Friday, 21 October 2011

மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – புகைப்படங்கள்


மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – 

புகைப்படங்கள்


மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா
Northwest-Siberia

2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.
Caves

3. Amazon Rain-forest – அமேசான் மழை காடுகள்!
Amazon-Rainforest

4. Antarctica – அன்டார்டிகா
Antarctica

5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!
Mariana-Trench-Deep-Sea-Ocean

6. Deserts – பாலைவனங்கள்!
Deserts

7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்
Gangkhar-Puensum-Bhutan

8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து
Icecap-Greenland

9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்
Mountains-of-Northern-Columbia

10. Central Range, New Guinea – புது குனியா மழை தொடர்கள்
Central-Range-New-Guinea

Mobile Safety

Thursday, 20 October 2011

சகோதரிகளின் கவனத்துக்கு


சகோதரிகளின் கவனத்துக்கு 


"
ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனாநீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்கஅவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...''என்றாள் ரக்ஷனா. கோபமான அப்பஅவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
... 
''
ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனாநீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்லஉங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்கஅவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்கஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''
வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே,முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய்எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும்அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும்அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள்தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''
சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோஇ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணிஇப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில்அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனைஅவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?

''
ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்லனு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகிஅவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்துஅவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணிஅவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்துஅந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.

'' '
ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா
ஆம்... புகைப்படம்மெயில் ஐ.டிமொபைல் நம்பர்பள்ளிகல்லூரிஅலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு! .....






முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!  எச்சரிக்கை – கவனம் – உஷார்.  
மார்க்கம் அறியாத பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   
தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம் பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்என்ன இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல்வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள்கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன் கம்ப்யூட்டர் கிளாஸ் ட்ரைனிங்கிளாஸ் ஹாஸ்டல் இண்டெர்நெட் கஃபே,ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர்என்று போகும் இடங்களில்மாற்று மத பெண்களுடனும்ஆண்களுடனும்,பழகும் வாய்ப்பும்நட்பும்தோழமையும்ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும்,ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும்நண்பர்களாகவும்பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.

சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)
கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD  பிளேயர்கள் with USB-PORT.
                 
வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட்வசதி இருப்பின் >>>
லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >>  பெண்களின் பெற்றோர்களும்,பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

·         மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
·         யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
·         மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
·         தனி அறையில் இருந்து T.V  யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
·         கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
·         இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...

என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.