Thursday, 22 November 2012

புதிய தலைமுறை நேர்படப் பேசும், காவி பயங்கரவாதமும்....




பல நாட்களாக அடங்கிக் கிடந்த இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற சொல்லை தற்போது தூசி தட்டி எடுத்து வைத்துள்ளனர் புதியதலைமுறை தொலைக்காட்சியினர்.


21-11-2012 அன்று நடந்த புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில்,

166 பேர் பலியான மும்பை தாக்குதல்: புனே சிறையில் தூக்கிலிடப்பட்டார் அஜ்மல் கசாப் தூக்குத் தண்டனையை

வரவேற்கும் கட்சிகள்;

எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்கள்.

அரிதினும் அரிதான குற்றங்களுக்கே தூக்கு... தீவிரவாத செயல்களுக்கு முடிவுகட்டுமா?

மரண தண்டனையை ரத்து செய்த 110 நாடுகள்; இந்தியா மறுப்பது ஏன்?

போன்றவற்றை தலைப்பாக எடுத்துக்கொண்டு விவாதித்தனர்.

விவாதத்தில்,

ப.ஜ.க சார்பாக எச். ராஜா

மனித உரிமை ஆர்வலர் சுரேஷ்

காங்கிரஸ் கட்சி சார்பாக ஞானதேசிகன் ஆகியோர் பங்குபெற்றனர்.

விவாதத்தை நடத்தியவர் மதிவாணன் - புதிய தலைமுறை

இந்த விவாதத்தில் விவாதத்திற்கே சம்பந்தமே இல்லாமல் காவி கரசேவகன் ராஜா என்பவன் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து பேசினான்.

மேலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், ஜிஹாத் பயங்கரவாதம் செய்கின்றார்கள் என்றும், ஸ்லீபர்ஸ் செல் என்றும் கூறிக்கொண்டே இருந்தான். அதற்கு விவாதத்தை நடத்திய மதிவாணன் என்பவர் விவாதத்திற்கு சம்பந்தமில்லாததை பேசாதீர்கள் என்று தடுக்க வில்லை. இந்த விவாதத்தில் மதத்தை இணைத்து பேசாதீர்கள் என்று நிறுத்தவில்லை. மாறாக அவர் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் என்பவர் விவாதத்திற்கு சம்பந்தமில்லாததை பேசும் போது இரண்டு முறை நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், என்று குறுக்கிட்டார் தடுத்தார் மதிவாணன்.

இஸ்லாமியர்களை எதிர்ப்பதில் காவி பயங்கரவாதிகளும், காங்கிரசும் ஒன்றுதான் என்று நிரூபித்த ஞானதேசிகன்.

சுரேஷ் என்பவர் காஷ்மீர் சம்பந்தமான ஒரு கருத்தை வைக்கும் போது கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சி ஞான தேசிகன் அவ்வாறு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ஆனால் துருப்பிடிச்ச துப்பாக்கிக்கு மூளையை அடகுவைத்த கரசேவக பயங்கரவாதி ராஜா என்பவன் ஸ்லீபர் செல் என்றும் மீண்டும் மீண்டும் ஜிஹாத், முஸ்லிம் தீவிரவாதி என்று பேசும் போது, ஒரு நாட்டு மக்களில் ஒரு சமூகத்தை தீவிரவாதி என்று அப்பட்டமாக பொய் சொல்கின்றானே என்று ஒரு மறுப்பு கூட தெரிவிக்காமல் அமைதிகாத்தார் இந்த காங்கிரஸ் கட்சி ஞானதேசிகன்.

ஆக ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களைப் பற்றி ஆர்.எஸ்,எஸ், பஜக எந்த சிந்தனையில் உள்ளதோ, அதே நிலையில் தான் இந்த காங்கிரசும் உள்ளது என்பதை நேற்று நடந்த நேர்படப் பேசு விவாதம் பார்த்த யாரும் மறுக்க முடியாது.

ஒரு விவாதத்தை நடத்தும் போது அது எந்த தலைப்பிற்கு உட்பட்டு இருக்கின்றதோ அந்த கருத்துக்களை மட்டும் தான் பேச அனுமதிக்க வேண்டும். அதை விட்டு வி்ட்டு சம்பந்தமே இல்லாமல், ஆதாரமில்லாமல் மடத்தனமான, மூளை மழுங்கியவனைப் போல கருத்துக்களை முன்வைப்பவர்களை குறுக்கிட்டு நிறுத்த வேண்டும். அதுதான் விவாதத்தை கொண்டு செல்பவரின் சரியான வேலையாக இருக்கும்.

அதைவிட்டு இது போன்று நினைத்ததையெல்லாம் பேசுவதை அனுதிப்பதின் மூலம் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் காவி சிந்தனையுடன் தான் செயல்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

யார் தீவிரவாதம் செய்கின்றார்கள் என்ற ஒரு தலைப்பைப் போட்டு விவாதத்திற்க அழையுங்கள். அதனை இஸ்லாமியத் தரப்பு மனதார ஏற்றுக் கொள்வார்கள். வாய்வழியாக இல்லாமல் ஆதாரத்துடன் வந்து பேசுங்கள். அப்போது இந்த காவி கரசேவகர்கள் தான் இந்தியாவில் ஒட்டுமொத்த தீவிரவாதத்திற்கும் காரணம் என்பதை முழுமையான ஆதாரத்துடன் நிரூபிப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment