ஜகாதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் தர்மம்
ஏன் கொடுக்கவேண்டும்? எப்போது கொடுக்கவேண்டும்?“நோன்பாளி வீணான, தவறான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தை தூய்மைப் படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருநாள் தர்மம் ஆகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்கள் : அபூதாவூத், இப்னு மாஜா, தாராகுத்னி, ஹாக்கிம்
என்ன கொடுக்கவேண்டும்? யாருக்கு கொடுக்க வேண்டும்?
“பேரிச்சம் பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு”ஸாஉ” என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்- நூல்கள்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத், இப்னு மாஜா.
“ஸாஉ” என்பது இருகைகளால் நான்கு தடவை தானியங்கள் அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும். சாதாரண அரிசி என்றால் ஒரு ஸாஉ என்பது 2.30 கிலோவை குறிக்கும். மேலும் இந்த பித்ராவை உணவுப் பொருளாகவே கொடுக்க வேண்டும் என்று பல ஹதீஸ்கள் வலியுறுத்து கின்றன. “இன்றைய தினம் ஏழைகளை தேவையற்றவர்களாக ஆக்குங்கள்” நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் கண்டிப்பாக ஏழைகளுக்கே கொடுக்க வேண்டும்
எப்படி கொடுக்கவேண்டும்? எங்கு கொடுக்க வேண்டும்?
இதற்கென்று ஒரு குழு அமைக்கப் பட்டு, அதன்படி வசூலிக்கப் பட்டு முறைபடி ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளன. மேலும், அதனை சொந்த ஊருக்கு போக மீதியை மற்ற ஊர்களுக்கு கொடுக்க இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகம் கடந்த 16 வருடங்களாக இந்த ஃபித்ராவை வசூலித்து, முறையாக விநியோகித்து வருகிறது.
No comments:
Post a Comment