டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா சென்ட்ரல் பல்கலைக்கழகம், 2012 சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் இந்தியா முழுவதும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மைனாரிடி பிரிவினருக்கு மட்டும் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும்.
இந்தத் தேர்வு செப்.11ம் தேதி நடக்கிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் இடம் கிடைத்தவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம், நூலக வசதி இலவசம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசி தேதி. விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம்.
No comments:
Post a Comment