உஜ்ஜயின்:ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்தி வெடிக்குண்டு தொழிற்சாலைகளை உருவாக்குவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளின் தொடர்பை விசாரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை நிராகரிக்க இயலாது என்ற தனது முந்தைய அறிக்கைக்குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அவர். பயங்கரவாத செயல்களில் சங்க்பரிவாரத்தின் பங்கினைக்குறித்த ஆதாரம் தன் வசம் உள்ளதாக சிங் தெரிவித்தார்.
திக்விஜய்சிங்கின் அறிக்கை குறித்து பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து திக்விஜய்சிங் ஆர்.எஸ்.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment