெருகும்.
இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் வந்து ‘இதற்காகத் தான் என் கை வெட்டப்பட்டது’ என்பான். கொலைக்காரன் வந்து, ‘இதற்காத்தான் நான் கொலை செய்தேன்’ என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, ‘இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்’ என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ.
செல்வத்தை அதிகப்படுத்திட திருடியவனும், அதற்காக கொலை செய்தவனும், இதற்காக உறவினர்களைப் பகைத்து வாழ்ந்தவனும், ‘கண்முன் தங்கப் புதைலே குவிந்து கிடந்தாலும், அதை எடுக்க முன் வர மாட்டார்கள். அவர்களிடம் அந்த அளவுக்கு செல்வம் பெருகி நிற்கும். இனி தேவை இல்லை என்று கூறும் அளவுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பார்கள். இப்படி சொத்தை அதிக அளவில் பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, அனைத்து மக்களும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.’நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) நூல்-புகாரீ 7120.
தர்மம் செய்தால் நன்மை பல உண்டு, தர்மம் செய்வது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று. அதை இப்போதே செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, அதற்கரிய காரணமாக இனி வருங்காலத்தில் தர்மப் பொருளை வாங்க ஆள் இல்லாத அளவுக்கு எல்லோரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய அரவு மக்களைப் பாருங்கள், ஒரு காலத்தில் குடிசைவாசிகள் இன்று கோபுரத்தில் வாழும் சீமான்கள். ஒரு காலத்தில் வெளியூர் சென்று வியாபாரம் செய்தாலே வழி என்றிருந்தவர்கள் இன்றோ, மற்ற ஊர்க்காரர்கள் அவர்கள் வாழும் பகுதிக்க வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே தர்மப் பொருள் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் மிகக்குறைவுதான். அவர்களின் தர்மப்பொருள், மற்ற மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் நிலைதான் உள்ளது. மறுமை நாள் மிக சமீபத்தில் உள்ளது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.
கஞ்சனத்தனம் ஏற்படும்
‘(மறுமைநாள் நெருங்கும் போது) காலம் சுருங்கும் செயல்கள் குறையும், மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாகும் குழப்பமே தோன்றும், கொலை பெருகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் – புகாரீ 7061.
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘கஞ்சத்தனம் உருவாகும்’ என்று கூறுகிறார்க்ள. செல்வம் பெருகி, தர்மம் செய்ய நினைத்து, தர்மப் பொருளைச் சுமந்து சென்று கொடுக்க முன் வந்து, வாங்க ஆளில்லை என்று நிலை ஏறப்படும் போது, விரக்தி காரணமாக கொடுப்பதும் குறையும். கொடுப்பது குறையக்குறைய ‘கஞ்சத்தனம்’ உள்ளத்தில் குடிபுகும் என்பதே உண்மை. எனவே மறுமையின் அடையாளமாக மனிதனின் உள்ளத்தில் கஞ்சத்தனம் ஏற்படுவதும் ஒன்றாகும்.
கட்டிடம் கட்டுவதில் போட்டி உருவாகும்
‘மேலும், மக்கள் கட்டிடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாக கட்டாதவரை மறுமை நாள் வராது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) (இது புகாரீயில் இடம் பெறும் ஹதீஸின் ஒரு பகுதி).
தர்மப் பொருளையும் வாங்க ஆளில்லை என்ற அளவுக்கு செல்வம் பெருகும் போது, அதை செலவழிக்க வழிகான முயல்வது இயற்கைதான். இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, தன் வீட்டை பெரிய அளவில் கட்ட முனைவான். தன் வீட்டை விட பக்கத்து வீட்டானின் வீடு அழகாக இருந்து விடக்கூடாது என எண்ணுவான்.இவனின் வீட்டைப் பார்த்து, தன் வீட்டையும் அழகாக அமைத்திட அவன் முயல்வான். உடனே இவன் சமீபத்தில் கட்டிய வீட்டையே இடித்து மீண்டும் கட்ட முயல்வான். இப்படி போட்டி போட்டு கட்டிடங்களை அழகாக அமைக்க முயல்வதும்;, உயராமான கட்டிடங்களை கட்ட முனைவதும் இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் மறுமை நாளின் அடையாளம் என்று நபி (ஸல்) கூறிக் காட்டுகிறார்கள்.
12-நபி என்று கூறுவோர் வருவர்
‘இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு, அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன் வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை ‘நபி’ என்று வாதாடுவான்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ|ஹுரைரா (ரலி) நூல்-புகாரீ 3609.
நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்பது இஸ்லாமிய நம்பிக்கை ஆகும். தன்னை நபி என்று சிலர் வாதிட்ட நிலை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. யமாமாப் பகுதியில் முஸைலமா என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். இவன் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டான். இதே போல் யமன் பகுதியில் அஸ்வத் இப்னு அன்ஸிய்யு என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். இவனும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் துலைஹா இப்னு குவைலித் என்பவன் தன்னை ‘நபி’ என்றான். ஸஜாஹ் என்ற பெண்ணும் தன்னை நபி என்று கூறினாள். இந்த இருவரும் பின்னர் மனம் திருந்தி இஸ்லாத்தில் இணைந்து விட்டனர் என அறியமுடிகிறது.
ஹிஜ்ரீ 60 ஆம் ஆண்டுகளில் முக்தார் இப்னு அபீ உமைத் ஸகஃபீ என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். அவனும் கொல்லப்படான். அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களின் காலத்தில் ‘ஹாரிஸ்’ என்பவன் தன்னை நபி என்றான், அவனும் கொல்லப்பட்டான். அப்பாஸியாக்களின் ஆட்சியின் போதும் பலர் தங்களை நபி என்று வாதிட்டதாகப் பார்க்கிறோம்.
இதே போல் தன்னை நபி என பஞ்சாப் மாநிலம் காதியான் எனும் ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வாதிட்டான். 1839-1908ல் வாழ்ந்தவன் இவன். அஹ்மதியா என்ற பெயரில் புதிய மதம் கண்டான். இன்றும் கூட அவனின் கருத்தை ஏற்றுக் கொண்ட சிலர் உண்டு. இப்படி பலரும் தன்னை நபி என வாதிட்டோர் உண்டு. பலரும் ‘நபி’ என வாதிட்டாலும் சற்று பலமான இன்று வாதிடுவோர் முப்பது பொய்யர்கள் தான். நபி (ஸல்) அவர்களும் இதனால் தான் முப்பது என்று எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள்.
தன்னை நபி எனக் கூறி கொள்ளும் நபர்கள் வருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து, அப்படிக் கூறியவர்கள் வந்துள்ளனர் என்பதை அறிவதிலிருந்தும் மறுமை நாள் வெகு விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.
13-பூகம்பம் அதிகரிக்கும்
கல்வி அகற்றப்படும், பூகம்பங்கள் அதிகரிக்கும், காலம் சுருங்கும், குழப்பங்கள் தோன்றும், கொலை அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் அதுவரை மறுமை நிகழாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்-புகாரீ.
ஈரான், எகிப்து, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. இதுமாதிரி இனி பூகம்பங்கள் அடிக்கடி அதிக அளவில் நிகழும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூகம்பங்கள் அதிக அளவில் நிகழ்வதும் மறுமை நாள் சமீபத்தில் வர உள்ளது என்பதை பறைசாற்றுகின்றன.
தவறான தொழிலும் நல்லது என ஆகும்
‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள் – அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் – புகாரீ.
நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் எல்லாம் போய்விட்டது. ‘பணம் வேண்டும், சொத்துப் பெருக வேண்டும்’ அதற்கு எந்த தொழிலாயினும் செய்யத் தயார் என்ற எண்ணத்தற்கு மனிதன் வந்துவிட்டான். தான் செய்யும் தொழில் மூலம் சமூகமே பாதிக்கும் என்று தெரிந்தாலும் அந்தத் தொழிலையே செய்கிறான்.
‘இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் தொழில் இது’ எனத் தெரிந்தும் அந்தத் தொழிலையே செய்கிறான். அனுமதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற சிந்தனை எல்லாம் போய் விட்டது. ‘நாய் விற்றக் காசு குறைக்கப்போவதில்லை’ என்றும், ‘ சாராயம் விற்றகாசு போதையாகிவிடப் போவதில்லை’ ‘கருவாடு விற்றக் காசு நாறாது’ என்று கூறும் அளவுக்கு தவறான தொழிலும் நல்ல தொழில் என ஆகி விட்டது. இதுவும் ‘மறுமை நாள் இதோ வரப் போகிறது’ என்று கட்டியம் கூறுகிறது எனலாம்.
பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்
மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிப்பாளர் – அனஸ் (ரலி) நூல் – நஸயீ.
பள்ளிவாசல் தொழுவதற்காக அமைக்கபடுகின்ற ஒன்று. இறைச் சிந்தனை சிந்திக்க, இறைவ

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-2012


டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா சென்ட்ரல் பல்கலைக்கழகம், 2012 சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் இந்தியா முழுவதும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மைனாரிடி பிரிவினருக்கு மட்டும் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும்.
இந்தத் தேர்வு செப்.11ம் தேதி நடக்கிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் இடம் கிடைத்தவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம், நூலக வசதி இலவசம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசி தேதி. விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.jmi.ac.in/ இமெயில் Shamstarique_2001@yahoo.co.in

Wednesday, 10 August 2011


அமெரிக்காவுக்கு கெட்ட நேரம்.. இந்தியாவுக்கு (கொஞ்சம்) நல்ல நேரம்!

Cricket Scores
ODI, Toronto Cricket, Skating and Curling Club
Afghanistan won by 17 runs
ODI, Maple Leaf North-West Ground, King City
Afghanistan won by 2 wickets (Duckworth/Lewis method)
Obama and Manmohan Singh
-ஏ.கே.கான்

அமெரிக்காவின் கடன் தர வரிசை (credit rating) குறைக்கப்பட்டதையடுத்து உலகெங்கும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

அமெரிக்காவின் வாங்கும் திறனும் முதலீடு செய்யும் பலமும் குறையும் என்ற அச்சத்தில் அமெரிக்காவைச் சார்ந்த தொழில்களின் பங்கு விலைகள் மிக வேகமாக சரிந்து வருகின்றன. அதில் முக்கியமானவை சாப்ட்வேர் நிறுவன பங்குகள். அடுத்ததாக உலகம் முழுவதுமே கட்டுமானத் திட்டங்களும் பாதிக்கப்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இரும்பு நிறுவன பங்குகள், ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

அதே போல அமெரிக்காவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தேவையும் குறையாலாம் என்ற கருத்தின் அடிப்படையில் உலகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையும் சரிந்துவிட்டது.

கடந்த இரு நாட்களில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு 10 டாலர் வீழ்ச்சியடைந்து 76 டாலருக்கு சரிந்துவிட்டது. கடந்த 6 மாதமாக 100 டாலருக்கும் அதிகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் முதல் முறையாக விலை குறைந்துள்ளது.

உலகிலேயே மிக அதிகமான பெட்ரோலியத்தை பயன்படுத்தும் நாடு அமெரிக்கா தான். அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோலியத்துக்கான தேவை குறையலாம் என்ற யூகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதே தவிர, உற்பத்தி அதிகமானதால் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நேற்றே சொன்னது மாதிரி (அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!) அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 10 கிராமுக்கு ரூ. 2,000 வரை உயர்ந்துவிட்டது. இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26,198. இது இன்னும் மேலே போகலாம்.

அதே நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து மேலும் சரியவும் வாய்ப்புள்ளது. ஆனால், சர்வதேச அளவில் விலை உயர்ந்தவுடன் நள்ளிரவிலேயே பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், இந்த முறை கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.

இதன்மூலம் இந்தியாவின் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது பெட்ரோலியத் தேவையில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்து தான் சமாளித்து வருகிறது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் விலைவாசியும் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை சரிவால் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இந்தியாவில் பணவீக்கம் குறையும் என்கிறார்கள்.

நீண்டகால அடிப்படையில் இல்லாவிட்டாலும், 6 முதல் 12 மாதங்களுக்கு இந்தியாவுக்கு நிச்சயமாக சாதமாகவே அமையலாம்.

அதே நேரத்தில் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில் நிலவும் சிக்கல்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்குமே நல்லதில்லை என்பதே உண்மை. அமெரிக்காவின் கடன் தர வரிசை AAAவிலிருந்து AA ஆகக் குறைக்கப்பட்டதால், அந்த நாட்டுக்கு கடன் கிடைப்பதில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இருந்து கடன் வாங்குவதும் சிரமமானதாகிவிடும்.

இதனால், அமெரிக்க முதலீடுகளை எதிர்பார்த்துள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் அதன் தாக்கத்தை உணர வேண்டிய நிலை நிச்சயம் வரும்.

இந் நிலையில் அமெரிக்காவின் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிதி தரவரிசை அமைப்பு குறைத்ததற்கு இன்னொரு சர்வதேச நிதி ஆலோசனை அமைப்பான போர்ப்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது.

''ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரின் செயல் முழுக்க முழுக்க அரசியல்ரீதியிலானது. அமெரிக்காவின் கடன் வாங்கும் உச்ச வரம்பை நிர்ணயிப்பதில் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் நடத்திய அரசியலை மட்டும் கருத்தில் கொண்டு இந்தச் செயலை செய்துள்ளனர். உண்மையில் அமெரிக்கா AAA தரத்தில் தான் உள்ளது'' என்று கூறியுள்ளது போர்ப்ஸ்.

அதே போல உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முதலீட்டாளர் வாரன் பஃபெட்டும் ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரின் செயலை கண்டித்துள்ளார், அமெரிக்காவுக்கு நான் மூன்று அல்ல, நான்கு (A AAA) போடுவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் நிதியமைச்சர் பிரான்காய்ஸ் பரோயின் கூறுகையில், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் மட்டும் தான் அமெரிக்காவின் தரத்தைக் குறைத்துள்ளது. ஆனால், அதற்கு இணையான உலகின் மற்ற இரு நிதித் தரவரிசை நிறுவனங்களான மூடிஸ் (Moody's) மற்றும் ஃபிட்ச் (Fitch) ஆகியவை அமெரிக்காவின் தர வரிசை இன்னும் AAA என்ற நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் நிலைமை சரியில்லை என்பதால், அதன் பொருளாதாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன நிதி அமைப்புகள். விரைவில் அதன் AAA தரமும் அமெரிக்காவுக்கு இணையாக AA ஆக குறைக்கப்படலாம் என்கிறார்கள்.

இது வேறயா....?!
English summary
Brent crude plunged to a six-month trough below $99 a barrel on Tuesday in a two-session drop of more than $10, after a U.S. credit downgrade intensified fears about a global slowdown in demand for energy, sending commodities markets tumbling.In commodities, crude plummets 6% with the Brent breaking below the 200-day moving average of USD 106 as the US credit rating cut and rising stockpiles stoked concerns that an economic slowdown will worsen and reduce fuel demand. Crude is trading at USD 76.16 per barrel.