Friday 30 November 2012

இறைவன் மிகப்பெரியவன்............!!




பாலஸ்தீனம் தனி நாடு - ஐ.நா ஓட்டெடுப்பு வெற்றி.............!!


பாலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது,

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்,

இந்த நிலையில் தனி நாடு என்ற ஐ.நா.வின் அங்கீகாரத்திற்கான ஒட்டெடுப்பு நேற்று நடைபெற்றது, இதில் பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது,

மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன, 41 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன, இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாலஸ்தீனுக்கு எதிராக 9 நாடுகள் வாக்குபதிவு.......

1) அமெரிக்கா

2) கனடா

3) மார்ஷல் அயர்லாந்து

4) பனாமா

5) பலாவ்

6) நவ்று

7) ஸ்கெட்ச் ரிபப்ளிக்

8) மைக்ரோனேசியா

9) இஸ்ரேல்

பாலஸ்தீனுக்கு 138 நாடுகள் ஆதரவளித்துள்ளன

அல்ஹம்துலில்லாஹ்.................!!

No comments:

Post a Comment